நாமக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்மணி மிகச் சிறப்பான முறையில் வான்கோழிப் பண்ணை வைத்து நடத்தி அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார். இவரையும் இவருடைய வான்கோழி வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
வான்கோழி பண்ணையின் தொடக்கம்
நாமக்கல் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெண்மணி வசித்து வருவதாகவும், இவர் இங்கு ஒரு வான்கோழி பண்ணை வைத்து மிகச் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இந்த வான்கோழி பண்ணையை கடந்த பத்து வருடங்களாக நடத்தி வருவதாகவும் மேலும் இவருக்கு பண்ணைகள் வைத்து நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.
இப்பொழுது இவருடைய பண்ணையில் மொத்தமாக 70 வான்கோழிகள் இருப்பதாகவும் இதனை இவர் சிறப்பான முறையில் வளர்த்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.
மேலும் இவரும் இவருடைய கணவரும் இந்த வான் கோழி பண்ணையை அதிக அளவில் பராமரித்து கொள்வார்கள் எனவும் இவர்கள் இல்லாத சமயத்தில் இவருடைய மகன் இந்த வான் கோழி பண்ணையை பராமரித்து கொள்வார் எனவும் கூறுகிறார்.
Organization Of the farm
வான்கோழி வளர்ப்பை இவர்கள் குறைந்த அளவே வாங்கி வாங்கி வளர்த்து இப்பொழுது பெரிய அளவில் வளர்த்து வருவதாகவும், இவருடைய வான்கோழிப் பண்ணையில் இப்பொழுது மொத்தமாக 70 வான்கோழிகள் இருப்பதாக கூறுகிறார்.
முதலில் 10 வான்கோழி பிறகு 20, 30 என்று வாங்கி வளர்த்ததாகவும், ஒரே முறையில் அதிக அளவு வான்கோழிகளை வாங்கி வளர்ப்பது நமக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார்.
மேலும் இவர்கள் இவருடைய வீட்டின் பின்புறத்தில் வான்கோழி பண்ணை அமைத்து வளர்த்து வருவதாகவும், இந்த பண்ணையை இவர்கள் 5 சென்ட் பரப்பளவில் அமைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
வளர்ப்பு முறை
வான் கோழி பண்ணையை தொடங்கும்போது முதலில் அதிக அளவில் வான்கோழிகளை வாங்கி வளர்க்க கூடாது எனவும், ஒரு ஐந்து ஜோடி வான்கோழிகளை வாங்கி வளர்த்து பார்த்ததற்கு பிறகு அதிகளவில் வான்கோழிகளை வாங்கி வளர்க்கலாம் என கூறுகிறார்.
மேலும் இவ்வாறு 5 ஜோடி வான் கோழிகளை வளர்க்கும் போது அந்தக் கோழிகளுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்பைப் பற்றி அறிந்து அதனை சரி செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு அதிக அளவில் வான்கோழிகளை வாங்கி வளர்க்கலாம் என கூறுகிறார்.
மேலும் வான்கோழிகளுக்கு அம்மை மற்றும் சளி ஆகிய நோய்கள் ஏற்படும் எனவும் இந்த நோய்கள் ஏற்படாமல் பராமரித்து கொண்டாலே வான் கோழிகள் நல்லமுறையில் வளர்ந்து வருமானத்தை தரும் எனக் கூறுகிறார்.
மேலும் பண்ணையை தூய்மையாக வைத்துக் கொண்டு தூய்மையான முறையில் கோழிகளுக்கு உணவினை அளிக்கும் போது வெள்ளைக் கழிச்சல் எனும் நோய் ஏற்படாது எனவும் கூறுகிறார்.
மேலும் வான்கோழிகளை வாங்கி வளர்த்தால் மட்டும் போதாது எனவும் அதனுடன் நாமும் சேர்ந்து பழகி அதற்கு ஏதாவது நோய்கள் ஏற்படுகிறதா என்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என கூறுகிறார்.
அவ்வாறு ஏதாவது நோய்கள் கோழிகளுக்கு ஏற்பட்டால் அதனை தனியாக எடுத்துச் சென்று அதற்கு மருந்தினை அளிக்க வேண்டுமென கூறுகிறார்.
Method of medicine and feeding
வான்கோழிகளுக்கு நோய் குறைந்த அளவில் இருந்தால் இயற்கை மருந்தினைப் பயன்படுத்தி குணப்படுத்த முடியும் எனவும், இதுவே நோய் அதிகளவில் ஏற்பட்டு விட்டால் கண்டிப்பாக ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும் எனவும்.
