மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பண்ணையாளர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் தென்னை மரங்களை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் தேங்காய்களை வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இவரையும் இவருடைய தேங்காய் எண்ணெய் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Commencement of coconut oil production
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் தென்னை மரத்தோப்பினை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் தேங்காய்களை வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு மரத்திலிருந்து காய்ந்து விழுந்த தேங்காய்களை பயன்படுத்தியே எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய விவசாய பண்ணையில் இப்பொழுது மொத்தமாக 270 தென்னை மரங்கள் இருப்பதாகவும், இவர் ஆரம்பத்தில் இருந்தே இயற்கை விவசாயம் செய்து வந்து கொண்டிருந்ததாகவும் இவ்வாறு விவசாயம் செய்து வரும் போது தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்ததாக கூறுகிறார்.
இவ்வாறு ஒவ்வொரு மரங்களாக வளர்ந்து இப்பொழுது அதிக அளவில் மரங்கள் வளர்ந்து உள்ளதால் அதில் இருந்து கிடைக்கும் தேங்காய்களை வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் இவர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.
தேங்காய் எண்ணெயின் பயன்கள்
தேங்காய் எண்ணெய் கள் பலவித பயன்பாடுகளுக்கு பயன் பட்டு வருவதாகவும், இந்த எண்ணெய் குழம்பு தாளிக்க அதிக அளவில் பயன்படும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த எண்ணெயை பயன்படுத்தி சமையல் செய்யும் போது இது அதிக அளவு வெப்ப நிலையை தாங்கி ஆவியாகாமல் இருக்குமெனவும், இதுவே மற்ற எண்ணெய்கள் அதிக அளவு வெப்பத்தை தாங்காமல் ஆவியாகி விடும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த எண்ணெயை சமையல் செய்வதற்கு பயன்படுத்தினால் சமையல் மிகவும் சுவையாக இருக்கும் எனவும், இதனை கொண்டு சமையல் செய்து உண்டால் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் தேங்காய் எண்ணையைக் கொண்டு சமையல் செய்யும் போது உணவானது நல்ல நிறத்தையும் மற்றும் நல்ல மணத்தையும் அளிக்கும் எனவும் கூறுகிறார்.
Health benefits of coconut oil
தேங்காய் எண்ணெய்யில் பொதுவாகவே அதிக அளவில் மருத்துவகுணம் இருப்பதாகவும் இதனை பயன்படுத்தி நாம் உணவு தயாரித்து உண்ணும் போது அதன் மூலம் நமக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்கும் என கூறுகிறார்.
குழந்தைகளுக்கு அளிக்கும் பாலில் உள்ள கொழுப்பு தன்மையுடன் இந்த தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு தன்மை ஒத்துப் போவதால் இந்த தேங்காய் எண்ணெய்யை குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் பயன்படுத்தி வருகிறார்கள் என கூறுகிறார்.
மேலும் இதில் லாரிக் ஆசிட் 40லிருந்து 45 சதவீதம் இருப்பதாகவும் இது தேங்காய்களில் உள்ள ஒரு தனி சிறப்பு எனவும், இதில் மூலக்கூறுகளின் நீளம் மிகக் குறைவாக இருக்கும் என கூறுகிறார்.
நடுத்தர வரி, குறைந்து வரியை கொண்ட நிறைவுற்ற கொழுப்பு அமிலத்தை கொண்டுள்ளதாகவும், இதனை மற்ற எண்ணெய் வகைகளில் ஒப்பிடும் போது இதில் குறைந்த அளவு கொழுப்பு அமிலம் இருப்பதாகவும், இது இதில் உள்ள ஒரு சிறப்பு எனவும் கூறுகிறார்.
HIV மற்றும் இன்புலன்ஸ் ஆகிய நோய்களுக்கு உருவாக்கப்படும் வைரஸின் தோல்களை கரைக்கும் தன்மையை தேங்காய் எண்ணெய் பெற்றிருப்பதாகவும், வைரஸ் நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மையை அளிப்பதற்கும் இது அதிக அளவில் பயன்பட்டு வருவதாக கூறுகிறார்.
