சிறப்பான கொத்தமல்லி தழை சாகுபடி.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கொத்தமல்லி தழையை சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கொத்தமல்லி தழை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

கொத்தமல்லி தழை சாகுபடியின் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கொத்தமல்லி தழை சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார்.

இவருடைய குடும்பம் பரம்பரை விவசாய குடும்பம் எனவும், இதன் காரணமாகவே இவரும் விவசாயத்தை செய்து வருவதாகவும், விவசாயம் அழிந்து விடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் இவர் விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.

இவருடைய தந்தைக்குப் பிறகு இவர் இந்த விவசாயத்தை கடந்த பத்து வருடங்களாக செய்து வருவதாகவும் அனைத்து வகை காய்கறி மற்றும் தானியங்கள் ஆகியவற்றை இவர் விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் கொத்தமல்லித் தழை அதிக விலைக்கு விற்பனையாகி வரும் காரணத்தினால் இவர் கொத்தமல்லி தழை சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்தில் கொத்தமல்லி தழை சாகுபடியை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் இந்த கொத்தமல்லி சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

Coriander leaf cultivation method

கொத்தமல்லி தழை சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், முற்றிலும் இயற்கை உரங்களை செடிகளுக்கு உரமாக அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

கொத்தமல்லி தழை சாகுபடி செய்வதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது அதில் இயற்கை உரங்களைப் போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தினை நன்றாக உழுது இயற்கை உரங்களைப் போட்டு பதப்படுத்தி வைத்த பிறகு, நிலத்தில் மூன்று அடிகளுக்கு படுக்கை அமைத்து வைப்பதாகவும் கூறுகிறார்.

மூன்று அடிகளில் ஒவ்வொரு படுக்கை அமைத்த பிறகு, செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு அதில் சொட்டு நீர் பாசனத்தை வைத்து விடுவதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை தயார் செய்து முடித்த பிறகு கொத்தமல்லி விதைகளை நிலத்தில் விதைப்பதாக கூறுகிறார்.

ஹைபிரிட் விதைகளையே இவர் விதைத்து சாகுபடி செய்து வருவதாகவும், சொட்டு நீர் பாசனத்திற்கு ஒருபுறம் இரண்டு விதைகளையும், சொட்டு நீர் பாசனத்திற்கு மற்றொரு புறம் இரண்டு விதைகளையும் விதைப்பதாக கூறுகிறார்.

ஒரு ஏக்கர் நிலத்தில் கொத்தமல்லி விதைகளை விதைப்பதற்கு 8 கிலோ வரை விதைகள் தேவைப்படும் எனவும், விதைகளை நடவு செய்யும் போது வறட்சியான நிலத்தில் நடவு செய்ய வேண்டும் என கூறுகிறார்.

கொத்தமல்லி விதைகளை நிலத்தில் நடவு செய்த பிறகு விதைகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும், அதற்கு முன்பு நிலத்தில் நீரினை அளிக்க கூடாது எனவும் கூறுகிறார்.

விதைகளை விதைத்த இருபதாவது நாளில் செடி நன்றாக முளைக்க தொடங்கி விடும் எனவும், இந்த முறையில் நடவு செய்தால் செடி விரைவில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

உரம் மற்றும் பராமரிப்பு முறை

கொத்தமல்லி தழை சாகுபடி செய்வதற்கு செடிகளுக்கு அளிக்கும் உரத்தினை இவர் முற்றிலும் இயற்கை உரத்தினை மட்டுமே அளித்து வளர்த்து வருவதாகவும் செயற்கை உரங்கள் எதையும் செடிகளுக்கு அளிப்பது இல்லை எனவும் கூறுகிறார்.

செடிகளுக்கு இயற்கை உரமான மாட்டுச் சாணம், ஆட்டு புழுக்கை மற்றும் கோழி உரங்கள் ஆகியவற்றை அளித்து வருவதாகவும், இவர் கால்நடை பண்ணை வைத்துள்ளதால் உரங்களை இவர் வெளியிலிருந்து வாங்குவதில்லை எனவும் இவருடைய பண்ணையில் இருந்து உரங்களை எடுத்து செடிகளுக்குக் அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இயற்கை உரங்களை செடிகளுக்கு அளித்து வளர்த்தால் மட்டுமே செடிகள் நல்ல சத்துடன் வளரும் எனவும், செயற்கை உரங்களை அளித்தால் சத்துக்கள் அந்த கொத்தமல்லி தழையில் இருக்காது எனவும் கூறுகிறார்.