வான் கோழிகளுக்கு ஏற்படும் அம்மை நோயை குணப்படுத்துவதற்கு வேப்பம் தலையை அரைத்து அதனை விளக்கெண்ணெயில் கலந்து வான்கோழிகளின் மீது தடவ வேண்டும் எனவும், நோய்கள் ஏற்பட்ட கோழிகளை தனியாக வைத்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் கோழிகளுக்கு சளி அதிக அளவில் பிடித்து விட்டால் கண்களில் கண்ணின் மருந்தை ஊற்ற வேண்டும் எனவும், மேலும் சளி குறைவாக இருக்கும் போது இயற்கை மருந்தினை கொடுத்து சரி செய்து கொள்ளலாம் என கூறுகிறார்.
மேலும் வான்கோழிகளுக்கு தீவனம் அளிக்கும் செலவு அதிகமாக இருக்கும் எனவும் செலவினை குறைப்பதற்கு கீரை வகைகள் மற்றும் அசோலா ஆகியவற்றை உற்பத்தி செய்து அளித்தால் தீவன செலவு குறையும் எனவும் கூறுகிறார்.
இப்பொழுது இவர் வான்கோழிகளுக்கு கீரை வகைகள் மற்றும் கம்பு, அரிசி மற்றும் எஸ்கேஎம் தீவனம் ஆகியவற்றை அளித்து வருவதாகவும், ஏனெனில் வான்கோழிகளுக்கு நல்ல முறையில் தீவனம் அளித்தால் மட்டுமே அது நன்றாக வளரும் என கூறுகிறார்.
மேலும் இவர் தீவன செலவைக் குறைப்பதற்கு இப்பொழுது அசோலா மற்றும் வேலி மசாலா ஆகிய தீவன வகைகளை உற்பத்தி செய்ய உள்ளதாகவும், இதனை கோழிகளுக்கு தீவனமாக அளிக்கும் போது தீவனத்தின் செலவு குறையும் என கூறுகிறார்.
எப்பொழுதும் வான்கோழிகளுக்கு காலை நேரங்களில் நீரினை அளிக்கும் போது அந்த நீரில் ஏதாவது மருந்தினை கலந்து வைக்க வேண்டும் எனவும் இவ்வாறு வைக்கும்போது கோழிகள் நன்மையுடன் இருக்கும் எனக் கூறுகிறார்.
வான் கோழி இறைச்சியின் மருத்துவ குணம்
வான்கோழி இறைச்சியில் அதிக அளவு மருத்துவ குணம் இருப்பதாகவும் இந்த வான் கோழி இறைச்சியில் அதிக புரதச்சத்து இருப்பதனால் இதன் இறைச்சியை உண்ணும் போது மன அழுத்தம் குறையும் என கூறுகிறார்.
மேலும் இதில் கலோரி அதிகமாக இருப்பதாகவும் கொழுப்பு சத்து குறைந்த அளவே இருப்பதாகவும், இதனால் அனைவரும் இந்த வான் கோழி இறைச்சியை உண்ணலாம் எனக் கூறுகிறார்.
மேலும் இந்த வான்கோழிகள் இயற்கையான முறையில் வளர்வதால் இதனுடைய இறைச்சியில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் வான்கோழிகளின் குணம் நம் வீட்டினை பாதுகாக்கும் குணமாக இருக்கும் எனவும், இதனை வளர்ப்பது மிகவும் பாதுகாப்பானது எனவும் கூறுகிறார்.
Sales method and profit
வான்கோழிகளை இவர் அதிகமாக இறைச்சிக்காக மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும், வளர்ப்பதற்கு அதிக அளவில் யாருக்கும் இவர் விற்பனை செய்வது இல்லை எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் சிறு வான்கோழி குஞ்சுகளை வாங்கி பெரியதாக வளர்த்து அதன் பிறகு இறைச்சிக்காக விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இவர் வான்கோழி முட்டைகளையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
வான்கோழிகளுக்கு அடைகாக்கும் தன்மை குறைவாக இருப்பதன் காரணமாகவே இவர் வான்கோழிக் குஞ்சுகளை வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் வான்கோழி வளர்ப்பில் வான்கோழி குஞ்சுகளை விற்பனை செய்யும் போதும் அதில் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் மற்றும் வான் கோழி இறைச்சியை விற்பனை செய்யும் போதும் அதிலும் அதிக வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்.
மேலும் அனைத்து வகைகளிலும் வான்கோழி வளர்ப்பில் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும், ஆனால் அதனை பராமரித்து வளர்க்கும் முறை சரியானதாக இருக்க வேண்டும் என கூறுகிறார்.
நாமக்கல் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்தப் பெண்மணி மிகவும் சிறப்பான முறையில் வான்கோழி பண்ணை வைத்து நடத்தி அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான அத்திப்பழம் உற்பத்தி.