பெருவிடை கோழி வளர்ப்பில் சிறந்த வருமானம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் என்னும் ஊரில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் பெருவிடைக்கோழி வளர்ப்பினை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும், இவருடைய பெருவிடைக்கோழி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.




The beginning of the poultry farm

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் என்னும் ஊரில் வசித்து வரும் ஒரு பண்ணையாளர் மிகவும் சிறப்பான முறையில் பெருவிடைக்கோழி பண்ணையை வைத்து நடத்தி வருவதாகவும், அதன் மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

இவர் கோழிப்பண்ணையை தொடங்குவதற்கு முன்பு வேறு ஒரு வேலை செய்து வந்து கொண்டிருந்ததாகவும், இவருடைய தம்பி இறைச்சிக் கடை வைத்து நடத்தி வந்த கொண்டிருந்ததாகவும் அவருக்கு உதவியாக இருக்கும் வகையில் இவர் கோழிப்பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.

இவர் இந்த கோழிப்பண்ணையை கடந்த ஐந்து வருடங்களாக நடத்தி வருவதாகவும், முதல் ஒரு வருடத்திலேயே கோழிகளின் வளர்ச்சி நல்ல முறையில் இருந்ததாகவும், இவருடைய பண்ணையில் சிறுவிடை மற்றும் பெருவிடை கோழிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய பண்ணையின் அருகிலுள்ள மக்களும் அதிக அளவில் இந்த கோழிகளை வந்து வாங்குவதால் இவர் இந்த பண்ணையை தொடர்ச்சியாக செய்யலாம் என்ற எண்ணத்துடன் நடத்தி வருவதாகக் கூறுகிறார்.




பண்ணையின் அமைப்பு மற்றும் கோழிகளின் வகைகள்

கோழிகளை வளர்ப்பதற்கு மிக சிறப்பான வகையில் கொட்டகை அமைத்து கொட்டகையில் கோழிகளை வைத்து வளர்த்து வருவதாகவும், இந்த முறையில் இவர் வளர்ப்பது இவருடைய தம்பிக்கு மிகவும் நன்மையாக இருப்பதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய தம்பியும் ஆடுகளை வைத்து வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து வருவதாகவும், இப்பொழுது இவர் இவருடைய பண்ணையில் 300 கோழிகளுக்கு மேல் வளர்க்கும் அளவிற்கு கொட்டகையை அமைத்து உள்ளதாக கூறுகிறார்.

இப்பொழுது இவருடைய பண்ணையில் 300 கோழிகள் இருப்பதாகவும், சிறிய கோழி குஞ்சுகள் குறைந்த அளவில் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் பெருவிடைக் கோழிகளை அதிக அளவில் வளர்த்து வருவதாகவும், இந்த பெருவிடைக்கோழி களை இவர் அதிக அளவில் வளர்ப்பதற்கு காரணம் இந்த கோழிகள் அதிகமாக இறைச்சிக்கு விற்பனையாகும் என கூறுகிறார்.

மேலும் இவருடைய பண்ணை 8 சென்ட் பரப்பளவில் அமைந்த இருப்பதாகவும் அதில் இவர் 3 சென்ட் பரப்பளவில் கொட்டகை அமைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

அனைத்துக் கோழிகளும் ஒன்றாக இருப்பதற்கு ஒரு கொட்டகையை இவர் அமைத்து இருப்பதாகவும், கோழி மற்றும் கோழி குஞ்சுகள் ஒன்றாக இருப்பதற்கு ஒரு கொட்டகையை அமைத்து இருப்பதாகவும் மற்றும் கோழி குஞ்சுகள் மட்டும் தனியாக இருப்பதற்கு ஒரு கொட்டகையை இவர் அமைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.




Poultry rearing system and care system

கோழிகளை இவர் முழுவதுமே மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும் மேய்ச்சல் முறையில் இவர் கோழிகளை வளர்ப்பதால் கோழிகள் நல்லமுறையில் வளர்வதாக கூறுகிறார்.

மேலும் கோழிகள் மேய்ச்சல் முறையில் வளர்வதால் அவற்றை நாய்கள் மற்றும் பிற விலங்குகளிடம் சிக்காமல் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் கோழிகள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.

இவரது கோழிப்பண்ணையில் உள்ள கோழிகள் காலையில் மேய்ச்சலுக்குச் சென்று மாலையில் கொட்டகையில் வந்து அடையும் வரை ஒருவர் கோழிகளை கண்காணித்துக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு காலையிலிருந்து மாலைவரை கண்காணித்துக் கொண்டே இருப்பதால் கோழிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதாகவும், இதனால் கோழிகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார்.

