மாட்டுப்பண்ணை வைத்தால் மாதம்75000

மாட்டுப் பண்ணை வைத்து மாதம் 75 ஆயிரம் வருமானம் ஈட்டும் சென்னையில் உள்ள லட்சுமி புரத்தைச் சேர்ந்த திரு சந்தன பாண்டியன் அவர்களின் மாட்டுப் பண்ணையும் அவரையும் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

மாட்டுப் பண்ணையின் உரிமையாளர்

திரு சந்தன பாண்டியன் அவர்கள் ஒரு பாட்டு பணியை வைத்து மாதம் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். இவரிடம் குறைந்த அளவு இடம் மட்டுமே உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி திரு சந்தான பாண்டியன் அவர்கள் அவ்விடத்திற்கு ஏற்ப குறைந்த மாடுகளை மட்டுமே கொண்டு பண்ணையை நடத்தி வருகிறார்‌‌.

திரு சந்தன பாண்டியன் அவர்கள் குடும்பமானது விவசாய குடும்பமாகும். இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து பண்ணையை நடத்தி வருகிறார். இதில் அவருக்கும் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கிறது.

பண்ணையின் தொடக்கம்

திரு சங்கர பாண்டியன் அவர்களுக்கு சொந்தமாக 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் அதிக அளவு பயிரிடப்பட்டு அந்நிலம் சத்து குறைந்த நிலமாக மாறியது. அந்த காலத்தில் அவர் பயன்படுத்திய உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளாகும்.இவ்வாறு பயன்படுத்துவதால் அந்நிலம் சத்து குறைந்த மலட்டுத் தன்மை அடைந்த நிலமாக மாறியது.

இவ்வாறு நிலத்தை மாற்றியதால் அடுத்த போகத்தின் விவசாயத்திற்கு நிலம் ஒத்துப் போகாததால் பெரும் பாதிப்படைகிறது. இதனால் இவர்கள் குடும்பம் வெளியே வேலைக்கு செல்ல அவசியமானது. இதன்பின்பு பல்வேறு வேலைகளுக்கு சென்று தனது குடும்பத்தை சரியான பாதைக்கு கொண்டு வரமடியவில்லை.

கடன் மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் திரு சந்தன பாண்டியன் அவர்கள் அவதிப்பட்டனர்.

திரு சந்தன பாண்டியன் அவர்கள் வெளியே வேலைக்கு செல்லாத முன்பே சொந்தமாக இரண்டு மாடுகள் வைத்து அதனை பராமரிக்கும் அதற்குத் தேவையான இட வசதியை செய்து நன்கு பராமரித்து வந்தனர்.

பின்பு அவ்வாறு செய்து வந்ததால் மாடுகளில் இருந்து போதிய வருமானம் கிடைத்தது. அதன்மூலம் அவர் பல்வேறு வழிகளில் ஒரு பண்ணையைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து ஒரு ஆரம்பகட்ட முயற்சியில் ஈடுபட்டார் திரு சௌந்தரபாண்டியன்.

பண்ணையின் வளர்ச்சி

திரு சௌந்திரபண்டியன் அவர்கள் பண்ணையின் தொடக்கத்தை ஆரம்பித்தார். பின்பு அதற்கு தேவையான மாடுகள் தங்குவதற்கு மற்றும் மாடுகளின் உணவுகளை சேமிப்பதற்கு மற்றும் அவற்றின் கழிவுகளை சேமிப்பதற்கும் வெவ்வேறு வலிகளை செய்தார்.

முதலில் மாடு தங்குவதற்கும் அவற்றின் உணவுகளை சேமிப்பதற்கும் ஒரு பரண் அமைத்தார். அதற்கு போதுமான பணம் இல்லாததால் அவர் பல்வேறு  இடங்களில் பணத்தை வாங்கி அவற்றினை கொண்டு பரண் வைக்க மேற்கொண்டார்.

பின்பு அவற்றிற்கு தேவையான தீவனங்களை மற்றும் அவை குடிக்கும் தண்ணீருக்கும் வழிவகை செய்தார். அவருக்கு இரண்டு ஏக்கர் சொந்தமான நிலம் இருந்ததால் அவற்றில் மாடுகளுக்கு தேவையான தீவனங்கள் கம்பு ராகி கோதுமை போன்ற பயிர்களை பயிரிட்டு மேலும் மாட்டு தீவனங்கள் போன்றவற்றை விதைத்து அவற்றை பச்சையாகவும் காயவைத்தும் மாடுகளுக்கு நேரடியாக தரும் முயற்சியில் ஈடுபட்டார்.

