திரு கார்த்திகேயன் அவர்கள் மிக சிறப்பான முறையில் விவசாயத்திற்கு பயன்படும் ஒரு ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். அவரையும் அவரது ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
திரு கார்த்திகேயன் அவர்களின் வாழ்க்கை
திரு கார்த்திகேயன் அவர்களின் சொந்த ஊர் பாண்டிச்சேரி என கூறுகிறார். இவர் இவரது கல்லூரிப் படிப்பினை தஞ்சாவூரில் முடித்ததாக கூறுகிறார்.
திரு கார்த்திகேயன் அவர்கள் அதிகமாக ரோபோடிக் தொடர்பான படிப்பையே படித்ததாகவும் இதை இவர் கல்லூரி படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்தே படித்து வந்ததாகவும், கல்லூரி மூன்றாம் ஆண்டின் போது இதனையே தொடர்ந்து செய்யலாம் என்ற எண்ணத்துடன் எட்டு நபர்கள் கொண்ட குழுவுடன் இந்த ட்ரோன் தெளிப்பான் முறையை தொடங்கியதாக கூறுகிறார்.
இவர்களின் குழுவில் ஆறு பேர் இன்ஜினியரிங் பயின்றதாகவும், மீதி இரண்டு பேர் அக்ரிகல்ச்சர் தொடர்பான படிப்பை பயின்றதாகவும் திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார். இவர்கள் மருந்தில் இருந்து தொழில்நுட்ப கோளாறு, சேவைகள் அனைத்தையும் இவர்களே பார்த்துக் கொள்வதாக கூறுகிறார்.
ட்ரோன் தெளிப்பான்
பொதுவாக விவசாயத்திற்கு உதவும் கைகளினால் அடிக்கும் தெளிப்பான், மோட்டாரின் மூலம் செயல்படும் தெளிப்பான் மற்றும் பேட்டரியின் மூலம் செயல்படும் தெளிப்பான் இருந்துகொண்டு வருகிறது. ஆனால் இந்த ட்ரோன் தெளிப்பான் முறை இந்த மூன்று முறைகளை விட மிக சிறப்பான முறையாக உள்ளது.
இந்த ட்ரோன் தெளிப்பான் முறையானது சீனாவில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பே இருந்தது எனவும் இப்பொழுது தான் நம் நாட்டில் ட்ரோன் முறையை பயன்படுத்தி வருவதாகவும், இந்த ட்ரோன் முறையினால் அதிக தொழிலாளர்கள் தேவையில்லை எனவும், எவ்வளவு நாட்கள்தான் நாமும் மற்றவர்களை சார்ந்து இருப்போம் என்ற எண்ணத்தின் காரணமாக இந்த ட்ரோன் தெளிப்பான் முறையை உருவாக்கியதாக திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
சாதாரண தெளிப்பான் மூலம் நீரினை தெளிக்கும்போது அவைகளுக்கு தொழிலாளர்கள் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றனர் எனவும், இந்த ட்ரோன் தெளிப்பான் மூலம் நீரினை தெளிக்கும்போது வெறும் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடும் எனவும் கூறுகிறார்.
இந்த ட்ரோன் தெளிப்பானின் முக்கிய சிறப்பு இது தெளித்து கொண்டிருக்கும்போது ஏதாவது இடத்தில் நீரினை தெளிக்காமல் விட்டுவிட்டால் அனைத்து இடங்களுக்கும் நீரினை தெளித்த பிறகு எங்கு நீரினை தெளிக்காமல் விட்டதோ அங்கு மீண்டும் சென்று நீரினை தெளித்து விடும் எனவும் கூறுகிறார்.
மேலும் தொழிலாளர்களை வேலையில் வைக்கும் போது அவர்கள் வேலை செய்கிறார்களா இல்லையா என காலையில் இருந்து மாலையில் வரை கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த ட்ரோன் தெளிப்பான் முறையில் அந்தவகையில் எதுவும் செய்யத் தேவையில்லை எனவும், தொழிலாளர்கள் வேலை செய்யும்போது ஏதாவது இடத்தில் நீரினை தெளிக்காமல் விட்டால் கூட அவர்களுக்கு சரியான இடம் தெரியாது .
