காய்கறி தோட்ட வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

திரு சுரேஷ் அவர்கள் சென்னையில் உள்ள டி நகர் என்னும் நகரில் வசித்து வருகிறார். இவர் இங்கு இவருடைய வீட்டிலேயே காய்கறிகள் தோட்டத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய காய்கறிகள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு காணலாம்.

திரு சுரேஷ் அவர்களின் வாழ்க்கை

திரு சுரேஷ் அவர்கள் சென்னையில் உள்ள டி நகர் என்னும் நகரில் வசித்து வருவதாகவும்,இவர் இவருடைய வீட்டிலேயே ஒரு காய்கறிகள் தோட்டத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

இவர் இந்த காய்கறி தோட்டத்தை இவருடைய வீட்டின் மாடியிலும் வளர்த்து வருவதாகவும், இவ்வாறு காய்கறி தோட்டத்தை வளர்த்துவதால் இவருக்கு அதிக அளவு லாபம் இதன் மூலம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்களின் குடும்பம் பெரிய அளவில் உள்ள குடும்பம் எனவும், இவருடைய சகோதரிகள் அனைவரும் மாடி தோட்டம் வைத்து நடத்தி வருவதாகவும், இந்த மாடி தோட்டத்தில் இவர்கள் அதிக அளவில் காய்கறிகளை உற்பத்தி செய்து வந்ததாகவும் கூறுகிறார்.

இதன் காரணமாக இவருக்கும் இந்த காய்கறிகள் தோட்டத்தை வளர்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியதாகவும், அதன் பிறகு காய்கறி தோட்டத்தை இவருடைய வீட்டில் தொடங்கியதாகவும், மேலும் இவருடைய வீட்டின் மாடியிலும் இந்த காய்கறி தோட்டத்தை அமைத்து உள்ளதாகவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

Vegetables and greens

திரு சுரேஷ் அவர்கள் இவருடைய காய்கறி தோட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அந்த காய்கறிகளை எந்த நோய்களும் தாக்காத வகையில் விளைச்சல் செய்து வருவதாக கூறுகிறார்.

இவர் இவருடைய காய்கறி தோட்டத்தில் நான்கு வகையான கீரை வகைகளை வளர்த்து வருவதாகவும், அவைகள் சிறுகீரை, அரைக்கீரை, செங்கீரை மற்றும் முளைக்கீரை ஆகிய கீரை வகைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த கீரை வகைகள் அனைத்தையும் மிகவும் இயற்கையான முறையில் எந்த நோய்கள் தாக்காத வகையில் வளர்வதால் இந்த கீரைகள் அனைத்தும் மிகவும் சுவையாக வகையில் இருப்பதாகவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் காய்கறி வகைகளில் புடலங்காய், பீர்க்கங்காய், பாகற்காய், முட்டைக்கோஸ், தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறி வகைகளை வளர்த்து வருவதாகவும், இந்த காய்கறி வகைகள் அனைத்தும் சென்னையில் உள்ள காலநிலைக்கு நன்றாக வளர்வதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இவைகள் நன்றாக வளர்வதால் அதிக அளவில் காய்கறிகள் விளைச்சல் ஆவதாகவும், இதன் மூலம் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும், வீட்டுத் தேவைக்கு வாங்கும் காய்கறிகளின் செலவு குறையும் எனவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

பூக்கள் மற்றும் பழங்கள்

திரு சுரேஷ் அவர்கள் இவருடைய காய்கறி தோட்டத்தில் காய்கறி செடிகளை மட்டும் வளர்க்காமல் பூச்செடிகள்  மற்றும் பழ செடிகள் ஆகிய செடி வகைகளை வளர்த்து வருவதாகவும், இதன் மூலமும் இவருக்கு லாபம் மற்றும் நன்மை கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த பூ செடி வகைகளில் ரோஜா செடிகள் மற்றும் சாமந்தி  செடிகள் போன்ற பூச்செடி வகைகளையும் இந்த சாமந்தி பூ செடிகளில் இரண்டு வண்ணங்களில் மலர்கின்ற பூச்செடிகளை வளர்த்து வருவதாகவும், அவைகள் மஞ்சள் நிற சாமந்தி மற்றும் ஆரஞ்சு நிற சாமந்தி எனக் கூறுகிறார்.