மாட்டுப்பண்ணையின்மேம்பாடு

மாட்டுப் பண்ணையில் பல்வேறு மேம்பாடுகளை செய்ததில் சௌந்தரபாண்டியன் மாடுகள் குடிப்பதற்கு தேவையான தண்ணீரை சரி செய்கிறார்.

மாட்டிற்கு சத்து நிறைந்த தண்ணீராக தரவேண்டுமென்று அருகிலுள்ள உணவு விடுதிகளில் பெரிய பெரிய பேரல்களைக் கொண்டு வைத்து அவ்வணவு விடுதிகளில் அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் உளுந்து தண்ணீர் மற்றும் உளுந்துகள் மீதம் ஆகியவை அரிசிமாவு கலந்த தண்ணீர் ஆகியவற்றை சேகரித்து அவை மாடு குடிக்கும் தண்ணீரில் கலந்து மற்றும் அவைகளுடன் புண்ணாக்கு அரிசித் தவிடு ஆகியவற்றை கலந்து கொடுப்பதால் மாடுகளுக்கு நல்ல பால் சுரக்கும் தன்மை ஏற்படுகிறது.

பண்ணையின் சுத்தம்

பண்ணையில் மாடுகளின் கழிவுகள் மற்றும் அவற்றின்சிறுநீர் தாங்குவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். பண்ணை சுத்தத்திற்கு ஆள் வைத்து செய்தான அவற்றிலும் பல்வேறு செலவுகள் ஆகும்.

இதனால் யோசித்து திரு சவுந்தரபாண்டியன் அவர்கள் அதற்கும் ஒரு வழி செய்தார். சௌந்தர பாண்டியன் அவர்களின் நிலத்தில் இரண்டு போர்கள் உள்ளது. அதில் போதுமான தண்ணீர் வசதி கிடைக்கும்.

ஆனால் சௌந்தர பாண்டியன் அவர்களின் ஒரு ஏக்கர் நிலமானது அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களைப் பயன்படுத்தியதால் பெருமளவு பாதிப்பிற்கு உள்ளானது. நிலமானது விவசாயத்திற்கு ஏற்றவாறு இல்லாததால் மீதமுள்ள ஒரு ஏக்கரில் மாடுகளுக்கு தேவையான தீவனங்களை வீட்டுக்கு தேவையான காய்கறிகளையும் விதைத்தார்.

பின்பு மீதமுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் அவருடைய மாட்டுப் பண்ணையும் அதற்கான கழிவுகளை சேகரிக்கும் இடமாகவும் பயன்படுத்தினார். ஆனால் தண்ணீர் வசதியானது 4 ஏக்கருக்கு பயன்படும் அளவிற்கு இருந்தது.

பண்ணையின் செலவு குறைப்பு

இவ்வாறு மீதமான தண்ணீரை பயன்படுத்தி மாட்டு கழிவுகளை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தினார். மேற்கொண்டு வலியானது அவருக்குச் சொந்தமான கிணற்றில் நீர்மூழ்கி பாம்பு பயன்படுத்தி மற்றும் மேலே நீர் இழுக்கும் பாம்பையும் பயன்படுத்தி தண்ணீரின் வேகத்தை அதிகரிக்க ஒரு வழி வகை செய்தார்.

அவர் செய்த முடித்த பின்பு அதைப் பயன்படுத்துவதற்கு தனது மாட்டுக் கழிவுகளை நீர் இழுக்கும் பம்பை பயன்படுத்தி அதில் காற்றின் அழுத்தத்தை உயர்த்தி அதில் தண்ணீரையும் வரவைத்து இரண்டையும் சம அளவு பயன்படுத்தி மாடுகளின் சாணத்தில் மற்றும் அவைகளின் கழிவுகளையும் சுத்தம் செய்ய பயன்படுத்தினார். இவ்வாறு செய்ததால் அவருக்கு பண்ணையின் செலவும் குறைவு அவற்றை சுத்தம் ஆல் வருமானமும் குறைவானது.

