மிக குறைந்த விலையில் வாழைமரத்தை உரமாக்கும் இயந்திரம்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளங்கோயில் என்னும் கிராமத்தில் திரு மூர்த்தி அவர்கள் வாழை தோப்பு விவசாயத்தை செய்து அந்த வாழை மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை மிகக் குறைந்த செலவில் வாங்கி மிக சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார். இவரைப் பற்றியும், வாழை மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Mr.Murthy their banana plantation farming

திரு மூர்த்தி அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளங்கோயில் என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும், இவர் இங்கு சொந்தமாக விவசாய நிலத்தை வைத்து அந்த நிலத்தில் வாழைத்தோப்பு விவசாயத்தை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வாழைத் தோப்பு விவசாயத்தை செய்து முடித்த பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி உரமாக்குவதற்கு பயன்படும் ஒரு இயந்திரத்தை மிகக் குறைந்த செலவில் வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் சிறு வயதிலிருந்தே விவசாயத்தை மட்டுமே செய்து வளர்ந்ததாகவும், இந்த விவசாயம் மட்டுமே இவருக்கு அதிக அளவில் உதவியாக இருப்பதாகவும், இதன் மூலம் இவருக்கு அதிக அளவு நன்மைகள் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த வாழை மரத்தை வெட்டி உரமாக்கும் இயந்திரத்தை இவர் மிக சுலபமான முறையில் செயல்படுத்துவதாகவும், இதனை மிகக் குறைந்த செலவில் மட்டுமே வாங்கியதாகவும் திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

வாழை மரத்தை உரமாக்கும் இயந்திரத்தின் பயன்

வாழை மரத்தை பொதுவாக முன்பெல்லாம் கைகளாலே வெட்டி அவற்றை உரமாக்குவார்கள் எனவும், ஆனால் இப்பொழுது இவ்வாறு வாழைமரத்தை உரமாக்கும் இயந்திரம் வந்து விட்டதால் இந்த இயந்திரத்தை அதிக அளவில் உபயோகித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் கைகளால் வாழை மரத்தை வெட்டி உரமாக்கும் போது நமக்கு அதிக அளவு நேரங்கள் தேவைப்படும் எனவும், ஆனால் இந்த இயந்திரத்தை கொண்டு வாழை மரத்தை வெட்டி உரமாக்கினால் மிகக் குறைந்த நேரத்திலேயே வாழை மரத்தை உரமாக்க முடியும் என கூறுகிறார்.

மேலும் கைகளால் வாழை மரத்தை வெட்டி உரமாக்கும் போது வாழை மரங்களை வெட்ட வரும் வேலையாட்களுக்கு அதிக அளவு பணம் கொடுக்க வேண்டும் எனவும், ஆனால் இந்த இயந்திரத்தை பயன்படுத்தும் போது இவ்வாறு அதிக அளவு பணம் செலவாவது எனவும் கூறுகிறார்.

Farmers who need to use the machine

வாழை மரத்தை உரமாக்கும் இயந்திரம் தோட்டங்கள் மற்றும் பெரிய அளவில் நிலத்தை வைத்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த வாழை மரத்தை உரமாக்க பயன்படும் இயந்திரத்தை குறைந்த அளவுள்ள நிலத்தில் விவசாயம் செய்து உள்ள விவசாயிகள் வாங்க வேண்டிய அவசியமில்லை எனவும், இவ்வாறு குறைந்த அளவில் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இந்த இயந்திரத்தை வாடகைக்கு வாங்கி உபயோகித்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் இவர்கள் குறைந்த நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்துள்ளதால் இந்த இயந்திரம் அதிக அளவில் அவர்களுக்கு தேவைப்படாது என்பதால் என திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

பெரிய அளவில் விவசாயம் செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த இயந்திரம் அதிக அளவில் தேவைப்படும் எனவும், இந்த பெரிய அளவில் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இந்த இயந்திரத்தை வாங்கி கொள்ளலாம் எனவும் திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை வாடகைக்கு வாங்கி பயன்படுத்தும் போது ஒரு மணி நேரத்திற்கு 1, 500 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை செலவாகும் எனவும், மற்றும் இந்த இயந்திரத்தின் விலை 75 ஆயிரம் ரூபாய் எனவும் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இயந்திரத்தை வாங்கி வாடகைக்கு விடும் பண்ணையாளர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் அதிக அளவு லாபத்தை பெற முடியும் எனவும் திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