சத்து கொத்தமல்லி தழையில் இல்லை என்றால் அந்த கொத்தமல்லி தழையை நாம் உணவில் எடுத்துக் கொள்வது பயனில்லை எனவும், எனவே அனைவரும் இயற்கை உரங்களை அளித்து கொத்தமல்லி தழையை சாகுபடி செய்தால் மிகவும் நன்மை எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த கொத்தமல்லி சாகுபடியில் அதிக அளவு பராமரிப்பு இல்லை எனவும், நீரினை மற்றும் செடிகளுக்கு அளித்து வளர்த்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

மற்றும் செடிகளின் இடையே இருக்கும் களைச் செடிகளை வராமல் பராமரித்து கொள்ள வேண்டும் எனவும் இல்லையெனில் களைச்செடிகள் கொத்தமல்லி தழையின் சத்தை எடுத்துக் கொள்ளும் என கூறுகிறார்.

எனவே கொத்தமல்லி தழை தோட்டத்தில் களைச்செடிகள் இல்லாமல் பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும், இந்த அளவில் செடிகளை பராமரித்து வளர்த்தால் மட்டுமே போதுமானது எனவும் கூறுகிறார்.

Harvesting and watering system

கொத்தமல்லி விதைகள் நடவு செய்த இருபதாவது நாளில் நன்றாக முளைத்து விடும் எனவும், விதைகளை விதைத்த 45வது நாளில் இருந்து 50 ஆவது நாளுக்குள் கொத்தமல்லி தழை அறுவடைக்கு வந்து விடும் என கூறுகிறார்.

நாற்பத்தி ஐந்தாவது நாளில் இருந்து 50வது நாளுக்குள் கொத்தமல்லி தழையை அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும் எனவும் அதிக விலைக்கு விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

இதுவே 50வது நாளுக்கு மேல் கொத்தமல்லி தழையை அறுவடை செய்யாமல் வைத்திருந்தால் கொத்தமல்லி தழையின் எடை அதிகமாகி விடும் எனவும் எடை அதிகமானால் அதிக விலைக்கு விற்பனை ஆகாது எனவும் கூறுகிறார்.

எனவே விதைகளை விதைத்த நாற்பத்து ஐந்தாவது நாளில் இருந்து 50வது நாளில் கொத்தமல்லி தழையை அறுவடை செய்து விற்பனை செய்து விட வேண்டும் என கூறுகிறார்.

கொத்தமல்லி தழைகளுக்கு நீர் தேவை அதிக அளவில் இருக்காது எனவும், வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

கொத்தமல்லி தழைகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தினால் அதிக அளவில் நீர் செலவாகாது எனவும் கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் சொட்டு நீர்பாசன முறையை பயன்படுத்தி சிறப்பாக கொத்தமல்லி தழை சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

கொத்தமல்லி தழைகளை அறுவடை செய்து இவருடைய ஊரில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய தோட்டத்திற்கு வந்தும் அதிக வாடிக்கையாளர்கள் கொத்தமல்லி தழைகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இயற்கையான முறையில் எந்த செயற்கை உரங்களையும் பயன்படுத்தாமல் இவர் கொத்தமல்லி தழை சாகுபடி செய்ததால் தழை மிகவும் சிறப்பாக வளர்ந்து இருப்பதால் அதிக அளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து கொத்தமல்லி தழைகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதனால் இவர் இந்த கொத்தமல்லி சாகுபடியின் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாகவும், இது இவருக்கு மிகவும் பயன் அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இவருடைய கொத்தமல்லி தழை சாகுபடி முறையை மிகவும் சிறப்பான முறையில் இயற்கை வழிமுறைகளை பின்பற்றி மட்டுமே செய்து வருவதாகக் கூறுகிறார்.

மேலும் படிக்க:பச்சை மிளகாய் சாகுபடியில் சிறந்த லாபம்.

Leave a Reply