அத்தி தோட்ட வளர்ப்பில் அசத்தும் பட்டதாரி.

திரு விமல்ராஜ் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் இருந்து இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழ் அத்திவாக்கம் என்னும் ஊரில் அத்திப்பழ தோட்டத்தை வைத்து சிறப்பாக அந்த தோட்டத்தை நடத்தி வருகிறார்.

இவரைப் பற்றியும் இவருடைய அத்திப்பழ தோட்டத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு விமல்ராஜ் அவர்களின் வாழ்க்கை

திரு விமல்ராஜ் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் இருந்து இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கீழ் அத்திவாக்கம் என்னும் ஊரில் ஒரு அத்திப்பழ தோட்டத்தை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார்.

திரு விமல்ராஜ் அவர்கள் தோட்டக்கலை துறை படிப்பினை முடித்து உள்ளதாக கூறுகிறார். இவர் இந்த அத்திப்பழ தோட்டத்தினை மிகவும் ஆர்வமாக செய்து வருவதாகவும் கூறுகிறார்.

திரு விமல்ராஜ் அவர்களின் தாத்தா மற்றும் அப்பா ஆகியோர் ஒரே விவசாய முறையினை செய்து வந்துள்ளதாகவும், அதனால் திரு விமல்ராஜ் அவர்களுக்கு மாற்று விவசாய பயிர்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றி இந்த அத்திப்பழ  தோட்டத்தை நடத்தி வருவதாக கூறுகிறார்.

திரு விமல்ராஜ் அவர்கள் இந்த அத்திப்பழ தோட்டத்தினை இரண்டு வருடங்களுக்கு முன்பே தொடங்கி சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார். இந்த அத்திப்பழ தோட்டத்தில் அதிக அளவு வருமானத்தை பெறலாம் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

அத்திப்பழ தோட்டம்

அத்திப்பழ தோட்ட வளர்ப்பில் அதிக அளவில் வருமானத்தை பெற முடியும். இன்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் அத்திப்பழ சாகுபடியை யாரும் செய்வதில்லை. ஆனால் திரு விமல்ராஜ் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த அத்திபழ தோட்டத்தினை தொடங்கி இப்பொழுது பெரிய அளவில் மிக சிறப்பாக நடத்திவருகிறார்.

இவ்வாறு அதிக நபர்கள் இந்த அத்திப்பழ தோட்டத்தினை நடத்தாமல் இருக்க இதன் சந்தைபடுத்துதல் முறையோ அல்லது இது புதிதாக உள்ளது என்ற எண்ணத்தாலோ இந்த அத்திப்பழ தோட்டத்தினை நடத்தாமல் இருக்க ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

அதிக அளவில் வெளி மாநிலங்களில் இருந்தே அத்தி பழத்தினை இறக்குமதி செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இந்த அத்திப்பழ சாகுபடியானது மிகக் குறைந்த அளவே உள்ளது.இதனால் இந்த அத்திப்பழத்தின் தேவையானது அதிக அளவில் இருந்து கொண்டே தான் உள்ளது எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த அத்திப் பழங்களின் சிறப்பானது, இந்த பழங்கள் எந்த விதத்திலும் வீண் ஆவதில்லை. இந்த பழங்களை சந்தையில் விற்றது போக மீதமுள்ள பழங்களை வைத்து ஜாம், ஜெல்லி, ஊறுகாய் மற்றும் உலர்ந்த பழங்களாகவும் உருவாக்கலாம் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த அத்தி வளர்ப்பு முறையினை சரியான முறையில் அறிந்து கொண்டால் இதனை இருபது வருடங்கள் தொடர்ந்து செய்யலாம் எனவும் கூறுகிறார். இந்த அத்திப்பழ வளர்ப்பு ஆனது நெடுநாள் பயிர் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக கொய்யா, மாதுளை மற்றும் பிற பழ வகைகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதன் மூலம் குறைந்த அளவே லாபத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார்.

இதன் காரணமாகவே திரு விமல்ராஜ் அவர்கள் அத்திப்பழ தோட்டத்தை தொடங்கியதாக கூறுகிறார். மேலும் இந்த அத்திப்பழ தோட்டத்தின் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற முடியும் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

அத்திப்பழத்தின் பல்வேறு ரகங்கள்

பொதுவாக அத்திப் பழங்களை எடுத்துக் கொண்டால் அதில் நிறைய ரகங்கள் உள்ளது எனவும் கூறுகிறார். அதில் அதிக ரகங்கள் வெளிநாடுகளிலேயே உற்பத்தி செய்து வருகின்றதாக கூறுகிறார்.

