விருதுநகர் மாவட்டத்திலுள்ள விடத்தகுளம் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் கருணை கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தைப் பெற்று வருகிறார். இவரையும் இவருடைய கருணை கிழங்கு சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
கருணை கிழங்கு சாகுபடியின் தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விடத்தகுளம் என்னும் கிராமத்தில் வசித்து வரும் ஒரு விவசாயி மிகவும் சிறப்பான முறையில் கருணை கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய தந்தை ஒரு விவசாயி என்பதால் இவரும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் மூலம் இவர் விவசாயத்தை தொடங்கி விவசாயம் செய்து வந்ததாகவும், இவர் விவசாயத்தை கடந்த 15 வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் விவசாயம் செய்து வந்த நிலையில் இவருக்கு கருணைக்கிழங்கு சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆசை வந்து கருணைக் கிழங்கு சாகுபடி செய்து வந்ததாகவும், இந்த கருணை கிழங்கு சாகுபடியை இவர் கடந்த ஐந்து வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த முறையில் இவர் கருணைக்கிழங்கு சாகுபடியை சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.
Cultivation method
கருணைக்கிழங்கு சாகுபடியை அனைத்து மண்களிலும் மிகச் சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும், இதில் கரிசல் மண், செம்மண் மற்றும் கரம்பை மண் ஆகிய மண் வகைகளில் மிகச் சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் நம்முடைய நிலத்தில் எந்த மண் வகை இருக்கிறதோ அந்த மண் வகையைக் வைத்தே நாம் விவசாயம் செய்ய வேண்டும் எனவும், கருணைக்கிழங்கை சரியான முறையில் நம்முடைய மண்ணில் விவசாயம் செய்தால் அது சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் கருணை கிழங்கு சாகுபடியியை அதிகமாக கரிசல் மண் வகையில் செய்தால் அதிக அளவில் விளைச்சல் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
கருணை கிழங்கை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நான்கு முறை டிராக்டர் மூலம் நிலத்தினை உழுது அதன் பிறகு கடைசியாக மாட்டு ஏர் மூலம் நிலத்தினை உழுது கருணைக்கிழங்கை விதைக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு கருணைக்கிழங்கை நடும்போது ஒன்றரை அடி இடைவெளி விட்டு இவர் நடுவதாகவும் இந்த முறையில் கிழங்கை நட்டால் நல்ல முறையில் சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.
கருணைக்கிழங்கின் வகைகள் மற்றும் விதை கிழங்கு தேர்ந்தெடுக்கும் முறை
கருணை கிழங்குகளில் பலவகை கருணைக் கிழங்குகள் இருப்பதாகவும், அவை கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு மற்றும் சேமை கிழங்கு ஆகிய கிழங்கு வகைகள் இருப்பதாக கூறுகிறார்.
இதில் சேனைக்கிழங்கு பெரிய அளவில் பெரியதாக வளரும் எனவும், கருணைக் கிழங்கு பொடிப்பொடியாக வளரும் எனவும் மற்றும் சேமைக்கிழங்கு சிறியதாக மஞ்சள் கிழங்கு வகையில் வளரும் எனவும் கூறுகிறார்.
நிலத்தில் விதை கிழங்கினை விதைப்பதற்கு பத்து மாதம் ஆன விதைக்கிழங்கு மட்டுமே சரியாக இருக்கும் எனவும், பத்து மாதம் ஆன கிழங்கு வகையை நிலத்தில் விதைத்தால் அவை சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.
பத்து மாதம் ஆன விதை கிழங்கினை இவர் வாங்கி வந்து வெயில் படாமல் நிழலில் வைத்து விடுவதாகவும், இவ்வாறு நிழலில் இருக்கும் கிழங்கு சிறிது நாட்களில் முளைகட்ட ஆரம்பம் செய்து விடும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு முளை கட்டிய கருணைக்கிழங்கினை எடுத்து இவர் விதைத்து விவசாயம் செய்து வருவதாகவும், இந்த முறை விதைகளை விதைத்தால் செடியானது நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் கருணைக்கிழங்கை விதைப்பதற்கு 12 மூட்டை விதை கிழங்கு தேவைப்படும் எனவும், ஒரு மூட்டை சந்தையில் இரண்டாயிரத்தில் இருந்து மூன்றாயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக கூறுகிறார்.
