தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நாய்க்குட்டிகள் வளர்ப்பினை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நாய்க்குட்டிகள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Beginning of puppy breeding
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நாய்க்குட்டிகள் பண்ணையை வைத்து நடத்தி வருவதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
இவர் இவருடைய கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும் அந்த வேலையில் அதிக ஆர்வம் இல்லாத காரணத்தால் இவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டதாக கூறுகிறார்.
இவர் சொந்த ஊருக்கு வந்த பிறகு ஏதாவது தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்துடன் பண்ணையை தொடங்கியதாகவும் அந்த பண்ணையில் கோழிகளை முதலில் வளர்க்க தொடங்கியதாக கூறுகிறார்.
அதன் பிறகு இவருக்கு நாய்க்குட்டிகள் வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு நாய் பண்ணையை தொடங்கியதாகவும், மேலும் இவருக்கு சிறு வயதிலிருந்தே நாய்க்குட்டிகள் மீது அதிக அளவு விருப்பம் இருந்ததாகவும் கூறுகிறார்.
இதன் காரணமாக இவர் நாய்க்குட்டிகள் பண்ணையை தொடங்கி இப்பொழுது அதனை சிறப்பான முறையில் வளர்த்து சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
பண்ணையின் அமைப்பு மற்றும் வளர்ப்பு முறை
நாய் குட்டிகள் நல்ல முறையில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வளர்வதற்கு காற்றோட்டமான இடத்தில் நாய்களை விட்டு வளர்த்து வருவதாகவும், நாய்கள் இருப்பதற்கு பெரிய அளவிலான ஒரு கொட்டகையை இவர் அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார்.
இவர் வளர்க்கும் நாய் குட்டிகள் சிப்பிப்பாறை என்ற நாய்க்குட்டி ரகம் எனவும் இந்த வகை நாய்கள் உயரமாகவும் நல்ல சுறுசுறுப்புடனும் இருக்கும் எனவும் கூறுகிறார்.
நாய்க்குட்டிகள் பகல் நேரங்களில் வெளியில் சுதந்திரமாக சுற்றி விளையாடும் எனவும் இரவு நேரங்களில் கொட்டகையின் உள்ளே சென்று உறங்கிக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
இப்பொழுது இவரிடம் ஐந்து பெண் நாய்களும் ஒரு ஆண் நாயும் இருப்பதாகவும், இதனுடன் குட்டிகள் இருபதுக்கும் மேல் வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த நாய்கள் வருடத்திற்கு இரண்டு முறை குட்டி போடும் எனவும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அளவுகளில் குட்டி போடும் எனவும் ஒரு முறை 10 குட்டிகளும் மற்றொரு முறை 8 குட்டிகளும் என்ற முறையில் குட்டி போடும் எனக் கூறுகிறார்.
இவரிடம் உள்ள அனைத்து நாய்களையும் மற்றும் நாய் குட்டிகளையும் இவர் மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
Puppy care system
நாய் குட்டி வளர்ப்பில் மிகவும் முக்கியமானது குட்டிகளுக்கு நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டும் எனவும், எனவே நாய் குட்டிகளுக்கு நோய் வருவதற்கு முன்பே அவற்றிற்கு தடுப்பூசி அளிக்க வேண்டும் என கூறுகிறார்.
நாய் குட்டிகள் பிறந்ததிலிருந்து 30வது நாளில் ஒரு தடுப்பூசியை குட்டிக்கு அளிக்க வேண்டும் எனவும் அதன் பிறகு 45வது நாளில் ஒரு தடுப்பூசி அளிக்க வேண்டும் எனவும் மற்றும் 45வது நாளில் இருந்து 20 நாளுக்கு பிறகு ஒரு தடுப்பூசி குட்டிக்கு அளிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.
இந்த மூன்று தடுப்பூசிகளை குட்டிகளுக்கு அளித்தால் மட்டுமே நோய்கள் அதிக அளவில் நாய்க் குட்டிகளைச் தாக்காது எனவும் இல்லையெனில் குட்டிகளுக்கு நோய் தாக்குதல் அதிக அளவில் இருக்கும் என கூறுகிறார்.
