இயற்கை முறையில் சிறப்பான உயிர்வேலி.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் இயற்கையான வழிமுறையை பின்பற்றி காடுகளுக்கு அமைக்கும் வேலியை செடிகளின் மூலம் மிக சிறப்பான முறையில் அமைத்து உள்ளார். இவரைப் பற்றியும், இவருடைய உயிர்வேலி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Farmers way of life

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் காடுகளுக்கு வேலியை செடிகள் மூலம் உருவாக்கி மிக பாதுகாப்பான முறையில் ஆடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இவர் அதிக அளவில் ஆடுகளை வைத்து வளர்த்து வருவதாகவும் விவசாயம் அதிக அளவில் இல்லை எனவும் இதனால் ஆடுகள் சுதந்திரமாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இவருடைய காடுகளில் மேய்வதற்கு இவர் செடிகளின் மூலம் மிக சிறப்பான முறையில் வேலியை அமைத்து ஆடுகளை வளர்த்த வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் மேச்சேரி ஆடு வகைகளை மட்டுமே அதிக அளவில் வளர்த்து வருவதாகவும், கிளுவை எனப்படும் செடி வகையினை சிறப்பான முறையில் வேலியாக அமைத்து உள்ளதாக கூறுகிறார்.

மேலும் எந்த செலவும் இல்லாமல் இயற்கையான முறையில் செடிகளின் மூலம் வேலியை அமைத்து மிகச் சிறப்பான முறையில் இவர் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

கிளுவை வேலியின் நன்மைகள்

கிளுவை வேலியில் பல நன்மைகள் இருப்பதாகவும், இது விவசாயின் நண்பன் மற்றும் விவசாயிகளுக்கு கிடைத்துள்ள வரபிரசாதம் எனவும் கூறுகிறார்.

விவசாயத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஓணான், பாபராணி மற்றும் சிறுசிறு பூச்சிகள் அதிக அளவில் இந்த கிளுவை வேலியில் வளர்வதாகவும்,இந்தப் பூச்சிகள் இதில் வளர்வதால் விவசாயத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் முள்கம்பி வேலி,கம்பி வேலிகள் மற்றும் சோலார் வேலிகள் ஆகியவற்றை நாம் பயன்படுத்தினால் அதிக அளவு செலவு ஆகும் எனவும் ஆனால் இந்த கிளுவை வேலினை உருவாக்கி அதனை பயன்படுத்தினால் அதன் மூலம் எந்த செலவும் இருக்காது எனவும் கூறுகிறார்.

மேலும் காற்று அதிகமாக வீசும் காலங்களில் மண்ணினை காற்று எடுத்து செல்லும் எனவும், இவ்வாறு மண்ணினை எடுத்து செல்வதையும் மண் அரிப்பிணையும் தடுப்பதற்கு இந்த வேலி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், இந்த வேலியை காட்டில் அமைத்தால் காடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த கிளுவை வேலியினை அமைத்துக் இருப்பதால் ஆடுகளை இவர்கள் மேய்க்க வேண்டிய அவசியமில்லை எனவும், காட்டிற்குள் ஆடுகளை விட்டால் மட்டும் ஆடுகள் மேய்ந்து கொள்ளும் எனவும் ஒருவர் இருந்து ஆடுகளை கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது எனவும், ஏனெனில் ஆடுகள் இந்த வேலியை தாண்டி வெளியில் எங்கும் செல்ல முடியாது என கூறுகிறார்.

இந்த உயிர் வேலிகள் மிகவும் உயரமாக வளராமல் சரியான அளவுகளில் வளர்ந்து ஒரு தடுப்பு சுவர் போல் இருக்குமெனவும், பல வருடங்கள் இந்த வேலிகள் எந்த பாதிப்பும் இன்றி மிக சிறப்பான முறையில் வளர்ந்து இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த கிளுவை வேலியில் உள்ள இலைகளை ஆடுகள் மற்றும் மாடுகள் அதிக அளவில் விரும்பி உண்பதாகவும், இது ஆடுகளுக்குத் தீவனமாக அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும், இதுபோன்று பலவித நன்மைகள் இந்த கிளுவை வேலியில் இருப்பதாக கூறுகிறார்.

History of the biofence

கிளுவை வேலி இவருடைய ஊரில் காலம் காலமாக இருந்து வருவதாகவும் இது விவசாயிகளுக்கு அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும், இந்த வேலிகள் இவருடைய ஊரில் அதிக அளவில் இருப்பதால் இவருடைய ஊருக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இந்த கிளுவை மரங்கள் என கூறுகிறார்.

