திரு நந்தகுமார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி என்னும் ஊரின் மலை அடிவாரத்தில் ஒரு நாட்டு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.இவரைப் பற்றியும், இவருடைய நாட்டுக் கோழி பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
திரு நந்தகுமார் அவர்களின் வாழ்க்கை
திரு நந்தகுமார் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி என்னும் ஊரில் வசித்து வருகிறார்.இந்த ஊர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதாக கூறுகிறார். இவர் இங்கு ஒரு நாட்டுக் கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.
இவர் இந்த நாட்டுக் கோழி பண்ணையை மூன்று வருடங்களாக நடத்தி வருவதாக கூறுகிறார். இவர் இந்த நாட்டுக் கோழி பண்ணையை அமைப்பதற்கு முன்பு ஒரு தொழிலை செய்து வந்ததாக கூறுகிறார். அந்தத் தொழிலில் லாபம் இல்லாத காரணத்தால் நாட்டுக்கோழி பண்ணை வைத்து நடத்தி வந்ததாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.
இந்த முறையிலேயே இவர் இந்த பண்ணை அமைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
Country chicken farm
திரு நந்தகுமார் அவர்கள் பிராய்லர் கோழி மற்றும் கோழி வகைகளை வளர்த்தாமல் இந்த நாட்டு கோழியை மட்டும் வளர்த்துவதற்கு காரணம் இந்த நாட்டுக் கோழி இனங்கள் மட்டுமே சீரான விலையில் விற்பனை ஆவதே காரணம் எனக் கூறுகிறார்.
இவருடைய பண்ணையில் தாய் கோழிகளில் மொத்தமாக 100 கோழிகள் இருப்பதாகவும், அதனுடன் 15 சேவல்கள் இருப்பதாகவும், கோழிக்குஞ்சுகளில் 600 கோழிக்குஞ்சுகள் இருப்பதாகவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.
பொதுவாக நாட்டுக்கோழி வகைகளை மேய்ச்சல் முறையில் வளர்ப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் திரு நந்தகுமார் அவர்கள் இந்த நாட்டுக் கோழிகளை மிகவும் சிறப்பான முறையில், இயற்கைத் தீவனங்களை அளித்து வளர்த்து வருகிறார்.
இவ்வாறு இவர் இயற்கை தீவனத்தை கோழிகளுக்கு அளித்து வளர்ப்பதால் அவைகள் நன்கு வளர்ச்சி பெற்று அதிக லாபத்தை தரும் எனவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.
கோழிகளுக்கு அளிக்கும் தீவனங்கள்
திரு நந்தகுமார் அவர்கள் இவருடைய பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளையும் மேய்ச்சல் முறையில் வளர்த்து வருகிறார். மேய்ச்சல் முறையில் கோழிகளை வளர்த்தாலும் அதற்கு அதிக அளவு தீவனங்கள் தேவைப்படும்.
எனவே திரு நந்தகுமார் அவர்கள் கோழிகளுக்கு தீவனமாக பசும்புல் மற்றும் அசோலா, கம்பு ஆகியவைகளை தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார். மேலும்,புண்ணாக்கு மற்றும் தவிடு ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை முத்திரை பதித்த தீவனம் வகைகளையும், சிறிது அளவு லார்வாக்களை தீவனமாக அளித்து வருவதாகக் கூறுகிறார். மற்றும் இவர் தீவன செலவை குறைப்பதற்கு அகத்தி, முருங்கை, வேலி மசாலா மற்றும் சவுண்டல் ஆகிய கீரை வகைகளை உற்பத்தி செய்து கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.
சவுண்டல் மற்றும் அகத்தி கீரை வகைகளை புண்ணாக்கு மற்றும் தவிடு ஆகிய தீவனத்துடன் கலந்து கோழிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார். இந்த முறையினால் இவருக்கு தீவன செலவு குறைவதாக கூறுகிறார்.
இந்த கோழிகள் தீவனங்கள் அனைத்தையும் மிகவும் விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.
The structure of the farm
திரு நந்தகுமார் அவர்கள் இவரது பண்ணையை மலை அடிவாரத்தில் மிகவும் சிறப்பான முறையில் அமைத்து நடத்தி வருகிறார். இவருடைய பண்ணை மலை அடிவாரத்தில் உள்ளதால் தீவனத்திற்கு அதிக அளவு செலவுகள் ஏற்படாது என கூறுகிறார்.
மற்றும் இவருடைய பண்ணை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பருந்துகளின் தொல்லை அதிக அளவில் இருப்பதாக கூறுகிறார். இதனால் இவர் ஒன்றரை கிலோவிற்கு மேல் உள்ள கோழிகளை மட்டும் மேய்ச்சலுக்கு விடுவதாக கூறுகிறார். ஏனெனில் ஒரு கிலோ அளவுள்ள கோழிக்குஞ்சுகளை பருந்துகள் சுலபமாக எடுத்துச் சென்று விடுவதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவருடைய பண்ணையில் கோழிகள் தானாகவே மேய்ச்சல் முறையில் வளர்வதற்கு ஏற்ற நிலத்தை அமைத்துள்ளதாக கூறுகிறார். இதனுடன் கோழிகள் இருப்பதற்கு ஒரு கூண்டையும் அமைத்து உள்ளதாக கூறுகிறார். இவருக்கு இந்த கூண்டை அமைப்பதற்கு 25 ஆயிரம் வரை செலவானதாக கூறுகிறார்.
