வாத்து வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு மனோஜ் அவர்கள் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுக்கா, கே வல்லாவளம் என்னும் கிராமத்தில் ஒரு வாத்து பண்ணையை வைத்து மிகவும் எளிய முறையில் பண்ணையை நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய வாத்து பண்ணையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திரு மனோஜ் அவர்களின் வாழ்க்கை

திரு மனோஜ் அவர்கள் மதுரை மாவட்டம்,கள்ளிக்குடி தாலுகா,கே வல்லாவளம் என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்.இவர் சிவில் இன்ஜினியரிங் தொழிலில் இருந்ததாக கூறுகிறார்.மேலும் இவர் கட்டிட வேலைகளை செய்து வந்ததாகவும் கூறுகிறார்.

இவர் இவ்வாறு சிவில் இன்ஜினியரிங் வேலையில் இருந்து விட்டு இந்த வாத்து வளர்ப்பு முறையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இவரின் சிறு வயதிலேயே இவர் கோழி மற்றும் ஆடு போன்றவற்றை வளர்த்து உள்ளதே காரணம் என கூறுகிறார்.

மற்றும் இவர் சிறு வயதில் இருக்கும் போது இவரின் பாட்டி மற்றும் தாத்தா ஆகியோர் மாடு, ஆடு மற்றும் கோழி ஆகிய கால்நடைகளை வளர்த்து வந்துள்ளதாகவும் அதனை பார்த்து இவர் வளர்ந்ததால் இவருக்கும் இதுபோன்று கால்நடைகளை வளர்த்தலாம் என்று எண்ணம் வந்ததாக கூறுகிறார்.

திரு மனோஜ் அவர்கள் இந்த வாத்து வளர்ப்பு முறையை விடுத்து கோழி மற்றும் காடை போன்ற உயிரினங்களை வளர்த்தி ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக நடத்தி வருவதாக கூறுகிறார்.மற்றும் இவர் பண்ணையை இவர் சிறிது சிறிதாக தயார் செய்து இப்பொழுது பெரிய அளவில் பண்ணையை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.

The beginning of the duck farm

திரு மனோஜ் அவர்கள் இப்பொழுது பண்ணை வைத்துள்ள அனைவருமே அழகுக்காக ஒரு 4 அல்லது 5 வாத்துக்களை வாங்கி வளர்த்துவார்கள் என கூறுகிறார்.இதே போல்தான் இவரும் அழகுக்காக ஒரு நான்கு வாத்துக்களை மட்டுமே வாங்கி வளர்த்ததாக கூறுகிறார்.

ஒரு சமயத்தில் இவரின் நாட்டுக்கோழிகள் நோய்கள் ஏற்பட்டு அதிக அளவில் இறந்து விட்டதாக கூறுகிறார்.இதனால் இவர் அதிக அளவு கவலையை கொண்டிருந்ததாகவும் கூறுகிறார்.ஆனால் இவருடைய வாத்துக்கள் வளர்ப்பில் அதிக அளவு முன்னேற்றம் இருந்ததால் அதனை பற்றி நன்கு அறிந்து அதிக அளவு வாத்துக்களை வளர்த்ததாக கூறுகிறார்.

மேலும் இவர் சென்னையில் உள்ள ஒரு பேராசிரியரின் அறிவுரையின் மூலம் இந்த வாத்துக்களை வளர்க்கும் முறையை பற்றி நன்றாக அறிந்து கொண்டு அதன் பின் இந்த வாத்து பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த வாத்துகளை மிகவும் எளிமையான முறையிலேயே வளர்த்தலாம் எனவும் கூறுகிறார்.இவருடைய பண்ணையில் உள்ள வாத்துக்கள் அனைத்தும் பண்ணையில் உள்ள கழிவுகளை தேடிச் சென்று உண்டு நல்ல வளர்ச்சியை பெறுவதாக கூறுகிறார்.

இதனால் வாத்துக்கள் ஆனது மிகவும் அதிக அளவில் லாபத்தை தரும் எனவும் திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.அனைவராலும் இந்த வாத்து வளர்ப்பு முறையை மிக சிறப்பான முறையில் செய்ய முடியும் என திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

வாத்துகளின் தீவனங்கள் மற்றும் விற்பனை முறை

பொதுவாக வாத்துகள் ஆனது கோழிகளை விட பல மடங்கு அதிக அளவு தீவனங்களை உண்ணும் என திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

திரு மனோஜ் அவர்கள் முட்டையிடும் தாய் வாத்துக்களுக்கு தினமும் 60 கிராம் தீவனத்தை வாத்துக்களின் நியூட்ரிசன் சத்துக்காக அளித்து வருவதாக கூறுகிறார்.மற்றும் கோதுமை வகைகளை அதிக அளவு தீவனங்களாக அளித்து வருவதாகவும் கூறுகிறார். இது போன்று பல வகை தீவனங்களை வாத்துக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

இப்பொழுது ஒரு பண்ணையை தொடங்கும் போது பண்ணை தொடங்கும் நபரின் ஊரில் உள்ள ஒரு 10 அரிசி ஆலைகளுக்கு சென்று அங்கு உள்ள தேவையற்ற தீவனங்களை எடுத்து வந்து வாத்துக்களுக்கு அளிக்க வேண்டுமென திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் வாத்துக்கள் ஆனது அனைத்து வகை தானியங்களையும் உண்ணும் எனவும் கூறுகிறார். மேலும் வீட்டில் மீதமாகும் உணவு வகைகளையும் இந்த வாத்துக்கள் ஆனது உண்ணும் என கூறுகிறார். இதனால் வாத்து வளர்ப்பு ஆனது மிகவும் எளிய முறை என திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

திரு மனோஜ் அவர்களிடம் வாத்துக்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு வாத்துக்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

Disease management of ducks and Farm system

திரு மனோஜ் அவர்களின் பண்ணையிலுள்ள வாத்துகளுக்கு இதுவரையில் எந்த வகையிலும் நோய்கள் ஏற்படவில்லை என கூறுகிறார்.

