திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய பெரிய வெங்காயம் சாகுபடி முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
விவசாயின் வாழ்க்கை முறை
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்து அதன் மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.
இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும் காலம் காலமாக இவருடைய குடும்பம் விவசாயத்தையே செய்து வருவதாகவும் கூறுகிறார்.
இதனால் இவரும் விவசாயத்தை காத்து விவசாயத்தை செய்ய வேண்டும் என்பதற்காக விவசாயம் செய்ய தொடங்கியதாகவும், விவசாயத்தைப் பற்றி இவருக்கு மிகவும் நன்றாக தெரியும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய குடும்பம் அதிகமாக பெரிய வெங்காயம் சாகுபடியை சிறப்பாக செய்யும் என்பதால் இவரும் பெரிய வெங்காயம் சாகுபடி முறையை பற்றி அறிந்து கொண்டு அதனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய சிறுவயதிலிருந்து விவசாய முறையைப் பற்றியும்,பெரிய வெங்காயம் சாகுபடி முறையை பற்றியும் பார்த்து அறிந்து கொண்டதாகவும்,இப்பொழுது இந்த வெங்காயம் சாகுபடியை இவர் சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார்.
Method of cultivation of large onion cultivation
பெரிய வெங்காயம் சாகுபடியை இவர் மிகச் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இந்த வெங்காயம் சாகுபடியை இயற்கை முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
இரண்டு ஏக்கர் நிலத்தில் இவர் வெங்காயம் சாகுபடி செய்து வருவதாகவும், இந்த இண்டு ஏக்கர் நிலத்தில் இருக்கும் வெங்காய செடிகள் அனைத்தையும் இவர் மிக சிறப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
வெங்காயத்தை நிலத்தில் விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக உழுது இயற்கை உரமான மாட்டுச் சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை ஆகியவற்றை நிலத்தில் போட்டு பதப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு நிலத்தை பதப்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு வெங்காயத்தை நிலத்தில் நட வேண்டும் எனவும், ஒவ்வொரு வெங்காய செடிகளுக்கு இடையிலும் ஒரு அடி இடைவெளி விட்டு நட வேண்டும் என கூறுகிறார்.
வெங்காய நாற்றினை நட்ட பதினைந்தாவது நாளில் செடிகளுக்கு உரத்தை அளிக்க வேண்டும் எனவும், இவ்வாறு உரத்தை அளித்தால் தான் செடி நன்றாக வளரும் என கூறுகிறார்.
மேலும் இவருடைய குடும்பம் இந்த பெரிய வெங்காயம் சாகுபடியை காலம் காலமாக செய்து வருவதால், இந்த வெங்காயம் சாகுபடியை பற்றி முற்றிலும் இவருக்கு தெரியும் என்பதால் மிக சிறந்த முறையில் பெரிய வெங்காயம் சாகுபடியை செய்து அதிகளவு விளைச்சலை எடுத்து வருவதாக கூறுகிறார்.
உரம் மற்றும் பராமரிப்பு முறை
வெங்காயம் சாகுபடியில் இவர் செடிகளுக்கு முற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே அளித்து வருவதாகவும் செயற்கை உரங்கள் எதையும் இவர் அதிகமாக அளிப்பதில்லை எனவும் கூறுகிறார்.
இயற்கை உரமான மாட்டுச்சாணம் மற்றும் ஆட்டுப்புழுக்கை இவற்றுடன் கோழி கழிவுகளை செடிகளுக்கு உரமாக அளித்து வருவதாகவும் இதனை செடிகளுக்கு அளிப்பதால் செடி விரைவில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிப்பதாக கூறுகிறார்.
செயற்கை உரங்களை செடிகளுக்கு அளிப்பதை விட இயற்கை உரங்களை செடிகளுக்கு அளித்து வளர்த்தால் செடிகள் விரைவில் வளரும் எனவும் வெங்காயம் சத்து நிறைந்த பொருளாக கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
ஆனால் செயற்கை உரங்களை செடிகளுக்கு அதிகமாக அளித்து சாகுபடி செய்து வந்தால் அந்த சாகுபடி செய்த வெங்காயத்தில் சத்துக்கள் குறைந்த அளவே இருக்கும் என கூறுகிறார்.
