அதிக அளவு புரத சத்து நிறைந்த சிறந்த கோழி தீவனம்.

திரு நந்தகுமார் என்பவர் ஒரு கோழி பண்ணையை சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவர் இவருடைய கோழிகளுக்கு மிகவும் தரமான புரத சத்து நிறைந்த தீவனங்களை இவரே தயாரித்து அளித்து வருகிறார்.

இவரைப் பற்றியும் இவருடைய கோழிப் பண்ணையையும், கோழிகளுக்கு அளிக்கும் சத்து நிறைந்த மிக சிறப்பான கோழித் தீவனங்களை பற்றியும் முழுமையாக கீழ்காணும் கட்டுரையில் தெளிவாக காணலாம்.

திரு நந்தகுமார் அவர்களின் வாழ்க்கை

திரு நந்தகுமார் அவர்கள் ஆரம்பத்தில் வியாபாரம் செய்து வந்ததாக கூறுகிறார். வரட்சியின் காரணமாக இவர் இந்த கோழி பண்ணையினை தொடங்கியதாக கூறுகிறார்.

திரு நந்தகுமார் அவர்கள் இந்த கோழிப்பண்ணையினை ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகி உள்ளதாகவும் கூறுகிறார். இவருடைய கோழிப் பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கும் அதிக அளவு புரத சத்து நிறைந்த தீவனங்களை மட்டுமே அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

திரு நந்தகுமார் அவர்கள் பண்ணையில் மொத்தமாக ஆயிரத்து ஐந்நூறு கோழிகளுக்கு மேல் மிக சிறப்பான மற்றும் தரமான முறையில் வளர்த்து வருகிறார். இவர் இந்த அனைத்து கோழிகளுக்கும் மிக தரமான மற்றும் மிக அதிக அளவு சத்து நிறைந்த தீவனங்களை அளித்து வருகிறார்.

இந்த அனைத்து கோழிகளுக்கும் இந்த அதிக அளவு புரத சத்து நிறைந்த தீவனங்களை அளிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். ஆனால் இதை திரு நந்தகுமார் அவர்கள் மிக சிறப்பான வகையில் எந்த கஷ்டமும் இன்றி கோழிகளுக்கு தீவனங்களை அளித்து வந்து கொண்டுள்ளார்.

புரத சத்து நிறைந்த தீவனத்தை தயார் செய்ய எண்ணம் தோன்றியதின் காரணம்

பொதுவாக அதிக அளவில் உள்ள பண்ணையாளர்கள் இந்த தீவனம் முறையினால் நன்மை மற்றும் தீமையையும் பெற்றுள்ளனர்.

திரு நந்தகுமார் அவர்களுக்கு கோழிகளுக்கு அளிக்கும் இந்த புரத சத்து நிறைந்த தீவனத்தை தயார் செய்ய எண்ணம் தோன்றியதின் முக்கிய காரணமானது, கடந்த வருடம் கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தின் விலை அதிகமானதே காரணம் எனவும் கூறுகிறார்.

இந்தப் புரத சத்து நிறைந்த தீவனம் ஆனது சமூக வலைதளங்களின் மூலமே அறிந்ததாகும், இரண்டாவதாக அசோலா முறையை பயன்படுத்தியதாகவும், மூன்றாவதாக அகத்தி மற்றும் முருங்கை ஆகியவைகளை தீவனமாக தயாரித்து கோழிகளுக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

இந்த மூன்று முறையும் நல்ல முறையில் பயன்படுத்தி வருவதாகவும் அதுவும் இந்த புரத சத்து நிறைந்த தீவனங்களே அதிக அளவில் கோழிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

திரு நந்தகுமார் அவர்களின் பண்ணை ஆனது மலையடிவாரத்தில் அமைந்துள்ளது,இதனால் இவருக்கு இயற்கையிலேயே அதிக அளவு உணவு கிடைக்கும்.

ஆனால் இவர் இந்த அதிக அளவு புரத சத்து நிறைந்த உணவை அளிப்பதற்கு முக்கிய காரணமானது இயற்கையில் கிடைக்கும் உணவானது தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வாய்ப்பில்லை இதனால் இந்த புரதச்சத்து நிறைந்த தீவனத்தை கோழிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

இந்த முறையினை திரு நந்தகுமார் அவர்கள் ஐந்து மாதங்களாக செய்து கொண்டு வருவதாக கூறுகிறார்.

