சிறப்பான கைராலி கோழி பண்ணை.

திரு பாலா அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டி என்னும் கிராமத்தில் கைராலி கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய கைராலி கோழி பண்ணை வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

கைராலி கோழி பண்ணையின் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டி என்னும் கிராமத்தில் திரு பாலா அவர்கள் வசித்து வருவதாகவும், இவர் இங்கு கைராலி கோழி பண்ணையை வைத்து மிக சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

இவர் இந்த கைராலி கோழி பண்ணையை மூன்று வருடங்களாக நடத்தி வருவதாகவும், மேலும் இவற்றுடன் இவர் புறாக்களையும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய மனைவி வீட்டில் இருப்பதால் வீட்டில் இருந்துக் கொண்டே ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கோழிப்பண்ணையை இவர் தொடங்கி நடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் இவருடைய மனைவி இந்த கோழிப்பண்ணையை அதிக அளவில் பராமரித்து கொள்வார் எனவும், இவருக்கும் இந்த கோழி பண்ணை பராமரிப்பு முறை மற்றும் கோழிகளை பற்றி நன்கு தெரியும் எனவும் கூறுகிறார்.

Types of chickens

திரு பாலா அவர்கள் இவருடைய கோழி பண்ணையில் மொத்தமாக மூன்று வகை கோழிகளை வளர்த்து வருவதாகவும், அவை கைராலி, கடக்நாத் மற்றும் கிளி மூக்கு ஆகிய கோழி வகைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இதில் இவை அதிக அளவில் கைராலி கோழிகளையும் மற்றும் கடக்நாத் கோழிகளையும் வளர்த்து வருவதாகவும், மேலும் இந்த கோழிகளை முட்டைகளுக்காக வளர்த்து வருவதாக கூறுகிறார்.

இதில் இவர் கைராலி கோழி வகைகளிலேயே மூன்று வகை கோழிகளை வளர்த்து வருவதாகவும், இந்த மூன்று வகைக் கோழிகளும் அதிக அளவு முட்டைகளை தருவதாக கூறுகிறார்.

கைராலி கோழியையும் மற்றும் கடக்நாத் கோழியையும் கலப்பினம் செய்து ஒரு புதிய வகை கோழியை உருவாக்கி வளர்த்து வருவதாகவும், அதிகளவு முட்டைகள் இட வேண்டும் என்ற காரணத்தினால் இவர் இவ்வாறு செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த வகையில் உருவாக்கப்பட்ட கோழியிடம் இருந்து வருடத்திற்கு 75% அளவு முட்டைகள் கிடைப்பதாகவும் மற்றும் கடக்நாத் மற்றும் கைராலி கோழிகளிடம் இருந்து வருடத்திற்கு 60 சதவீதம் அளவு முட்டைகள் கிடைப்பதாக கூறுகிறார்.

மேலும் ஒரு கோழிப்பண்ணையில் 100 கோழிகள் இருக்கிறது என்றால் அதன் மூலம் ஒரு நாளைக்கு 70 கோழி முட்டைகள் கிடைக்கும் எனவும், ஒன்றரை வருடம் வரை இந்த அளவில் முட்டைகளை கோழிகள் அளிக்கும் எனவும் கூறுகிறார்.

கோழிகளின் வளர்ப்பு முறை

திரு பாலா அவர்கள் பண்ணையினை தொடங்குவதற்கு முன்பு கோழிகளை வெளியில் இருந்து வாங்கி வளர்த்ததாகவும் அதன் பிறகு இவரே கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்து அதிக அளவில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் கடக்நாத் மற்றும் கைராலி கோழிகளை வைத்து கலப்பினம் செய்த கோழியை இவரே உருவாக்கிய வருவதாகவும், வெளியிலிருந்து வாங்குவது இல்லை எனவும் கூறுகிறார்.

இதற்கு இவர் இன்குபேட்டர் வைத்து இருப்பதாகவும் அதன் மூலம் முட்டைகள் பொறிந்து கோழிக்குஞ்சுகளாக கிடைப்பதாகவும் அதனை இவர்கள் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் கடக்நாத் மற்றும் கைராலி கோழிகளை கலப்பினம் செய்வதன் மூலம் கிடைத்த கோழியானது நல்ல தரமானதாக இருப்பதாகவும் அதனுடைய முட்டைகளும் தரமானதாக இருப்பதாகவும் திரு பாலா அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த கைராலி கோழி களிடமிருந்து அதிக அளவில் முட்டைகள் கிடைக்கும் என்பதாலும், இதனுடைய முட்டைகள் தரமானதாக இருப்பதாலும் இவர் இந்த கைராலி கோழிகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் இந்த கோழிகளை முழுவதும் முட்டைகளுக்காக மட்டுமே வளர்த்து வருவதாகவும், கோழிகளை கூண்டுக்குள் வைத்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

