சிறப்பான முருங்கை விதை சாகுபடி.

கரூர் மாவட்டம், நந்தவனம் தோட்டத்தில் அமைந்துள்ள லிங்கம் நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் திருமதி சரோஜா அவர்கள் முருங்கை விதை சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய முருங்கை விதை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Mrs. Saroja Their Life

திருமதி சரோஜா அவர்கள் கரூர் மாவட்டம், நந்தவனம் தோட்டத்தில் அமைந்துள்ள லிங்கம் நாயக்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகவும், இவர் இங்கு முருங்கை சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் செய்து, அந்த முருங்கை மரங்களில் இருந்து கிடைக்கும் விதைகளைக் கொண்டு எண்ணெய்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த முறையில் முருங்கை மரத்தை மிகச் சிறப்பான முறையில் வளர்த்து அதனுடைய விதைகளின் மூலம் எண்ணெய் தயாரிக்கும் முறையினால் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

திருமதி சரோஜா அவர்கள் இந்த முருங்கை விதை சாகுபடியை பத்து வருடங்களாக செய்து வருவதாகவும், இவருடைய தோட்டத்தை இயற்கையான முறையிலேயே பராமரித்து வருவதாகவும், மேலும் இவருடைய தோட்டத்தில் உணவுப் பொருட்களை அளிக்கும் செடிகளையும் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவருக்கு முருங்கை மரங்களை வளர்ப்பதற்கும் மற்றும் மற்ற செடிகளை வளர்ப்பதற்கும் அதிக ஆர்வம் இருந்து வந்ததாகவும் இதன் காரணமாக இவர் முருங்கை சாகுபடியை தொடங்கியதாகவும் கூறுகிறார்.

முருங்கை விதை சாகுபடியின் தொடக்கம் மற்றும் வகைகள்

திருமதி சரோஜா அவர்கள் இந்த முருங்கை விதை சாகுபடியை கடந்த பத்து வருடங்களாக செய்து வருவதாகவும், இவர் இவருடைய முருங்கை தோட்டத்தில் மொத்தமாக நான்கு வகைகளில் முருங்கை மரங்களை வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த நான்கு வகை முருங்கை மரங்களில் அதிக அளவு இவர் நாட்டு முருங்கை மரங்களை வளர்த்து வருவதாகவும் மேலும் இந்த முருங்கை மரங்களை இயற்கையான முறையிலேயே வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் தனி ஒருவராக முருங்கை சாகுபடி செய்து வருவதால் முருங்கை மரத்தில் இருந்து காய் காய்த்தால் அதனை எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கு ஆட்கள் இல்லை எனவும், இதன் காரணமாக இவர் முருங்கை காய்களை விற்பனை செய்யாமல் முருங்கை விதைகளை சாகுபடி செய்து அதனை எண்ணெய்யாக உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் முருங்கை விதைகளை சாகுபடி செய்தால் அதன் மூலம் நமக்கு லாபம் கிடைக் கிறதா என்பதை அறிந்த பிறகு இவர் இந்த முருங்கை விதை சாகுபடியை தொடங்கியதாகவும், முருங்கை விதை எண்ணெய்க்கு அதிக அளவு வரவேற்பு இருந்து வருவதாகவும் கூறுகிறார்.

Benefit of drumstick seed cultivation

திருமதி சரோஜா அவர்கள் இந்த முருங்கை விதை சாகுபடியின் மூலம் அதிக அளவு நன்மைகள் இருந்து வருவதாகவும், இந்த விதைகளைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் அதன் மூலம் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த முருங்கை இலை மற்றும் முருங்கை காய்கள் மற்றும் அந்த காய்களில் இருந்து கிடைக்கும் விதைகள் ஆகிய மூன்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், இதில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கும் எனவும் கூறுகிறார்.

திருமதி சரோஜா அவர்கள் இந்த முருங்கை மரத்தைப் பற்றியும், அதனுடைய மருத்துவ குணங்களைப் பற்றியும் இணையதளங்களில் பார்த்து அறிந்து கொண்டதாகவும் மேலும் இவர் உற்பத்தி செய்த விதைகளை வைத்து சோதனை செய்து அறிந்து கொண்டதாகவும் கூறுகிறார்.

