சிறப்பான தீவனப்புல் உற்பத்தி.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் தீவனப்புல் உற்பத்தியை செய்து வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய தீவனப்புல் உற்பத்தி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

விவசாயின் வாழ்க்கை முறை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் தீவனப்புல் உற்பத்தியை செய்து வருவதாக கூறுகிறார்.

இவருடைய சிறுவயதில் இருந்தே இவர் விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்து வந்ததாகவும் இவருடைய தந்தை ஒரு விவசாயி என்பதாலும் இவருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

நெற்பயிர்கள் மற்றும் பிற உணவு வகைகளை இவர் சாகுபடி செய்து வந்ததாகவும், அதன்பிறகு இவர் பண்ணை வைத்துள்ளதால் ஆடு மற்றும் மாடுகளுக்கு தீவனம் தேவைப்படும் என்பதற்காக இவர் இவருடைய நிலத்தில் தீவனப்புல் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.

கால்நடைகளுக்கு முக்கியமானது தீவனம் எனவும் அந்த தீவனம் இருந்தால் மட்டுமே விலங்குகள் நன்றாக வளர்ந்து அதிக அளவு லாபத்தை அளிக்கும் என கூறுகிறார்.

இப்பொழுது இவர் இந்த தீவனப்புல் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதனை இவருடைய பண்ணையில் உள்ள ஆடு மற்றும் மாடுகளுக்கு தீவனமாகவும் மற்றும் வெளியிலிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் தீவனப்புல்லை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

Forage Grass cultivation method

தீவனப்புல் உற்பத்தியை இவர் மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், கால்நடைகளின் தீவனமாக சூப்பர் நேப்பியர் தீவனப்புல்லை அதிகளவில் அனைவரும் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மற்ற தீவனம் புல்லை விட சூப்பர் நேப்பியர் என்ற தீவனப்புல் விரைவில் வளர்ந்து விளைச்சலை அளிக்கும் என்பதாலும், இந்த வகை தீவனப் புல்லை கால்நடைகள் விரும்பி உண்பதாலும் இவர் சூப்பர் நேப்பியர் என்ற தீவனப் புல்லை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

முதலில் இவர் அனைத்து வகை தீவன புல்லையும் உற்பத்தி செய்து வந்ததாகவும், அதன் பிறகு அனைத்து வகை தீவனப் புல்லையும் கால்நடைகள் அதிக அளவில் விரும்பி உண்ணாத காரணத்தினால் இவர் சூப்பர் நேப்பியர் என்ற தீவனப் புல்லை உற்பத்தி செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.

இப்பொழுது இவருடைய 2 ஏக்கர் நிலத்தில் சூப்பர் நேப்பியர் என்று அழைக்கப்படும் தீவன புல்லை மட்டும் உற்பத்தி செய்து வருவதாகவும், இந்த தீவன புல்லை இவர் இயற்கையான முறையில் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

தீவனப்புல் உற்பத்தி முறையில் சாதாரணமாக தீவன புல் வளர்க்கும் முறையை பின்பற்றி வளர்க்கக் கூடாது எனவும், ஏனெனில் சாதாரணமான முறையில் தீவன புல்லை வளர்த்தால் அதனை உண்ணும் கால்நடைகளுக்கு அதன் மூலம் எந்தவித சத்துக்களும் கிடைக்காது எனக் கூறுகிறார்.

எனவே தீவன புல் உற்பத்தி செய்யும்போது கரும்பு மற்றும் பிற உணவுப் பொருட்களை எந்த அளவிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வளர்க்கிறோமோ அந்த அளவிற்கு பராமரிப்புடன் வளர்க்க வேண்டும் எனக் கூறுகிறார்.

தீவனப் புல்லை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது இயற்கை உரமான மாட்டு சாணத்தை போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இவ்வாறு நிலத்தினை நன்றாக பதப்படுத்தி வைத்த பிறகு தீவன புல்லை நிலத்தில் விதைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தில் விதைகளை விதைத்த பிறகு அதற்கு தேவையான நீர் மற்றும் உரத்தினை அளித்து பராமரித்து வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.

