ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் வசித்து வரும் ஒரு பெண்மணி மிகவும் சிறப்பான முறையில் நாட்டு ஆடுகளை வளர்த்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நாட்டு ஆடுகள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
நாட்டு ஆடுகள் வளர்ப்பின் தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நாட்டு ஆடுகள் பண்ணை வைத்து நடத்தி வருவதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
இவர் இவருடைய பட்டப்படிப்பினை முடித்துவிட்டு சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் ஆட்டுப் பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.
இவர் இந்த ஆட்டுப் பண்ணையை நான்கிலிருந்து ஐந்து வருடங்களாக நடத்தி வருவதாகவும், இவருடைய சிறுவயதிலிருந்தே அவருக்கு ஆடுகளின் மீது அதிக அளவு ஆர்வம் இருந்து வந்ததன் காரணமாக இவர் ஆட்டுப் பண்ணையை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் இவரது ஆட்டுப் பண்ணையை பார்த்து கொள்வதற்கு இவருடைய தந்தையும் உதவி செய்து வருவதாகவும் கூறுகிறார்.
Goat rearing system
ஆட்டுப் பண்ணையை இவர் சிறந்த முறையில் வளர்த்து வருவதாகவும் ஆடுகளுக்கு தேவைப்படும் அனைத்து தீவனங்களையும் தரமானதாக அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஆடுகளை இவர் முற்றிலும் மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும் மேய்ச்சல் முறையில் ஆடுகளை வளர்த்தால் மட்டுமே ஆடுகள் விரைவில் வளர்ந்து நல்ல லாபத்தை அளிக்கும் என கூறுகிறார்.
மேலும் ஆடுகளை வளர்ப்பதற்கு இவர் பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து இருப்பதாகவும் அந்தக் கொட்டகையில் ஆடுகளை வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
இரண்டு ஆடுகள் வளர்ப்பில் இவர்கள் பண்ணையை தொடங்கி இப்பொழுது 100 ஆண்டுகளுக்கு மேல் இவருடைய பண்ணையில் இருப்பதாகவும், வெளியிலிருந்து ஆடுகளை வாங்கி வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் ஆடுகளை இனப்பெருக்கம் செய்து வளர்த்து விற்பனை செய்து வருவதாகவும், இவரிடம் ஆடுகள் விற்பனைக்கு குறைவாக இருந்தால் வெளியில் இருந்து ஆடுகளை வாங்கி வளர்த்து அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் இவர் இவருடைய பண்ணையில் நாட்டு ஆடுகளை மட்டும் வளர்த்து வருவதாகவும் மற்ற எந்த ஆட்டு வகையையும் வளர்ப்பதில்லை எனவும் கூறுகிறார்.
ஏனெனில் இவருடைய பகுதியில் அதிகளவில் நாட்டு ஆடு இறைச்சி மட்டுமே அனைவரும் விரும்பி வாங்குவதாகவும், நாட்டு ஆடு இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் என்பதாலும் இவர் நாட்டு ஆடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் நாட்டு ஆடுகளை வளர்ப்பதால் இதன் மூலம் மிகச் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
இவருடைய பண்ணையில் நாற்பதில் இருந்து ஐம்பது தாய் ஆடுகள் இருப்பதாகவும், குட்டிகள் 40 க்கு மேல் இருப்பதாகவும் அனைத்து ஆடுகளும் இரண்டிலிருந்து மூன்று குட்டி போடும் அளவில் இருப்பதாகவும் கூறுகிறார்.
ஆடுகளுக்கு அளிக்கும் தீவனம் மற்றும் பராமரிப்பு முறை
ஆட்டுப் பண்ணையை பராமரித்து கொள்வதற்கு இவர்களுடைய குடும்பத்தார் அனைவரும் இவருக்கு உதவி செய்து வருவதாகவும் இதனால் இவர் சிறப்பாக இவருடைய பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.
ஆடுகளுக்கு தீவனமாக இவர் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தை அளித்து வருவதாகவும், ஆடுகளை அதிகமாக மேய்ச்சல் முறையிலேயே இவர் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மதியம் நேரங்களில் ஆடுகளுக்கு இவர் பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தை அளித்து வருவதாகவும், காலை மற்றும் மாலை நேரங்களில் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதாகவும் கூறுகிறார்.