முட்டையிடும் கோழிகளை மட்டும் இவர் கூண்டில் வைத்து வளர்த்து வருவதாகவும் மற்ற கோழிகள் அனைத்தையும் கொட்டகையில் வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் முட்டையிடும் கோழிகளை மட்டும் கூண்டில் வைத்து வளர்ப்பதற்கு காரணம் கோழிகள் மேய்ச்சல் முறையில் வளரும் போது அந்த கோழிகள் முட்டைகளை எங்கு இடுகிறது என்பது தெரியாது என்ற காரணத்தினால் இவர் முட்டையிடும் கோழிகளை கூண்டில் வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.

Shed structure and fodder

திரு பாலா அவர்கள் கோழிப் பண்ணை கொட்டகையை அட்டைகள் மூலம் உருவாக்கி உள்ளதாகவும், கோழிகளின் கூண்டினை ஒன்றரை அடி அகலத்திலும் மற்றும் 2 அடி நீளத்திலும் உருவாக்கி உள்ளதாக கூறுகிறார்.

மேலும் கோழிகள் நீரினை அருந்துவதற்கு நிப்பிள் வகையை பயன்படுத்தி வருவதாகவும், இதில் இவர் தூய நீரை கோழிகளுக்கு அளித்து வருவதாகவும், கோழிகள் நிப்பிள் வகையை வாயினால் தொடும் போது நீரானது தானாக வரும் என கூறுகிறார்.

மேலும் கோழிகளை கூண்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் பராமரிப்புகள் குறையும் எனவும், வேலை செய்யும் நேரமும் குறையும் எனவும் திரு பாலா அவர்கள் கூறுகிறார்.

கோழிகளுக்கு இவர் தீவனமாக கீரை வகைகளை அளித்து வருவதாகவும், அதிக அளவு கீரைகளை இவர்கள் உற்பத்தி செய்து வருவதாகவும், அகத்தி, கல்யாண முருங்கை மற்றும் கீழாநெல்லி கீரை வகைகளை அளித்து வருவதாகவும் வாரத்திற்கு மூன்று முறை கீரை வகைகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து வருவதாகக் கூறுகிறார்.

மேலும் வாரத்திற்கு ஒரு முறை நீரில் மஞ்சள் கலந்து கோழிகளுக்கு அளித்து வருவதாகவும், மற்ற எந்த வித செயற்கை மருந்துகளையும் இவர் கோழிகளுக்கு அளிப்பது இல்லை எனவும் கூறுகிறார்.

மேலும் அரிசி, கம்பு, சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய தானிய வகைகளை இவர் தீவனமாக கோழிகளுக்கு அளித்து வருவதாகவும் இதனை அளித்தாலே கோழிகள் நல்லமுறையில் வளர்ந்து முட்டைகளை தரும் என கூறுகிறார்.

மேலும் இவருடைய கோழிகளுக்கு இதுவரையில் எந்த வித நோய் தாக்குதலும் ஏற்பட்டது இல்லை எனவும் திரு பாலா அவர்கள் கூறுகிறார்.

விற்பனை முறை மற்றும் லாபம்

திரு பாலா அவர்கள் இந்த கைராலி கோழி பண்ணையின் மூலம் அதிக அளவில் லாபத்தை பெற்று வருவதாகவும், இவர் அதிக அளவில் முட்டைகளை மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

கோழிகளை யாருக்கும் அதிக அளவில் இவர் விற்பனை செய்வது இல்லை எனவும், சேவல் வகைகளை மட்டும் இவர் இறைச்சிக்காக விற்பனை செய்வதாகவும் கூறுகிறார்.

மேலும் முட்டைகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அவர்களே முட்டைகளைத் தேர்ந்தெடுத்து எடுத்துச் செல்வதாகவும், இந்த முட்டைகளில் அதிக அளவு சத்துக்கள் உள்ளதால் அதிக அளவில் விற்பனை ஆவதாக கூறுகிறார்.

மேலும் முட்டைகளை வைத்து குஞ்சு பொறித்து வளர்ப்பதற்கு கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இவர் அதிக அளவில் முட்டைகளை விற்பனை செய்து வருவதாகவும், ஒரு முட்டை 12 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும், சிறிய குஞ்சுகளையும் இவர் விற்பனை செய்து வருவதாகவும் இந்த முறையில் இவருக்கு அதிக அளவில் லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

திரு பாலா அவர்கள் மிகவும் சிறப்பான முறையில் இவருடைய கைராலி கோழி பண்ணையை நடத்தி அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:கரும்பு முருங்கைக்காய் உற்பத்தியில் நிறைந்த லாபம்.

Leave a Reply