இதில் தமிழ்நாட்டில் உள்ள ரகங்கள் மொத்தமாக மூன்று உள்ளது எனவும், அதில் ஒன்று பூநே ரேட், மற்றொன்று டர்க்கி புரோன் மற்றும் டயானா ஆகிய ரகங்கள் எனவும் இந்த மூன்று ரகங்களை மட்டுமே தமிழ்நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்து வருவதாக திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த ரகங்களில் டர்க்கி புரோன் மற்றும் டயானா ஆகிய இரண்டு ரகங்களும் படரும் செடி எனவும் கூறுகிறார். மற்றொரு ரகமான பூநே ரேட் ரகமானது நேராக வளரும் தன்மையுடைய செடி எனவும் கூறுகிறார்.

இந்த மூன்று ரகங்களில் மக்கள் அதிகமாக விரும்பி உண்ணும் ரகமானது பூநே ரேட் மற்றும் டர்க்கி புரோன் எனவும் கூறுகிறார். இந்த இரண்டு ரகங்களை மட்டும் மக்கள் அதிகமாக விரும்பி உண்பதற்கு காரணமானது இந்த இரண்டு ரகத்தின் பழங்கள் விரைவில் கெட்டுப் போகாமல் இருப்பதே காரணம் எனவும் கூறுகிறார்.

பொதுவாக அத்திப்பழம் என்றாலே விரைவில் கெட்டுப் போய்விடும் எனவும் இந்த இரண்டு ரகத்தின் பழங்களும் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

அத்திப்பழத்தின் வளர்ப்பு முறை

பொதுவாக இப்பொழுது தான் அதிக அளவில் அத்திப் பழங்களை உற்பத்தி செய்து வருகின்றன.

அத்திப்பழங்கள் ஆனது அதிகமாக வறட்சியான இடத்திலேயே வளரும் எனவும் ,இதற்கு அதிக அளவில் வெயில் இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் வெப்பம் உள்ளதால் அந்த இடங்களில் அத்திப்பழ வளர்ப்பு மிக சிறப்பாக உள்ளது எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

எந்த அளவிற்கு வறட்சி அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்கு சிறப்பான முறையில் இந்த அத்தி சாகுபடியை செய்யலாம் எனவும் கூறுகிறார். இந்த அத்திப்பழ செடிகளுக்கு உப்புநீரை பயன்படுத்த கூடாது எனவும் கூறுகிறார். ஏனெனில் இந்த அத்திப்பழ செடியானது உப்பு நீரில் வளராது என கூறுகிறார்.

இந்த அத்திப்பழ செடியானது அனைத்து மண் வகைகளிலும் வளரும் தன்மையுடையது எனவும் கூறுகிறார். ஆனால் இது களிமண்ணில் அதிக அளவு வளராது என சிலர் கூறியுள்ளதாகவும், அதனை சோதனை செய்வதற்கு இவர் சில செடிகளை களிமண் தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்ததாகவும் கூறுகிறார்.

இந்த முறையில் இவர் சோதனை செய்ததில் அத்தி செடியானது களிமண் தோட்டத்திலும் நன்றாகவே வளர்கிறது எனவும் கூறுகிறார். மேலும் புதியதாக அத்தி தோட்டத்தினை களிமண்ணில் வளர்த்துப்பவர்கள் முதலில் சோதனை செய்த பிறகு பெரிய அளவில் வளர்த்துவது மிக சிறந்தது எனவும்,இரண்டு மாதங்களிலேயே இதனுடைய வளர்ப்பு முறை தெரிந்து விடும் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

திரு விமல்ராஜ் அவர்கள் இந்த தோட்டத்தை உருவாக்க பூநே ரேட் அத்திப் பழ வகைகளுக்கு மட்டுமே அறுபத்து இரண்டிலிருந்து எழுபத்து இரண்டு ஆயிரம் வரை செலவானதாக கூறுகிறார்.

