தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த பென்னாகரம் என்னும் ஊரில் திரு நித்தீஷ் அவர்கள் ஒரு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கோழிப்பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
சிவாஜி கோழி பண்ணை
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தைச் சேர்ந்த பென்னாகரம் என்னும் ஊரில் திரு நித்திஷ் அவர்கள் அவருடைய பெற்றோருடன் வசித்து வருவதாகவும், இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், மேலும் இவர் இங்கு சொந்தமாக ஒரு கோழி பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார்.
இவர் இவருடைய பண்ணையில் மொத்தமாக மூன்று வகை கோழிகளை வளர்த்து வருவதாகவும், அதில் முதல் வகை வான்கோழி வகைகளை வளர்த்து வருவதாகவும், இந்த வான்கோழி வளர்ப்பில் இவர் அதிகளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் கடக்நாத் கோழி வகைகளையும், கின்னிக்கோழி வகைகளையும் வளர்த்து வருவதாகவும், இவர் இந்த கோழிகளை அனைத்தும் மிகக் குறைந்த விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர்கள் இந்தக் கோழிகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கோழிகளை விற்பனை செய்து வருவதாகவும், இந்தமுறை இவர்களிடம் உள்ள ஒரு சிறப்பான முறை எனவும் திரு நித்திஷ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த பண்ணையை பராமரிக்கும் பொறுப்பை மட்டும் திரு நித்திஷ் அவர்களின் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற அனைத்தையும் திரு நித்தீஸ் அவர்கள் தனி ஒருவராய் செய்து வருவதாகவும், இவர்கள் இந்த கோழிப்பண்ணையை இவர்கள் இருபது வருடங்களாக நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
Specialties of turkey
திரு நித்திஷ் அவர்கள் இவருடைய கோழி பண்ணையிலேயே அதிக அளவில் வான்கோழிகளையே வளர்த்து வருவதாகவும், இந்த வான்கோழிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் எனவும், வாடிக்கையாளர்கள் இந்த வான்கோழியை அதிக அளவில் விரும்புவார்கள் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த வான்கோழிகள் வெள்ளை நிறத்திலும், மயிலின் நிறத்திலும் மற்றும் கருப்பு நிறத்திலும் இருக்கும் எனவும், கிறிஸ்துமஸ் காலங்களில் இந்த வான்கோழியின் இறைச்சிக்கு அதிக அளவு வரவேற்பு இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் வளர்ந்த வான்கோழிகள் வீட்டினை பாதுகாக்கும் எனவும், மேலும் இந்த வான்கோழிகளில் சிறிய வான்கோழிகள் அதிக விலைக்கு விற்பனையாகும் எனவும், மற்ற கோழிகளை விட இந்த வான்கோழிக்கு அதிக அளவு வரவேற்பு இருப்பதாகவும் திரு நித்திஷ் அவர்கள் கூறுகிறார்.
வான்கோழியின் வளர்ப்பு முறை மற்றும் லாபம்
திரு நித்திஷ் அவர்கள் இவருடைய கோழி பண்ணையில் உள்ள வான்கோழிகளை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இந்த வான்கோழி விற்பனை முறையில் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
இவருடைய பண்ணையில் மொத்தமாக 7000 வான்கோழி குஞ்சுகள் இருப்பதாகவும், ஒரு வான்கோழி குஞ்சு 230 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருவதாகவும் திரு நித்திஷ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் சிறு வான்கோழி குஞ்சுகளை மட்டுமே வளர்த்து வருவதாகவும், இதில் பிறந்த ஒரு நாள் ஆன வான்கோழி குஞ்சுகளை 110 ரூபாய் என்ற விலைக்கும், அதை விட சிறிது பெரிதாக இருக்கும் வான்கோழி குஞ்சுகளை 230 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த வான்கோழி வளர்ப்பு முறையில் கோழிகளின் இறைச்சி விற்பனை மூலமும், அதனுடைய முட்டைகளின் விற்பனை மூலமும் நமக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும், மற்ற கோழிகளின் விற்பனையில் வரும் லாபத்தை விட இந்த வான்கோழிகளின் விற்பனையில் நமக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும் என திரு நித்திஷ் அவர்கள் கூறுகிறார்.
