தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் ஒரு இளைஞர் மிகவும் சிறப்பான முறையில் ஒருங்கிணைந்த பண்ணையை நடத்தி அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய ஒருங்கிணைந்த பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
பண்ணையின் தொடக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவர் இளங்கலை கணிதவியல் பட்டப் படிப்பினை படித்து இருப்பதாகவும், படித்து முடித்துவிட்டு கால்நடை பண்ணை நடத்தலாம் என்ற ஆர்வத்தில் இவர் ஒருங்கிணைந்த பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.
இவர் இவருடைய பண்ணையில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்கள் ஆகியவற்றை சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், இந்த அனைத்தையும் இவர் சிறந்த பராமரிப்புடன் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்ததால் விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்ததாகவும், சிறு வயதில் இருந்தே பண்ணை வைத்து நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறுகிறார்.
இதன் காரணமாகவே இவர் பண்ணையை தொடங்கி தற்போது மிக சிறப்பான முறையில் பண்ணையை நடத்தி வருவதாக கூறுகிறார்.
Excellent integrated farm
ஒருங்கிணைந்த பண்ணையை இவர் சிறப்பான முறையில் அமைத்து, ஒவ்வொரு கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை அளித்து சிறந்த பராமரிப்பு முறையில் பராமரித்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய பண்ணையில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன்கள் ஆகியவற்றை வளர்த்து வருவதாகவும் ஒவ்வொரு கால்நடையில் இருந்தும் பல பயன்களை இவர் பெற்று வருவதாக கூறுகிறார்.
மாடுகளின் சாணத்தில் இருந்து மீன் பண்ணையை இவர் நடத்தி வருவதாகவும் மற்றும் மீன் பண்ணையில் இருந்து கோழி பண்ணையை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் மாட்டு சாணத்தை வைத்து நெல் மற்றும் சூப்பர் நேப்பியர் விவசாயத்தை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
இதுபோன்று ஒருங்கிணைந்த பண்ணையை வைத்து சிறப்பான முறையில் நடத்தி, அதன்மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
சிறப்பான நெல் விவசாயம்
மாட்டு சாணத்தை வைத்து நெல் விவசாயத்தை மிகச்சிறப்பான முறையில் இவர் செய்து வருவதாகவும், இதில் இவர் அட்சயா, LLR மற்றும் உருட்டு ஆகிய அரிசி வகைகளை விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார்.
இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாகவும் அந்த ஆறு ஏக்கர் நிலத்திலும் உணவிற்கு பயன்படும் அட்சயா என்ற அரிசி வகையை விளைவித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இருபத்தி நான்கு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி அதில் LLR மற்றும் உருட்டு ஆகிய அரிசி வகைகளை விளைவித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த நெல் விவசாயத்தை இவருடைய தாத்தா காலத்திலிருந்து இவருடைய குடும்பம் செய்து வருவதாகவும் அதனை தொடர்ந்து இவரும் நெல் விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த நெல் விவசாயத்தை இயற்கை முறையிலேயே செய்து வருவதாகவும் செயற்கை உரங்கள் எதையும் இவர் பயன்படுத்துவதில்லை எனவும் கூறுகிறார்.
ஆறு மாதம் மக்கிய மாட்டு சாணத்தை இவர் வயலுக்கு உரமாக அளித்து வருவதாகவும் ஆறு மாதம் மக்கி போகாமல் இருக்கும் சாணத்தை உரமாக பயன்படுத்தக் கூடாது எனவும் கூறுகிறார்.
Method of raising cows
இவருடைய பண்ணையில் இரண்டு வகை மாடுகளை வைத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாகவும், அர்ஜப் மற்றும் ஜெர்சி வகை மாடுகளை இவர் வளர்த்து வருவதாகவும், இந்த மாடுகள் அதிக அளவில் பால் தரும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த மாடுகள் பால் அதிக அளவில் தருவதால் இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும், ஒரு லிட்டர் பாலினை 30 லிருந்து 35 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
மாடுகள் இருப்பதற்கு இவர் பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து அந்தக் கொட்டகயில் மாடுகளை கட்டி வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த மாடுகள் வளர்ப்பை இவர் கடந்த 4 வருடமாக வளர்த்து வருவதாக கூறுகிறார்.
கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே இவர் மாடு வளர்ப்பை தொடங்கி விட்டதாகவும், மழைக்காலத்தின் காரணமாக இப்பொழுது இவர் பாதி மாடுகளை விற்பனை செய்துவிட்டதாக கூறுகிறார்.
மேலும் இந்த மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் தவிடு, புண்ணாக்கு போன்றவற்றை தீவனமாக அளித்து வருவதாகவும், பசுந்தீவனங்களை இவருடைய தோட்டத்தில் இருந்து எடுத்து வந்து மாடுகளுக்கு தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.
மீன் பண்ணை மற்றும் கோழி பண்ணை
மாட்டு சாணத்தை வைத்து மீன் வளர்ப்பை இவர் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், ஒருமுறை அரசாங்கத்திலிருந்து இவருடைய பண்ணையில் ஒரு குழி தோண்டியதாகவும் அந்த குழியில் மழை பெய்யும் போது தண்ணீர் நிரம்பி விட்டதாக கூறுகிறார்.
இவ்வாறு தண்ணீர் நிரம்பிய குழியில் மீன்கள் வளர்க்கலாம் என்ற எண்ணத்துடன் இவர் மீன் வளர்ப்பை தொடங்கியதாகவும், இப்பொழுது அந்த குட்டையில் 300 லிருந்து 350 கிலோ வரை மீன்களை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த மீன்களுக்கு மாட்டு சாணத்தை தீவனமாக அளித்து வருவதாகவும், மேலும் அரிசியை வேகவைத்து மீன்களுக்கு அளித்து வருவதாகவும் மற்றும் இவற்றுடன் தவிடு போன்ற தீவன வகைகளையும் மீன்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய பண்ணையில் 60 லிருந்து 70 சிறுவிடை கோழிகள் இருப்பதாகவும், இந்த சிறுவிடை கோழிகள் இறைச்சிக்கு மிக சுவையாக இருக்கும் எனவும் அதன் காரணமாக இவர் சிறுவிடை கோழிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த கோழிகளுக்கு அகத்தி, முருங்கை மற்றும் சூப்பர் நேப்பியர் ஆகிய தீவன வகைகளை அளித்து வருவதாகவும், இந்த தீவனங்கள் அனைத்தையும் கோழிகள் உண்டு நல்ல முறையில் வளர்ந்து வருவதாக கூறுகிறார்.
Maintenance method and profit
ஒருங்கிணைந்த பண்ணையை இவர் சிறப்பான முறையில் பராமரித்து வருவதாகவும் கால்நடைகளை எந்த அளவிற்கு பராமரிக்கிறோம் அந்த அளவிற்கு அவர்கள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.
ஒவ்வொரு கால்நடை இருக்கும் பண்ணையையும் வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து விட வேண்டும் எனவும், ஒவ்வொன்றுக்கும் முறையான தீவனங்களை அளிக்கவேண்டும் எனவும் கூறுகிறார்.
மேலும் மாட்டுப் பண்ணையில் இருந்து ஒரு மாதத்திற்கு இவருக்கு 20 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாகவும், மீன் பண்ணையில் இருந்து 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.
இது போன்று இவர் நடத்தி வரும் ஒவ்வொரு வகை கால்நடை பண்ணையில் இருந்து அதிக அளவு லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் தோட்டத்திற்கு மீன் குட்டையில் உள்ள நீரினை அளிப்பதாகவும் அந்த நீரில் உள்ள அமோனியாவின் சத்தினால் செடிகள் நல்ல முறையில் வளர்வதாக கூறுகிறார்.
மேலும் இவர் ஒருங்கிணைந்த பண்ணையை மிகச் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இவ்வாறு சிறப்பாக நடத்திவரும் இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:ஏலக்காய் சாகுபடியில் அசத்தும் இளைஞர்.