இந்த அத்திப்பழ செடிகளை வளர்ந்த செடிகளிலிருந்து சிறிதளவு தண்டினை எடுத்து வைத்து வளர்த்தலாம் எனவும் கூறுகிறார். மேலும் சிறு செடிகளிலேயே காய்  இருக்கும் செடிகளை பார்த்து ஏமாந்து விடக்கூடாது எனவும் கூறுகிறார். இந்தச் செடிகள் ஆனது வளர்ந்த பிறகே காய்கள் வைக்கும் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

தோட்டத்தின் அமைப்பு மற்றும் செடியின் விலை

திரு விமல்ராஜ் அவர்கள் தோட்டத்தில் பூநே ரேட் செடிகளை ஒரு ஏக்கருக்கு எழுபத்து ஐந்து செடிகளை நட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார். இதில் ஒரு செடியின் விலை ஐம்பத்து ஐந்து ரூபாய் என கூறுகிறார். இவற்றை விற்பனை செய்து வருவதாகவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

இவர் டர்க்கி புரோன் மற்றும் டயானா வகை அத்திப்பழ செடிகளை மட்டும் இந்த பூநே ரேட் செடிகளை விட அதிக விலைக்கு தருவதாக கூறுகிறார். இதற்கு காரணம் இந்த பூநே ரேட் செடிகளை விட, டர்க்கி புரோன் மற்றும் டயானா வகை அத்திபழ செடிகள் அதிக அளவு மதிப்பீடு தரக்கூடிய செடிகளாக இருப்பதே காரணம் என திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

இந்த டர்க்கி புரோன் மற்றும் டயானா வகைச் செடிகளை அறுபத்து  ஐந்து ரூபாய் விலைக்கு விற்று வருவதாக கூறுகிறார். இந்த இரண்டு வகை செடிகளும் தமிழ்நாட்டில் அதிக அளவில் கிடைப்பதில்லை எனவும் கூறுகிறார்.

இந்த அத்திப்பழ செடிகள் வளரும் போது அதன் இலைகளை எண்ண வேண்டும் எனவும் அதில் எழு இலைகள் வந்தவுடன் அந்தச் செடியின் நுனி பகுதியினை கிள்ளி விட வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு செடிகளை கிள்ளி விட்டால்தான் செடிகள் நன்றாக வளரும் என கூறுகிறார்.

மூன்றாவது மாதத்தில் செடியில் பிஞ்சு வைக்க ஆரம்பம் செய்யும் என கூறுகிறார். அவ்வாறு வரும் பிஞ்சை கிள்ளி விட வேண்டும் என கூறுகிறார். இவ்வாறு செடியில் உள்ள பிஞ்சை கிள்ளி விட்டால் செடிகள் 9 மாதத்தில் நன்றாக வளர்ந்து அதிக அளவு பழங்களை வைத்து நல்ல முறையில் வருமானத்தை தரும் என கூறுகிறார்.

விவசாயிகள் அனைவரும் அவர்கள் உற்பத்தி செய்யும் பழங்களை அவர்களே விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறுகிறார். ஏனெனில் அவர்கள் உற்பத்தி செய்யும் பழங்களை அவர்களை விற்பனை செய்தால் மட்டுமே நல்ல வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்.

இந்த பழங்களை வியாபாரிகளின் மூலம் விற்பனை செய்தால் குறைந்த அளவே வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார். இந்த பழங்களை வியாபாரிகளிடம் சென்று விற்பனை செய்தால் அவர்கள் நாற்பதில் இருந்து ஐம்பது ரூபாய்க்கு மட்டுமே வாங்குவார்கள் எனவும், இதனை விவசாயிகளே சென்று விற்பனை செய்தால் நூறு ரூபாய் வரை விற்பனை செய்யலாம் எனவும் திரு விமல்ராஜ் அவர்கள் கூறுகிறார்.

அத்தி பழ வளர்ப்பு முறையில் எந்த இழப்பு முறையும் இல்லாமல் அதிக அளவு வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் கூறுகிறார். அத்திப்பழங்களை விற்றது போக மீதமுள்ள பழங்களை வைத்து ஜாம், ஜெல்லி, ஊறுகாய், உலர்ந்த பழங்கள் போன்றவைகளாக மாற்றி விற்பனை செய்யலாம் எனவும் ,இதனால் அத்திப் பழங்கள் வீண் ஆவதில்லை எனவும் கூறுகிறார்.

திரு விமல்ராஜ் அவர்களின் சிறப்பான அத்திப்பழ தோட்டம்

திரு விமல்ராஜ் அவர்களிடம் செடிகளை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அத்தி பழ செடிகளைப் பற்றி நன்றாக சொல்லிக் கொடுத்த பிறகே இந்த செடிகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு விமல்ராஜ் அவர்கள் இந்த அத்திப்பழ தோட்ட வளர்ப்பு முறையில் அதிக அளவில் வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:கைராலி கோழிப்பண்ணை.

 

 

Leave a Reply