சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி சிறப்பான முறையில் காங்கேயம் நாட்டு மாடுகளை வளர்த்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும், இவருடைய காங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
காங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பின் தொடக்கம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி மிகவும் சிறப்பான முறையில் காங்கேயம் நாட்டு மாடு வளர்ப்பினை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய தாத்தா காலத்தில் இருந்து இவரது குடும்பம் காங்கேயம் நாட்டு மாடுகளை வளர்த்து வந்ததாகவும் இதன் காரணமாக இவருக்கும் காங்கேயம் நாட்டு மாடுகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் இவரும் காங்கேயம் நாட்டு மாடுகளை வளர்க்க தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் அந்த காலத்தில் இவருடைய தாத்தா காங்கேயம் நாட்டு மாடுகளை வளர்த்தும் போது குறைந்த அளவில் மாடுகளை வைத்து வளர்த்து வந்ததாகவும் இப்பொழுது இவர் வளர்க்கும் போது அதிக அளவு காங்கேயம் நாட்டு மாடுகளை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஆரம்பத்தில் இவர் 10 மாடுகள் வைத்து பண்ணையை தொடங்கியதாகவும் இப்பொழுது இவருடைய பண்ணையில் 90 காங்கேயம் மாடுகள் வரை இருப்பதாக கூறுகிறார்.
Benefits of kangeyam country cows
காங்கேயம் நாட்டு மாடுகள் மொத்தம் 90 மாடுகள் இவருடைய பண்ணையில் இருப்பதாகவும், அதில் காங்கேயம் காளைகள் 4 இருப்பதாகவும் இந்த நான்கையும் இனப்பெருக்கத்திற்கு வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.
மேலும் கன்று போடும் மாடுகள் மொத்தம் 40 இருப்பதாகவும், கிடாரி கன்று குட்டிகள் 30 இருப்பதாகவும் மொத்தமாக இதனை சேர்த்து 90 காங்கேயம் நாட்டு மாடுகளை வைத்து இவர் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
காங்கேயம் நாட்டு மாடுகள் சிறப்பாக பாலினை அளிக்கும் எனவும் இது இந்த மாட்டில் உள்ள ஒரு சிறப்பு எனவும் அதிகளவு பாலினை இது அளிப்பதால் அதன் மூலம் நமக்கு சிறந்த வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் மாட்டின் சாணம் உரமாக பயன்பட்டு வருவதாகவும், மாட்டின் சாணத்தை வைத்து திருநீர் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியும் எனவும் கூறுகிறார்.
மாடுகளின் வளர்ப்பு முறை மற்றும் தீவனங்கள்
காங்கேயம் நாட்டு மாடுகளை இவர் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், மாடுகளுக்கு கொட்டகை அமைத்து அந்தக் கொட்டகையில் மாடுகளை வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் பகல் நேரங்களில் மாடுகளை கொட்டகையின் வெளியில் உள்ள மரங்களின் நிழலில் வைத்து கட்டி வைத்து வளர்ப்பதாகவும், மேலும் பகல் நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
மேய்ச்சலுக்கு மாடுகள் செல்லும்போது அங்கே இருக்கும் பச்சை புல்களை உணவாக எடுத்துக் கொள்ளும் எனவும், மாடுகள் கட்டியிருக்கும் போது அவற்றிற்கு இவர் தீவனங்களை அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
சீமை புல், சோளத்தட்டு மற்றும் வைக்கோல் ஆகிய தீவன வகைகளை இவர் மாடுகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகவும், மேலும் மாடுகளுக்கு தீவனத்தை அளிக்கும் போது அதிக அளவில் தீவனத்தை மாடுகளுக்கு அளிப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் மாடுகளுக்கு பருத்தி மற்றும் புண்ணாக்கு வகைகளை தீவனமாக அளித்து வருவதாகவும் இதனை அளித்து முடித்தபிறகு மாடுகளுக்கு நீரினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
Reproductive system and immunization system
மாடுகளை இவரே இனப்பெருக்கம் செய்து அதனை வளர்த்து வருவதாகவும் மற்றும் வெளியிலிருந்து சில சமயம் மாடுகளை வாங்குவதாகவும் இவ்வாறு வெளியில் இருந்து வாங்கும் மாடுகளை விரைவில் விற்பனை செய்து விடுவதாக கூறுகிறார்.