மேலும் நாய்க்குட்டிகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடிய தடுப்பூசியை அளித்துக் கொண்டு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
நாய்க்குட்டிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் குட்டிகள் தூய்மையாக இல்லை என்றால் அதன் மூலமும் பலவித தொற்றுகள் ஏற்படும் என கூறுகிறார்.
மற்றும் நாய் குட்டிகளை வெளியில் அழுக்காக இருக்கும் களிமண் போன்ற இடங்களில் விடக்கூடாது எனவும், ஏனெனில் மண்ணில் அதிகளவு கிருமிகள் இருக்கும் எனவும் அந்த மண்ணிலிருந்து நாய் குட்டிகளுக்கு பலவித நோய் தொற்று ஏற்பட்டு விடும் என கூறுகிறார்.
மேலும் நாய் குட்டிகள் இருக்கும் இடத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் நாய்கள் இருக்கும் இடத்தில் நாய்கள் சிறுநீர் கழித்தால் அதன் மூலம் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார்.
எனவே நாய் குட்டிகளை தூய்மையாக எந்த அளவிற்கு வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு நோய்கள் குட்டிகளைத் தாக்காது எனவும் இந்த முறையிலேயே இவர் குட்டிகளை பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
நாய்க்குட்டிகளின் குணம் மற்றும் உணவுகள்
இவரிடம் உள்ள இந்த சிப்பிபாறை என்ற நாய்க்குட்டி வகைகள் அதிகளவில் கோபமாக இருக்கும் எனவும் அதே சமயம் நன்கு பழகினால் அதிக அளவு பாசத்துடன் நடந்து கொள்ளும் எனவும் கூறுகிறார்.
மற்றும் இந்த நாய்க்குட்டிகள் வீட்டை மிகுந்த பாதுகாப்புடன் பாதுகாக்கும் எனவும் வெளியாட்கள் யாரையும் விரைவில் வீட்டிற்கு உள்ளே அனுமதிக்காது எனவும் கூறுகிறார்.
எனவே இந்த இன நாய் குட்டிகளை நமது வீட்டில் வைத்து வளர்த்தால் வீடு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் எனவும், திருடர்களிடம் இருந்து நமது வீட்டை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.
இந்த நாய்களுக்கு இவர் உணவு அளிப்பதற்கு என்று அதிகளவில் எந்த செலவுகளும் செய்வது இல்லை எனவும், சாதாரணமாக இவர் நாம் உண்ணும் உணவு வகைகளை உணவாக நாய்களுக்கு அளித்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இவர் நாட்டுக்கோழி பண்ணை வைத்து உள்ளதால் பண்ணையிலுள்ள முட்டைகளை எடுத்து இவர் நாய்களுக்கு உணவாக அளித்து வருவதாகவும், இதன் மூலம் இவர் நாய்களுக்கு வெளியில் முட்டை வாங்கும் செலவு குறையும் எனவும் கூறுகிறார்.
நாய் வளர்க்கும் போது அதற்கு முக்கியமாக இறைச்சி அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் நாய்கள் நன்றாக வளராது எனவும் கூறுகிறார்.
இவர் நாய்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை இறைச்சியை உணவாக அளித்து வருவதாகவும் இறைச்சியை நாய்கள் அதிகளவில் விரும்பி உண்பதாகவும் கூறுகிறார்.
Sales method and profit
நாய்க்குட்டிகளை இவர் பண்ணைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அதிகமாக இந்த நாய் குட்டிகளை தோட்டத்திற்கு காவல் காக்கவும் மற்றும் வீட்டிற்கு காவல் காக்கவும் வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதாக கூறுகிறார்.
பெரிய நாய்களை இவர் விற்பனை செய்வதில்லை எனும் சிறிய குட்டிகளை மட்டுமே இவர் விற்பனை செய்து வருவதாகவும், 60 நாட்கள் ஆன குட்டிகளைையே இவர் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
60 நாட்கள் ஆன குட்டியினை இவர் எட்டாயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் வளர்க்கும் நாய் குட்டிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நல்ல முறையில் நோய்கள் எதுவும் அதிக அளவில் தாக்காமல் சிறப்பாக வளர்வதாலும் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து நாய் குட்டிகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய நாய் குட்டிகள் வளர்ப்பினை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:செம்மறி ஆடுகள் வளர்ப்பில் சிறந்த வருமானம்.