சிறப்பான திராட்சை சாகுபடி.

திரு மகுடேஷன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், இளங்கோட்டை தாலுகா, ஜே ஊத்துப்பட்டி, ஜெம்பூரக்கோட்டை என்னும் கிராமத்தில் திராட்சை சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய திராட்சை சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு மகுடேஷன் அவர்களின் வாழ்க்கை

திண்டுக்கல் மாவட்டம், இளங்கோட்டை தாலுகாவில் உள்ள ஜே ஊத்துப்பட்டி, ஜெம்பூரக்கோட்டை என்னும் கிராமத்தில் திரு மகுடேஷன் அவர்கள் வசித்து வருவதாகவும்,இவர் இங்கு சொந்தமாக ஒரு திராட்சை தோட்டத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

இவருடைய தாத்தா காலத்தில்  இருந்து இவருடைய குடும்பம் இந்த திராட்சை சாகுபடியை செய்து வருவதாகவும், இந்த திராட்சை சாகுபடியில் இவர்கள் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், திராட்சை சாகுபடி முறையை பற்றி இவருக்கு அதிகளவில் தெரியும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் இவர் சிறு வயதில் இருந்தே திராட்சை சாகுபடி செய்யும் முறையைப் பார்த்து வளர்ந்து வந்ததால் அதனுடைய சாகுபடி முறைகளைப் பற்றியும்,செடிகளை பராமரிக்கும் முறையைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டதாக கூறுகிறார்.

பொதுவாக திராட்சை விவசாயம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் எனவும், திராட்சை விவசாயத்தைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு இந்த திராட்சை விவசாயம் சுலபமாக இருக்கும் எனவும், ஆனால் புதிதாக தொடங்குபவர்களுக்கு இந்த திராட்சை விவசாயம் மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

Grape cultivation method

திராட்சை கொடியானது அதனுடைய விதைகளின் மூலம் வளராது எனவும், திராட்சை கொடியை வளர்த்துவதற்கு அந்த கொடியின் தண்டினை எடுத்து வந்து வைத்து அதன் மூலமே திராட்சை கொடியை வளர்த்த முடியும் எனவும் திரு மகுடேஷன் அவர்கள் கூறுகிறார்.

மகாராஷ்டிரா பகுதிகளிலும் மற்றும் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலையிலும் திராட்சை கொடியின் தண்டினை வாங்கி வந்து பதியம் வைத்து நட்டு திராட்சைச் கொடி வளர்க்கலாம் எனவும், இந்த முறையில் வளர்த்தால் ‌கொடி நன்றாக வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் திராட்சை கொடியானது படரும் தன்மை உடையதால் அதனை பந்தல் போன்ற அமைப்பில் வளர்க்க வேண்டும் எனவும், இதில் நாட்டு திராட்சை வகைகளை வளர்த்தால் மிகவும் நல்லது எனவும் கூறுகிறார்.

நாட்டு திராட்சை பழ வகைகள், பன்னீர் திராட்சை வகைகள், சீட்லஸ் கருப்பு திராட்சை மற்றும் சீட்லஸ் வெள்ளை திராட்சை ஆகிய வகைகளை வளர்க்கலாம் எனவும், இந்த திராட்சை வகைகள் எல்லாம் நல்ல முறையில் வளரும் எனவும் அதிக விலைக்கு விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.

கார்த்திகை, மார்கழி மற்றும் மாசி ஆகிய மாதங்களில் இந்த திராட்சை கொடியினை பதியம் போட்டு நடுவதாகவும், 2 மாதத்தில் கன்று வளர்ந்து விடும் எனவும் திரு மகுடேஷன் அவர்கள் கூறுகிறார்.

நாட்டு திராட்சையின் சிறப்பு

அனைத்து வகை திராட்சைப் பழங்களை விட நாட்டு திராட்சை பழங்கள் நல்ல முறையில் வளரும் எனவும், இதனுடைய சுவை மிகவும் நன்றாக இருக்கும் எனவும், அதிகளவு மக்கள் இந்த திராட்சை வகைகளையே விரும்பி வாங்குவார்கள் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த நாட்டு திராட்சை பழங்கள் அதிக அளவு விலைக்கு விற்பனையாகும் எனவும், ஏனெனில் இது இயற்கை முறையினால் உற்பத்தி செய்யப்படுகிறது எனவும் இதில் மருத்துவ குணம் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த நாட்டு திராட்சைப் பழங்கள் சிறியதாக இருக்கும் போது அதனுடைய நிறம் கருப்பு நிறத்தில் இருக்கும் எனவும் ஆனால் மற்ற திராட்சை பழங்கள் கருப்பு நிறத்தில் வருவதற்கு நான்கு மாதங்கள் தேவைப்படும் எனவும் கூறுகிறார்.

எனவே நாட்டு திராட்சை வகைகளை வளர்க்கும் போது நமக்கு அதன் மூலம் நிறைந்த வருமானம் கிடைக்கும் எனவும், இது இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகிறார்.

