ஈரோடு மாவட்டத்தில் மிக சிறப்பான முறையில் இயங்கி வரும் பண்ணைகளுக்கும் மற்றும் விவசாயத்திற்கும் பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றை திரு ஆனந்த் அவர்கள் நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நிறுவனத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
திரு ஆனந்த் அவர்களின் நிறுவனம்
திரு ஆனந்த் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் பண்ணைக்கு பயன்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தை வைத்து மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும், இவருடைய நிறுவனத்தின் பெயர் VJ தார்ப்பாலின் என கூறுகிறார்.
மேலும் இவர் இவருடைய நிறுவனத்தில் விவசாயம் செய்து உள்ள விவசாய செடிகளில் களைகள் முளைக்காமல் இருக்க பயன்படும் மல்சிங் சீட் தயாரிப்பை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், இவருடன் சேர்ந்து இவரது நண்பரும் இந்த நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த மல்சிங் சீட் விவசாயத்திற்கு மிகவும் அதிக அளவில் பயன்படும் எனவும், இதன் மூலம் செடிகளில் களைகள் முளைப்பதை மிகவும் சுலபமான முறையில் தடுக்க முடியும் எனவும், இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணம் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கியதாகவும், மேலும் இவர் தயாரிக்கும் பொருட்களை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருவதாகவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
Advantages of mulching sheet
மல்சிங் சீட்டை தர்பூசணி செடிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், அனைத்து வகை செடிகளுக்கும் பயன்படுத்தலாம் எனவும், இதன் மூலம் நமக்கு அதிக அளவு நன்மைகள் கிடைக்கும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த மல்சிங் சீட்டை பயன்படுத்தும் போது செடிகளுக்கு நாம் நீரினை அளித்தால் அந்த நீரானது விரைவில் ஆவியாகாமல் இருக்கும் எனவும், இதன் மூலம் செடிகளில் களைகள் முளைப்பதற்கு வாய்ப்புகளே இல்லை எனவும் கூறுகிறார்.
மேலும் செடிகளுக்கும் அளிக்க கூடிய அனைத்து நியூட்ரிஷனும் செடிகளில் அப்படியே இருக்கும் எனவும், மற்றும் ஈரப்பதம் செடிகளில் இருந்து கொண்டே இருக்கும் எனவும், இது போன்ற பல வகை நன்மைகள் இந்த மல்சிங் சீட்டை பயன்படுத்தினால் கிடைக்கும் என திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மல்சிங் சீட்டை பயன்படுத்தும் நோக்கம்
செடிகளுக்கு மல்சிங் சீட்டை பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் செடிகளின் வேர்களில் களைகள் முளைக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே என திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இவர்கள் இந்த மல்சிங் சீட்டை பயன்படுத்தி செடிகளுக்கு செயற்கையான ஊடு பயிர் முறையை பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் செடிகளுக்கு அளிக்கக்கூடிய அனைத்துவித சத்துக்களும் செடிகளுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு செடிகளுக்கு அளிக்கக் கூடிய அனைத்து சத்துகளும் செடிகளுக்கும் மட்டுமே கிடைக்கும் போது, நாம் செடிகளுக்கும் மருந்து அடிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், இதனால் செலவு குறையும் எனவும் கூறுகிறார்.
மேலும் இந்த மல்சிங் சீட்டை பயன்படுத்தும் போது செடிகளுக்கு அளிக்கக் கூடிய நீரின் அளவும் குறைவாகவே இருக்கும் எனவும், இதனால் நீரினை நாம் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இதனை பயன்படுத்தும்போது செடிகளுக்கு அளிக்ககூடிய அனைத்து வித சத்துக்களும் செடிகளுக்கு மட்டுமே கிடைப்பதால் விளைச்சல் மிகச் சிறப்பான முறையில் இருக்கும் என திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
Method and cost of using mulching sheet
ஒரு ஏக்கர் விவசாயம் செய்துள்ள தோட்டத்திற்கு இந்த மல்சிங் சீட் ஆனது சுமார் 2000 மீட்டர் அளவு தேவைப்படும் எனவும், ஒரு ரோல் 400 மீட்டர் என்ற அளவில் இருக்கும் எனவும், எனவே ஒரு ஏக்கருக்கு 5 ரோல் தேவைப்படும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
எனவே இவ்வாறு 2,000 மீட்டர் அளவுள்ள மல்சிங் சீட்டை ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் போது 7500 ரூபாயிலிருந்து,பண்ணிரண்டாயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் என கூறுகிறார்.