வாத்துக்கள் இருப்பதற்கு இவர்கள் தயாரித்துள்ள குளத்தின் நீரை காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளிலும் மாற்றி விடுவதாக கூறுகிறார். இவ்வாறு இரண்டு வேளைகளும் நீரை மாற்றினாலும் அந்த குளத்தின் நீரை வாத்துக்கள் ஆனது அசுத்தம் செய்து விடுவதாக கூறுகிறார்.

இவ்வாறு குளம் அசுத்தமானதாக இருந்தாலும் வாத்துக்களுக்கு எந்தவித நோயும் ஏற்படாது என கூறுகிறார். ஏனெனில் வாத்துக்கள் ஆனது இவ்வாறு சேரு மற்றும் சகதியுடன் இருந்தால் மட்டுமே அவைகள் நன்றாக இருக்கும் என கூறுகிறார்.

இப்பொழுது சிலர் வாத்துக்கள் வளர்ப்பில் குளத்தை அமைப்பதில்லை என கூறுகிறார். ஆனால் இவ்வாறு குளம் இல்லாமல் வாத்துக்களை வளர்ப்பது மிக தவறான ஒன்று என கூறுகிறார். ஏனெனில் வாத்துக்களின் இயற்கையான அமைப்பு அவைகள் நீரில் இருப்பதே ஆகும். எனவே வாத்துக்களை நீரில் வளர்த்த வேண்டுமென திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் வாத்துக்களை அவைகள் சுதந்திரமாக விளையாடுவதற்கு ஒரு குளத்தில் விடுவதாகவும் கூறுகிறார். பண்ணைக்கு வெளியில் இந்த குளத்தை அமைத்துள்ளதாகவும், வாத்துக்களை திறந்து விட்டால் அவைகள் அங்கு போய் விளையாடி விட்டு பின்பு பண்ணைக்குள் வந்துவிடும் என கூறுகிறார். பண்ணைக்கு உள்ளேயும் வாத்துக்கள் குடிப்பதற்கு குளம் போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.

வாத்துக்களின் தன்மை மற்றும் இறைச்சி

திரு மனோஜ் அவர்கள் வாத்துக்கள் ஆனது நாம் வீட்டில் வளர்க்கும் நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகளை போன்று வளரும் என கூறுகிறார். இப்பொழுது எவ்வாறு நாய் மற்றும் பூனைகள் நாம் அருகில் சென்றால் நம்முடன் வருகிறதோ, அதேபோல் வாத்துக்களும் நாம் அதன் அருகில் சென்றால் நம்முடன் வரும் எனவும் கூறுகிறார்.

மேலும் நாம் அமர்ந்து கொண்டிருக்கும் போது நமது அருகில் வந்து படுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார். வாத்துக்களில் அனைத்து வாத்துக்களும் அடைகாக்கும் என கூறுகிறார்.

இப்பொழுது அதிக அளவில் கோழி இறைச்சிகளை அனைவரும் உண்கின்றன. ஆனால் வாத்து இறைச்சியை அதிக அளவில் விரும்புவதில்லை எனக் கூறுகிறார். இதற்கு காரணம் வாத்துகளின் இறைச்சியில் நாற்றம் இருப்பதாக மக்கள் நம்பி இருப்பதே காரணம் என கூறுகிறார்.

இவ்வாறு வாத்து இறைச்சியில் எந்தவித நாற்றமும் இருப்பதில்லை என கூறுகிறார். இதனால் அனைவரும் வாத்து இறைச்சியை உண்ணலாம் எனவும் கூறுகிறார். வாத்து இறைச்சியை சரியான முறையில் உணவாக செய்தால் மிகச் சுவையாக இருக்கும் என கூறுகிறார். மேலும் வாத்துக்களின் முட்டைகள் ஆனது பிராய்லர் கோழிகளின் முட்டைகளை போல் மிக சுவையாக இருக்கும் என திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

Breeding method and maintenance Method of ducks

வாத்துக்கள் இனப்பெருக்கம் செய்து ஒரு வருடத்திற்கு முட்டையிடும் என கூறுகிறார். ஒரு வருடத்திற்கு பின்பு இரண்டு மாதங்களுக்கு மட்டும் முட்டை இடாது என கூறுகிறார். மீண்டும் இந்த வாத்துக்கள் இரண்டாவது முறை இனப்பெருக்கம் செய்யும் போது அதிக அளவில் முட்டைகளை தரும் என கூறுகிறார்.

மேலும் திரு மனோஜ் அவர்கள் இவரின் வாத்துக்களை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.வாத்துக்கள் எவ்வளவு அதிக மழையில் நனைந்தாலும் அவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கூறுகிறார்.

மேலும் வாத்து பண்ணையில் உள்ள நீரை தினமும் மாற்றிவிட வேண்டும் எனக் கூறுகிறார். மற்றும் பண்ணையில் உள்ள கழிவுகளை வாத்துக்கள் உண்பதாகவும் திரு மனோஜ் அவர்கள் கூறுகிறார்.

திரு மனோஜ் அவர்கள் இவரின் வாத்து பண்ணையை மிகவும் சிறப்பான முறையில், மிக எளிமையாக நடத்தி அதன் மூலம் அதிகளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:நெய் உற்பத்தியில் சிறந்த லாபம்.

Leave a Reply