மேலும் இந்த பூச்செடிகளில் அருகில் கற்றாழை செடியை வளர்த்து வருவதாகவும், இந்த கற்றாழை செடியானது மருத்துவ குணத்திற்கு பயன்படும் எனவும், இதன் காரணமாக இவர் இந்த கற்றாழைச் செடியை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பழ வகைகளில் சப்போட்டா பழ மரத்தையும், கொய்யாப்பழ மரத்தையும், மாதுளைப்பழ மரத்தையும் மற்றும் எலுமிச்சை பழ மரத்தையும் வளர்த்து வருவதாக திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த பழ வகைகளை இவர் இயற்கையான முறையில் வளர்ப்பதால் இந்த பழங்களானது மிகவும் இனிப்புடன் சுவையாக இருப்பதாகவும், இதனால் இவர் வெளியில் பழங்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்.

Fertilizers used for vegetable plants

திரு சுரேஷ் அவர்கள் இவருடைய காய்கறி செடிகள் அனைத்தையும் வளர்க்க விதைகள் அனைத்தையும் காய்கறி செடிகள் வளர்க்க விதைகள் விற்பனை செய்யும் ஒரு விவசாயம் தொடர்பான இடத்தில் சென்று வாங்கியதாக கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்கள் காய்கறி தோட்டத்தை தொடங்கும் போதே இவருடைய தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளையும் இயற்கையான முறையில் எந்த செயற்கை உரங்களையும் பயன் படுத்தாமல் வளர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கியதாக கூறுகிறார்.

இதனால் இவருடைய காய்கறி தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளுக்கும் உரங்களை இவரே உற்பத்தி செய்து அந்த உரங்களை மட்டுமே செடிகளுக்கு அளித்து வருவதாக திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய வீட்டில் இருந்து கிடைக்கும் தேவையற்ற கரிம பொருட்கள் அனைத்தையும் வைத்து உரமாக தயாரித்து அந்த உரத்தை செடிகளுக்கு அளித்து வருவதாகவும்,இதனால் செடிகள் நல்ல வளர்ச்சியுடனும்,இதனை உண்பதால் உடலுக்கு மிக நன்மை கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர்கள் செடிகளுக்கு வரும் பூச்சிகளை அழிப்பதற்கு மஞ்சள், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் ஒன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து செடிகளின் மேல் தெளித்து வருவதாகும், இதனால் பூச்சி தொல்லைகள் இல்லை எனவும் கூறுகிறார்.

Benefit and maintenance of the garden

திரு சுரேஷ் அவர்கள் இவருடைய தோட்டத்தில் காலையில் அரை மணி நேரமும், மாலையில் அரை மணி நேரமும் வேலை செய்வதாகவும், இந்த நேரங்களில் இவர் செடிகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்து கொள்வதாகவும், தினமும் தோட்டத்தைப் வந்து பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் மாடி தோட்டத்தில் உள்ள காய்கறி செடிகள் அனைத்தும் வளரும் முறையானது, இந்தச் செடிகள் வளரும் தொட்டியில்  மண் மற்றும் நீரானது தனித்தனியாக இருக்கும் எனவும், இதனால் செடிகளின் வேர்கள் அழுகுவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவருக்கு இந்தத் தோட்டத்தை அமைப்பதற்கு 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை செலவு ஆனதாகவும், மேலும் இதுவே இவர் குறைந்த விலையில் அமைத்து உள்ளதாகவும், அதிக விலையில் தோட்டத்தை அமைப்பவர்களும் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இந்தத் தோட்டத்தின் மூலம் இவருடைய வீட்டு தேவைக்கு தேவையான காய்கறிகள் அனைத்தும் இந்த தோட்டத்தில் இருந்து கிடைத்த விடுவதாகவும், இதனால் வெளியில் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறுகிறார்.

மற்றும் இதன் மூலம் இவர் மாதத்திற்கு 3 ஆயிரம் வரை காய்கறி செலவை குறைத்து உள்ளதாகவும், மேலும் இவர் இயற்கையான முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்வதால் இந்த காய்கறிகளை உண்பதால் உடலுக்கு மிகவும் நன்மை கிடைப்பதாகவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இயற்கையான முறையில் பழங்கள்,காய்கறிகள் அனைத்தையும் வாங்குவதற்கு அதிக அளவில் மக்கள் இருப்பதாகவும்,இந்த முறையில் இயற்கையான காய்கறிகளை அனைவரும் உற்பத்தி செய்யலாம் எனவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இயற்கையான வழிமுறையில் இவருடைய காய்கறி தோட்டத்தை வளர்த்து வருகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான மூலிகை குளியல் கட்டி தயாரிப்பு.

Leave a Reply