Bandal setting method

திராட்சை கொடியானது படரும் தன்மை உடையதால் அது நன்றாக படர்ந்து வளர்வதற்கு பந்தல் அமைக்க வேண்டும் எனவும், ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைப்பதற்கு 3 லிருந்து 4 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் எனவும் கூறுகிறார்.

நிலத்தை நன்றாக உழுது அதன்பிறகு பதியம் போட்டு வைத்த தண்டினை எடுத்து நிலத்தில் நட வேண்டும் எனவும் இந்தச் செடி இரண்டு மாதத்தில் வளர்ந்த பிறகு பந்தல் போட தொடங்கிவிட வேண்டும் எனக் கூறுகிறார்.

8 அடி நீளமுள்ள கல்லினை வாங்கி சிறிது சிறிது இடைவெளி விட்டு நட வேண்டும் எனவும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு 200 கல்கள் போதுமானது எனவும், இவ்வாறு கல்களை நிலத்தில் நட்ட பிறகு பந்தல் அமைப்பதற்கு நல்ல தரமான கம்பி கொண்டு அமைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

ஏனெனில் திராட்சைக் கொடியானது வளர்ந்து திராட்சைப் பழம் காய்க்க தொடங்கி விட்டால் அதனுடைய எடையை தாங்குவதற்கு நல்ல முறையில் தரமானதாக இருக்கும் கம்பி தேவைப்படும் என்ற காரணத்தினால் தரமான கம்பியைக் கொண்டு பந்தல் அமைக்க வேண்டும் என கூறுகிறார்.

மேலும் திராட்சை விவசாயத்திற்கு மொத்தமாக உரம் மற்றும் மருந்து மற்றும் பந்தல் ஆகிய அனைத்து வேலைகளுக்கும் மொத்தமாக 6 லட்சம் ரூபாய் வரை செலவாகி விடும் எனவும் திரு மகுடேஷன் அவர்கள் கூறுகிறார்.

20 நாளில் திராட்சை கொடியானது பந்தலின் மீது ஏறத் தொடங்கி விடும் எனவும், 120 நாளில் முழுவதுமாக அனைத்து பந்தலிலும் பரவி திராட்சைப் பழங்கள் காய்த்து விடும் எனவும் திரு மகுடேஷன் அவர்கள் கூறுகிறார்.

அறுவடை முறை மற்றும் பராமரிப்பு முறை

திரு மகுடேஷன் அவர்கள் திராட்சை விவசாயத்தை தொடங்கி மூன்று மாதத்திலேயே அறுவடை செய்து விடுவதாகவும், வருடத்திற்கு மூன்று முறை இவர் திராட்சை விவசாயத்தை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

புண்ணாக்கு, சாணம் மற்றும் செயற்கை உரங்கள் ஆகியவற்றை செடிகளுக்கு அளிப்பதாகவும், ஏனெனில் இதனை செடிகளுக்கு அளிக்கவில்லை எனில் செடிகளை புழுக்கள் தாக்கி விடும் என்பதாலும் அதனை பாதுகாப்பதற்கு இந்த உரங்களை எல்லாம் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார்.

நான்கு நாள்களுக்கு ஒரு முறை நீரினை செடிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும், நிழல் குறைவாக இருந்தால் திராட்சை பழமானது கருப்பு நிறத்தில் இருக்காது எனவும் திரு மகுடேஷன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்து திராட்சைகளை பாதுகாப்பதற்கு தோட்டத்தைச் சுற்றிலும் வலையை அமைத்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார்.

Grapes sales method

ஒரு ஏக்கர் திராட்சை தோட்டத்தில் இருந்து 6 இலிருந்து 7 டன் வரையில் திராட்சை பழங்களை அறுவடை செய்ய முடியும் எனவும் நல்ல முறையில் உரங்களை வைத்து வளர்த்து இருந்தால் 10 டன் வரை பழங்கள் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இவ்வாறு அறுவடை செய்த திராட்சை பழங்களை சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும், இந்த திராட்சைப் பழங்களின் விலையானது ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விலையில் இருக்கும் எனவும் திரு மகுடேஷன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த திராட்சைப் பழங்களை வளர்ப்பதற்கு யாரும் அதிக அளவு மருந்துகளை பயன்படுத்துவது இல்லை எனவும், பெரும்பாலும் அனைவரும் இயற்கையான முறையிலேயே திராட்சை பழங்களை வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

திரு மகுடேஷன் அவர்கள் மிகவும் சிறப்பான முறையில், இயற்கையான சூழலில் இவருடைய திராட்சை தோட்டத்தை வளர்த்து வளர்த்து வருகிறார்.

மேலும் படிக்க;ஆட்டுப்புழுக்கை விற்பனையில் அமேசானில் அசத்தும் கிராமத்து இளைஞர்.

Leave a Reply