ஆனால் இந்த ட்ரோன் தெளிப்பான் அனைத்து இடங்களையும் நன்கு அறிந்து நீரினை தெளித்து விடும் எனவும் திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
ட்ரோன் தெளிப்பானை இயக்கும் முறை மற்றும் அமைப்புகள்
இவர்கள் எந்த வயல்களுக்கு செல்கிறார்களோ அங்கு சென்றபின் வயல்களின் ஓரத்தில் இவர்களின் கைபேசியை வைத்து அளவுகளை குறித்துக் கொள்வதாகவும், முழு வயல்களிலும் அளவுகளை குறித்த பின் இந்த ட்ரோன் தெளிப்பான் ஆனது தானாகவே நீரினை தெளித்து விடும் எனவும் திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
இந்த ட்ரோன் தெளிப்பான் முறையானது விமானங்களைப் போல் பறக்கும் தொழில்நுட்பம் எனவும், இது பேட்டரியின் மூலம் இயங்கக்கூடிய ட்ரோன் எனவும் இது பத்து லிட்டர் தொட்டி கொள்ளளவு எனவும் கூறுகிறார். பத்து லிட்டர் கொள்ளளவு உள்ளதால் இதற்கு நான்கு மோட்டார்களை வைத்து உள்ளதாகவும் திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் அதில் நான்கு பிரபோலஸ் அதிலிருந்து நாசில்ஸ் போன்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளதாகவும் அந்த நாசில்ஸ் மூலமே நீர் தெளிக்கப்படுகிறது எனவும், இது பிரபோலஸ் சுற்றும் வேகத்திற்கு நாசில்ஸ்லில் இருந்து நீர் கீழே மட்டும் வரும் எனவும் மேலே செல்லாது எனவும் கூறுகிறார்.
மருந்துகள் அனைத்தும் கீழே மட்டும் செல்லும் எனவும் மேலே எந்த மருந்தும் செல்லாது எனவும் கூறுகிறார். மேலும் இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தில் இரட்டை ஜி பி எஸ் ஐ பொருத்தி உள்ளதாகவும் அதன் வழியாகவே தகவல்களை தொடர்பு கொள்ள முடியுமெனவும் திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த ட்ரோன் தெளிப்பான் முறையை இயக்குவதற்கு ஒரு ரிமோட் கண்ட்ரோல் இயந்திரத்தையும் வைத்துள்ளார். இந்த இயந்திரத்தின் மூலம் ட்ரோன் தெளிப்பானில் பேட்டரி குறைவாக இருந்தால் இது காண்பித்து விடும் எனவும் கூறுகிறார்.
மருந்து தெளிக்கும் முறை
மருந்துகளை தெளிக்கும் போது வயல்களுக்கு தெளித்தது போக ஐம்பதிலிருந்து ஏழுபது சதவீதம் அளவு மருந்துகள் மீதம் இருக்கும் எனவும் கூறுகிறார். இப்பொழுது சாதாரண தெளிப்பான்கள் மூலம் தெளிப்பதால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும், இந்த ட்ரோன் தெளிப்பான் முறையின் மூலம் இரண்டிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரையில் மட்டுமே செலவாகும் எனவும் கூறுகிறார்.
ஒரு வயலுக்கு ஒரு டேங்க் அளவு மட்டுமே மருந்து மற்றும் நீரினை கலந்து தெளிப்பதாக திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தில் பஞ்ச கவியம், ஜீவாமிர்தம், மீன் கரைசல், கரிம மற்றும் கனிம ரசாய பொருட்களையும் இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தில் பயன்படுத்தலாம் எனவும் இதனால் எந்த விளைவுகளும் இயந்திரங்களுக்கு ஏற்படாது எனவும் கூறுகிறார்.
இந்த ட்ரோன் தெளிப்பான் ஆனது மருந்துகளை தெளிக்கும் போது ஒரு புள்ளியை விடாது அனைத்துப் புள்ளிகளிலும் மருந்துகளை தெளித்து விடும் எனவும் மேலும் இது இரட்டை அடுக்குகளாக மருந்துகளைத் தெளிக்கின்றன எனவும் மிகவும் சமமான அளவில் மருந்துகள் பரவுகின்றன எனவும் திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
இவர்கள் இந்த ட்ரோன் தெளிப்பானை பயன்படுத்தி நெல், உளுந்து, வாழை மற்றும் மல்லிகை ஆகியவைகளுக்கு தெளித்து உள்ளதாகவும் மேலும் தென்னைமர பெரிய தோட்டத்திற்கு சென்று தெளித்து உள்ளதாகவும், மேலும் கடலை மற்றும் கொண்டைக்கடலை, சௌசௌ ஆகியவைகளுக்கு தெளித்து உள்ளதாகவும் திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரமானது எவ்வளவு உயரமாக இருந்தாலும் பறந்து மருந்துகளை தெளிக்கும் எனவும் கூறுகிறார். உதாரணமாக வாழை மரங்களுக்கு மேலும் தென்னை மரங்களுக்கு மேலும் பறந்து சென்று மருந்துகளை தெளிக்கும் எனவும் கூறுகிறார்.
ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தின் குறைந்த கட்டணம்
இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தின் மூலம் ஒரு வயல்களுக்கு ஒரு டேங்க் அளவு நீரை மட்டுமே பயன்படுத்துவதாக கூறுகிறார்.