அந்த கழிவுகளை சுத்தம் செய்யப்பட்ட நீரை அப் பண்ணையில் அருகில் ஒரு கால்வாயாக வெட்டி காடுகளுக்கு பார்க்கும் வகையில் அமைத்தார். நீரில் கலந்த சாணமும் சிறுநீரும் காடுகளுக்கு இயற்கையான தரமான உரமாக அமைந்தது.

இவ்வாறு செய்வதால் வேலையும் எளிதாகும். எளிதாக காடுகளுக்கு தண்ணீர் பார்க்கும் வகையிலும் மேலும் காடுகளுக்கு இயற்கையான உரங்கள் கிடைக்கும் வகையிலும் அமைந்தது.

தண்ணீர் சேமிப்பும் அவற்றின் முக்கியமும்

தண்ணீர் இருக்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். மின்சாரம் இல்லாத பொழுது மாடுகள் குடிப்பதற்கு தேவையான தண்ணீரையும் மற்றும் பண்ணையை சுத்தம் செய்வதற்கு தேவையான தண்ணீரையும் திரு சௌந்தர பாண்டியன் அவர்கள் ஒரு மிகப்பெரிய தொட்டி மற்றும் 2 நெகிழி தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை பயன்படுத்தி அதில் தண்ணீரை நிரப்பி யுள்ளார்.

இவ்வாறு செய்வதால் மின்சாரம் இல்லாத பொழுது மாட்டிற்கு குடிப்பதற்கு வியான தண்ணீரும் மற்றும் மாடு கழிவுகளை மற்றும் பண்ணையை சுத்தம் செய்வதற்கு அத்தண்ணீரை பயன்படுத்துவார்கள்.

மாடுகளின் எண்ணிக்கை உயர்வு

முதலில் சௌந்தரபாண்டியன் இரண்டு மாடுகளில் ஆரம்பித்து பின்பு அவற்றை ஐந்து மாடாக உயர்த்தினார். அதில் அவருக்கு 50% வருமானத்தை ஈட்டும் வகையில் அமைந்தது.

மேலும் அவர் வீட்டில் உள்ளவர்களை பயன்படுத்தி மேலும் மாடுகளை வாங்குவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அவர் அந்த ஐந்து மாடுகளை வைத்து ஈட்டிய வருமானத்தை பயன்படுத்தி மீண்டும் மாடுகள் வாங்குவதற்கு பயன்படுத்தினார். அவர் 5 மாடுகள் வைத்திருந்த போது மாதம் அவருக்கு 20 ஆயிரம் வருமானம் கிடைத்தது. அதை வைத்து மேலும் 5 மாடுகளை வாங்கினார்.

திரு சௌந்திரபாண்டியன் அவர்கள் மேலும் 5 மாடுகள் வாங்கியதற்கு சுமார் ஒரு லட்சம் செலவானது. அந்த ஐந்து மாடுகளுக்கும் தேவையான இடவசதி மற்றும் தீவன வசதி போன்றவற்றை ஏற்படுத்த 50,000 ஆனது. இதற்கு அவர் குடும்பத்திலும் மற்றும் அவர் சேமித்த பணத்தையும் பயன்படுத்தினார்.

மாடுகளின் பாதுகாப்பு

மாடுகள் கட்டிய வைத்திருப்பதால் மாடுகளுக்கு கால்களில் பல்வேறு பிரச்சனைகளும் நோய்களும் ஏற்படும். இதற்கு அவர் ஆர்காடு நீ சுற்றி வேலியை அமைத்து மாடுகளை மாலையில் அவர் காட்டிற்குள் மேய்க்க தொடங்கினார்.

பின்பு மாடுகள் படுக்கும் இடங்களில் காங்கிரிட் நிலமாக இருப்பதால் மாடுகள் படுக்கும் போதும் எழும்போதும் அவற்றின் பின்னங்கால்களில் காயம் ஏற்படும். இதற்கு மாடுகள் படுப்பதற்கு ஏற்றவாறு மற்றும் குதிரைகள் படுப்பதற்கு ஏற்றவாறு கடைகளில் ரப்பர் மேட் போன்றவை கிடைக்கும்.

சாண எரிவாயு

திரு சௌந்திர பாண்டியன் அவர்கள் மீதமாகும் மற்றும் மாடுகளின் கழிவுகளில் இருந்து வரும் சாணங்களை ஒரு  கால்வாயின் வாயிலாக வாயிலாக ஒன்று சேர்த்து அவற்றை காடுகளில் தண்ணீராக விடுகிறார்.