நோய் தடுப்பு முறை

கோழிகளுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு சீரகம், மிளகு, கீழாநெல்லி மற்றும் குப்பைமேனி ஆகியவற்றை ஒன்றாக கலந்து அரைத்து வைத்துக் கொண்டு, நோய்கள் தாக்கி இருக்கும் கோழிகளுக்கு இதனை அளிப்பதாக கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு நோய்கள் தாக்காமல் இருப்பதற்கு இவர் முன்பே தடுப்பூசிகளை போடுவதாகவும், இதனால் கோழிகளுக்கு அதிகமாக நோய்கள் தாக்குவதில்லை எனவும் அவ்வாறு நோய்கள் தாக்கினாலும் இவர் இயற்கை மருந்தை அளித்து குணப்படுத்துவதாக கூறுகிறார்.

மேலும் கோழிகள் அருந்தும் நீரில் இயற்கை மருந்தை கலந்து அளித்து வருவதாகவும், இந்த முறையில் இவர் நோய் வருவதற்கு முன்பே அதனை குணப்படுத்தும் மருந்துகளை அளிப்பதால் கோழிகளுக்கு அதிகளவில் நோய்கள் ஏற்படுவதில்லை என கூறுகிறார்.

எனவே இவ்வாறு கோழிகளுக்கு நோய் வருவதற்கு முன்பே மருந்தினை அளித்து நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.

மேலும் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் மற்றும் சளி ஆகிய நோய்கள் மட்டுமே அதிகளவில் ஏற்படும் எனவும், இதற்கு சீரகம், மிளகு, கீழாநெல்லி மற்றும் குப்பைமேனி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கோழிகளுக்கு அளித்தால் குணமாகி விடும் எனவும் கூறுகிறார்.




Feeding method for chickens

கோழிகள் முட்டையிட்ட பிறகு அந்த முட்டைகளை சிறிது நாட்கள் தாய்க்கோழி இடம் அடைகாக்க வைத்து அதன் பிறகு முட்டையை எடுத்து சென்று இன்குபேட்டரில் வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

சிறிய கோழி குஞ்சுகளுக்கு இவர் வெளியில் இருந்து தீவனத்தை வாங்கி அளித்து வருவதாகவும், இவ்வாறு சிறிய கோழி குஞ்சுகளுக்கு என்று வெளியே விற்பனையாகும் தீவனத்தை வாங்கி அளிப்பதால் இந்த கோழி குஞ்சுகள் 2 மாதத்தில் நல்ல வளர்ச்சியை பெற்று விடுவதாக கூறுகிறார்.

மேலும் இரண்டு மாதம் ஆன கோழிகளுக்கும் மற்றும் பெரிய கோழிகளுக்கும் கம்பு மற்றும் அரிசி வகைகளை தீவனமாக அளித்து வருவதாகவும், மற்றும் இவற்றுடன் மக்காச்சோளத்தை அளித்து வருவதாகவும், அரிசி வகைகளை குறைந்த அளவே கோழிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இந்த தீவனங்களை எல்லாம் கோழிகளுக்கு அளித்த பிறகு அவற்றை மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

பெருவிடை கோழிகளை அதிக அளவில் இவர் இறைச்சிக்காக மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும், இவருடைய பகுதியில் அதிக அளவில் இந்த பெருவிடைக்கோழிகள் விற்பனையாகி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த பெருவிடை கோழிகளின் முட்டைகளை இவர் விற்பனை செய்வதில்லை எனவும், இதற்கு பதிலாக முட்டைகளை இவர் கோழிக்குஞ்சுகள் ஆக மாற்றி அந்த சிறிய கோழி குஞ்சுகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த கோழிகளை வளர்ப்பதற்கும் மற்றும் இறைச்சிக்காகவும் விற்பனை செய்து வருவதால் அதிக அளவில் இவருடைய பகுதியில் பெருவிடைக் கோழிகளுக்கு வரவேற்பு உள்ளதாகவும், இதனால் இவர் அதிகளவில் லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவரிடம் அதிக அளவு வாடிக்கையாளர்கள் வந்து கோழிகளை வாங்கி செல்வதாகவும், மற்றும் இவருடைய பகுதிகளில் உள்ள அனைவருமே இவருடைய இறைச்சி கடைக்கு வந்து இறைச்சியை பெற்று செல்வதாகவும் கூறுகிறார்.

மேலும் கோழிகளை இறைச்சிக்காக வாங்க வரும் வாடிக்கவேண்டும் என்று கேட்டால் அந்த முறையிலும் கோழிகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதாகவும் கூறுகிறார்.

மற்றும் கோழி வளர்ப்பினை குறைந்த இடத்தில் செய்வது என்பது முடியாத ஒரு காரியம் எனவும், மேலும் இவர் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய பெருவிடைக்கோழி வளர்க்கிறார்.

மேலும் படிக்க:முயல் வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.




(B)

Leave a Reply