பொதுவாக இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தின் உடைய கட்டணம் அதிக அளவுகளிலேயே அனைவரும் கூறுவதால் இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தின் தொழில்நுட்பம் குறைந்த அளவே உள்ளது எனவும் இதன் காரணமாக, திரு கார்த்திகேயன் மற்றும் அவரது குழு எவ்வளவு தொலைவு சென்று தெளிப்பான் மூலம் மருந்துகளை தெளித்தாலும் வெறும் ஐந்நூறு ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குவதாக திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
இந்த ட்ரோன் தெளிப்பான் முறையை திரு கார்த்திகேயன் மற்றும் அவருடைய குழு ஒன்றிலிருந்து ஒன்றரை வருடங்களாக செய்து வருவதாகவும், ஆரம்பத்தில் இருந்தே இந்த குறைவான கட்டணத்தை மட்டுமே வாங்கி வருவதாகவும் கூறுகிறார். ஆனால் வெளியில் உள்ளவர்கள் 700 ரிலிருந்து 800 ரூபாய் கட்டணத்தை வாங்குவதாகவும் அவர்களாலும் ஐந்நூறு ரூபாய் கட்டணத்தை வாங்க முடியும் எனவும் அவ்வாறு அளித்தால் இதை விட வேகமாக இந்த ட்ரோன் தெளிப்பான் முறை விவசாயிகளை சென்றடையும் எனவும் கூறுகிறார்.
இவர்கள் பாண்டிச்சேரி மற்றும் தஞ்சாவூரில் எவ்வளவு அளவிலும் வயல்கள் இருந்தால் சுலபமாக ட்ரோன் தெளிப்பான் மூலம் மருந்துகளை தெளித்து விடலாம் எனவும் ஆனால் சிறிது தொலைவில் சென்று மருந்துகளை தெளிக்க வேண்டும் என்றால் பத்து ஏக்கர் நிலங்களில் மட்டுமே மருந்துகளை தெளிக்க முடியும் எனவும் கூறுகிறார்.
திரு கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவினர் இந்த ஒன்றரை வருடத்தில் காஞ்சிபுரத்தில் நெல் வகைகளையும், பாண்டிச்சேரியில் நெல் வகைகளையும், கோபிசெட்டிபாளையம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு சென்று கோவா பார்ம்ஸ் செய்துள்ளதாகவும், பல்லடம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று கொண்டைக் கடலைகளுக்கு இந்த தெளிப்பான் முறையை பயன்படுத்தி உள்ளதாகவும் சத்தியமங்கலம் பகுதியில் சௌசௌ உணவு வகைகளுக்கு இந்த தெளிப்பான் முறையை பயன்படுத்தி உள்ளதாகவும் கூறுகிறார்.
அதிக அளவுகளில் தமிழ் நாடுகளில் இந்த தெளிப்பான் முறையை பயன்படுத்தி உள்ளதாக திரு கார்த்திகேயன் அவர்கள் கூறுகிறார்.
இந்த தெளிப்பான் முறையை தொழிலாளர்கள் மூலம் செய்தால் அவர்களுக்கு ஐந்து ஆயிரத்திலிருந்து ஆறு ஆயிரம் வரை செலவாகும் எனவும் கூறுகிறார். ஆனால் இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தை பயன்படுத்தினால் நான்காயிரம் வரை மட்டுமே செலவாகும் என கூறுகிறார். மேலும் தொழிலாளர்கள் மூலம் மருந்துகளை தெளித்தால் காலையிலிருந்து மதியம் வரை நேரம் வேண்டும் என கூறுகிறார்.
ஆனால் இந்த ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தை பயன்படுத்தினால் ஒரு அரை மணி நேரத்திலேயே மருந்துகள் அனைத்தையும் வயல்களுக்கு தெளித்து விடலாம் எனக் கூறுகிறார்.
ட்ரோன் தெளிப்பானின் விலை மற்றும் பயன்
இந்த ட்ரோன் தெளிப்பானின் விலை சிறிது அதிகமாக இருப்பதால் இதனை ஒரு தனி விவசாயி வாங்குவது கடினம் எனவும், இதனை ஒரு விவசாய குழுவாக சேர்ந்து வாங்கினால் மிகச்சரியாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இளையதலைமுறைகள் இந்த ட்ரோன் தெளிப்பானை வாங்கி அதன் மூலம் வேலை செய்து வந்தால் அதிக அளவு வருமானத்தை பெறலாம் எனவும் கூறுகிறார். ஒரு ட்ரோன் தெளிப்பான் விலையானது நான்கு லட்சம் என கூறுகிறார்.
ட்ரோனில் பேட்டரி தீர்ந்துவிட்டால் அது கீழே இறங்காது எனவும் அதை நாம் ஆட்டோமேட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தி தரை இறக்கலாம் எனவும் கூறுகிறார்.
திரு கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவின் சிறப்பான ட்ரோன் தெளிப்பான்
திரு கார்த்திகேயன் அவர்களிடம் ட்ரோன் தெளிப்பானை பயிற்சி பெற வருபவர்கள் ஒரு வாரத்திற்கு பயிற்சி எடுத்தால் மிகச்சரியாக இருக்கும் எனவும் கூறுகிறார். திரு கார்த்திகேயன் மற்றும் அவரது குழு ஒன்றாக இணைந்து ஒரு சிறப்பான மற்றும் தரமான ட்ரோன் தெளிப்பான் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:பெருவிடை கோழி பண்ணையில் அதிக வருமானம்