Harvesting method and disease prevention method
கருணைக்கிழங்கை விதைத்த 10 மாதத்திற்குள் எந்த மாதத்திலும் அறுவடை செய்து கொள்ளலாம் எனவும், ஆனால் எட்டு மாதத்திற்கு பிறகு அறுவடை செய்வது மிக சிறப்பாக இருக்கும் எனவும், 10 மாதத்திற்கு மேல் அறுவடை செய்தால் கிழங்கு நல்ல விலைக்கு விற்பனை ஆகாது எனவும் கூறுகிறார்.
இந்த கருணைக்கிழங்கு செடியானது 3 அடியில் இருந்து நான்கு அடி உயரம் வரை வளரும் தன்மையுடையது எனவும் கூறுகிறார்.
மேலும் களைகள் முளைத்தால் அதனை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும் எனவும் இல்லையெனில் நோய் தாக்குதல் அதிகரித்து விடும் என கூறுகிறார்.
இந்த கருணைக்கிழங்கு செடிகளுக்கு அம்மை நோய் என அழைக்கப்படும் நோய் ஏற்படும் எனவும், இதனை தடுப்பதற்கு காட்டில் முளைக்கும் களைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தால் மட்டும் போதுமானது எனவும் கூறுகிறார்.
மேலும் விதை விதைக்கும் போது சரியான விதை கிழங்கினை வாங்கி விதைத்தால் செடிகளுக்கு எந்தவித பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை எனவும் கூறுகிறார்.
நீரினை அளிக்கும் முறை
கருணைக்கிழங்கு செடிகளுக்கு முதல் 6 மாதம் வரை வாரத்திற்கு இரண்டு முறை நீரினை அளிக்க வேண்டும் எனவும், ஆறு மாதத்திற்கு பிறகு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.
எனவே இந்த கருணைக்கிழங்கு செடிகளுக்கு நீரானது அதிக அளவில் தேவை இல்லை எனவும், குறைந்த அளவில் நீர் இருந்தால் மட்டும் போதுமானது எனவும் கூறுகிறார்.
கருணைக் கிழங்கை சாகுபடி செய்யும் போது மேலே உள்ள இலைகளை முதலில் வெட்டி எடுத்துக்கொண்டு அதன் பிறகு மண்ணில் உள்ள கிழங்கை தோண்டி எடுக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
இந்த கருணைக்கிழங்கு மூலம் நோயை குணப்படுத்துவதற்கு பயன்படுவதாகவும் மற்றும் இதனை உண்ணும் நபர்கள் அதிகமாக சுறுசுறுப்புடன் காணப்படுவார்கள் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
கருணைக்கிழங்கு விவசாயத்தில் இருந்து ஒரு ஏக்கருக்கு இவர் 100 ல் இருந்து 110 மூட்டை வரை விளைச்சலை எடுப்பதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த கருணைக்கிழங்கை மாட்டுத்தாவணி மற்றும் பறவி ஆகிய சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும், இந்த சந்தைகளிலேயே இவர் அதிகமாக இவருடைய நிலத்தில் விளைச்சல் ஆன காய்கறிகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருக்கு இந்த கருணை கிழங்கு சாகுபடியில் இருந்து மூன்று லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த கருணைக்கிழங்கை சந்தைகளில் விற்பனை செய்யும் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் இருக்கும் எனவும், ஆனால் இந்த கருணை கிழங்கு விவசாயத்தில் நிறைந்த லாபத்தை பெற முடியும் எனவும் கூறுகிறார்.
கருணைக் கிழங்கு சாகுபடி செய்வதற்கு விதை கிழங்கு வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும், மற்ற பராமரிப்பு செலவு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும், ஆனால் செலவு செய்வதை விட அதிக அளவு லாபம் இந்த கருணை கிழங்கு சாகுபடியில் கிடைக்கும் என கூறுகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விடத்தகுளம் என்னும் கிராமத்தில் வசித்து வரும் இவர் மிகவும் சிறப்பான முறையில் கருணைக்கிழங்கு சாகுபடியை செய்து அதன் மூலம் நிறைந்த வருமானத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான டிராகன் ப்ரூட் சாகுபடி.