கடுமையான வறட்சியும் இந்தச் செடிகள் தாங்கி மிகச் சிறப்பான முறையில் வளர்ந்து  சிறப்பாக வேலியாக மாறி விவசாயிகளுக்கு மிகவும் நன்மையைக் அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் காடுகளுக்கு இது அதிக அளவில் பாதுகாப்பினை அளித்து வருவதாகவும், காட்டிற்குள் மேயும் ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இந்த வேலிகள் தடுத்து பாதுகாத்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு காலம் காலமாக இவருடைய ஊரில் இந்த கிளுவை செடிகள் மற்றும் மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இது இவருடைய ஊருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நன்மை எனவும், அதிக அளவில் இது பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.

கிளுவை செடியினை நடவு செய்யும் முறை

கிளுவை செடியினை நடவு செய்யும் முறை மிக சுலபமானது எனவும்,மிக வறட்சியான நிலையில் வேலியில் இலைகள் இல்லாத சமயத்தில் செடிகளில் உள்ள தண்டினை வெட்டி எடுத்து அந்த தண்டினை நட்டுவளர்ப்பதாக கூறுகிறார்.

இவ்வாறு தண்டினை நட்ட இரண்டு மாதம் வரை மிகக் கடுமையான வறட்சியில் இந்தச் செடிகள் நன்றாக வளரும் எனவும் இரண்டு மாதத்திற்கு பிறகு மழை பெய்ய ஆரம்பித்து வடும் எனவும் மழை பெய்தவுடன் தண்டானது நன்றாக வேர் பிடித்து வளர தொடங்கி விடும் எனக் கூறுகிறார்.

மேலும் இந்த கிளுவை செடிகளுக்கு நாம் நீரினை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் நீர் இல்லாமலே இந்த செடிகள் மிக சிறப்பான முறையில் வளரும் எனவும், மழை பெய்யும் போது மட்டும் செடிகளுக்கு நீர் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த கிளுவை செடிகளுக்கு நீண்ட ஆயுட்காலம் இருக்கும் எனவும் அதனை சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வந்தால் மட்டும் போதுமானது எனவும்,சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வந்தால் பாதுகாப்பான வேலையினை இது நமக்கு அளிக்கும் எனவும் கூறுகிறார்.

Types of kiluvai plant

கிளுவை வேலிகள் இரண்டு வகையில் இருப்பதாகவும் அதில் மரம் கிளுவை மற்றும் செடி கிளுவை அல்லது நாட்டுக்கு கிளுவை எனவும் இந்த இரண்டு வகை கிளுவை மரங்கள் இவருடைய ஊரில் இருப்பதாக கூறுகிறார்.

மரம் கிளுவை எனப்படும் கிளுவை மரங்கள் பெரிய மரமாக வளரும் எனவும், இதனையும் அதிகளவு மக்கள் வேலியாக அமைத்து பயன்படுத்தி வருவதாகவும், ஆனால் இந்த வகை கிளுவை மரங்களில் முட்கள் இருக்காது எனவும் கூறுகிறார்.

மற்றும் செடி கிளுவை எனப்படும் கிளுவை செடிகள் குறிப்பிட்ட உயரம் வரை வளர்ந்து மிகச் சிறப்பான வேலியை அளிக்கும் எனவும், இந்தக் கிளுவை செடிகளில் முட்கள் இருக்கும் எனவும், இந்த வகைச் செடிகள் வேலியில் சந்து இல்லாமல் அடர்த்தியாக வளர்ந்து மிகச் சிறப்பான பாதுகாப்பினை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் கம்பி வேலி மற்றும் பிற வேலிகளை அமைத்தால் அதில் அதிக அளவு வேலை மற்றும் செலவு இருக்கும் எனவும் ஆனால் இந்த உயிர்வேலியினை அமைப்பதினால் எந்தவித செலவும் இருக்காது எனவும் மற்றும் அதிகளவில் எந்தவித வேலையும் இருக்காது எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த கிளுவை வேலினை அமைத்து வளர்த்து வருவதால் இதன் மூலம் இவர் பாதுகாப்பான முறையில் ஆடுகளை வளர்த்து வருவதாகவும் மற்றும் இது இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:பீர்க்கங்காய் சாகுபடியில் அதிக லாபம்.

Leave a Reply