முயல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

மதுரை மாவட்டத்திலுள்ள சிறுமலையில் வசித்து வரும் ஒரு இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் முயல் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரையும் இவருடைய முயல் பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

முயல் பண்ணையின் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் வசித்து வரும் ஒரு இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் முயல் பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய குழந்தைகளின் ஆசைக்காக இரண்டு முயல்கள் வாங்கி வளர்த்ததாகவும் இவ்வாறு வாங்கி வளர்த்த முயல் குட்டி போட்டு 10 முயல்களாக கிடைத்ததாகவும், இந்த முறையிலேயே இவர் முயல் பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த முயல் பண்ணையை கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வருவதாகவும் இந்த முயல் பண்ணையில் இவருக்கு சிறப்பான வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

முயல் வளர்ப்பு முறையைப் பற்றி ஒரு புத்தகம் வாங்கி அதனை படித்து அறிந்து கொண்டு முயல் வளர்ப்பை அதிக அளவில் செய்ததாக கூறுகிறார்.

Excellent rabbit breeding and types

முயல் வளர்ப்பு முறையை பற்றி அறிந்து கொள்வதற்கு பல வகை முயல் பண்ணைக்கு இவர் சென்றதாகவும் ஆனால் எந்த பண்ணையின் உள்ளேயும் இவரை அனுமதிக்கவில்லை என கூறுகிறார்.

அதன்பிறகு முயல் பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றி ஒரு புத்தகம் இருப்பதாகவும் அதனை வாங்கி படித்து தெரிந்து கொண்டு முயல் பண்ணையில் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய முயல் பண்ணையில் உள்ள முயல்களுக்கு நோய்கள் ஏற்பட்டால் அதனை சரி செய்து கொள்வதற்கும் மற்றும் அதனை சரியான முறையில் வளர்ப்பதற்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய பண்ணையில் மொத்தமாக ஐந்து வகையில் முயல்கள் இருப்பதாகவும், அவற்றில் குட்டியிடும் முயல்கள் 160 இருப்பதாகவும், ஆண் முயல்கள் 40 இருப்பதாகவும் மற்றும் குட்டிகள் 70 இருப்பதாகவும் இவர் கூறுகிறார்.

இந்த ஐந்து வகை முயல்களுமே ஹைபிரிட் வகையை சேர்ந்தது எனவும், இந்த முயல்கள் வளர்ப்பினால் இவருக்கு தீவன செலவு அதிகளவில் இல்லை எனவும் மற்றும் இந்த முயல்கள் விரைவில் வளர்வதாகவும் கூறுகிறார்.

முயல் பண்ணையின் பயன்கள்.

முயல் பண்ணை வளர்ப்பில் ஐந்திலிருந்து ஆறு வகைகளில் பயன்கள் இருப்பதாகவும், இதனை இறைச்சிக்காகவும் மற்றும் வளர்ப்பதாகவும் அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் தலையில் தேய்க்கும் எண்ணெய் வகைகளுக்கு இந்த முயலின் இரத்தத்தை எடுத்து எண்ணெய் உற்பத்தி செய்வதாகவும் அதற்கும் இந்த முயல் வகை பயன்பட்டு வருவதாகத் கூறுகிறார்.

மேலும் முயல்களை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கும் அதிகளவில் இந்த முயல்கள் பயன்படுத்தி வருவதாகவும், இந்த வகையில் முயல் வளர்ப்பில் பலவகை பயன்கள் இருப்பதாக கூறுகிறார்.

Farm structure and breeding system

முயல் பண்ணையை முதலில் இவர் வீட்டின் மாடியில் வைத்து வளர்த்து வந்ததாகவும் அங்கு வளர்க்கும் போது சரியான முறையில் பராமரிப்பு செய்ய முடியாத காரணத்தினால் நிலத்தில் பண்ணை அமைத்து முயலை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

நிலத்தில் 100க்கு 22 என்ற அளவு முறையில் பண்ணை அமைத்து அதில் கூண்டுகளை வைத்து முயல்களை வளர்த்து வருவதாக கூறுகின்றார்.

முயலில் மொத்தமாக 12 வகை இருப்பதாகவும், அதில் இவர் இவருடைய ஊரில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்புடையதாக இருக்கும் முயல் வகைகளை வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார்.

30 லிருந்து 32 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை மட்டுமே முயல்கள் தாங்கிக் கொள்ளும் எனவும், அதற்கு மேல் சென்றால் முயல்கள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.

