திரு ஆறுமுகம் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வெள்ளோடு என்னும் கிராமத்தில் செவ்வந்திப்பூ சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய செவ்வந்திப் பூ சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Mr. Arumugam Their life
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு என்னும் கிராமத்தில் திரு ஆறுமுகம் அவர்கள் செவ்வந்தி பூ சாகுபடியை செய்து வருவதாகவும், இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் கூறுகிறார்.
இவருடைய தாத்தா காலங்களில் இருந்தே பாரம்பரியமாக இந்த செவ்வந்தி பூ சாகுபடியை இவருடைய குடும்பம் செய்து வருவதாகவும், இதன் காரணமாக இவருக்கு செவ்வந்திப்பூ சாகுபடியின் மூலம் ஆர்வம் ஏற்பட்டு இவர் இந்த செவ்வந்திப்பூ சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.
சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் செவ்வந்திப்பூ சாகுபடியை இவர் தொடங்குவதாகவும், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் இவர் அதிக அளவில் செவ்வந்தி பூக்களை சாகுபடி செய்வதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த செவ்வந்தி பூ சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இவருடைய செவ்வந்தி பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக மற்றும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.
செவ்வந்தி பூ வளர்ப்பு முறை
திரு ஆறுமுகம் அவர்கள் செவ்வந்தி பூ செடியை வெட்டி எடுத்து வந்து நட்டு வளர்ப்பதாகவும் அவ்வாறு வளர்ந்த செடி வேரினை நன்றாக பிடித்து விட்டால் அதிலிருந்து தண்டுகளை எடுத்து மீண்டும் செவ்வந்திப் பூ செடி வளர்ப்பதாக கூறுகிறார்.
கார்த்திகை மார்கழி மற்றும் தை ஆகிய மாதங்களில் இந்த செவ்வந்தி பூ அதிக அளவில் விளைச்சல் ஆகும் எனவும், நிலத்தை நன்றாக உழுது அதில் உரத்தைப் போட்டு நிலத்தை பதப்படுத்தி வைத்த பிறகே இவர் சாகுபடியை தொடங்குவதாக கூறுகிறார்.
அரையடி இடைவெளியில் இவர் செவ்வந்திப் பூ செடியை நடுவதாகவும், இந்த முறையில் செடியினை நட்டால் தான் பூக்களைப் பறிப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் என திரு ஆறுமுகம் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் 75 சென்ட் நிலத்தில் செவ்வந்திப் பூ சாகுபடி செய்து வருவதாகவும், இவருடைய இந்த செவ்வந்திப்பூ சாகுபடியில் பூக்கள் மிகவும் அழகாக மற்றும் எந்த பாதிப்புமின்றி கிடைப்பதாகவும் கூறுகிறார்.
Weeding and harvesting
திரு ஆறுமுகம் அவர்கள் இவரது செவ்வந்திப்பூ தோட்டத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரித்து வருவதாகவும், செவ்வந்திப்பூ தோட்டத்தில் களைகள் முளைக்க முளைக்க இவர் சுத்தம் செய்து விடுவதாகவும் கூறுகிறார்.
அறுவடை செய்வதற்கு நான்கு மாதங்கள் தேவைப்படும் எனவும் இந்த நான்கு மாதங்களுக்குள் இவர் பத்து முறை செவ்வந்திப்பூ தோட்டத்தில் உள்ள களையை சுத்தம் செய்து விடுவதாக கூறுகிறார்.
மேலும் பத்து வகை மருந்துகளை இவர் செடிகளுக்கு அளித்து வருவதாகவும், 20 நாட்களில் மொத்தமாக அனைத்துப் பூக்களையும் அறுவடை செய்து விடுவதாகவும் கூறுகிறார்.
ஒரு நாளைக்கு 50 கிலோ பூக்களை அறுவடை செய்வதாகவும், 20 நாட்களுக்குள் நான்கு முறை பூக்களை அறுவடை செய்து வருவதாகவும் திரு ஆறுமுகம் அவர்கள் கூறுகிறார்.
இந்த முறையில் இவர் பூக்களை அறுவடை செய்து அதனை விற்பனைக்கு அனுப்பி வைப்பதாகவும், இவரிடம் விளையும் அனைத்துப் பூக்களும் பார்ப்பதற்கு மிக அழகாகவும் மற்றும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.
