திலேபியா மீன் வளர்ப்பில் சிறந்த லாபம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் திலேபியா மீன் வளர்ப்பை செய்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய திலேபியா மீன் வளர்ப்பு முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

திலேபியா மீன் வளர்ப்பின் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் திலேபியா மீன் வளர்ப்பை செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகிறார்.

இவர் இவரது கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு மீன் வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு மீன் வளர்ப்பை தொடங்கியதாகவும், இவர் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக இவரது பண்ணையை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய பண்ணையில் திலேபியா மீன்களுடன் சேர்த்து விரால் மீன்களையும் மற்றும் கால்நடைகளையும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் சிறுவயதில் இருக்கும் போதே இவருக்கு கால்நடை மற்றும் மீன்கள் வளர்க்கலாம் என்ற ஆசை இருந்து வந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் படிப்பை முடித்த ஒரு ஒருங்கிணைந்த பண்ணையை தொடங்கி இப்பொழுது சிறப்பாக நடத்தி வருவதாக கூறுகிறார்.

Tilapia aquaculture method

திலேபியா மீன் வளர்ப்பை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இதற்கு என்று இவர் அதிக அளவில் எந்த செலவும் செய்யவில்லை எனவும் கூறுகிறார்.

திலேபியா மீன் வளர்ப்பை தார்பாலின் மீது செய்து வருவதாகவும், மீன்கள் வளர்வதற்கு ஒரு பெரிய குழியை தோண்டி அந்த குழியில் தார்பாலினை போட்டு அதில் நீரை ஊற்றி திலேபியா மீனை விட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு தார்பாலின் மூலம் இவர் திலேபியா மீனை வளர்ப்பதினால் இவருக்கு அதிக அளவில் செலவு இல்லை எனவும், இந்தத் திலேபியா மீன் வளர்ப்பை இவர் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.

திலேப்பியா மீன்களை வளர்க்கும் குட்டையானது 120 மீட்டர் நீலத்தில் இருப்பதாகவும், இந்த 120 மீட்டர் குளத்திற்கும் ஒரே தார்ப்பாயினை கடையிலிருந்து ஆடர் செய்து வாங்கி வந்து குட்டியின் மீது போட்டு மீன்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

பண்ணை குட்டையின் அமைப்பு

மீன்கள் வளர்க்கின்ற பண்ணைக்குட்டையை இவர் சிறப்பான முறையில் அமைத்து இருப்பதாகவும், குட்டையை அதிக அளவில் தோண்டாமல் குறைந்த அளவில் தோண்டி அதன் மீது தார்பாய் போட்டு மீன்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

பண்ணை குட்டை வரும் காலத்தில் அழிந்து போகும் நிலையில் இருந்தால் கூட தார் பாயை எடுத்து விட்டு அந்த குட்டையில் சமப்படுத்தி அதில் விவசாயம் செய்யலாம் எனக் கூறுகிறார்.

இவருடைய பண்ணைக் குட்டையை 120 அடி நீளத்திலும் மற்றும் 70 அடி அகலத்திலும் அமைத்து இருப்பதாகவும் , 5 அடி அளவிற்கு குட்டையில் நீர் இருக்கும் எனவும் கூறுகிறார்.

120 அடி பண்ணை குட்டைக்கு 120 அடியில் தார்ப்பாயை எந்த தார்ப்பாய் உற்பத்தியாளரும் செய்ய முடியாது என்று கூறிவிட்டதாகவும் இதன் காரணமாக இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தார்ப்பாய் நிறுவனத்தில் 120 அடி நீளத்திற்கு தார்ப்பாயை வாங்கி மீன் வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இந்த தார்ப்பாய் மிகவும் தரமானதாக இருப்பதாகவும் மூன்று வருடம் வரை இந்த தார்ப்பாய் மிகச் சிறப்பான முறையில் நமக்கு பயன்படும் எனவும், சிறிய அளவில் தார்ப்பாயில் இருந்து நீர் வந்தால் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது என கூறுகிறார்.

மேலும் தார்ப்பாய் யாரும் சேதம் செய்யாதவரை தார்பாயில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும், தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து வருடம் பயன்படுத்தலாம் எனவும் 5 வருடம் வரை இந்த தார்ப்பாயை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் கூறுகிறார்.

