திரு அருண் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையை வைத்து நடத்தி, அந்த ஆட்டுப் பாலில் இருந்து குளியல் கட்டிகளை மிக சிறப்பான முறையில் தயாரித்து வருவதாக கூறுகின்றார்.
இவரைப் பற்றியும், இவருடைய ஆட்டு பாலில் இருந்து தயாரிக்கப்படும் குளியல் கட்டியின் தயாரிப்பு முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு அருண் அவர்களின் வாழ்க்கை
திரு அருண் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும், மேலும் இவர் இங்கு சொந்தமாக தலைச்சேரி ஆட்டு பண்ணை வைத்து சிறப்பாக நடத்தி, அந்த ஆடுகளின் பால்களிலிருந்து குளியல் கட்டியை தயார் செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகின்றார்.
மேலும் இவர் தலைச்சேரி ஆட்டுப் பண்ணையை வளர்த்து வருவதால் அந்த ஆட்டுப் பண்ணையின் மூலம் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும், இவ்வாறு அதிக அளவில் லாபம் கிடைப்பதற்கு காரணம் தலைச்சேரி ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் என கூறுகிறார்.
மேலும் சந்தைகள் மற்றும் கடைகளில் அதிக அளவில் வெள்ளாடுகளே விற்பனையாகி வருவதாகவும், தலைச்சேரி ஆடுகள் அதிக இடங்களில் காணப்படுவதில்லை எனவும், இதனால் தலைச்சேரி ஆடுகள் அதிக விலைக்கு விற்பனை ஆகும் எனவும் கூறுகிறார்.
இதன் காரணமாகவே இவர் தலைச்சேரி ஆட்டுப் பண்ணையை வைத்து நடத்தி அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருவதாகவும், மேலும் இந்த ஆடுகளில் இருந்து கிடைக்கும் பாலை வைத்து குளியல் கட்டியை தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
The beginning of the sheep farm
திரு அருண் அவர்கள் இந்த தலைச்சேரி ஆட்டுப்பண்ணையை மிகவும் கஷ்டப்பட்டு இந்த அளவிற்கு சிறப்பான முறையில் இருக்கும் அளவிற்கு எடுத்து வந்துள்ளதாகவும், மேலும் இவர் இந்த ஆட்டுப் பண்ணையை இவர் கடந்த நான்கு வருடங்களாக நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் ஆட்டுப் பண்ணையில் இருந்து தயாரிக்கும் குளியல் கட்டிகள் அனைத்தையும் மிகவும் தரமான முறையில் புதிதாக கறந்த பாலை வைத்து தயாரித்து வருவதாக திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் பண்ணை ஆரம்பிக்கும் போது அதிக அளவில் எந்த லாபத்தையும் பெறவில்லை எனவும், இவ்வாறு இவர் எந்த லாபத்தையும் பெறாமலேயே பண்ணையை நடத்தி அதன் பிறகு அதிக அளவு லாபத்தை பெற்று வந்ததாக கூறுகிறார்.
மேலும் இவர் ஆட்டுப் பண்ணையில் ஆடுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு பிடித்த ஆடுகளை வாங்கிக் கொள்ளலாம் எனவும், மேலும் எந்த ஒரு பண்ணையை தொடங்கினாலும் தொடங்கிய உடன் அதில் லாபம் கிடைக்காது எனவும், சில வருடங்கள் பண்ணையை சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே அதற்கான சரியான லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
ஆட்டுப்பால் சோப் மற்றும் அவற்றின் பயன்கள்
திரு அருண் அவர்களுடைய ஆட்டுப் பண்ணையில் தயாரிக்கப்படும் ஆட்டுப்பால் குளியல் கட்டியானது மிகவும் தரமான முறையில் புதிதாக கறந்த பாலினை வைத்தே தயாரித்து வருவதாகவும், மேலும் இவர்களுடைய ஆடுகளில் இருந்து கிடைக்கும் பாலினை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகின்றார்.
மேலும் இவருடைய ஆட்டுப் பால் குளியல் கட்டியானது 99% இயற்கையான முறையில் தயாரித்து வருவதாகவும்,மற்றும் மீதமுள்ள ஒரு சதவீதம் காஸ்டிக் சோடா என்ற ஒரு கெமிக்கல் வேதிப்பொருளை சோப்பு தயாரிப்பது பயன்படுத்துவதாகவும், இதனை பயன்படுத்தினால் மட்டுமே சோப்பானது உருவாகும் எனவும் கூறுகிறார்.