புரத சத்து நிறைந்த தீவனத்தை தயார் செய்ய பயன்படும் பூச்சி வகை

இந்த புரதச்சத்து நிறைந்த தீவனத்தை தயார் செய்ய பயன்படும் உயிரினம் ஆனது ஒரு பூச்சி வகை என திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார். இந்த பூச்சி வகையானது தேவையற்ற உணவுகளில் இருந்து புரதத்தை உண்டு அதன் மூலம் இந்த புரத சத்து நிறைந்த தீவனத்தை அளிப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு தயாரான இந்த புரத சத்து நிறைந்த தீவனத்தில் இருந்து மீண்டும் இந்த தீவனத்தை தயார் செய்ய குறைந்த அளவு புழுக்களை எடுத்து வைத்துவிட்டு மீதி உள்ள தீவனத்தை கோழிகளுக்கு உணவாக அளித்து விடுவதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

புரத சத்து நிறைந்த தீவனத்தை தயார் செய்யும் முறை

திரு நந்தகுமார் அவர்கள் இந்த புரத சத்து நிறைந்த தீவனத்தை தயார் செய்வதற்கு முதலில் புழுக்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என கூறுகிறார்.

இந்த புழுக்கள் ஆனது முதலில் கூட்டுப் புழுவாக மாறி அதன் பிறகு பூச்சிகளாக வெளியே வரும் என கூறுகிறார். இந்த பூச்சிகளில் ஆண், பெண் பூச்சிகள் ஒன்றாக இணைந்து இனபெருக்கம் செய்து முட்டையிட ஆரம்பம் செய்யும் என கூறுகிறார்.

இந்த முட்டை ஆனது இரண்டு நாட்களில் பொரித்து விடும் எனவும் முட்டையில் இருந்து வெளியில் வரும் சிறு புழுக்களை ஒரு வாரத்திற்கு மிகப் பாதுகாப்பான வகையில் பராமரித்து அதன்பின் அந்தப் புழுக்களின் மீது தேவையற்ற உணவுகளை போட்டு விடுவதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

காய்கறிகளில் தேவையற்ற காய்கள் மற்றும் மீன் வகைகளில் தேவையற்ற மீன்கள் ஆகியவற்றை இந்த புழுக்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார். தேவையற்று உள்ள அனைத்து உணவுகளையும் இந்த புழுக்களுக்கு அளிக்கலாம் எனவும் அனைத்து உணவுகளையும் இந்தப் புழுக்கள் உண்ணும் எனவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

இந்த தேவையற்ற உணவுகளின் மூலம் இந்த புழுக்கள் ஆனது வளர்ந்து வரும் எனவும் கூறுகிறார். இவற்றை ஒரு வாரத்திற்கு அப்படியே வைத்து பார்த்துக்கொண்டு அதன் பிறகு அவற்றை இடமாற்றம் செய்துவிட வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் அதுபோன்ற கழிவுகளின் மேல் பூச்சிகளை விட்டால் அவைகள் முட்டையிட ஆரம்பம் செய்து விடும் எனவும் கூறுகிறார். இந்த முறையை மட்டுமே மிக சரியாக செய்ய வேண்டும் என திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

பூச்சிகளுக்கு இந்த கழிவுகளை அளிப்பதன் மூலம் இந்த கழிவுகளால் எந்தவித துர்நாற்றமும் வீசுவதில்லை எனவும் கூறுகிறார். இறைச்சிகள் போன்ற கழிவுகளுக்கு மட்டுமே சிறிதளவு துர்நாற்றம் வரும் எனவும் மற்ற காய்கறி கழிவுகளுக்கு எந்தவித துர்நாற்றமும் வீசுவதில்லை எனவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

சிறிய அளவு தீவனங்களை தயார் செய்பவர்கள் குறைந்த அளவே உணவுகளை போட்டு தீவனத்தை தயார் செய்யலாம் எனவும் கூறுகிறார்.

பொதுவாக பல பண்ணைகளில் இந்த தீவனங்களை தயார் செய்யும் போது பூச்சிகள் முட்டையிடவதற்கு ஒரு சிறிது சிறிது இடைவெளிவிட்ட கட்டையை வைப்பார்கள் எனவும் இந்த முறையினால் முட்டைகளை அதிலிருந்து எடுக்கும் போது முட்டைகள் உடைய வாய்ப்பு உள்ளது எனவும் கூறுகிறார்.

ஆகையால் இந்த முறையினை இவர் பின்பற்றுவதில்லை எனவும், இவர் தட்டு போன்ற அமைப்பில் கழிவுகளை வைத்து பூச்சிகள் முட்டை இடுவதற்கு வைத்து விடுவதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

இந்த வளர்ப்பு முறையை திரு நந்தகுமார் அவர்கள் ஒரு கூண்டு போன்ற அமைப்பில் வைத்து உருவாக்கி வருகிறார். மேலும் அந்தக் கழிவுகளில் மற்ற எறும்பு போன்ற பிற உயிரினங்கள் செல்லாதவாறு அவற்றுக்கு ஒரு நல்ல வழி முறையும் செய்துள்ளதாக கூறுகிறார்.

