மஞ்சள் உற்பத்தியில் அசத்தும் விவசாயி.

சத்தியமங்கலத்தை சேர்ந்த திரு திருமூர்த்தி அவர்கள் மஞ்சள் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் உற்பத்தி செய்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய மஞ்சள் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

 திரு திருமூர்த்தி அவர்களின் வாழ்க்கை

திரு திருமூர்த்தி அவர்கள் சத்தியமங்கலத்தில் வசித்து வருவதாகவும் இவர் இங்கு ஒரு மஞ்சள் தோட்டத்தை வைத்து மஞ்சள் உற்பத்தியில் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருவதாகவும் கூறுகிறார்.

இவர் இந்த மஞ்சள் உற்பத்தியை மிகவும் இயற்கையான முறையில் செய்து வருவதாகவும்,மேலும் இவருக்கு இந்த மஞ்சள் உற்பத்தியில் நல்ல லாபம் கிடைத்து வருவதாகவும், மேலும் இவர் இந்த மஞ்சள் உற்பத்தியை விடுத்து வாழைப்பழம் மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்தியை செய்து வருவதாக கூறுகிறார்.

Method of farming

திரு திருமூர்த்தி அவர்கள் இந்த மஞ்சள் உற்பத்தியை வருடத்திற்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விளைவித்து விடுவதாகவும், கடந்த வருடம் மஞ்சள் விளைவிக்கும் போது மஞ்சள் காட்டினை மாடுகளின் மூலம் உழுவி மண்ணினை செங்குத்தான முறையில் வைத்து மஞ்சளை விதைத்ததாக கூறுகிறார்.

ஆனால் இந்த வருடம் படுக்கை போன்ற அமைப்பில் நிலத்தினை உழுவி மஞ்சளை விதைத்ததாகவும், இந்த முறையில் இவர் மஞ்சளை விதைத்ததற்கு காரணம் மழை பெய்யும்போது மழை நீரானது மஞ்சளை பாதிக்காமல் இருப்பதற்கே என திரு திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் பத்து ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும், இந்த பத்து ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்வதாகவும்‍, மீதி ஐந்து ஏக்கர் நிலத்தினை ஓய்வெடுக்க விட்டு விடுவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த முறையினை ஒன்றரை வருடத்தில் இருந்து இரண்டு வருடம் வரை தொடர்ந்து செய்து விடுவதாகவும், இவ்வாறு இரண்டு வருடம் நிலத்தினில் விதைக்காமல் மாடுகளை கட்டி மேய்ப்பதால் நிலமானது நல்ல வளத்துடன் இருக்கும் என திரு திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த முறையை இவர் பின்பற்றுவதால் மிகவும் சுலபமான முறையில் விவசாயம் செய்து வருவதாகவும், இந்த முறையில் விவசாயம் செய்தால் மண் நல்ல வளத்தினை பெற்று அதிக அளவு மகசூல் அளிக்கும் என கூறுகிறார்.

மேலும் விவசாயம் செய்யும் அனைவரும் இந்த முறையினை பின்பற்றுவது மிகவும் சிறப்பான ஒரு வழிமுறை எனவும், இந்த முறையை பின்பற்றினால் நல்ல விளைச்சலும் மண் ஆனது நல்ல வளத்தையும் பெரும் என கூறுகிறார்.

மஞ்சள் விளைச்சல் செய்யும் முறை

திரு திருமூர்த்தி அவர்கள் இந்த மஞ்சள் விதைக்கும் முறையினை சமமான முறையில் நிலத்தினை உழுது அதன் நடுவில் சொட்டு நீர் பாசனத்தை வைத்து ஒரு புறம் மஞ்சளை விதைத்து மறுபுறமும் மஞ்சளை விதைப்பதாக கூறுகிறார்.

மேலும் மஞ்சள் உற்பத்தியை பத்து மாதங்களுக்குப் பிறகு விளைச்சல் செய்ய வேண்டும் எனவும், மற்ற விவசாயிகள் சிலர் இந்த மஞ்சள் உற்பத்தியை ஏழு மாதங்கள் அல்லது எட்டு மாதங்களுக்குள் விளைச்சல் செய்து விடுவதாக கூறுகிறார்.

ஆனால் இந்த முறையில் விளைச்சல் செய்யாமல் 10 மாதங்களுக்கு பிறகு மட்டுமே விளைச்சல் செய்யவேண்டும் எனவும், இந்த முறையில் ஒரு செடியின் முழு ஆயுட்காலத்தை முழுமையாக விட்டு அறுவடை செய்தால் மிகவும் நல்ல முறையில் அதிக அளவு விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

இந்த முறையில் தான் இவர் மஞ்சள் மற்றும் மற்ற அனைத்து பயிர் வகைகளும் அறுவடை செய்து வருவதாகவும், இந்த முறையில் அறுவடை செய்தால் மட்டுமே அந்த விளைச்சலுக்கான உண்மையான மதிப்புகள் கிடைக்கும் என கூறுகிறார்.