மேலும் அவற்றிலிரந்து வடிகட்டும் வடியிலிருந்து தண்ணீர் தனியாக மற்றும் சாணம் தனியாக பிரித்தெடுத்து அவற்றை நைட்ரிக் ஆக்சைடு  மாட்டுச்சாணமாக மாற்றுகிறார்.

இயற்கையான மாட்டு சாண எரிவாயு தயாரிக்கும் வகையில் இதில் பெருமளவு லாபம் அடைகிறார். இந்த மாட்டு சாண எரிவாயுவில் கழிவுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாணங்களை மட்டும் தனியாக பயன்படுத்தி அந்த சாணங்களை மாடுகளின் சிறுநீர்களிலிருந்து பிரித்தெடுத்து அவற்றை போதித்தல் செய்வேன் அதிலிருந்து மாட்டுச்சாண எரிவாயு வினை தயாரிக்கிறார்.

பால் வருமானம்

திரு சௌந்திரபாண்டியன் அவர்கள் பண்ணையை தொடங்கி பல்வேறு விதங்களில் அவற்றின் மாடுகளையும் பண்ணையும் மேம்பாடு செய்தார். அதன் பின்பு அவர் கன்று ஈன்ற மாடுகளில் இருந்து பால் கரக்க தொடங்கினார்.

அதன் முன்பு அவருக்கு 5 மாடுகள் வைத்து இருந்த போது மாதம் 20 ஆயிரம் கிடைத்தது. இப்பொழுது இருப்பது மாடுகள் வைத்து பெருமளவில் பால் உற்பத்தி பணியாளராக இருக்கிறார். இப்பொழுது சுமார் 20 மாடுகள் உள்ளன. 20 மாடுகளை வைத்து பால் கறக்க தொடங்கினார்.

இதில் இவருக்கு மாத வருமானம் 55 ஆயிரம் கிடைத்தது. மேலும் அவர் பயன்படுத்திய சாண எரிவாயு மாதம் 20000 லாபம் கிடைக்கும் வகையில் இருக்கிறது.

ஆனால் திரு சௌந்திரபாண்டியன் அவர்கள் பாலை மொத்த விற்பனை செய்யாமல் அனைவருக்கும் இயற்கையான பால்கிடைக்க வேண்டும் என்று வேண்டுமென்ற நோக்கத்தில் ஒவ்வொரு கடைக்கும் சென்று பாலினை தருகிறார்.

இவ்வாறு செய்வதால் இயற்கையான பால் அனைவருக்கும் கிடைக்கிறது. இதில் சௌந்தர பாண்டியனுக்கு இன்னும் சிறிதளவு லாபம் கிடைக்கிறது.

சௌந்திரபாண்டியன் அடுத்தகட்ட முயற்சியாக தங்களின் பண்ணைகளிலிருந்து கறக்கப்படும் பால் நேரடியாக மக்கள் வாங்கவும் வழிவகை செய்வதாக கூறியுள்ளார். மற்றும் திருமண விசேஷங்கள் இல்லற விசேஷங்களுக்கு பால் தயிர் மோர் வெண்ணை ஆகியவற்றை மொத்தமாகவும் சில்லறயாகவும் தருவதாக இருக்கிறார்.

மேலும் சௌந்திரபாண்டியன் தனது பண்ணைகளிலிருந்து கரைக்கப்படும் பாலினை மக்களுக்கு நேரடியாக தருவதாகவும் மேலும் அவரின் பண்ணைகளில் இருந்து நேரடியாக தயிர் மோர் பால் வெண்ணை ஆகியவற்றினை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்கிறார்.

இந்த பால் தரம் மற்றும் சுத்தமானதா?

ஆம்! இவ்வாறு பண்ணைகளிலிருந்து கிடைக்கும் நேரடியான இயற்கையான பால் கொழுப்புச் சத்து குறைந்து புரதச்சத்து நிறைந்த பாலாக கிடைக்கும். இவற்றில் நேரடியான முறையில் கிடைப்பதால் இவை மிகவும் தரமான சுத்தமான பாலாக இருக்கும்.

மேலும் படிக்க:ஆடு வளர்த்தால் ஆடி கார்

 

One comment

Leave a Reply