காலையில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதாகவும் மற்றும் மாலையில் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதாகவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய குடும்பம் உறவினர் வீடுகளுக்கு வெளியில் செல்லும்போது ஆடுகளுக்குத் தீவனமாக கடலைக்கொடி மற்றும் தட்டு வகைகளை தீவனமாக அளித்து விட்டு செல்வதாக கூறுகிறார்.
மேய்ச்சல் முறையில் ஆடுகள் வளர்ந்தால் எந்த நோய் தாக்குதலும் இல்லாமல் சிறப்பான முறையில் விரைவில் வளர்ந்து நல்ல லாபத்தை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லாமல் கட்டி வைத்து வளர்க்கும் போது ஆடுகளுக்கு பலவித நோய்கள் ஏற்படும் எனவும் எனவே ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வளர்ப்பது மிகவும் நல்லது எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய ஆட்டுப் பண்ணையை பராமரிப்பதற்கு அதிக அளவில் நேரத்தை செலவிடுவதில்லை எனவும், இவருடைய காட்டிலேயே தீவனங்கள் இருப்பதால் அந்த காட்டில் இவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விடுவதாக கூறுகிறார்.
ஆடுகளுக்கு நோய் தாக்குதல் வருவதற்கு முன்பு அதனை சரி செய்து கொள்ள வேண்டும் எனவும், ஒரு ஆட்டிற்கு நோய் ஏற்பட்டால் அதனை தனியாக ஒரு கொட்டகையில் வைத்து வளர்க்க வேண்டும் எனவும் இல்லையெனில் அனைத்து ஆடுகளுக்கும் நோய் தாக்கி விடும் எனக் கூறுகிறார்.
மேலும் ஆடுகள் இருக்கும் கொட்டகையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இல்லை எனில் அதன் மூலம் ஆடுகளுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
எனவே ஆடுகள் இருக்கும் கொட்டகையை சுத்தமாக வைத்து பராமரித்து கொள்ள வேண்டும் எனவும், இந்த முறையில் ஆடுகளைப் பராமரித்து வளர்த்து வந்தால் ஆடுகள் விரைவில் வளர்ந்து சிறந்த வருமானத்தை அளிக்கும் என கூறுகிறார்.
Meat and immunization system
நாட்டு ஆடுகளின் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும் எனவும் அதிகளவு வாடிக்கையாளர்கள் நாட்டு ஆடு இறைச்சியையே விரும்பி வாங்கிச் செல்வதாகவும் கூறுகிறார்.
மேலும் நாட்டு ஆடுகள் இறைச்சியில் அதிகளவில் மருத்துவ குணம் இருப்பதால் இதனை உண்பது நமது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
நாட்டு ஆடுகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதாகவும் எனவே இந்த நாட்டு ஆடுகளுக்கு நோய்கள் தாக்குவதில்லை எனவும் கூறுகிறார்.
இந்த ஆடுகளுக்கு சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படும் எனவும் இதற்கு என்று இவர் எந்த மருந்துகளையும் அளிப்பதிலலை எனவும், ஏனெனில் இவர் மேய்ச்சல் முறையில் ஆடுகளை வளர்ப்பதால் ஆடுகள் மூலிகை இலைகளை உண்ணும் எனவும் இதனால் சளி மற்றும் இருமல் குணமாகி விடும் என கூறுகிறார்.
மற்றும் கழிச்சல் நோய்களுக்கு இவர் மருத்துவரின் ஆலோசனையுடன் மாத்திரையை அளித்து பராமரித்து வருவதாக கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
ஆடுகளை இவர் இறைச்சி கடைகளுக்கும் மற்றும் வளர்ப்பதற்கும் விற்பனை செய்து வருவதாகவும், ஆடுகளை சிறப்பான முறையில் தரமான ஆடுகளாக வளர்ப்பதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் ஆடுகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய பண்ணையிலேயே ஆட்டு இறைச்சியை விற்பனை செய்து வருவதாகவும் இவருடைய பகுதியிலுள்ள அனைவரும் இவரிடம் வந்து இறைச்சியை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இவ்வாறு அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து ஆடுகளை வாங்கி செல்வதன் மூலமும் மற்றும் இறைச்சியை வாங்கி செல்வதன் மூலமும் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய நாட்டு ஆடுகள் பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:நாட்டு நாய்கள் வளர்ப்பில் சிறந்த லாபம்.