உடலில் அதிக அளவில் வைரஸ்கள் பரவாமல் இருப்பதற்கு இந்த தேங்காய் எண்ணெய் அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும், இதனை அதிக அளவு நபர்கள் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
தேங்காய் எண்ணெய் உற்பத்தி முறை
தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு இவர் தென்னை மரங்களில் உள்ள தேங்காய்களை பறித்து உற்பத்தி செய்வதில்லை எனவும் மரத்திலிருந்து காய்ந்து விழும் தேங்காய்களை வைத்து மட்டுமே இவர் எண்ணெய் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு மரத்திலிருந்து காய்ந்து விழுந்த தேங்காய்களை வைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் போது அதிக அளவில் எண்ணெய்கள் கிடைக்கும் எனவும் இதுவே நாம் மரத்தில் ஏறி தேங்காய்களை வைத்து எண்ணெய் உற்பத்தி செய்தால் குறைந்த அளவிலேயே எண்ணெய் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
இந்த முறையை இவருடைய நண்பரின் தோட்டத்திற்கு சென்ற போது கற்றுக் கொண்டதாகவும், அதன்படி இவரும் எண்ணெய் உற்பத்தி செய்து வருவதாகக் கூறுகிறார்.
இவ்வாறு கீழே விழும் தேங்காய்களை எடுத்து அதன் மட்டையை உரித்து, தேங்காயை இரண்டாக உடைத்து வெயிலில் காய வைத்து, தேங்காய்கள் நன்றாக காய்ந்த பிறகு அதனை எடுத்து எண்ணெய் ஆட்டி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் மரத்திலிருந்து கீழே விழும் தேங்காய்கள் நன்றாக காய்ந்த இருப்பதால் அதனுடைய தேங்காய் விரைவில் வெயிலில் காய்ந்து விடும் எனவும் இதனால் நாம் குறுகிய காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்து விடலாம் எனக் கூறுகிறார்.
இதுவே நாம் மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்து தேங்காயை உடைத்து வெயிலில் காய வைக்கும் போது அது நன்றாக காய்வதற்கு அதிக அளவு நேரத்தை எடுத்துக்கொள்ளும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு மரத்திலிருந்து கீழே விழும் தேங்காய்களை அப்பொழுதே எடுத்து உடைத்து காய வைத்து விட வேண்டும் எனவும், சிறிது நாட்களுக்குப் பிறகு எடுத்து காய வைத்தால் தேங்காய்கள் அழுகி போவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.
Sales method of coconut oil
தேங்காய் எண்ணெயை இவர் உற்பத்தி செய்வது அதிக அளவில் லாபம் கிடைக்கும் என்பதால் இல்லை எனவும் தரம் சிறப்பாக இருக்கும் என வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் எண்ணெய் உற்பத்தி செய்து அளிக்க வேண்டும் என்பதற்காக எனக் கூறுகிறார்.
இந்த தேங்காய் எண்ணெயை இவர் இவரிடம் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும், இவரின் தேங்காய் எண்ணெய் மிகவும் தரமானதாக இருப்பதால் அதிக வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து தேங்காய் எண்ணெயை பெற்றுச் செல்வதாக கூறுகிறார்.
ஒரு கிலோ கொப்பரை தேங்காய்யில் இருந்து 60 சதவீதம் அளவு தேங்காய் எண்ணெய் கிடைக்கும் எனவும் மீதியுள்ள 40% எண்ணெய் புண்ணாக்காக மாறிவிடும் எனவும், இந்த புண்ணாக்கை இவருடைய மாடுகளுக்கு இவர் தீவனமாக அளித்து விடுவதாக கூறுகிறார்.
மேலும் தேங்காய் மட்டைகளை சில பேர் விற்பனைக்கு கேட்பதாகவும் ஆனால் இவர் தேங்காய் மட்டைகளை விற்பனை செய்யாமல் அதனை இவருடைய தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
இந்த தேங்காய் மட்டைகள் நீரை தேக்கி வைக்கும் தன்மை உடையது எனவும் மற்றும் வேர் வளர்ச்சிக்கு இந்த தேங்காய் மட்டைகள் அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக இவர் தேங்காய் மட்டைகளை இவருடைய தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.
மேலும் படிக்க:வாத்து வளர்ப்பில் சிறந்த லாபம்.