திரு அருண் அவர்கள் மதுரை மாவட்டத்தில் உள்ள மாட்டுத்தாவணி அருகில் சிறுவிடை கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய சிறுவிடை கோழி பண்ணையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு அருண் அவர்களின் வாழ்க்கை
மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி அருகில் திரு அருண் அவர்கள் சிறுவிடை கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இவர் இந்த பண்ணையை இயற்கையான முறையிலேயே நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் நாட்டுக்கோழி, காடை மற்றும் வாத்து ஆகியவைகளை வளர்த்து வருவதாகவும், இவருடைய பண்ணையை 12 சென்ட் பரப்பளவில் அமைத்து இருப்பதாகவும் இந்த பண்ணையிலேயே அனைத்து வகை கோழிகளையும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய பண்ணையில் அதிக அளவில் சிறுவிடை கோழிகளை வளர்த்து வருவதாகவும், இப்பொழுது அதிக அளவில் எங்கும் சிறு விடை கோழிகள் இருப்பதில்லை என்பதாலும் இவர் இந்த சிறுவிடை கோழிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருக்கும் இவருடைய தம்பிக்கும் சிறுவயதிலிருந்தே கோழிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் இந்த கோழி பண்ணையை தொடங்கியதாகவும் கூறுகிறார்.
திரு அருண் அவர்கள் IT Engineering பயின்று உள்ளதாகவும், இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து கொண்டிருந்ததாகவும், அப்பொழுது இவருக்கு விவசாயம் சார்ந்த தொழில்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதன் காரணமாகவும் இவர் கோழி பண்ணையை வைத்து நடத்தி வருவதாகக் கூறுகிறார்.
The structure of the farm
திரு அருண் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் சிறிய இடத்தில் அதிக அளவு கோழிகளை வைத்து வளர்த்து அதன் மூலம் நிறைந்த லாபத்தை பெற்று வருகிறார்.
இவர் இவருடைய கோழிப் பண்ணையை 12 சென்ட் பரப்பளவில் அமைத்து உள்ளதாகவும், இந்த பண்ணையில் வாத்துக்கள், கோழி வகைகள் மற்றும் காடைகள் ஆகிய அனைத்தையும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் பண்ணையை தொடங்கும் போது இவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கோழிப்பண்ணையை வைப்பதற்கு ஒரு ஏக்கர் மற்றும் 2,3 ஏக்கர் இடம் தேவைப்படும் என கூறியதாக கூறுகிறார்.
ஆனால் இவர் இவரிடம் உள்ள 12 சென்ட் நிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு பண்ணையை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
சிறுவிடை கோழி வளர்ப்பின் தொடக்கம்
சிறுவிடை கோழிகள் தமிழ்நாட்டின் கோழி இனம் எனவும், இந்த கோழி இனங்கள் அதிக அளவில் அழிந்து வந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறு இந்த கோழி இனங்கள் அழிந்து வருவதால் இவர் இந்த கோழி இனத்தை வளர்க்கலாம் என்ற எண்ணத்துடன் இந்த சிறுவிடை கோழி வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் நல்ல சிறுவிடை கோழிகளை ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பார்த்து வாங்கி வந்ததாகவும், இவ்வாறு ஒவ்வொரு இடத்திற்கும் சென்று 240 சிறுவிடை கோழிகளை வாங்கி வளர்த்து வந்ததாகவும் கூறுகிறார்.
மேலும் சிறு விடை கோழிகளை குறைந்த இடத்தில் வளர்க்க முடியும் என்பதாலும், இவைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்ளாத இயல்புடையது என்பதாலும் இவர் இந்த சிறு விடை கோழிகளை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.
ஆனால் பெருவிடை கோழிகளை குறைந்த இடத்தில் வளர்க்க முடியாது எனவும் ஏனெனில் பெருவிடைக் கோழிகள் சண்டையிட்டுக் கொள்ளும் இயல்புடையது இதனால் குறைந்த இடத்தில் வளர்க்கும் போது இறப்புகள் அதிகளவில் ஏற்படும் எனக் கூறுகிறார்.
கோழிகளின் வளர்ப்பு முறை மற்றும் தீவனம்
திரு அருண் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் 12 சென்ட் பரப்பளவில் பண்ணை அமைத்து, தாய் கோழிகள்,குஞ்சுகள் மற்றும் முட்டைகள் ஆகியவைகள் அனைத்தும் தனித்தனியாக இருப்பதற்கு கொட்டகையை அமைத்து உள்ளார்.