இனப்பெருக்கத்திற்கு என்று இவர் நான்கு காங்கேயம் காளைகளை வைத்திருப்பதாகவும் இந்த நான்கு காங்கேயம் காளைகளை வைத்து சிறப்பான முறையில் இனப்பெருக்கம் செய்து மாடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் மாடுகளுக்கு ஒருமுறை அம்மை நோய் ஏற்பட்டதாகவும் இரண்டு மாடுகள் வரை இறந்து விட்டதாக கூறுகிறார்.
அம்மை நோய் வராமல் தடுப்பதற்கும் மாடுகளின் கொட்டகையை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாடுகளுக்கு சரியான முறையில் தீவனத்தை அளிக்க வேண்டும் எனவும், நோய் வருவதற்கு முன்பே அதற்கு தடுப்பூசிகளை போட வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் வைத்துள்ள காங்கேயம் மாடுகளில் சில மாடுகள் உழவு ஓட்டும் பழக்கம் உடைய மாடுகள் எனவும் இந்த மாடுகளை வைத்து இவருடைய தோட்டத்தை இவர் உழுது வருவதாகவும் கூறுகிறார்.
மாடுகளுக்கு அளிக்கும் தீவனத்தை சரியான முறையில் அளித்து சரியான பராமரிப்பில் வளர்த்து வந்தால் மாடுகள் நல்ல முறையில் வளர்ந்து நமக்கு அதிக வருமானத்தை அளிக்கும் எனக் கூறுகிறார்.
காங்கேயம் நாட்டு மாடுகளின் ஆயுட்காலம்
காங்கேயம் நாட்டு மாடுகள் பிறந்து 22 வருடம் வரை வாழும் எனவும் இந்த இருபத்தி இரண்டு வருடத்திலும் காங்கேயம் நாட்டு மாடுகளை வைத்து சிறப்பான முறையில் நாம் வளர்த்து லாபத்தை பெற முடியும் என கூறுகிறார்.
மேலும் காங்கேயம் மாடுகள் அதன் வாழ்நாளில் பத்தில் இருந்து பதினைந்து கன்றுகள் வரை போடும் எனவும் கூறுகிறார்.
மேலும் மாடுகளை வாங்கும் போது மாடுகளில் சுழி சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் எனவும் மற்றும் மாடுகளின் திமில் மற்றும் வால் ஆகிய அனைத்தும் நல்ல முறையில் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
மற்றும் மாடுகளின் கொம்பு மற்றும் உடம்பு ஆகிய அனைத்தும் நல்ல முறையில் எந்த நோய்களும் இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்த்து அறிந்த பிறகு மாடுகளை வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் மாடுகள் நல்ல முறையில் பால் கரைக்கும் திறன் உடையதா என்பதையும் மற்றும் கன்று போடும் திறன் நல்ல முறையில் இருக்கிறதா என்பதையும் பார்த்து அறிந்த பிறகு மாடுகளை வாங்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
காங்கேயம் நாட்டு மாடுகளை இவர் சிறப்பாக விற்பனை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், காங்கேயம் நாட்டு மாடுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இவர் மாடுகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
திண்டுக்கல், மதுரை, உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இருந்து இவருடைய பண்ணைக்கு வந்து மாடுகளை வாங்கி செல்வதாகவும்,மாடுகளை வளர்ப்பதற்கும் மற்றும் ஜல்லிக்கட்டுக்கும், பாலுக்கும் அதிக அளவில் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
மேலும் இவர் காங்கேயம் நாட்டு மாடுகளின் பால் களை ஈரோட்டில் விற்பனை செய்து வருவதாகவும் ஒரு லிட்டர் பால் 80 ரூபாய் என்ற விலைக்கு இவர் விற்பனை செய்து வருவதாகவும் இதன் மூலம் இவருக்கு சிறந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
ஒரு மாட்டில் இருந்து இரண்டரை லிட்டர் அளவு பாலானது ஒரு நாளைக்கு கிடைக்கும் எனவும் மொத்தமாக ஒரு நாளில் 20 லிட்டர் காலையிலும்,20 லிட்டர் மாலையிலும் பாலினை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
காங்கேயம் நாட்டு மாடுகளை இவர் 40 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும்,இவர் இந்த காங்கேயம் நாட்டு மாடுகளை சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சுத்தமான நாட்டு சர்க்கரை தயாரிப்பு.