Care System for chickens
வான்கோழி வளர்ப்பு முறையில் பிறந்த முதல் நாளில் இருந்து பத்தாவது நாள் வரை உள்ள வான்கோழிகளைப் பராமரிக்கும் முறையானது மிகவும் கடினமாக இருக்கும் என திரு நித்தீஷ் அவர்கள் கூறுகிறார்.
இந்த வான்கோழிகள் பிறக்கும்போது அவைகள் இருக்கும் இடத்தில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கட்டாயமாக இருக்கவேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் ஒவ்வொரு கோழிக்குஞ்சுகளும் ஒன்றன் மீது ஒன்று ஏறி இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த கோழி குஞ்சுகள் வளர வளரத்தான் வெப்பநிலையின் அளவை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு வர வேண்டும் எனவும், மாலை நேரங்களில் இந்த வான்கோழி குஞ்சுகளை கொட்டகையில் அப்படியே சுற்றி திரிவதற்கு விடாமல் ஒரு கூடையில் போட்டு மூடி வைத்து விட வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு இவைகளை மாலை நேரங்களில் கூடையில் போட்டு மூடி வைப்பதற்கு காரணம், இரவு நேரங்களில் இந்த கோழிக்குஞ்சுகளை அப்படியே சுற்றி திரிவதற்கு விட்டுவிட்டு சென்றுவிட்டால் அவைகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி அதிக கோழி குஞ்சுகள் இறந்து விடும் என கூறுகிறார்.
மேலும் சில கோழி பண்ணைகளில் இந்த வான்கோழி குஞ்சுகளை வெறும் பத்து நாள்களுக்கு மட்டுமே இவ்வாறு கூடையில் போட்டு மூடி வைப்பார்கள் எனவும், ஆனால் இவர் இந்த வான்கோழிக் குஞ்சுகளை அவைகள் விற்பனையாகும் காலம் வரை கூடையில் போட்டு மூடி வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவ்வாறு கோழிக்குஞ்சுகளை கூடையில் போட்டு மூடும் போது அதிக அளவு கோழிக்குஞ்சுகளை ஒரே கூடையில் போட்டு மூடக்கூடாது எனவும், சமமான அளவுகளில் கோழிக்குஞ்சுகளை கூடையில் போட்டு மூட வேண்டும் எனவும் திரு நித்திஷ் அவர்கள் கூறுகிறார்.
விற்பனை முறை
திரு நித்திஷ் அவர்கள் இவருடைய பண்ணையில் உள்ள அனைத்து கோழி குஞ்சுகளையும் மிகவும் குறைந்த விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய பண்ணையில் மட்டுமே இவ்வாறு குறைந்த விலையில் கோழிக்குஞ்சுகள் விற்பனையாகி வருவதாகவும் கூறுகிறார்.
இவர் பிறந்த ஒரு நாளில் உள்ள கோழி குஞ்சுகளையும், மற்றும் ஒரு மாதம் ஆன கோழி குஞ்சுகளையும் வளர்த்து வருவதாகவும், அதில் இவர் பிறந்த ஒரு நாளில் உள்ள கோழி குஞ்சுகளை விற்பனை செய்வதில்லை எனவும், ஒரு மாதம் ஆன கோழி குஞ்சுகளை மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் ஒரு மாதம் ஆன கோழி குஞ்சுகளை இருநூற்று முப்பது ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், இவ்வாறு இவர் விற்பனை செய்வதால் இவருக்கு இந்த வான்கோழி விற்பனையின் மூலம் அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் திரு நித்திஷ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்கள் கோழிகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று கோழிகளை விற்பனை செய்து வருவதாகவும், இந்த விற்பனை முறை இவருடைய பண்ணையில் உள்ள ஒரு சிறப்பான முறை எனவும் திரு நித்திஷ் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த வான்கோழிகளுடன் கின்னி கோழி வகைகளையும், கடக்நாத் கோழி வகைகளையும் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இதன் மூலமும் இவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
திரு நித்திஷ் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய கோழி பண்ணையை நடத்தி அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:தரமான பாக்குமட்டை தட்டு உற்பத்தி.