இயந்திரம் செயல்படும் முறை

வாழை மரத்தை வெட்டி உரமாக்கும் இயந்திரம் வாழை மரத்தை நொடியில் வெட்டி விடும் எனவும், இவ்வாறு வெட்டப்பட்ட வாழை மரம் ஒரு வாரத்தில் மக்கி விடும் எனவும் திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

ஒரு ஏக்கர் வாழை தோப்பில் அதிக அளவு புதர்கள் இருந்தால் இந்த இயந்திரத்தைக் கொண்டு வெட்டும் போது 8 மணி நேரமாகும் எனவும், மற்றும் ஒரு ஏக்கர் வாழை தோப்பில் புதர்கள் ஏதுமில்லாமல் வாழைமரம் மட்டும் இருந்தால் அதனை உரமாக்குவதற்கு ஆறு மணி நேரம் ஆகும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள வாழை மரங்களை உரமாக்கும் போது  அதிக அளவில் டீசல் செலவாகாது எனவும், இந்த இயந்திரத்தை கொண்டு வேறு ஏதாவது தோட்டத்திற்கு வாடகைக்கு சென்றால் அதன் மூலமும் அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை கொண்டு வாழை மரம், பப்பாளி மரம் மற்றும் புல்கள், புதர்கள் ஆகிய அனைத்தையும் உரமாக்க முடியும் எனவும், இதனால் இயந்திரத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

இவர் இந்த இயந்திரத்தை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தும் போது அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், மிகக் குறைந்த செலவில் மரத்தை உரமாக்கி கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

The Maintenance Method of the machine

இந்த இயந்திரத்தை நாம் பயன்படுத்தும் போது இந்த இயந்திரத்தினால் நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும், மேலும் இந்த இயந்திரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது கற்களின் மீது இயந்திரத்தை ஏற்றக் கூடாது எனவும் கூறுகிறார்.

இயந்திரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் போது மரங்களை வெட்ட பயன்படும் பிளேடினை மண்ணில் முட்டாமல் மரத்தை வெட்ட வேண்டும் எனவும், ஏனெனில் பிளேடு மண்ணில் முட்டினால் பிளேடின் கூர்மை தன்மை குறைந்து விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த இயந்திரத்தை அதிக அளவில் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், ஒவ்வொரு முறையும் வாழை மரங்களை உரமாக்கும் போதும் வாழைத் தோப்பில் ஏதாவது கற்கள் அல்லது கம்பிகள் இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும் எனவும் கூறுகிறார்.

நிலத்தில் கட்டைகள் மற்றும் வேறு ஏதாவது மர வகைகள் இருந்தால் அவற்றை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும், ஏனெனில் இவைகள் இந்த இயந்திரத்தில் சுலபமாக அரைந்து விடும் என கூறுகிறார்.

எனவே இந்த முறையை மட்டும் முறையாக செயல்படுத்தினால் போதுமானது எனவும், இதற்கென்று இந்த இயந்திரத்தை அதிக அளவில் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இயந்திரத்தை கொண்டு வெட்டி போடுகின்ற மரம் குறைந்த காலத்தில் உரமாகி விடும் எனவும், காய்ந்த மரங்களை இயந்திரத்தின் மூலம் வெட்டி உரமாக்கும் போது அவைகள் மிகக் குறைந்த காலத்தில் உரமாகி விடும் எனவும் திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

திரு மூர்த்தி அவர்கள் இந்த இயந்திரத்தின் மூலம் இவருடைய வாழைத் தோப்பில் உள்ள வாழை மரங்களை மிக சுலபமான முறையில் உரமாக்கி வருவதாகவும், இது இவருக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான மல்சிங் சீட் தயாரிப்பு.

2 comments

Leave a Reply