இதன் காரணமாகவே இவர் சாகுபடி செய்யும் அனைத்து பயிர்கள் மற்றும் காய்கறி வகைகளுக்கு இயற்கை உரங்களை மட்டுமே அதிகமாக அளித்து சாகுபடி செய்து வருவதாக கூறுகிறார்.
இந்த பெரிய வெங்காயம் சாகுபடியில் அதிக அளவில் பராமரிப்பு இருக்காது எனவும், செடிகளுக்கு நீரினை அளித்து விட்டு அதற்கு நோய் தாக்குதல் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது என கூறுகிறார்.
மேலும் வெங்காய தோட்டத்திலுள்ள களைச் செடிகளை வாரத்திற்கு ஒரு முறை அகற்றிவிட வேண்டும் எனவும், இல்லையெனில் வெங்காயச் செடியின் சத்துக்களை களைச்செடிகள் எடுத்துக் கொள்ளும் எனக் கூறுகிறார்.
மற்றும் செடிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு இவர் இயற்கை மருந்துகளை அளித்து வருவதாகவும் மற்றும் ஒரு சில சமயங்களில் மட்டுமே இவர் செயற்கை மருந்துகளை செடிகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.
இந்த முறையில் மட்டும் வெங்காய செடிகளை பராமரித்து சாகுபடி செய்து வந்தால் செடிகள் எந்த பாதிப்பும் இன்றி சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் என கூறுகிறார்.
Harvesting and watering system
வெங்காயம் சாகுபடியை இவர் மிக சிறப்பான முறையில் செய்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், நாற்றுக்களை நட்ட 60 லிருந்து 70 வது நாளுக்குள் வெங்காயம் அறுவடைக்கு தயாராகி விடும் எனக் கூறுகிறார்.
இவ்வாறு வெங்காயம் அறுவடைக்கு தயாரான உடனே அதனை அறுவடை செய்துவிட வேண்டும் எனவும், இல்லையெனில் வெங்காயம் முற்றி விடும் எனக் கூறுகிறார்.
வெங்காயம் அறுவடைக்கு தயார் ஆனதும் அதனை இவர் அறுவடை செய்து விடுவதாகவும், வெங்காயம் அறுவடை செய்வதற்கு இவர் வேலையாட்களை நியமித்து இருப்பதாகவும் வேலையாட்களின் மூலம் இவர் வெங்காயத்தை அறுவடை செய்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் வேலையாட்களுடன் சேர்ந்து இவரும் வெங்காயத்தை அறுவடை செய்வார் எனவும் இவருடைய குடும்பத்தினரும் இவருக்கு வெங்காயம் அறுவடைக்கு உதவி செய்வார் என கூறுகிறார்.
வெங்காயம் சாகுபடி செய்வதற்கு அதிகளவில் நீர் தேவை இருக்காது எனவும் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது ஒரு முறை மட்டும் செடிகளுக்கு நீரினை அளித்தால் போதுமானது எனவும் கூறுகிறார்.
வெங்காய செடிகளுக்கு நீரினை அளிப்பதற்கு இவர் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருவதாகவும், சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தினால் நீர் செலவு குறைவாக இருக்கும் எனவும் மற்றும் நீரினை செடிகளுக்கு அளிப்பதற்கு சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
அறுவடைக்கு செடிகள் தயாரானவுடன் அறுவடை செய்து, நீரினை சரியான முறையில் அளித்து செடிகளை வளர்த்து வந்தால் செடிகள் சிறப்பாக வளர்ந்து நல்ல விளைச்சல் கிடைக்கும் என கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
வெங்காய சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வெங்காயத்தை அறுவடை செய்து அதனை இவருடைய ஊரிலுள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் வியாபாரிகள் இவரிடம் வந்து வெங்காயத்தை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.
மேலும் இவருடைய ஊரிலுள்ள மக்கள் இவரிடம் வெங்காயத்தை குறைந்த அளவில் கேட்டாலும் அவர்களுக்கும் வெங்காயத்தை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இயற்கை முறையை பின்பற்றி தரமாக வெங்காயத்தை விற்பனை செய்து வருவதால் அதிகளவு வாடிக்கையாளர் இவரிடம் வெங்காயத்தை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய பெரிய வெங்காயம் சாகுபடியை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:புழுக்கள் உற்பத்தியில் சிறந்த லாபம்.