ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் வசித்து வரும் ஒரு இளைஞர் செம்மறி ஆடு வகையான மேச்சேரி ஆடுகளை மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவரையும், இவருடைய மேச்சேரி ஆடு வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Excellent Mecheri goat farm
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் வசித்து வரும் ஒரு இளைஞர் முறையில் செம்மறி ஆடு வகையான மேச்சேரி ஆடு களை மிகவும் சிறப்பாக முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் இந்த மேச்சேரி ஆடு களை பரம்பரை பரம்பரையாக வளர்த்து வருவதாகவும், இந்த மேச்சேரி ஆடு வளர்ப்பை இவர்கள் கடந்த 20 வருடமாக வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவர் BE மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று உள்ளதாகவும், படிப்பினை முடித்து விட்டு இவர் மேச்சேரி ஆடு வளர்ப்பை மிகச் சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
படிப்பை முடித்துவிட்டு இவர் மேச்சேரி ஆடுகளை வளர்ப்பதற்கு காரணம் இந்த ஆடு வளர்ப்பை இவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த காரணத்தினாலும், இவருடைய தந்தை அதிக அளவில் படிக்கவில்லை என்பதாலும் இவர் படித்து முடித்துவிட்டு மேச்சேரி ஆடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த மேச்சேரி ஆடு வளர்ப்பை பற்றி இவருடைய தந்தை இடம் கேட்டு அறிந்து கொண்டு அதன் பிறகு ஆடு வளர்ப்பை தொடங்கியதாக கூறுகிறார்.
ஆடுகளின் வகைகள் மற்றும் வளர்ப்பு முறை
ஆடு வளர்ப்பில் இவர் மேச்சேரி ஆடுகளை மட்டும் வளர்க்காமல் அவற்றுடன் சேர்த்து வெள்ளாடு மற்றும் குரும்பை ஆடு வகைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
ஆடுகளை வளர்ப்பதற்கு இவர் நான்கு முறைகளை வைத்துள்ளதாகவும், அதற்கு என்று தனித்தனியாக ஒவ்வொரு கொட்டகை அமைத்து உள்ளதாகவும், இவ்வாறு வளர்க்கும் ஆடுகள் நான்காவது முறைக்கு செல்லும் போது தான் அவைகளை இனப்பெருக்கத்திற்கு விடுவதாக கூறுகிறார்.
மேலும் மற்ற ஆடுகளின் இறைச்சியை விட இந்த மேச்சேரி ஆடுகளின் இறைச்சி சுவையாக இருக்கும் எனவும், இந்த ஆடுகள் வளர்வதற்கு 90 நாட்கள் ஆகும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த ஆடுகளை மலைப்பகுதியில் வளர்ப்பது சற்று கடினமாக இருக்கும் எனவும் ஆனால் இவருடைய ஊரில் இந்த மேச்சேரி ஆடுகளை வளர்ப்பது மிகவும் சுலபமாக இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த ஆடுகள் மலைப் பகுதியில் வளர்வது கடினமாக இருக்கும் எனவும், அடிக்கடி இந்த ஆடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.
இவர் இந்த மேச்சேரி ஆடுகளை முற்றிலும் மேய்ச்சல் முறையிலேயே வளர்த்து வருவதாகவும் மேய்ச்சல் முறையில் இவை வளர்வதால் நல்லமுறையில் வளர்ந்து எந்த நோய்களும் தாக்காமல் இருப்பதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய ஊரிலேயே இவர் மட்டுமே ஆடுகளை நான்கு பகுதிகளாக பிரித்து வளர்க்கும் முறையை செய்து வருவதாகவும், இந்த முறையில் வளர்ப்பதால் ஆடுகளுக்கு என்னென்ன தேவைகள் என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும் எனவும் கூறுகிறார்.
