சிறப்பான அத்திப்பழம் உற்பத்தி.

தேனி மாவட்டத்திலுள்ள சுருளிப்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி அத்திப்பழம் உற்பத்தியை மிக சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய அத்திப்பழம் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Start of fig fruit production

தேனி மாவட்டத்திலுள்ள சுருளிப்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு விவசாயி அத்திப்பழம் உற்பத்தியை செய்து அதன் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருகிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் மாம்பழம், கொய்யா மற்றும் பேரீச்சை ஆகியவற்றை உற்பத்தி செய்து வந்ததாகவும் அதன் பிறகு அத்திப்பழம் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.

மற்ற பழ வகைகளை எல்லாம் உற்பத்தி செய்து வந்த நிலையில் இந்த அத்திப்பழம் உற்பத்தியை தொடங்கியதற்கு காரணம் இதில் அதிகளவு லாபம் கிடைக்கும் என்பதால் எனக் கூறுகிறார்.

மேலும் இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் வந்து விவசாயத்தை தொடங்கியதாகவும் இதில் இவர் அதிகமாக அத்திப்பழத்தை விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார்.

அத்திப்பழம் உற்பத்தி

அத்திப்பழம் உற்பத்தியை இவர் 13 ஏக்கர் நிலத்தில் உற்பத்தி செய்து வருவதாகவும், இதனை இவர் மிகவும் சிறப்பான முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த 13 ஏக்கர் நிலத்தில் 4800 அத்தி கன்றுகளை நட்டு வளர்த்து வருவதாகவும், இந்த கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து நல்ல விளைச்சலை தருவதாக கூறுகிறார்.

ஒவ்வொரு அத்தி கன்றுக்கும்  இடையில் 8 டில் இருந்து 13 அடி இடைவெளி விட்டு நட்டு வளர்த்து வருவதாகவும், இந்த முறையில் கன்றினை நட்டு வளர்க்கும் போது நல்ல விளைச்சலைத் தரும் என கூறுகிறார்.

ஒன்றிலிருந்து ஒன்றரை அடி ஆழம் குழி தோண்டி அதில் மாட்டு சாணம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை போட்டு குழியை மூடி விட்டு அதன்பிறகு குழியின் மீது அத்தி கன்றினை நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

Types of figs

அத்திப் பழங்களில் பலவகைகள் இருப்பதாகவும் அதில் அதிகமாக நாட்டு அத்திப்பழங்கள் தமிழ் நாடுகளில் காணப்படுவதாகவும், இதில் உணவு பொருளாக பயன்படும் வகையானது திம்லா வகை என கூறுகிறார்.

மேலும் இந்த திம்லா வகை அத்திப்பழம் ஆனது மலைப்பிரதேசங்களில் அதிகமாக விளையும் எனவும், இவர் இந்த வகை அத்திப்பழத்தை விவசாயம் செய்து அது நல்ல முறையில் வளராத காரணத்தால் அதனை அழித்து விட்டதாக கூறுகிறார்.

மேலும் பூனே வகை அத்திப்பழத்தை 15 வருடங்களாக இந்தியாவில் விளைச்சல் செய்து வருவதாகவும், இந்த வகை அத்திப்பழம் குளிர்பானங்கள் தயாரிக்க அதிக அளவில் பயன்பட்டு வருவதாக கூறுகிறார்.

மேலும் டயானா என்ற ஒருவகை அத்திப்பழம் இருப்பதாகவும் இந்த அத்திப் பழங்கள் அதிகமாக உலர்ந்த அத்திகளுக்காக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் புத்துணர்ச்சியுடன் காணப்படும் அத்தி வகைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பிரவுன் டர்க்கீஸ் என்னும் அத்தி பழ வகையை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

அத்திப் பழத்தின் வளர்ப்பு முறை

அத்திப்பழ உற்பத்தியை முதலில் தொடங்கும் போது இவர் திம்லா வகை அத்தி கன்றுகளை வாங்கி வந்து நட்டு வளர்த்ததாகவும், மேலும் இந்த வகை அத்தி கன்றுகளை 1500 கன்றுகளாக வாங்கி வந்து நட்டு இப்பொழுது வெறும் பத்து கன்றுகள் மட்டுமே இருப்பதாக கூறுகிறார்.

எனவே இந்த வகை அத்தி கன்றுகளை நம்முடைய நிலத்தில் நல்ல முறையில் விளைச்சல் செய்ய முடியாது எனவும் இந்த வகை அத்தி மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளைச்சல் ஆகும் எனவும் கூறுகிறார்.