ஆட்டுப்பாலில் ஆன்டிஆக்ஸிஜன் இருப்பதாகவும்,எனவே இந்த ஆட்டு பாலினை வைத்து நாம் குளியல் கட்டி தயாரித்து அதனை நாம் உபயோகித்தோம் என்றால் நமக்கு முதுமை தோற்றம் விரைவில் தோன்றாது எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த ஆட்டுப்பாலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிஸன் ஆனது அனைத்து ஆடுகளிலும் இருக்காது எனவும், முறையாக உணவினை பெற்றுவரும் ஆடுகளின் பால்களில் மட்டுமே இந்த ஆன்டி ஆக்சிஜன் இருக்குமெனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
திரு அருண் அவர்களுடைய ஆட்டுப் பண்ணையில் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் முழுக்க முழுக்க இயற்கை உணவுகளை மட்டுமே அளித்து வளர்த்து வருவதாகவும், இவ்வாறு வளர்த்து வரும் ஆடுகளில் இருந்து கிடைக்கும் பாலினை வைத்தே குளியல் கட்டியை தயாரித்து வருவதாகவும் கூறுகின்றார்.
Bath tumor preparation method and quality
திரு அருண் அவர்கள் இவருடைய பண்ணையில் உள்ள ஆடுகளில் இருந்து கிடைக்கும் பாலினை வைத்து மிகவும் சிறப்பான முறையில் தரமாக இந்த குளியல் கட்டியை தயாரித்து வருவதாக கூறுகிறார்.
இவர் இந்த பாலில் இருந்து தயாரிக்கப்படும் குளியல் கட்டியை பால், எண்ணெய் மற்றும் காஸ்டிக் சோடா ஆகிய மூன்றையும் பயன்படுத்தி தயாரிப்பதாகவும், மேலும் இந்த காஸ்டிக் சோடாவை பயன்படுத்தினால் மட்டுமே குளியல் கட்டியானது சரியான அமைப்பில் வரும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய ஆடுகள் மிகவும் சத்து நிறைந்த உணவை உண்டு பாலினை அளிப்பதாகவும்,அவ்வாறு சத்து நிறைந்த பாலினை வைத்தே இந்த குளியல் கட்டியை தயாரிப்பதால் இந்த குளியல் கட்டியை நாம் உபயோகிக்கும் போது நமக்கு எந்தவித நோயும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த குளியல் கட்டியை முற்றிலும் இயற்கை முறையில் மட்டுமே தயாரித்து வருவதாகவும் சிறிதளவு மட்டும் கெமிக்கலை பயன்படுத்துவதாகவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
மேலும் பல குளியல் கட்டிகள் மிகவும் மோசமான வாசனையை அளிக்கும் எனவும்,ஆனால் இவருடைய பண்ணையில் தயாரிக்கப்படும் குளியல் கட்டிகள் ஆனது அவ்வாறு எந்தவித மோசமான வாசனையையும் அளிக்காது எனவும் கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் ஆட்டுப்பாலின் மகத்துவம்
திரு அருண் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய பண்ணையில் உள்ள ஆடுகளை வளர்த்து, அந்த ஆண்டுகளில் இருந்து கிடைக்கும் பாலினை வைத்து குளியல் கட்டியை தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும், இவர் இந்த குளியல் கட்டியை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
இவர் ஆட்டுப்பால் சோப் மற்றும் ஆட்டுப்பாலினையும் மிகவும் சிறப்பான முறையில் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருவதாகவும்,இவருடைய ஆட்டுப்பால் மற்றும் குளியல் கட்டி இரண்டும் மிகவும் தரமான முறையிலேயே இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய பண்ணையில் உள்ள ஆடுகளின் பாலினை குடிக்கும்போது அல்சர் நோய் சரியாகும் எனவும்,மற்றும் தைராய்டு நோய் குணமாகும் எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு இயற்கையான முறையில் ஆடுகளை வளர்த்து அதனுடைய பாலினை நாம் குடிக்கும் போது நமக்கு எந்தவித நோயாக இருந்தாலும் சுலபமாக சரியாகி விடும் எனவும்,மேலும் ஆட்டுப் பாலில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதாகவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இது போன்று அதிக அளவு சத்துக்கள் ஆட்டுப்பாலில் இருப்பதாகவும்,இதனை நாம் பயன்படுத்தினால் நமக்கு மிகவும் நன்மையைத் தரும் எனவும் கூறுகிறார்.
திரு அருண் அவர்கள் மிகவும் இயற்கையான முறையில் இவருடைய பண்ணையில் உள்ள ஆடுகளுக்கு உணவினை அளித்து அதன் மூலம் கிடைக்கும் பாலினை வைத்து குளியல் கட்டியை தயாரித்தும், அதன் பாலினையும் விற்பனை செய்தும் வருகிறார்.
மேலும் படிக்க:மலை மேல் சிறப்பான நெல் விவசாயம்.