Reproductive system
இவருடைய பண்ணையில் நூறு ஆடுகளுக்கு மேல் வைத்து உள்ளதாகவும் அந்த ஆடுகளை வைத்து இனப்பெருக்கம் செய்து குட்டி களை உற்பத்தி செய்து வருவதாகவும் மற்றும் சில நேரங்களில் வெளியில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
சிறிய அளவில் ஆடுகளை வைத்து வளர்த்து வரும் விவசாயிகளிடமிருந்து இவர் ஆடுகளை வாங்கி வளர்த்து வருவதாகவும், இவ்வாறு இவர் வாங்கும் விவசாயிடம் வேறு யாரும் ஆடுகளை வாங்காத முறையில் இவர் மட்டுமே ஆடுகளை வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் வாங்கும் குட்டிகள் 15 கிலோவில் இருந்து 16 கிலோ எடையை கொண்டிருக்கும் எனவும், இந்த குட்டி இறைச்சிக்கு வெட்டும்போது இதிலிருந்து 8 கிலோ மட்டுமே இறைச்சி கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு 15 கிலோவில் இருந்து 16 கிலோ வரை இருக்கும் குட்டிகள் 4,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை இருக்கும் எனவும், ஆனால் இதனை சிறப்பான முறையில் வளர்த்தால் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் எனவும் கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
மூன்று மாதமான குட்டிகளை இவர் 5000 ரூபாய்க்கு வாங்கி வந்து இவர் மூன்று மாதம் வளர்த்து விற்பனை செய்வதாகவும் இவ்வாறு மூன்று மாதமான குட்டிகளைை இவர் விற்பனை செய்யும் போது அதனை 8500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இதுவே இந்த குட்டிகளை 12 வருடம் வைத்து இவர் வளர்க்கும் போது அதனை 12,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும், ஒரு குட்டியிலிருந்து ஒரு வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
இதனுடைய ஆயுட்காலம் ஆறு வருடம் எனவும் 6 வருடம் இந்த மேச்சேரி ஆடுகளை சிறப்பாக வைத்து வளர்க்க முடியும் எனவும், இவருடைய பண்ணையில் உள்ள ஆடுகளில் இருந்து ஒரு ஆடு 3 குட்டிகள் வரை போட்டு இருப்பதாக கூறுகிறார்.
மழைக்காலங்களில் அதிகமாக பெண் மேச்சேரி குட்டிகள் விற்பனையாகும் இதுவே வெயில் காலங்களில் அதிகமாக ஆண் மேச்சேரி குட்டிகளே விற்பனையாகும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த மேச்சேரி ஆடுகள் வளர்ப்பு முறையைப் பற்றி அறிந்து கொள்ள வரும் அனைவருக்கும் இவர் கற்று தருவதாகவும், ஒருமுறை இந்த மேச்சேரி ஆடுகளை வளர்க்கும் முறையை பற்றி அறிந்து கொண்டால் அதன் பிறகு வளர்ப்பது மிக சுலபமானது எனவும் கூறுகிறார்.
Fodder for goats
மேச்சேரி ஆடுகளுக்கு இவர் தவிடு மற்றும் பருத்திக் கொட்டை வகைகளை தீவனமாக அளித்து வருவதாகவும் மற்றும் இவற்றுடன் பருத்தியின் உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்து அதனையும் தீவனமாக அளித்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இந்த ஆடுகளை அதிகமாக மேய்ச்சல் முறையில் வளர்த்து வருவதாகவும், மழைக்காலங்களில் புல் மற்றும் தவிடு வகைகளை மட்டுமே தீவனமாக அளித்து வருவதாகவும், மழை இல்லாத சமயங்களில் பருத்திக் கொட்டை வகைகளை தீவனமாக அளித்து வருவதாகக் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த ஆடுகளை நான்கு பகுதிகளாக பிரித்து வைத்து வளர்த்து வருவதால் குட்டிகள் நல்ல முறையில் வளர்ந்து வருவதாகவும் அதனுடைய கொட்டகையை விட்டு அந்த குட்டிகள் வெளியில் வருவதில்லை எனவும் கூறுகிறார்.
மேலும் குட்டிகள் தீவனத்தை உண்பதற்கு ஒரு தொட்டி போன்ற அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும் இந்த தொட்டியில் 50 குட்டிகள் வரை தீவனத்தை உண்ண முடியும் எனவும் கூறுகிறார்.
நோய் தடுப்பு முறை மற்றும் பராமரிப்பு முறை
மேச்சேரி ஆடுகளுக்கு அதிகமாக வாய்ப்புண் ஏற்படும் எனவும் மற்றும் காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்படும் எனவும், காலையில் ஆடுகள் உண்ணும் புல்லில் நீர் இருக்கும் எனவும் அந்த நீருடன் சேர்த்து ஆடுகள் புல்லினை உண்ணும் போது அவைகளுக்கு நோய்கள் ஏற்படும் எனவும் கூறுகிறார்.
மேலும் மேச்சேரி ஆடுகளை மாலை நேரங்களில் வெளியில் விடக்கூடாது எனவும் அதனை கொட்டகையில் மாலை நேரங்களில் வைத்து வளர்க்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
ஆடுகளுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு இவர் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி வருவதாகவும், மற்றும் இவர் இந்த மேச்சேரி ஆடு வளர்ப்பு மிக சிறப்பான முறையில் செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
மேலும் படிக்க:கருணை கிழங்கு சாகுபடியில் சிறந்த வருமானம்.