கோழிகளுக்கு இவர் கீரை வகைகளை தீவனமாக அளித்து வருவதாகவும் மற்றும் தினமும் அடர் தீவனங்களை 100 கிராம் அளவு அளித்து வருவதாகவும் மேலும் மண்புழு உரத்தை உற்பத்தி செய்து அதனையும் கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் கரையான் உற்பத்தி செய்து கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும்,வாரத்திற்கு ஒரு முறை மீன் கழிவுகளை எடுத்து வந்து அதனை கோழிகளுக்கு அளித்து வருவதாக திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
கோழிகள் ஐந்து வருடம் வரை உயிர்வாழும் எனவும் மூன்றரை வருடம் வரை முட்டைகளை நல்ல முறையில் இடும் எனவும், முட்டையிடும் நிலை குறையும் போது அதனை இறைச்சிக்கு விற்பனை செய்து விடுவதாகவும் கூறுகிறார்.
கோழிகளுக்கு அளிக்கும் நீரினை சரியான முறையில் ஒரே வகை நீரினை மட்டும் அளித்து வந்தால் கோழிகளுக்கு எந்த வித நோய்களும் ஏற்படாது எனவும், நீரினை மாற்றி அளித்தால் மட்டுமே நோய்கள் ஏற்படும் எனவும் கூறுகிறார்.
கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை சரி செய்வதற்கு இவர் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி வருவதாகவும், வாரத்திற்கு ஒரு முறை துளசி, பப்பாளி இலை, மஞ்சள் ஆகியவற்றை நீரில் கலந்து கோழிகளுக்குப் அளித்து வருவதாகவும் இதனால் கோழிகளுக்கு சளி பிடிக்காது எனவும் கூறுகிறார்.
மேலும் அம்மை மற்றும் சிறு புண்கள் ஏற்படாமல் இருப்பதற்கு வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலை இலையை அரைத்து நீரில் கலந்து கோழிகளுக்குப் அளித்து வருவதாகவும், இவருடைய கோழிகளுக்கு இதுவரையில் எந்தவித நோய்களும் ஏற்பட்டதில்லை எனவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
Sales method and profit
திரு அருண் அவர்கள் மாதத்திற்கு 300 ஒரு மாத கோழிக்குஞ்சுகளை விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இவர் ஒருநாள் குஞ்சுகளை அதிக அளவில் விற்பனை செய்வதில்லை எனவும், ஒருநாள் குஞ்சுகளை விரும்பி கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் குஞ்சுகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் சுத்தமான சிறுவிடை கோழிகளை வளர்த்து அதனை மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு இருப்பதாகவும், இந்த முறையிலேயே இவர் கோழிகளை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு அருண் அவர்கள் ஒருநாள் கோழிக் குஞ்சை 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், இந்த கோழிப் பண்ணையின் மூலம் மாதம் 75 ஆயிரம் ரூபாய் வரை இவர் வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் சிறுவிடை கோழி முட்டைகளை 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், தமிழ்நாடு மற்றும் கேரளா வரையில் இவர் கோழி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
சிறுவிடை கோழிகளின் மருத்துவ குணம்
சிறுவிடை கோழிகளின் இறைச்சியில் உள்ள சுவை பெருவிடைக் கோழிகளின் இறைச்சியில் இருக்காது எனவும், அதிக அளவில் மக்கள் சிறுவிடை கோழிகளின் இறைச்சியையே விரும்பி உண்பதாகவும் திரு அருண் அவர்கள் கூறுகிறார்.
மேலும் சிறுவிடை கோழி இறைச்சியில் அதிக அளவில் மருத்துவ குணம் இருப்பதாகவும், இயற்கையான முறையில் கோழிகள் வளர்வதால் அதனுடைய இறைச்சியை உண்ணும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும், நரம்புத் தளர்ச்சி மற்றும் சளி ஆகிய அனைத்தையும் சரி செய்வதற்கு பயன்படுவதாகவும் கூறுகிறார்.
திரு அருண் அவர்கள் மிகவும் சிறப்பான இயற்கை முறையில் சிறுவிடை கோழிகளை வளர்த்து அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:துளசி சாகுபடியில் அதிக வருமானம்.