ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வெள்ளாடு வளர்ப்பினை வளர்த்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய வெள்ளாடு வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
Beginning of goat rearing
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் வெள்ளாடு வளர்ப்பினை வளர்த்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
ஆட்டுப் பண்ணையை தொடங்குவதற்கு முன்பு இவர் தனியாக ஒரு வேலையை செய்து வந்ததாகவும் அந்த வேலையில் அதிக அளவில் லாபம் இல்லாத காரணமாக இவர் வெள்ளாடு வளர்ப்பினை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவர் வெள்ளாடு வளர்ப்பினை செய்வதற்கு இவருடைய மனைவி அதிக அளவில் உதவி செய்து வருவதாகவும் வெளியில் செல்லும் சமயங்களில் பண்ணையை இவருடைய மனைவி மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வருவதாக கூறுகிறார்.
பண்ணையை தனிநபராக பராமரிப்பதை விட குடும்பத்தில் உள்ள நபர்கள் இணைந்து பராமரித்தால் பண்ணை சிறப்பாக இருக்கும் எனவும் பண்ணையில் உள்ள ஆடுகள் நல்ல முறையில் விரைவில் வளரும் எனவும் கூறுகிறார்.
இவருடைய குடும்ப நபர்கள் இவருடைய பண்ணைக்கு அதிக அளவில் உதவி செய்து வருவதால் இவருடைய பண்ணையில் உள்ள ஆடுகள் மிக சிறப்பான முறையில் வளர்ந்து நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
ஆட்டுப் பண்ணையின் அமைப்பு மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை
ஆட்டுப் பண்ணையை இவர் மிக சிறப்பான முறையில் அமைத்து இருப்பதாகவும், இவருடைய தோட்டத்தின் அருகே ஆடுகளை வளர்ப்பதற்கு பெரிய கொட்டகையை அமைத்து ஆடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவர் வெள்ளாடுகளை மட்டுமே வளர்ந்து வருவதாகவும் முதலில் இவர் 7 தாய் ஆடுகளையும் ஒரு கிடாயையும் வாங்கி வளர்த்து வந்ததாகவும் கூறுகிறார்.
மேலும் இப்பொழுது இவர் அந்த ஏழு தாய் ஆடுகளுடன் சேர்த்து இருபத்தி ஐந்து தாய் ஆடுகளை வளர்த்து வருவதாகவும், இந்த இருபத்தி ஐந்து தாய் ஆடுகளிலிருந்து இப்பொழுது நான்கிலிருந்து ஆறு மாதம் வரையில் உள்ள குட்டிகள் 25 இருப்பதாகவும் கூறுகிறார்.
மற்றும் நான்கு மாதத்தில் இருந்து ஐந்து மாதம் வரை உள்ள குட்டிகள் 10 இருப்பதாகவும், மொத்தமாக இவருடைய பண்ணையில் தாய் மற்றும் குட்டி ஆடுகள் அறுபது இருப்பதாகவும், இது மட்டுமல்லாமல் 14 கிடாய்களை இவர் விற்பனை செய்து உள்ளதாக கூறுகிறார்.
மேலும் இவர் பண்ணையை மிகப்பெரிய அளவில் அமைத்து இருப்பதால் அனைத்து ஆடுகளும் சுதந்திரமாகவும் எந்த நெரிசலும் இல்லாமல் நல்ல முறையில் வளர்ந்து வருவதாக கூறுகிறார்.
Goat rearing system
ஆடுகளை இவர் மேய்ச்சல் முறையில் மிக சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், ஆடுகள் பசுந்தீவனங்களை அதிக அளவில் விரும்பி உண்ணும் எனவும் ஆடுகள் மேய்ச்சல் முறையில் வளர்வதால் எந்த நோய்களும் அதிக அளவில் தாக்காமல் நல்ல முறையில் வளர்ந்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் பாதி ஆடுகளை பரண் மீது வளர்த்து வருவதாகவும் மற்றும் மீதி உள்ள ஆடுகளை தரையில் வளர்த்து வருவதாகவும் இந்த இரண்டு முறையிலும் ஆடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் ஆடுகளை தரையில் வளர்ப்பதை விட பரண் மீது வளர்த்தால் எந்தவித நோய்களும் அதிக அளவில் தாக்காது எனவும், ஆனால் ஆடுகளை பரண் மீது மட்டும் வைத்து வளர்க்க கூடாது எனவும் தரையில் விட்டு வளர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவர் இந்த இரண்டு முறைகளிலேயே ஆடுகளை வளர்த்து வருவதாகவும், இதனால் ஆடுகள் நல்ல முறையில் வளர்ந்து சிறந்த வருமானத்தை அளித்து வருவதாகக் கூறுகிறார்.