மேலும் இந்த மஞ்சள்களுக்கு இடையில் நரி பயிர்களை விதைத்து உள்ளதாகவும், இவ்வாறு இந்த நரி பயிர்களை விதைத்து உள்ளதால் இவைகள் களைகள் முளைப்பதை தடுக்கும் எனவும் திரு திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த நரி பயிர்கள் அனைத்தும் முப்பதிலிருந்து நாற்பது நாட்களுக்குள் வளர்ந்து விடுவதாகவும், இவ்வாறு வளர்ந்த நரி பயிர்கள் அனைத்தையும் புடுங்கி இந்த மஞ்சள்களுக்கு உரமாக போட்டு விடுவதாக கூறுகிறார்.

மேலும் வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் மட்டுமே இவர் மஞ்சள் உற்பத்தியை செய்வதாகவும், இவ்வாறு வெயில் அதிகமாக உள்ள காலங்களில் மட்டுமே மஞ்சளானது நல்ல விளைச்சலை தரும் எனவும் கூறுகிறார்.

அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே செடிகளுக்கு களை எடுப்பதாகவும், மஞ்சளை அறுவடை செய்வதற்குள் மூன்று முறை பஞ்சகாவியாவை செடிகளுக்கு நீரின் மூலம் அளித்து விடுவதாகவும், மேலும் தெளிப்பான் முறையில் நான்கு முறை அளிப்பதாகவும் திரு திரு மூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

Turmeric Steaming Method and sales method

திரு திருமூர்த்தி அவர்கள் இந்த மஞ்சளை பழங்கால முறையில் பாத்திரத்திலும், பானைகளிலும் போட்டு வேக வைப்பதாகவும்,இந்த முறையில் மஞ்சளை வேக வைப்பது தான் மிக சிறப்பான ஒன்று என கூறுகிறார்.

ஆனால் சிலர் இந்த மஞ்சளை வேகவைக்கும் முறையினை குக்கரில் உணவு சமைக்கும் முறையைப் போன்று வேக வைப்பதாகவும், இந்த முறையில் மஞ்சளை வேக வைப்பது மிகவும் தவறான ஒரு செயல் முறை எனவும் கூறுகிறார்.

இவ்வாறு மஞ்சளை வேக வைத்து அதற்கு பிறகு 25 நாட்கள் வெயிலில் காய வைப்பதாகவும், இவ்வாறு மஞ்சள் காய்ந்த பிறகு அவற்றை இயந்திரத்தில் போட்டு அரைத்து மஞ்சள் தூள் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த மஞ்சளை மணல் மற்றும் களிமண்ணில் விதைக்கக் கூடாது எனவும்,ஏனெனில் இந்த களிமண்ணில் மஞ்சளை விளைத்தால் மழை பெய்யும் போது கிழங்குகள் அழுகி விடும் எனவும் கூறுகிறார்.

மஞ்சள் உற்பத்தியின் லாபம் மற்றும் பராமரிப்பு முறை

மஞ்சள் உற்பத்தியில் ஒன்றரை லட்சம் வரை செலவுகள் ஏற்படும் எனவும், இவ்வாறு செலவுகள் அதிகமாக இருப்பதால் செலவைக் குறைப்பதற்கு என்னென்ன வழிகள் உள்ளதோ அந்த வழிகள் அனைத்தையும் இவர் செய்து வருவதாக கூறுகிறார்.

திரு திருமூர்த்தி அவர்கள் கடந்த வருடம் மஞ்சள் உற்பத்தியில் 2900 கிலோ மஞ்சளை அறுவடை செய்ததாகவும்,இதில் 4 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்ததாகவும்,மேலும் அறுவடை செய்து ஒரு வருடத்திற்கு பிறகே 4 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் மஞ்சளை அறுவடை செய்து மூட்டைகளில் வைத்திருக்கும்போது மஞ்சளை துளைக்கும் பூச்சிகள் மூட்டைக்குள் இருப்பதாகவும், இதனை விரட்டுவதற்கு இயற்கை மருந்தினை பயன்படுத்தி வருவதாகவும் திரு திருமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.

மேலும் மஞ்சளை உற்பத்தி செய்வதை விட அதனை பராமரித்து விற்பனை செய்யும் முறை மிகவும் கடினமான ஒரு முறை எனவும், மஞ்சளை மிகவும் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் மஞ்சளை வைத்து மஞ்சள் தூளாக மட்டும் விற்பனை செய்யாமல் முழு மஞ்சளாகவும் விற்பனை செய்து வருவதாகவும்,தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் இவர் மஞ்சள் விற்பனையை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த மஞ்சளை காற்றுப் போகாமல் மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்திருந்தால் மூன்று வருடங்கள் வரை எந்த பாதிப்பும் இன்றி வைத்துக்கொள்ள முடியும் எனக் கூறுகிறார்.

திரு திரு மூர்த்தி அவர்கள் இந்த மஞ்சள் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார்.

மேலும் படிக்க:பல்நோக்கு மின்கல தெளிப்பான்.

Leave a Reply