சிறப்பான முட்டைக்கோஸ் சாகுபடி.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் முட்டைக் கோஸ் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய முட்டைக்கோஸ் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

முட்டைகோஸ் சாகுபடியின் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

முட்டைக்கோஸ் சாகுபடியை இவர் கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருவதாகவும், இந்த முட்டைக்கோஸ் சாகுபடி முறையைப் பற்றி இவருக்கு நன்கு தெரியும் எனவும் கூறுகிறார்.

இவருடைய திருமணத்திற்கு முன்பு இவருடைய தந்தையின் வீட்டில் இருக்கும் போது இவர் முட்டை கோஸ் சாகுபடி முறைகளைப் பற்றி அறிந்து கொண்டதாகவும், இவருடைய தந்தை முட்டைக்கோஸ் சாகுபடியை மிகவும் சிறப்பாக செய்வார் எனவும் கூறுகிறார்.

முட்டைக்கோஸ் சாகுபடி முறையைப் பற்றி இவருக்கு நன்கு தெரியும் என்ற காரணத்தினால் இவருடைய திருமணத்திற்கு பின்பு வீட்டில் எந்த வேலையும் இன்றி இருப்பதால் முட்டைக்கோஸ் சாகுபடியைத் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இவர் முட்டைக்கோஸ் சாகுபடியை தொடங்கி இப்பொழுது மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

Benefits of cabbage

முட்டைக்கோஸில் பலவித நன்மைகள் இருப்பதாகவும், இதனை நாம் உணவில் எடுத்துக் கொண்டால் பலவித நோய்களை குணப்படுத்த முடியும் எனவும் கூறுகிறார்.

முட்டைக்கோஸில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள், ஆந்தோசையனின்கள் மற்றும் சல்ஃபோரபேன் போன்ற சத்துக்கள் நிறைந்து இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் முட்டைக்கோஸை நமது உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் இருதய நோய் குணமாகி விடும் எனவும் மற்றும் புற்றுநோயை தடுப்பதற்கு அதிகமாக பயன்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.

உடலில் ஏற்படும் அலர்ஜி நோயை தடுப்பதற்கும் இந்த முட்டை கோஸ் மிகவும் பயனுள்ள வகையில் இருப்பதாகவும் கூறுகிறார்.

உடல் எடையை குறைப்பதற்கும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கும் முட்டைக்கோஸ் அதிகமாகப் பயன்படும் எனவும், உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்த ஒரு உணவு என கூறுகிறார்.

தலை முடி உதிர்வதை முட்டைக்கோஸ் குணப்படுத்தும் எனவும் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகமாக முட்டைக்கோஸில் இருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும் எனக் கூறுகிறார்.

இதுபோல் பலவித நன்மைகள் முட்டைகோஸில் இருப்பதாக இவர் கூறுகிறார்.

முட்டைக்கோஸ் சாகுபடி செய்யும் முறை

முட்டைக்கோஸ் சாகுபடியை இவர் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த முட்டைக்கோஸ் சாகுபடியை இவர் மிகவும் ஆர்வத்துடன் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

முட்டைகோஸ் சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரங்களைப் போட்டு நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தினை தயார் செய்து முடித்த பிறகு நாற்றுக்களை நிலத்தில் நட்டு வளர்க்கத் தொடங்கி விடலாம் எனவும், முட்டைக்கோஸ் விதைகளை வாங்கி நாற்றுகளாக உருவாக்கி சாகுபடி செய்யலாம் எனவும் இல்லையெனில் முட்டைகோஸ் நாற்றுகளாகவே வாங்கி வந்து சாகுபடி செய்யலாம் எனவும் கூறுகிறார்.

முட்டைக்கோஸில் 2 வகைகள் இருப்பதாகவும் அதில் ஒருவகை உருண்டை வடிவத்தில் இருக்கும் எனவும் மற்றொரு வகை முட்டைக்கோஸ் தட்டை வடிவில் இருக்கும் எனவும் கூறுகிறார்.