பராமரிப்பு முறை மற்றும் உரம்

தீவன புல்லை நிலத்தில் விதைத்தால் மட்டும் போதுமானதாக இருக்காது எனவும் அதனை சரியான முறையில் பராமரித்து வந்தால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

விதைகளை நிலத்தில் விதைத்த பிறகு வாரத்திற்கு இரண்டு முறை செடிகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும், செடிகள் வளர்ந்த பிறகு காடுகளில் இருக்கும் களைச் செடிகளை எடுக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ஏனெனில் களைச்செடிகளை எடுக்காமல் விட்டு விட்டால் களைச்செடிகள் தீவனப் புல்லின் சத்துக்களை எடுத்துக் கொள்ளும் எனவும், இதனால் காட்டில் உள்ள களைச் செடிகளை நீக்குவது முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் செடிகளுக்கு இயற்கை உரங்களை மட்டுமே அளித்து வருவதாகவும், மாட்டுச் சாணம் மற்றும் மாட்டின் சிறுநீர் அவற்றுடன் மாட்டுக் கொட்டகையை கழுவிய நீர் ஆகியவற்றை செடிகளுக்கு இவர் அளித்து வருவதாக கூறுகிறார்.

அதன் பிறகு இவர் செடிகளுக்கு நீரினை அளிக்கும் போது அவற்றுடன் சேர்த்து தேவையில்லாத கழிவு பொருட்களை வைத்து உருவாக்கிய உரத்தினை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இயற்கை உரங்களை செடிகளுக்கு அளித்து வளர்த்து வருவதால் செடிகள் நல்ல சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சல் அளிப்பதாகவும் தீவனப்புல் அதிகளவு பச்சை நிறத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இயற்கை உரத்தை இந்த தீவனப் புல்லுக்கு கொடுத்து வளர்த்து வருவதால் இதனுடைய ஆயுட்காலம் அதிக அளவில் கூடும் எனவும், இதுவே செயற்கை உரத்தை அளித்தால் இதனுடைய ஆயுட்காலம் குறைந்து விடும் என கூறுகிறார்.

இவர் சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருவதாகவும், இந்த தீவனப்புல் உற்பத்திக்கு அதிகளவு நீர் தேவை இல்லை எனவும், அதிக அளவு நீர் நம்மிடம் இருந்தால் அதனை செடிகளுக்கு அளிக்கலாம் எனவும் நீர் பற்றாக்குறை இருந்தால் குறைந்த அளவு நீரை மட்டும் செடிகளுக்கு அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.

Harvesting method

தீவனப்புல் என்பது மாட்டுப் பண்ணை வைத்துள்ள அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று எனவும், இரண்டிலிருந்து மூன்று மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் தீவன புல்லை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் இதுவே பெரிய அளவில் பண்ணை வைத்து நடத்தும் பண்ணையாளர்கள் தீவனப் புல்லை விவசாயம் செய்வது முக்கியமான ஒன்று என கூறுகிறார்.

விதைகளை நட்ட 90வது நாளில் செடிகள் நன்றாக வளர்ந்து விளைச்சலுக்கு தயாராகி விடும் எனவும் 90 நாட்களுக்கு பிறகு அறுவடையை இவர் தொடங்குவதாக கூறுகிறார்.

முதல் அறுவடைக்கு பிறகு 45 நாட்களுக்குப் பின் அறுவடையை தொடர்ந்து எடுத்து கொண்டே இருக்கலாம் எனவும், செடிகளை சிறப்பாக பராமரித்து வளர்த்து வந்தால் அதன் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

தீவன புல்லை இவருடைய பண்ணையில் உள்ள கால்நடைகளுக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

தீவன புல்லை வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் தீவனப்புல் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் தீவன புல்லை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இயற்கையான முறையில் இயற்கை உரங்களை மட்டும் அளித்து எந்த வித செயற்கை உரங்களையும் தீவனப் புல்லுக்கு அளிக்காமல் வளர்த்து வருவதால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து தீவனங்களை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த தீவனப்புல் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:நாய்க்குட்டிகள் வளர்ப்பில் சிறந்த வருமானம்.

Leave a Reply