வீட்டின் மாடியில் சிறப்பான மீன் வளர்ப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் வீட்டின் மாடியில் மீன் வளர்ப்பை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய மீன் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

The beginning of fish farming

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் வீட்டின் மாடியில் மீன் வளர்ப்பை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தைப் பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் படித்து முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், வீட்டின் மாடி காலியாக இருப்பதால் மாடியில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் இந்த மீன் வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த மீன் கழிவுகளிலிருந்து மண்ணில்லாமல் மாடியில் விவசாயம் செய்து வருவதாகவும் இதன் மூலம் இவருக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் முன்பு வீட்டின் மாடியில் ஒரு அறை கட்டி அதனை வாடகைக்கு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்ததாகவும், அதற்கு அதிக அளவு பணம் செலவாகும் என்பதால் மீன் வளர்ப்பினை செய்து வருவதாகவும் இந்த மீன் வளர்ப்பில் இவருக்கு நிறைந்த வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.

இந்த மீன் வளர்ப்பினை இவர் ஒரு வருடங்களாக செய்து வருவதாகும் கூறுகிறார்.

மீன் தொட்டியின் அமைப்பு

மீன் தொட்டியை மிக சிறப்பான முறையில் அமைத்து அதில் மீன் வளர்ப்பை இவர் செய்து வருவதாகவும், இது இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறுகிறார்.

மீன் தொட்டியினை 3 அடி அகலத்திலும் மற்றும் 4 1/2 அடி நீளத்திலும் அமைத்து இருப்பதாகவும் இந்த முறையில் தொட்டியினை அமைத்து மீன்களை வளர்ப்பதால் மீன்கள் நல்ல முறையில் வளர்வதாக கூறுகிறார்.

மீன்களை வளர்ப்பதற்கு பெரிய அளவில் மீன் தொட்டிகள் தேவை இல்லை எனவும், இவர் அமைத்து இருக்கும் மீன் தொட்டியின் அளவிலேயே தொட்டிகள் இருந்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த தொட்டியில் 60 கிலோ வரை மீன்களை வளர்த்து வருவதாகவும், ஒரு மீன் அரை கிலோ எடையை அடைந்து விட்டால் அந்த மீனை இவர் தொட்டியிலிருந்து எடுத்து விடுவதாக கூறுகிறார்.

ஆரம்பத்தில் தொட்டியில் அதிக அளவு மீன்களை இவர் விடுவதாகவும் அதன் பிறகு ஒரு மீன் அரை கிலோ எடையை அடையும் போது அதனை எடுத்து மற்றொரு தொட்டியில் போட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இந்த முறையில் வளர்ப்பதால் மீன்கள் எந்த பாதிப்பும் இன்றி, காற்றோட்டமான நல்ல முறையில் நெரிசல் இல்லாமல் வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் வீட்டின் மாடியில் மீன் வளர்ப்பு மற்றும் மண் இல்லாமல் விவசாயம் செய்வதால் வீட்டின் தூண்கள் எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் எடை அதிகமான பொருட்களை வைத்து மீன் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்யலாம் எனக் கூறுகிறார்.

Types of fish and Breeding method

இரண்டு வகை மீன்களை இவர் வளர்த்து வருவதாகவும், அவைகள் பாறை மீன் மற்றும் திலேபியா மீன் வகைகள் எனவும் இந்த இரண்டு மீன் வகைகளும் மிக சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

பாறை மீன் மற்றும் திலேபியா மீன் வகைகளில் இறைச்சி மிக சுவையாக இருக்கும் எனவும், இந்த இரண்டு மீன்களிலும் அதிக அளவில் மருத்துவ குணம் உள்ளதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இந்த மீன்களை வாங்கி உண்பார்கள் எனவும் கூறுகிறார்.

மேலும் மீன்களை வளர்ப்பதற்கு முன்பு மீன் வளரும் நீரில் PH அளவு சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து அதற்கு பிறகு நீரில் மீன்களை விட்டு வளர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மேலும் மீன்கள் நல்ல முறையில் வளராமல் இருந்தால் இவர் நீரில் உள்ள PH அளவுகளை சரி பார்த்து கொள்வதாகவும் மற்றும் நைட்ரேட் அளவும் நீரில் சரியாக இருக்கிறதா என்பதை இவர் பார்ப்பதாக கூறுகிறார்.