பராமரிப்பு முறை மற்றும் தீவனங்கள்
ஆடுகளை வளர்ப்பதை மட்டும் செய்யக்கூடாது எனவும் அதனை பராமரித்து வளர்த்தால் மட்டுமே ஆடுகள் சிறப்பான முறையில் வளர்ந்து நல்ல லாபத்தை அளிக்கும் என கூறுகிறார்.
ஆடுகள் இருக்கும் கொட்டகையை வாரத்தில் இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், இவ்வாறு கொட்டகையை சுத்தம் செய்தால் தான் ஆடுகளுக்கு நோய்கள் எதுவும் ஏற்படாமல் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும் என கூறுகிறார்.
மற்றும் ஆடுகளுக்கு உண்ணி, பேன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவும் இவை ஆடுகளுக்கு வராமல் இருப்பதற்கு கடைகளில் விற்கும் மருந்தினை வாங்கி பயன்படுத்தி வருவதாகவும் இந்த மருந்தினை பயன்படுத்துவதால் ஆடுகளுக்கு அந்த வித பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவதில்லை என கூறுகிறார்.
மேலும் ஆடுகளை வெயில் காலங்களில் தரையில் வளர்ப்பதினால் எந்தவித பிரச்சனைகளும் ஆடுகளுக்கு ஏற்படாது எனவும் இதுவே மழைக்காலங்களில் ஆடுகளை வளர்ப்பதால் ஆடுகளுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
எனவே ஆடுகளை மழைக்காலங்களில் பரண் மீது வளர்க்க வேண்டும் எனவும், பரண் மீது வளர்த்தால் ஆடுகளுக்கு நோய்கள் அதிக அளவில் எதுவும் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மேலும் அனைத்து வகை ஆடுகளும் நமது தமிழ்நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு மிக சிறப்பான முறையில் வளரும் எனவும் எந்த ஆடுகளும் வளர்வதில் பிரச்சனையை ஏற்படுத்தாது எனவும் கூறுகிறார்.
மேலும் ஆடுகளுக்கு தீவனத்தையும் நீரினையும் சரியான முறையில் அளித்து பராமரித்து வந்தால் ஆடுகள் விரைவில் வளர்ந்து நல்ல வளர்ச்சியை பெற்று அதிகளவு லாபம் அளிக்கும் எனவும் கூறுகிறார்.
ஆடுகளுக்கு தேவைப்படும் தீவனங்களை இவர் சரியான முறையில் அளித்து வருவதாகவும் மற்றும் நீரினையும் ஆடுகளுக்கு தேவைப்படும் சமயங்களில் இவர் அளித்து வருவதாக கூறுகிறார்.
ஆடுகளுக்கு இவர் பசுந்தீவனங்களை அதிக அளவில் அளித்து வருவதாகவும் பசுந்தீவனங்களை இவருடைய ஆடுகள் அதிக அளவில் விரும்பி உண்ணும் எனவும், இவருடைய தோட்டத்தில் ஆடுகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை இவர் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு வளர்ந்து வரும் தீவனங்களை இவர் அறுவடை செய்து ஆடுகளுக்கு அளித்து வருவதாகவும், மற்றும் இவர் கடலை கொடிகளையும், புண்ணாக்கு போன்ற தீவனங்களை ஆடுகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் ஆடுகளை வளர்க்கும் பண்ணையாளர்கள் அவர்களிடம் உள்ள பணத்தின் அளவை வைத்து கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்க்கலாம் எனவும் பெரிய அளவில் கொட்டகை அமைத்து விட்டு அதன் மூலம் நஷ்டத்தை அடையாமல் அவரிடம் உள்ள பணத்திற்கு ஏற்ப கொட்டகை அமைத்து பண்ணையை சிறப்பாக நடத்தலாம் என கூறுகிறார்.
Sales method and profit
வெள்ளாடுகளை இவர் மிக சிறப்பான முறையில் வளர்த்து அதனை சந்தைகளில் இவர் விற்பனை செய்து வருவதாகவும், மற்றும் ஆடுகளை கேட்டு வரும் வியாபாரிகளுக்கு இவர் ஆடுகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் இவர் ஆடுகளை சிறந்த பராமரிப்பு முறையில் பராமரித்து வருவதாலும், வெள்ளாடுகளின் இறைச்சி சுவையாக இருப்பதினாலும் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் ஆடுகளை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
இவ்வாறு அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் ஆடுகளை வளர்ப்பதற்கும் மற்றும் இறைச்சிக்கும் வாங்கி செல்வதினால் இதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய குடும்பம் இவருடைய பண்ணைக்கு அதிகளவில் உதவி செய்து வருவதாகவும், இவர் இந்த வெள்ளாடு வளர்ப்பினை மிகச் சிறப்பான முறையில் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான வடமாநில நாட்டு மாடுகள்.