சிறப்பான முருங்கை இலை சாகுபடி.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் முருங்கை இலை சாகுபடியை செய்து அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய முருங்கை இலை சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Beginning of drumstick leaf cultivation

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் முருங்கை இலை சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் கல்லூரியில் பேராசிரியராக 17 வருடங்கள் வேலைப் பார்த்து வந்ததாகவும், இவர் மாணவர்களுக்கு பாடத்தைச் சொல்லித் தரும்போது தாவரம் மற்றும் விவசாயம் ஆகிய பாடங்களை கற்றுக் கொடுத்ததாக கூறுகிறார்.

இவ்வாறு தாவரங்களைப் பற்றியும் விவசாயம் செய்வதைப் பற்றியும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்ததை நினைவில் வைத்து தாமும் தாவரங்களை வளர்க்கலாம் என்ற எண்ணத்துடன் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் விவசாயத்தை தொடங்கி முருங்கை சாகுபடியை செய்யலாம் எனவும், முருங்கை மரத்தில் உள்ள மருத்துவ குணம் இவருக்கு அதிகளவில் தெரியும் என்பதால் இது மக்களுக்கு அதிகளவில் பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காக முருங்கை சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய குடும்பம் விவசாய குடும்பம் என்பதாலும், உலகின் தட்ப வெப்பநிலை அதிக அளவில் மாறி வருவதால் விவசாயத்தை செய்து அதனை நம்மால் முடிந்தவரை சரி செய்யலாம் என்ற எண்ணத்துடனும் மற்றும் இவருடைய பகுதியில் முருங்கை சாகுபடி சிறப்பாக வளரும் என்பதற்காகவும் முருங்கையை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

முருங்கை இலை சாகுபடியின் சிறப்பு

முருங்கை வகைகளில் பொதுவாக பலவகைகள் இருப்பதாகவும் அதில் இவர் செடிமுருங்கை என்று அழைக்கப்படும் முருங்கை வகையை சிறப்பாக சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.

முருங்கை சாகுபடியில் அனைத்து விதங்களிலும் லாபம் அடைய முடியும் எனவும், முருங்கை காய்கள், முருங்கை விதைகள் மற்றும் முருங்கை இலைகள் ஆகிய அனைத்து விதங்களிலும் லாபம் நமக்கு கிடைக்கும் என கூறுகிறார்.

ஆனால் இவர் அதிக அளவில் முருங்கை இலையை மட்டுமே சாகுபடி செய்து விற்பனை செய்து வருவதாகவும், ஏனெனில் இவருடைய ஊரில் அதிக அளவில் அனைவரும் முருங்கை சாகுபடியையே செய்து வருவதாகவும் இதனால் முருங்கை காய்கள் அதிகமாக விற்பனையாவது எனவும் கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் முருங்கை இலையை மட்டும் விற்பனை செய்து வருவதாகவும், முருங்கை காய்கள் அதனுடைய பருவநிலையில் மட்டுமே காய்க்கும் எனவும் ஆனால் முருங்கை இலைகள் அனைத்து பருவ நிலையிலும் இருக்குமெனவும் கூறுகிறார்.

எனவே முருங்கை காய்களை விற்பனை செய்வதை விட முருங்கை இலையை சாகுபடி செய்து விற்பனை செய்தால் நமக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்.

Medicinal properties of drumstick

முருங்கை இலையில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும், இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முருங்கை மரம் வைத்து வளர்த்து அதனை உணவில் எடுத்துக் கொண்டு வந்ததாக கூறுகிறார்.

முருங்கை இலையில் புரதச்சத்து 25% அளவு இருப்பதாகவும், நாட்டுக்கோழி மற்றும் ஆட்டு இறைச்சி ஆகியவற்றில் உள்ள புரதச்சத்தை விட இந்த முருங்கை இலையில் அதிகளவு புரதச்சத்து இருப்பதாக கூறுகிறார்.

புரதச் சத்து அதிகமாக உள்ள உணவை நாம் எடுத்துக் கொண்டால் நமது உடலின் தசை உறுதியாக இருக்கும் எனவும் மற்றும் முருங்கை இலையில் கால்சியம் அதிக அளவில் இருப்பதாகவும், கால்சியம் அதிகளவில் இருக்கும் உணவை எடுத்துக் கொண்டால் நமது எலும்பு வளர்ச்சி சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் முருங்கை இலையில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதாகவும், இதனால் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும் உணவை எடுத்துக்கொண்டால் நமது உடலில் ரத்தம் சீராக இருக்கும் எனவும் கூறுகிறார்.

உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் அதிக அளவில் இந்த முருங்கை இலையில் இருப்பதாகவும் மொத்தமாக எட்டு வகை அமினோ அமிலங்கள் இந்த முருங்கை இலையில் இருப்பதாக கூறுகிறார்.

முருங்கையின் வளர்ப்பு முறை

முருங்கை சாகுபடியை இவர் இயற்கையான முறையிலேயே செய்து வருவதாகவும் எந்த வித செயற்கை மருந்துகளையும் இவர் முருங்கை சாகுபடி செய்வதற்கு பயன்படுத்துவது இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் வைத்திருக்கும் சொந்தமான விளை நிலத்தில் முருங்கை சாகுபடி செய்து வருவதாகவும், முருங்கை கன்றினை நடுவதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது பதப்படுத்தி வைத்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக உழுது இயற்கை உரங்களை எல்லாம் அளித்து பதப்படுத்தி வைத்த பிறகு நிலத்தில் முருங்கை கன்றை நட்டு வளர்க்கத் தொடங்கி விடுவதாக கூறுகிறார்.

மாட்டு சாணம் மற்றும் மாட்டுசிறுநீர் ஆகியவற்றை உரமாக அளித்து வருவதாகவும், மாட்டுச் சாணத்திலிருந்து ஜீவாமிர்தம் முதலிய இயற்கை உரங்களை தயாரித்து செடிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் முருங்கை சாகுபடியை முருங்கை விதைகளின் மூலமும் செய்வதாகவும் முருங்கை கன்றுகளின் மூலமும் செய்வதாகவும் கூறுகிறார்.

விதைகளை இரண்டரை அடி ஆழத்தில் ஊன்ற வேண்டும் எனவும் மற்றும் ஒவ்வொரு செடிகளுக்கும் இடையில் இரண்டு அடி இடைவெளிவிட்டு நட வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் முருங்கைச் செடிகள் நல்ல புரதச் சத்தை எடுத்துக் கொண்டு வளர வேண்டும் என்பதற்காக இவர் கொள்ளு மற்றும் பிற வகை தானியங்களை உரமாக முருங்கை செடிகளுக்கு அளித்து உள்ளதாக கூறுகிறார்.

Watering system and harvesting

முருங்கை சாகுபடியை பொறுத்த வரையில் முருங்கை செடிகளுக்கு அதிகளவில் நீர் தேவைப்படாது எனவும், வறட்சியான நிலையிலேயே முருங்கை சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.

மழைக்காலங்களில் முருங்கை செடிகளுக்கு அதிக அளவில் நீரினை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், வெயில் காலங்களில் மட்டும் வாரத்திற்கு இரண்டு முறை நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

மேலும் மழை பெய்யும் காலங்களில் முருங்கை செடியில் நீரானது நிற்கக் கூடாது எனவும், நீர் நிற்காத அளவிற்கு நிலத்தை சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார்.

முருங்கை செடிகளுக்கு இவர் நீரினை அளிப்பதற்கு சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், வரப்பின் மீது விதைக்கும் முருங்கைச் செடிகளிலே சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

முருங்கை விதையை நட்ட ஆறாவது மாதத்தில் அறுவடை சிறப்பாக கிடைக்கத் தொடங்கி விடும் எனவும், இவ்வாறு சிறப்பாக விளைச்சலான முருங்கை இலை மற்றும் காய்களை இவர் சந்தைகளில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

முருங்கை இலையில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதால் சந்தைகளில் அதிக அளவில் முருங்கை இலைகள் விற்பனையாகும் எனவும், முருங்கை இலையை கொண்டு பலவித மருந்துகள் தயாரித்து வருவதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு அதிக அளவில் முருங்கை இலைகள் விற்பனையாகி வருவதால் அதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், மற்றும் இவர் இந்த முருங்கை இலை சாகுபடியை இயற்கையான முறையில் மிகச்சிறப்பாக செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:கடக்நாத் கோழி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

Leave a Reply