மேலும் இந்த கூண்டினை மிகவும் உறுதியாக அமைத்து உள்ளதாக கூறுகிறார். மேலும் இந்த கூண்டினை இரவு நேரங்களில் பூட்டி வைத்து விடுவதாகவும் கூறுகிறார். ஏனெனில் இவருடைய பகுதிகளில் திருடர்களின் தொல்லைகள் அதிக அளவில் இருப்பதே காரணம் எனக் கூறுகிறார்.
மேலும் இந்த கூண்டிற்குள் பூனைகள் மற்றும் நாய்கள் செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார். மற்றும் இந்த கூண்டிற்குள் நல்ல காற்றோட்டம் இருக்கும் எனவும் கூறுகிறார். மேலும் இந்த கூண்டில் உள்ள கோழிகள் கழிவுகளை வெளியேற்றும் போது கழிவுகள் வெளியில் கொட்டி விடுவதாக கூறுகிறார்.
இதனால் கூண்டானது மிகவும் தூய்மையாக இருக்கும் என திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார். மேலும் இதனால் கோழிகளுக்கு எந்த வித நோயும் ஏற்படுவதில்லை என கூறுகிறார். மேலும் திரு நந்தகுமார் அவர்கள் இவருடைய பண்ணையில் மொத்தமாக 7 கொட்டகைகளை அமைத்து உள்ளதாக கூறுகிறார்.
ஒவ்வொரு கொட்டகையிலும் தாய்க்கோழி, குஞ்சு கோழிகள் மற்றும் பெரிய கோழிகள் என்று தனித்தனியாக பிரித்து வளர்த்து வருவதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார். இவ்வாறு கோழிகளை தனித்தனியாக பிரித்து வளர்த்து வந்தால் நோய்கள் பரவாது எனவும் கூறுகிறார்.
மேலும் கொட்டகை அமைக்கும் போது உயரமாக அமைக்க வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு உயரமாக அமைத்தால் காற்றோட்டமாக இருக்கும் என கூறுகிறார். மேலும் கொட்டகை மண்தரையில் அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் கொட்டகைக்கு குறைந்த விலையிலேயே வலையை வாங்கி கட்டி உள்ளதாக கூறுகிறார்.
கோழிகளுக்கு ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முறை
திரு நந்தகுமார் அவர்கள் கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் நோயை தடுக்கும் முறை மிகவும் முக்கியமான ஒன்று என கூறுகிறார். கோழிகள் பிறந்ததிலிருந்து இரண்டு மாதம் வரை தடுப்பூசி அட்டவணை இருப்பதாக கூறுகிறார்.
இதில் முதல் இரண்டு தடுப்பூசிகளை இவருடைய மகள்களே கோழிகளுக்கு போடுவதாக கூறுகிறார். அதன்பிறகு இரண்டு தடுப்பூசிகளை இவர்களுக்கு போட்டு விடுவதாக கூறுகிறார். மேலும் இந்த தடுப்பூசிகளை போட்டால் வெள்ளைக்கழிச்சல் நோய் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
இவ்வாறு கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே இவர் தடுப்பூசிகளை போட்டு நோய்கள் ஏற்படாமல் தடுத்து வருவதாக கூறுகிறார்.
Frying Method and breeding method
திரு நந்தகுமார் அவர்கள் இவருடைய பண்ணையில் உள்ள கோழிகளின் முட்டைகளை இன்குபேட்டரில் வைத்து குஞ்சு பொரிக்க வைப்பதாக கூறுகிறார். இன்குபேட்டரில் இருந்து வெளியில் வந்த கோழிக் குஞ்சுகளை 20 நாட்கள் வரை ஒரு கூண்டில் வைத்து பாதுகாப்பாக பார்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த கோழிக் குஞ்சுகளை வைத்திருக்கும் கூண்டில் வெயில் காலங்களில் 15 நாட்களுக்கு வெப்பம் இருக்க வேண்டும் எனவும், குளிர் காலங்களில் 21 நாட்களுக்கு வெப்பம் இருக்க வேண்டுமெனவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.
மற்றும் இருபத்தி ஒரு நாட்களுக்கு பிறகு இந்த கோழிக்குஞ்சுகளை கொட்டகைக்கு மாற்றி விடுவதாக கூறுகிறார். மேலும் கோழி பண்ணை வளர்ப்பில் குஞ்சுக் கோழிகளை வளர்ப்பது மிகவும் கடினமான ஒன்று என கூறுகிறார்.
திரு நந்தகுமார் அவர்கள் மிகவும் கடினமான முறையில் இந்த பண்ணையை தொடங்கி இப்போது சிறப்பாக நடத்தி வருவதாக கூறுகிறார். மேலும் கோழிகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய கோழிகளை இவருடைய பண்ணையிலேயே வாடிக்கையாளர்கள் வந்து வாங்கி செல்வதாக கூறுகிறார். கோழிக் குஞ்சுகள் மற்றும் ஒன்றரை கிலோவில் இருந்து 3 கிலோ வரை உள்ள கோழிகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் பண்ணை தொடங்கி மூன்றாவது வருடத்திலேயே இவருக்கு தேவையான அளவு லாபம் கிடைத்ததாக கூறுகிறார். மேலும் கோழிகளை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்களுக்கு லார்வாக்களை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு நந்தகுமார் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இயற்கை சூழலில் இவருடைய நாட்டு கோழி பண்ணையை நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:மிக குறைந்த விலையில் கம்பி வேலிகள்.