உங்களுடைய ஊரில் எந்த முட்டைக்கோஸ் அதிக விலைக்கு விற்பனை ஆகிறது என்பதை அறிந்து கொண்டு அந்த வகை முட்டைக்கோஸை சாகுபடி செய்யலாம் எனவும், இவர் உருண்டை வடிவில் உள்ள முட்டைகோஸ் வகையையே சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

குளிர்காலத்தில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்தால் மிகவும் சிறப்பான முறையில் முட்டைக் கோஸ் வளர்ந்து அதிகளவில் விளைச்சலை அளிக்கும் எனவும், இதுவே மழைக்காலத்தில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்தால் விளைச்சல் சிறப்பாக இருக்காது எனவும் கூறுகிறார்.

ஏனெனில் மழைக்காலத்தில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்தால் முட்டைக்கோஸ் அழுகி வீணாவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாகவும், எனவே முட்டைக் கோஸை குளிர்காலத்தில் சாகுபடி செய்யலாம் எனவும் கூறுகிறார்.

ஒவ்வொரு முட்டைகோஸ் நாற்றுகளுக்கு இடையிலும் ஒரு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும் இந்த முறையில் நாற்றுகளை நட்டு வளர்த்தால் தான் செடி நன்றாக வளர்ந்து நல்ல மகசூலை அளிக்கும் என கூறுகிறார்.

Fertilizer and maintenance method

முட்டைக்கோஸ் சாகுபடி செய்வதற்கு இவர் அதிக அளவில் இயற்கை உரங்களை மட்டுமே அளித்து பராமரித்து வருவதாகவும், செயற்கை உரங்கள் எதையும் அதிகமாக அளிப்பது இல்லை எனவும் கூறுகிறார்.

இயற்கை உரமான மாட்டுச்சாணம், ஆட்டுப் புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகள் ஆகியவற்றை உரமாக அளித்து வருவதாகவும் மற்றும் இந்த முட்டைக்கோஸ் சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு தேவையில்லை எனவும் கூறுகிறார்.

தோட்டத்திலுள்ள களைச் செடிகளை மட்டும் நீக்கிவிட்டு செடிகளுக்கு தேவையான நீரினை மட்டும் அளித்து பராமரித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

களைச் செடிகளை நீக்கா விட்டால் களைச்செடிகள் முட்டைக்கோஸ் செடியின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் எனவும் எனவே களைச் செடிகளை தோட்டத்தில் இருந்து நீக்குவது முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இயற்கை உரங்களை அதிகமாக அளிப்பதால் நோய்த் தாக்குதல் எதுவும் அதிகளவில் செடிகளுக்கு ஏற்படுவதில்லை எனவும், அவ்வாறு நோய் தாக்குதல் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு இவர் மருந்துகளை அளித்து வருவதாக கூறுகிறார்.

இயற்கை உரங்களை அளித்து சாகுபடி செய்து வந்தால் முட்டைகோஸில் அதிகளவில் சத்துக்கள் இருக்கும் எனவும், இதுவே செயற்கை உணவுகளை அளித்து வளர்த்தால் சத்துக்கள் அதிக அளவில் இருக்காது எனவும் கூறுகிறார்.

எனவே இவர் இயற்கை உரங்களை அளித்து முட்டைக்கோஸ் சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

அறுவடை மற்றும் நீரினை அளிக்கும் முறை

முட்டைக்கோஸ் செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், சொட்டு நீர் பாசனத்தில் அதிக அளவில் நீர் செலவாகாது என்ற காரணத்தினால் இவர் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

முட்டைக்கோஸ் சாகுபடியில் செடிகளில் நீர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும், ஈரம் காய காய செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

அதிகளவில் நீரினை அளிக்கக் கூடாது எனவும் சரியான அளவில் நீரினை அளித்து பராமரிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

முட்டைக்கோஸ் நாற்றுகளை நட்ட 75வது நாளில் அறுவடை செய்ய தொடங்கி விடலாம் எனவும், முட்டைக்கோஸ் சாகுபடி செய்யும் முறை மிகவும் சுலபமானது எனவும் கூறுகிறார்.

Sales method and profit

முட்டைக்கோஸை அறுவடை செய்து இவருடைய ஊரில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் இவருடைய தோட்டத்திற்கு வந்து வாடிக்கையாளர்கள் முட்டைக்கோஸை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

இயற்கை முறையில் இவர் முட்டைக்கோஸ் சாகுபடி செய்வதால் அதிக வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து முட்டைகோஸை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய முட்டைக்கோஸ் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:ஒட்டகம் வளர்ப்பில் சிறந்த லாபம்.

Leave a Reply