மேலும் பழங்காலங்களில் இந்த முருங்கை எண்ணெய் எகிப்து நாட்டில் அலங்காரத்திற்கு பயன்படுத்துகின்ற பொருளாக இருந்து வந்ததாகவும், அந்த நாட்டில் வாழ்ந்த அரசிகள் மற்றும் இளவரசிகள் இந்த முருங்கை எண்ணெயை பயன்படுத்தி வந்ததாகவும் திருமதி சரோஜா அவர்கள் கூறுகிறார்.

முருங்கை விதை எண்ணெய் உற்பத்தியின் தொடக்கம்

முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் காய்களை நாம் உணவு பொருட்களாக அதிக அளவு பயன்படுத்தி வருகின்றோம் எனவும், இவ்வாறு இந்த முருங்கைக்காய்களை நாம் உண்ணும் போது அதில் விதைகள் வந்தால் அதனையும் சேர்த்து உண்கிறோம் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு முருங்கை விதைகளை நாம் உண்ணும் போது நமக்கு அது எந்த வித பாதிப்பையும் அளிக்கவில்லை எனவும், இந்த முருங்கை விதைகள் உண்பதற்கு சுவையாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

எனவே இந்த முருங்கை விதைகளை கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்தால் அந்த எண்ணையை நாம் சமைப்பதற்கு பயன்படுத்தும் போது அதிக அளவு சுவை கிடைக்கும் எனவும், அதிக நன்மை கிடைக்கும் என்ற காரணத்திற்காகவும் இந்த முருங்கை விதை எண்ணெய் உற்பத்தியை தொடங்கியதாக திருமதி சரோஜா அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த முருங்கை விதைகளில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதன் காரணமாக அதிக அளவில் விற்பனையாகும் என்ற எண்ணத்துடன் இவர் இந்த முருங்கை விதை எண்ணெய்யை உற்பத்தி செய்யும் முறையை தொடங்கியதாக கூறுகிறார்.

Drumstick seed oil production method

திருமதி சரோஜா அவர்கள் இந்த முருங்கை விதை எண்ணெய் உற்பத்தி செய்யும் முறையை மிகவும் சுலபமான முறையில் உற்பத்தி செய்து வருவதாகவும் மேலும் இதனை உற்பத்தி செய்யும் முறை கடினமானது இல்லை எனவும் கூறுகிறார்.

முருங்கை விதைகளை அப்படியே போட்டு எண்ணெய் உற்பத்தி செய்யும் போது எண்ணெய் கருப்பு நிறத்தில் இருக்கும் எனவும்,இவ்வாறு எண்ணெய் கருப்பு நிறத்தில் இருக்காமல் இருப்பதற்கு முருங்கை விதைகளின் தோலை எடுத்து விட்டு அதன் பிறகு எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என திருமதி சரோஜா அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த முருங்கை விதைகளிலிருந்து எண்ணெய்கள் உற்பத்தி செய்வதை பற்றி அதிக அளவில் யாருக்கும் தெரிவதில்லை எனவும், இதனைப் பற்றி அனைவரும் தெரிந்து கொண்டு இந்த முருங்கை எண்ணையை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திருமதி சரோஜா அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் முருங்கை விதை சாகுபடியை செய்து அந்த விதையை கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகவும், இந்த எண்ணெய் விற்பனையில் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த முருங்கை விதை எண்ணெய்யை வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து பெற்று செல்வதாகவும் இந்த முறையில் இவர் இந்த முருங்கை விதை எண்ணெய் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

ஒரு கிலோ முருங்கை விதையிலிருந்து 100 மில்லியில் இருந்து 110 மில்லி வரை முருங்கை எண்ணெய் கிடைக்கும் எனவும்,இந்த முறையில் குறைவான அளவில் எண்ணெய் கிடைத்தாலும் அதனுடைய விலை அதிகமாகவே இருக்கும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் இந்த முருங்கை விதை எண்ணெயில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளதால் இந்த முருங்கை எண்ணெய் அதிகளவு விலைக்கே விற்பனையாகும் எனவும்,இதனால் அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் திருமதி சரோஜா அவர்கள் கூறுகிறார்.

திருமதி சரோஜா அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் முருங்கை விதை சாகுபடியை செய்து அந்த விதைகளின் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து அதிகளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க;மண்புழு உற்பத்தியில் நிறைந்த லாபம்.

Leave a Reply