மேலும் அமோனியா கண்டெண்ட் அளவுகளையும் இவர் பார்த்து சரி பார்த்துக் கொள்வதாக கூறுகிறார்.

மீன்களுக்கு அளிக்கும் தீவனங்கள்

மீன்களுக்கு இவர் ஒரு நாளைக்கு மூன்று முறை தீவனங்களை அளித்து வருவதாகவும், காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் இவர் தீவனத்தை மீன்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

காலையில் 8 மணி அளவில் தீவனத்தை அளிப்பதாகவும், மதியம் 2 மணி அளவில் தீவனத்தை மீன்களுக்கு அளிப்பதாகவும் மற்றும் இரவு 8 மணி அளவில் தீவனத்தை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

இதில் காலை மற்றும் இரவு நேரங்களில் கம்பெனி தீவனங்களை மீன்களுக்கு அளித்து வருவதாகவும் மற்றும் மதியம் கீரை வகைகளை மீன்களுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

பாலக்கீரை, முருங்கைக்கீரை மற்றும் பப்பாளி இலை ஆகியவற்றை இவர் மீன்களுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும், இந்த அனைத்தையும் இவருடைய தோட்டத்தில் உற்பத்தி செய்து மீன்களுக்கு தீவனமாக அளிப்பதாக கூறுகிறார்.

ஒரு மீன் சிறப்பான முறையில் வளர்வதற்கு 5 1/2 மாதங்களை எடுத்துக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.

Soilless agriculture

மீன்களின் கழிவுகளை வைத்து மிக சிறப்பான முறையில் இவர் மண்ணில்லாமல் விவசாயத்தை இவருடைய வீட்டின் மாடியில் செய்து வருவதாக கூறுகிறார்.

மீன் தொட்டியில் இருந்து வெளியேறும் நீரில் மீனின் கழிவுகளும் சேர்ந்து வெளியேறும் எனவும், அந்தக் கழிவுகளில் இருந்து அமோனியாவை எடுத்து இவர் மண்ணில்லாமல் விவசாயத்தை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மீன் தொட்டியில் உள்ள நீர் வெளியேறும் போது அந்த நீரினைப் ஒரு தொட்டியில் வைத்துக் கொண்டு அதிலிருந்து செடிகளுக்கு நீர் செல்லும் படி அமைத்து இவர் மண்ணில்லா விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.

இதனை இவர் ஒரு வருடங்களாக செய்து வருவதாகவும், செடிகளுக்கு செல்லும் நீரினை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், செடிகளுக்கு மண்புழுக்களை உரமாக அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

இதனால் செடிகள் நல்ல முறையில் வளர்ந்து வருவதாகவும், வீட்டின் மாடியில் ஒருவரை வாடகைக்கு வைப்பதைவிட இந்த தொழிலில் இவருக்கு அதிக அளவு வருமானம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

பராமரிப்பு முறை மற்றும் லாபம்

மீன் வளர்ப்பில் அதிக அளவில் பராமரிப்பு இருக்காது எனவும், மூன்று வேளையும் சரியான முறையில் மீன்களுக்கு தீவனம் அளித்தால் மட்டுமே போதுமானது எனவும் கூறுகிறார்.

மற்றும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மீன் தொட்டியில் உள்ள நீரின் கழிவுகளை வெளியில் எடுத்து விடுவதாகவும், இதைத் தவிர வேறு எந்த பராமரிப்பு முறையும் மீன் வளர்ப்பில் இருக்காது எனவும் கூறுகிறார்.

மீன்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் மீன்களை விற்பனை செய்து வருவதாகவும், இவர் வளர்க்கும் மீன்கள் நல்ல சுவையாகவும் மற்றும் சத்து நிறைந்த மீன்களாக இருப்பதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து மீன்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும்,மற்றும் இந்த மீன் வளர்ப்பினை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:கிர் நாட்டு மாடு வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

Leave a Reply