மேலும் ஒரு குளத்தை நாம் புதிதாக அமைத்து இருக்கிறோம் என்றால் புதியதாக இருக்கும் நீரில் மீன்களை விடக்கூடாது எனவும், குளத்தில் அமைத்து 15 நாட்களுக்கு பிறகு நீரின் மீன்களை  விட வேண்டும் எனக் கூறுகிறார்.

Types and feeds of fish

பண்ணைக் குட்டையில் இவர் 6500 மீன்களை விட்டு வளர்த்து வருவதாகவும், இந்த அனைத்து மீன்களுக்கும் இவர் சிறந்த தீவனங்களை அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மூன்று வகை மீன்கள் இருப்பதாகவும் அதில் இவர் கிப்ட் திலேபியா என்னும் மீனை தேர்ந்தெடுத்து வளர்த்து வருவதாகவும், இந்த மீன்கள் சிறந்த முறையில் வளரும் என்பதால் இதனை தேர்ந்தெடுத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

நாட்டு திலேபியா மீன் வகை ஆறிலிருந்து ஏழு மாதத்திற்கு பிறகே  100 கிராம் எடையை பெறும் எனவும், எனவே இந்த வகை மீன்களை வளர்ப்பதினால் நஷ்டம் ஏற்படும் எனக் கூறுகிறார்.

ஆனால் இந்த நாட்டு திலேபியா மீன் வகை அதிகமாக குஞ்சுகளை போடும் எனவும், விரால் மீன் பண்ணை வைத்துள்ளவர்கள் இந்த நாட்டு திலேப்பியா வளர்ப்பை செய்யலாம் எனவும் கூறுகிறார்.

வணிக முறையில் அதிக லாபத்தை பெற வேண்டுமெனில் கிப்ட் திலேபியா மீன் வகையை வளர்க்கலாம் எனவும், இந்த மீன் வகைகளை நல்ல பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வந்தால் 3 மாதத்தில் குட்டி போட ஆரம்பம் செய்து விடும் எனக் கூறுகிறார்.

மீன்களின் எடை விரைவில் அதிகரிக்க வேண்டும் என்றாலும், அனைத்து தீவனங்களையும் மீன்கள் உண்ண வேண்டும் என்றாலும், விரைவில் மீன்கள் வளர வேண்டும் என்றாலும் கிப்ட் திலேபியா மீன் வகையை வளர்ப்பது மிகச் சிறப்பான ஒன்று என கூறுகிறார்.

மீன்களுக்கு இவர் மாட்டு சாணம், அசோலா மற்றும்  கல்யாண முருங்கை,அகத்தி மற்றும் பப்பாளி, புல் ஆகியவற்றை தீவனமாக அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் அதிகமாக இவர் சாணத்தையும் மற்றும் அசோலாவையும் தீவனமாக அளித்து வருவதாகவும், மாட்டு சாணத்தை மீன்களுக்கு தீவனமாக அளித்தால் மீன்கள் சிறப்பான முறையில் விரைவில் வளர்ந்து விடும் எனக் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திலேபியா மீன்களை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து விற்பனை செய்து வருவதாகவும், மூன்று மாதங்களுக்கு பிறகு திலேபியா மீன் கால் கிலோ எடையை பெற்று விடும் எனவும் இவ்வாறு கால் கிலோ எடையை மீன்கள் பெற்ற உடன் அதனை எடுத்து இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய பண்ணையில் விரால் மீன்களை வளர்த்து வருவதால் அந்த மீன்களுக்கு தீவனமாக சிறிய திலேபியா மீன்களை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மீன்களை வெளியில் உள்ள கடைகளுக்கு இவர் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் பண்ணையில் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் மீன்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

ஒரு கிலோ திலேபியா மீன் 100 ரூபாய் என்ற விலைக்கு இவர் விற்பனை செய்து வருவதாகவும்,இவர் இயற்கையான முறையில் மீன்களை வளர்ப்பதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து மீன்களை வாங்கி செல்வதாகவும், இதனால் நிறைந்த லாபத்தை இவர் பெற்று வருவதாக கூறுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் திலேபியா மீன் வளர்ப்பை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான புலிக்குளம் நாட்டு மாடுகள் வளர்ப்பு.

Leave a Reply