இந்த புழுக்களை ஒரு வாரத்திற்கு வாழைப்பழம், புண்ணாக்கு, தவிடு போன்ற தீவனங்களின் கழிவுகளுக்கு போட்டு பாதுகாப்பாக வளர்த்த வேண்டும் எனவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த கழிவுகளில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் இந்த உணவுகளில் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே புழுக்கள் இந்த உணவினை உண்ணும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த கழிவுகளில் புண்ணாக்கு கழிவை போடுவதால் அவை ஈரப்பதத்தை பராமரிக்க உதவுவதாகவும் கூறுகிறார்.

புழுக்களை பிரித்தெடுக்கும் முறை

திரு நந்தகுமார் அவர்கள் முதிர்ந்த புழுக்களை தனியாக பிரித்தெடுப்பதற்கு ஒரு சிறப்பான முறையை தாயார் செய்துள்ளார்.

அந்த முறையானது ஒரு தொட்டி போன்ற அமைப்பில் புழுக்களை கொட்டிவிட்டு அதில் அழுகிய நிலையில் உள்ள கழிவுகளை கொட்டிவிட வேண்டும் எனவும் கூறுகிறார். இதிலிருந்து முதிர்ந்த புழுக்கள் ஒரு குழாய் வழியாக தானாகவே ஒரு பெட்டியில் வந்துவிடும் எனவும் கூறுகிறார்.

அவ்வாறு அந்த தொட்டியில் இருந்து பெட்டிக்கு வரும் புழுக்களை எடுத்து கோழிகளுக்கு தீவனமாக அளிக்கலாம் எனவும் கூறுகிறார். இவ்வாறாக கிடைக்கும் இந்த புழுக்கள் ஒரு நாளைக்கு நூறில் இருந்து நுற்றைம்பது கிராம் வரை கிடைப்பதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

இந்த தொட்டி போன்ற அமைப்பில் எந்த வகை கழிவுகளையும் போடலாம் எனவும், இந்தப் புழுக்கள் ஆனது முதிர்ந்த உடன் கருப்பு நிறத்திற்கு மாறி விடுவதாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

இந்த தீவனத்தை கோழிகளுக்கு அளிக்கும் போது அந்த கோழிகள் ஆனது ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொண்டு உணவினை உண்பதாகவும் கூறுகிறார்.

தீவனங்களை கோழிகளுக்கு அளிக்கும் முறை

கோழிகளுக்கு இந்த புரத சத்து நிறைந்த தீவனத்தை போடும்போது அந்த கோழிகள் ஐம்பது நாட்களுக்கும் மேல் வளர்ந்த கோழிகளாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். இவருடைய கோழிகளுக்கும் இந்த தீவனத்தை ஐம்பது  நாட்களுக்கு மேல் வளர்ந்த கோழிகளுக்கு மட்டும் அளிப்பதாக கூறுகிறார்.

இவருக்கு ஒரு நாளுக்கு நூறில் இருந்து நூற்றைம்பது கிராமிற்கு மேல் இந்த தீவனம் கிடைப்பதும், இவ்வாறாக தீவனம் கிடைப்பதற்கு நல்ல பராமரிப்பு இருந்தால் மட்டுமே சரியாக தீவனம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த தீவனம் தயாரிக்கும் முறையினை சமூகவலைதளத்தில் பார்தே அறிந்து கொண்டு இதனை சிறப்பாக செய்ததாக திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

இதில் எவ்வளவு அதிகளவு தேவையற்ற உணவுகளை அளிக்கிறோமோ அந்த அளவிற்கு மட்டுமே தீவனம் கிடைக்கும் எனவும் கூறுகிறார். இந்த பூச்சிகளால் மற்ற உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறுகிறார்.

இந்த பூச்சிகளின் வாழ்நாள் ஆனது ஒரு மாதத்தில் இருந்தே ஒன்றரை மாத கால அளவு மட்டுமே என கூறுகிறார். சாதாரணமாக வளரும் கோழிகளை விட இந்த புரத சத்து நிறைந்த தீவனங்களை உண்ணும் கோழிகள் அதிக அளவு வளர்ச்சியை பெறும் எனவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

இவரிடம் இந்த புழுக்களை வாங்க வருபவர்களுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார். இவற்றிற்கு ஈரப்பதம் முக்கியமாக இருக்க வேண்டும் எனவும், புழுக்களை பிரித்தெடுக்கும் தொட்டியினை வெயிலில் வைப்பது தவறான ஒன்று எனவும் திரு நந்தகுமார் அவர்கள் கூறுகிறார்.

திரு நந்தகுமார் அவர்கள் இந்த புரத சத்து நிறைந்த தீவனத்தை நல்ல முறையில் மிக சுலபமாக வகையில் தயாரித்து இவருடைய கோழிகளுக்கு அளித்து வருகிறார்.

மேலும் படிக்க:தலைச்சேரி ஆட்டுப்பண்ணை வளர்ப்பு.

Leave a Reply