மேலும் இந்த மல்சிங் சீட்டை தமிழ் நாடுகளில் தர்பூசணி பழ செடிகளுக்கும், முலாம்பழ செடிகளுக்கும் பயன்படுத்தி வருவதாகவும், மற்றும் ஓசூர் போன்ற இடங்களில் இந்த மல்சிங் சீட்டை தக்காளி செடிகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் தர்பூசணி பழம் ஒரு விளைச்சல் என்பது 55 நாட்கள் மட்டுமே எனவும், இவ்வாறு இதனை பயன்படுத்துவது மிகவும் நன்மையை அளிக்கும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மல்சிங் சீட்டின் வகைகள்
மேலும் இந்த மல்சிங் சீட் வகைகளில் மொத்தமாக மூன்று வகை இருப்பதாகவும் அவைகள்,20 மைக்ரான், 25 மைக்ரான், 30 மைக்ரான் என்ற அளவுகளில் இருப்பதாகவும்,மேலும் இதில் முதல் தரம் மற்றும் இரண்டாவது தரம் என்று இரண்டு வகைகள் இருப்பதாக கூறுகிறார்.
இதில் முதல் தரத்தில் உள்ள மல்சிங் சீட்டை வாங்கும் போது அதிக அளவு விலை இருக்கும் எனவும், இரண்டாவது தரத்தில் உள்ள மல்சிங் சீட் டை வாங்கும்போது விலை சற்று குறைவாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு தரம் அதிகமாக இருக்கும் மல்சிங் சீட் வாங்கி பயன்படுத்தும் போது நமக்கு அதிக காலங்கள் இந்த மல்சிங் சீட் பயன்படும் எனவும், ஆனால் குறைந்த தரமுள்ள மல்சிங் சீட் வாங்கி பயன்படுத்தும் போது நமக்கு குறைந்த அளவு காலமே இந்த மல்சிங் சீட் பயன்படும் எனவும் கூறுகிறார்.
Method of setting the mulching sheet
இந்த மல்சிங் சீட்டை செடிகளில் அமைக்கும் முறை மிகவும் சுலபமான ஒரு முறையே எனவும், இவர்களிடம் மல்சிங் சீட் வாங்க வரும் பண்ணையாளர்களுக்கு மல்சிங் சீட்டை அமைப்பதற்கு உதவி செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த மல்சிங் சீட்டை ஒவ்வொரு பாத்தியின் மீதும் பொருத்தி கொண்டே வரவேண்டும் எனவும், அவ்வாறு பொருத்திக் கொண்டு வரும் போது பாத்தியில் உள்ள மண்ணினை அந்த மல்சிங் சீட்டின் உள் தள்ள வேண்டும் என கூறுகிறார்.
மேலும் இவ்வாறு மல்சிங் சீட் ஒவ்வொரு பாத்தியிலும் அமைத்ததற்கு பிறகே செடிகளை பாத்தியில் நட வேண்டும் எனவும், மேலும் இவ்வாறு செடியினை நடும் போது பாத்தியில் உள்ள மண்ணினை சிறிதளவு எடுத்துவிட்டு செடியினை நடலாம் என கூறுகிறார்.
எனவே இந்த மல்சிங் சீட்டை அமைப்பது மிகவும் கடினமான முறை இல்லை எனவும், இதனை மிக சுலபமான முறையிலேயே அமைத்துக் கொள்ள முடியும் எனவும் திரு ஆனந்த் அவர்கள் கூறுகிறார்.
மேலும் இந்த மல்சிங் சீட்டை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது விளைச்சல் ஆகக் கூடிய காலமானது குறையும் எனவும், இதனால் நாம் குறைந்த காலத்தில் விளைச்சலை செய்து முடித்து விடலாம் என கூறுகிறார்.
மேலும் இதன் மூலம் நமக்கு நீரின் செலவு அதிக அளவில் குறையும் எனவும், இது நமக்கு அதிக அளவு நன்மையை அளிக்கும் எனவும் கூறுகிறார்.
திரு ஆனந்த் அவர்கள் இவருடைய நண்பருடன் சேர்ந்து இவரது நிறுவனத்தை மிக சிறப்பான முறையில் நடத்தி அதில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்களுக்கு அளித்து வருகின்றன.
மேலும் படிக்க:வான்கோழி வளர்ப்பில் அசத்தும் கல்லூரி மாணவன்.