மேலும் பூனே வகை அத்திப்பழத்தை விவசாயம் செய்ததாகவும் இதனுடைய பழங்கள் மிகச் சிறியதாகவும் மற்றும் சுவை குறைவாக இருந்ததன் காரணமாகவும் இவர் இந்த வகை அத்தியை விளைச்சல் செய்யாமல் இப்பொழுது பிரவுன் டர்க்கீஸ் என்னும் அத்தி வகையை விளைச்சல் செய்து வருவதாக கூறுகிறார்.

பிரவுன் டர்க்கீஸ் என்னும் அத்தி கன்றுகளை மகாராஷ்டிராவில் இருந்து எடுத்து வந்து வளர்த்ததாகவும் இப்பொழுது அதனை வளர்த்து மூன்றரை வருடங்கள் ஆகி விட்டதாக கூறுகிறார்.

மேலும் அத்தி சாகுபடியை வறட்சியான நிலத்தில் மட்டுமே செய்ய வேண்டும் எனவும் அதிக அளவு நீருள்ள நிலத்தில் இந்த அத்தி உற்பத்தியை செய்யக்கூடாது எனவும் கூறுகிறார்.

அனைத்து வகை மண்களிலும் இந்த அத்தி சாகுபடியை சிறப்பாக செய்ய முடியும் எனவும் ஆனால் களிமண்ணில் மட்டும் இந்த அத்திப்பழ உற்பத்தியை செய்வது மிகவும் கடினம் எனவும் ஏனெனில் இந்த களிமண்ணில் நீர் அதிகளவில் இருக்கும் என கூறுகிறார்.

மேலும் நீர் அதிகமாக நிற்கும் மண் வகைகளில் இந்த அந்தி கன்றுகள் நல்ல முறையில் வளராது எனவும் மற்றும் காரத்தன்மை அதிகமாக உள்ள மண்ணிலும் இந்த அத்தி கன்றுகள் நல்ல முறையில் வளராது எனவும் கூறுகிறார்.

ஒரு நாளைக்கு 10 லிட்டர் அளவு நீரினை அத்தி கன்றுகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் வெயில் காலங்களில் சற்று அதிக அளவு நீரினை அளிக்க வேண்டும் எனவும் மற்றும் மழைக்காலங்களில் குறைந்த அளவு நீரை அளிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.

Medicinal properties of figs

பொதுவாக அத்திப்பழத்தில் அதிகளவு மருத்துவ குணம் இருப்பதாகவும் இதில் அதிகமாக நார்சத்து இருப்பதால் இதனை உண்பதால் செரிமான கோளாறு சரியாகும் எனவும் கூறுகிறார்.

மேலும் மலச்சிக்கலை குணமாக்க பயன்படும் எனவும் மற்றும் சர்க்கரை நோய் இருக்கும் நபர் இந்த அத்தி பழத்தை உண்ணும் போது சர்க்கரை நோய் விரைவில் குணமடைந்து விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த அத்திப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு இது பயன்படுவதாகவும் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு இந்த அத்திப்பழம் அதிக அளவில் பயன்பட்டு வருவதாக கூறுகிறார்.

மேலும் இதய நோய்களுக்கும் இது அதிக அளவில் பயன்பட்டு வருவதாகவும் மற்றும் இந்த அனைத்து நோய்களையும் குணப்படுத்துவதற்கு இந்த அத்தி பழத்தை தினசரி உண்ண வேண்டும் எனக் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

அத்திப்பழ விற்பனையை இவர் அதிக அளவில் செய்து வருவதாகவும் இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மலச்சிக்கல் மற்றும் மூலம் இருக்கும் நபர்கள் அதிக அளவில் வாங்குவதாக கூறுகிறார்.

மேலும் இவைகளுக்கெல்லாம் இந்த அத்திப்பழம் அதிக அளவில் பயன்படும் எனவும், இதன் காரணமாக அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து அத்திப்பழத்தை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

மேலும் ஒரு கிலோ அத்திப்பழத்தை 200 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், ஒரு அத்தி செடியிலிருந்து 4 ல் இருந்து 5 கிலோ வரை அத்திப்பழங்கள் கிடைக்கும் எனவும் எனவே இதன் மூலம் இவர் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் அத்திப்பழங்கள் நல்ல முறையில் விளைச்சல் தருவதற்கு ஒரு வருடம் தேவைப்படும் எனவும், மேலும் அத்திப்பழம் பழுக்க இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளும் எனவும் கூறுகிறார்.

தேனி மாவட்டத்திலுள்ள சுருளிப்பட்டி என்னும் கிராமத்தில் விவசாயம் செய்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் அத்தி உற்பத்தியை செய்து வருகிறார்.

மேலும் படிக்க:புறா வளர்ப்பில் அதிக லாபம்.

Leave a Reply