நீரினை அளிக்கும் முறை மற்றும் விற்பனை
செவ்வந்திப்பூ தோட்டத்தில் களை வெட்டி முடித்த பிறகு செடிகளுக்கு நீரை அளிக்க வேண்டும் எனவும், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை செவ்வந்திப்பூ தோட்டத்திற்கு நீரினை அளிப்பது அவசியமான ஒன்று எனவும் திரு ஆறுமுகம் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் செடிகளுக்கு மருந்தினை அளித்து வருவதாகவும், புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்ற உயிரினங்கள் பூக்களை தாக்காமல் இருப்பதற்கு இவர் மருந்தினை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
இந்த செவ்வந்தி பூ சாகுபடியை அதிக ஏக்கரில் விளைச்சல் செய்தால் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் எனவும்,இந்த பூக்களை விற்பனை செய்யும் போது அதிக அளவில் விற்பனை ஆனால் மட்டுமே நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் இல்லை எனில் இந்த செவ்வந்திப்பூ விற்பனையில் அதிக லாபம் கிடைக்காது எனவும் கூறுகிறார்.
இவர் இந்த செவ்வந்திப்பூ சாகுபடியில் இதுவரை 30 லிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும்,இதனை இவர் திண்டுக்கல் சந்தைகளில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த செவ்வந்திப் பூ சாகுபடியில் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தால் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும், ஆனால் பூக்கள் நல்ல முறையில் விற்பனையாக வேண்டும் எனவும் விற்பனை ஆனால் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
தீபாவளி, பொங்கல் மற்றும் கார்த்திகை ஆகிய பண்டிகை காலங்களில் செவ்வந்திப் பூக்கள் அதிக விலையில் விற்பனையாகும் என திரு ஆறுமுகம் அவர்கள் கூறுகிறார்.
Planting method
செவ்வந்தி பூ செடியை நடும்போது சரியான முறையில் நட வேண்டும் எனவும் இல்லையெனில் பூக்கள் செடியில் மலராது எனவும்,பூக்கள் செடியில் மலரவில்லை எனில் அது நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்து விடும் என திரு ஆறுமுகம் அவர்கள் கூறுகிறார்.
செவ்வந்தி செடி நடும்போது செடியின் வேரினை பிரட்டிய நிலையில் நிலத்தில் நட்டினால் செடி நல்ல முறையில் வளராது எனவும், எனவே செடியினை நடும் போது வேரினை பிரட்டாமல் நட வேண்டும் என கூறுகிறார்.
களிமண் நிலத்தில் செவ்வந்திப்பூ சாகுபடி செய்யக்கூடாது எனவும் ஏனெனில் களிமண்ணில் தண்ணீர் அதிகளவில் நின்று கொண்டு இருக்கும் எனவும் இதனால் செடிகள் அழுகி விடும் என கூறுகிறார்.
மேலும் இவர் செவ்வந்திப் பூ வளர்ப்பு முறையைப் பற்றி அறிந்து கொள்ள வரும் இளைய தலைமுறை விவசாயிகளுக்கு செவ்வந்தி வளர்ப்பு முறையைப் பற்றி கற்றுக் கொடுப்பதாகவும் கூறுகிறார்.
செவ்வந்தி பூவின் வகைகள் மற்றும் நாற்றுகள் வாங்கும் முறை
செவ்வந்தி பூக்களில் அதிக வகைகளில் செவ்வந்திப் பூக்கள் இருப்பதாகவும், வெள்ளைக் செவ்வந்தி பூ மற்றும் மஞ்சள் நிற செவ்வந்திப்பூ மேலும் ஒட்டு ரக செவ்வந்தி பூக்களில் அதிக வகைகள் இருப்பதாகவும் திரு ஆறுமுகம் அவர்கள் கூறுகிறார்.
இதில் இவர் பூர்ணிமா என்ற செவ்வந்திப் பூ வகை செடியையும், சாந்தினி செவ்வந்திப்பூ மற்றும் நாட்டு செவ்வந்தி பூ செடியையும் வளர்த்து வருவதாகவும், பூர்ணிமா,நாட்டு செவ்வந்தி பூச்செடிகளை இவர் ஓசூரில் இருந்து வாங்கி வந்து வளர்ப்பதாக கூறுகிறார்.
மேலும் இவர் சாந்தினி செவ்வந்திப் பூ செடியில் இருந்து தண்டினை எடுத்து இவரே பதியம் போட்டு வைத்து வளர்த்து வருவதாகவும், மேலும் மற்ற இரண்டு பூக்களின் செடிகளையும் ஓசூரில் இருந்து வாங்கி வந்து சாகுபடி செய்வதாக கூறுகிறார்.
மேலும் செடிகளுக்கு மருந்தினை அளிக்காமல் இருந்தால் செடிகள் நல்ல முறையில் வளர்வது இல்லை எனவும் எனவே செடிகளுக்கு மருந்து அளிப்பது முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.
திரு ஆறுமுகம் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவரது செவ்வந்திப் பூ சாகுபடியை செய்து வருகிறார்.
மேலும் படிக்க:விரால் மீன் குஞ்சுகள் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.