பண்ணையின் கொட்டகை அமைக்கும் போது, கொட்டகையின் மேற்புறத்தில் கீற்று மூலம் அமைத்து அதன் மீது அவர் தகரம் வைத்து கொட்டகை அமைத்தால் வெயிலின் தாக்கம் அதிகளவில் முயல்களை தாக்காது என கூறுகிறார்.

மேலும் பண்ணையை சுற்றிலும் கோணிப்பையை நீரில் நனைத்து கட்டி வைத்து விட்டால் வெளியிலிருந்து வரும் காற்றானது குளிர்ச்சியான காற்றாக முயல்களுக்கு கிடைக்கும் எனக் கூறுகிறார்.

மேலும் முயல்களை கொட்டகையில் வைத்து வளர்க்கும் போது அவற்றை கொட்டகையின் தரையில் விட்டு வளர்க்கக் கூடாது எனவும், கொட்டகையில் கூண்டினை வைத்து அதற்குள் தான் வளர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் தரையில் முயல்களை வளர்க்கும் போது அவற்றிற்கு அளிக்கும் தீவனத்துடன் அதனுடைய கழிவுகளையும் சேர்த்து முயல்கள் உண்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாகவும், இவ்வாறு முயல்கள் செய்தால் அவைகளுக்கு நோய்கள் ஏற்பட்டு விடும் எனவும் கூறுகிறார்.

குட்டியிடும் முயல்கள் இருப்பதற்கு கூண்டானது இரண்டு அடி அகலத்தையும் மற்றும் இரண்டு அடி நீளத்தையும் பெற்றிருக்க வேண்டும் எனவும், இந்த முறையில் இருந்தால் மட்டுமே முயல்கள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

முயல்களின் வளர்ச்சி காலம்

முயல்களின் ஆயுட்காலம் ஆனது 12 வருடம் எனவும், இவர் வளர்க்கும் ஜாயின் வகை முயல்கள் 5 கிலோ வரை வளரும் எனவும் இதுவே இந்த வகை முயல்கள் கேரளாவில் 8 கிலோ வரையில் வளரும் என கூறுகிறார்.

இந்த முயல்கள் 5 கிலோ வரை வளர்வதற்கு ஆறிலிருந்து ஏழு மாதங்கள் ஆகும் எனவும், முயல்கள் ஒருமுறை குட்டி போட்டால் குட்டி போட்டு ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடும் என கூறுகிறார்.

இவர் முயல்களை ஒரு மாதம் இடைவெளிவிட்டு இனப்பெருக்கம் செய்ய விடுவதாகவும், இந்த ஒரு மாதத்தில் குட்டி போட்ட முயல்கள் நல்ல முறையில் பால் குடித்து வளர வேண்டும் என்பதற்காக எனக் கூறுகிறார்.

இந்த முயல்கள் குளிர்காலத்தில் 12 முயல் குட்டிகள் வரை போடும் எனவும் ஆனால் வெயில் காலங்களில் 8 குட்டிகள் வரையிலேயே போடும் எனவும் கூறுகிறார்.

Feed and sales pattern for rabbits

முயல்களுக்கு அளிக்கும் தீவனத்தில் பலவகை பசுந்தீவனங்கள் இருப்பதாகவும், அதில் சூப்பர் நேப்பியர், ரெட் நேப்பியர், வேலி மசாலா, குதிரை மசாலா, முயல் மசாலா, அகத்தி மற்றும் முருங்கை ஆகிய பசுந்தீவனங்களை முயல்களுக்கு அளிக்கலாம் என கூறுகின்றார்.

மேலும் முயல்களுக்கு காய்கறி வகைகளை அளிக்கும் போது செரிமானம் ஆகும் காய்கறி வகைகளை மட்டுமே அளிக்க வேண்டும் என கூறுகிறார்.

மேலும் இவர் முயல்களை இவருடைய பகுதிகளில் இறைச்சிக்காக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக முயல் பண்ணையை வைத்து நடத்தி வருவதாகவும், அதில் இவர் அதிகமாக இறைச்சிக்காக மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும், வளர்ப்பதற்கு கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் முயல்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

முயல்களை கூண்டுடன் சேர்த்து விற்பனை செய்து வருவதாகவும், முயல்களை ஜோடியாக விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் முயல்களை மட்டும் தனியாக விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் முயல்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுவதாலும் மற்றும் முயல்களின் இரத்தத்தை வைத்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதாலும் அதற்கும் இவர் விற்பனை செய்து வருவதாகவும் இந்த முறையில் விற்பனை செய்து சிறப்பான லாபத்தை இவர் பெற்று வருவதாகக் கூறுகிறார்.

மதுரையில் உள்ள சிறுமலையில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் முயல் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான தேங்காய் எண்ணெய் உற்பத்தி.

Leave a Reply