சிறப்பான பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பால் கறக்க பயன்படும் பல்நோக்கு இயந்திர நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய இயந்திர நிறுவனத்தைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

Startup of the machine company

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பால் கறக்க பயன்படும் பல்நோக்கு இயந்திர நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறுகிறார்.

இவருடைய குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம் எனவும், காலங்காலமாக இவருடைய குடும்பம் விவசாயத்தை செய்து வந்ததாகவும் கூறுகிறார்.

இவ்வாறு இவருடைய குடும்பம் காலம் காலமாக விவசாயத்தையே செய்து வந்ததால்,நாமாவது படித்து சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் பட்டப்படிப்பு பயின்றதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்து விட்டு ஒரு தனியார் இயந்திர நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், பிறரிடம் வேலை பார்ப்பதை விட நாமே ஒரு நிறுவனத்தை தொடங்கலாம் என்ற எண்ணம் இவருக்கு தோன்றியதாக கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் சுயமாக இந்த பால் கறக்கும் பல்நோக்கு இயந்திர நிறுவனத்தை தொடங்கி இப்பொழுது இதனை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

இயந்திரத்தின் சிறப்புகள்

பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தில் பலவகை சிறப்புக்கள் இருப்பதாகவும், இதில் பலவகை பயன்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு பலவித பயன்கள் இந்த இயந்திரத்தில் இருப்பதன் காரணமாகவே இந்த இயந்திரத்திற்கு பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரம் என்று பெயர் வைத்திருப்பதாக கூறுகிறார்.

நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப இந்த பால் கறக்கும் இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும், ஒன்றிலிருந்து ஐந்து மாடுகளில்  பால் கறக்கும் Nano இயந்திரம்.

மேலும் ஒன்றிலிருந்து பத்து மாடுகளில் இருந்து பால் கறக்கும் இயந்திரத்தில் இயந்திரத்தை தள்ளு வண்டியாக அமைத்து இருந்ததாகவும், மற்றும் ஒன்றிலிருந்து பத்து மாடுகளுக்கு பால் கறக்கும் fixed இயந்திரம் ஆகியவற்றை வைத்திருந்ததாக கூறுகிறார்.

இந்த மூன்று வகை இயந்திரங்களையும் தனித்தனியாக பிரித்து மூன்று இயந்திரங்களாக விற்பனை செய்து வந்ததாக கூறுகிறார்.

இந்த மூன்று இயந்திரங்களிலும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தேவைகள் இல்லாமல் இருந்ததாகவும் அந்த தேவைகள் அனைத்தையும் இயந்திரம் வாங்கும் வாடிக்கையாளர்கள் கேட்டதாக கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் ஒரே இயந்திரத்தில் வாடிக்கையாளர்கள் கேட்கும் அனைத்து வகை தேவையும் நிறைவேறும் வகையில் ஒரு இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.

இந்த பல்நோக்கு பால்கறக்கும் இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 10 மாடுகளிலிருந்து பால் கறக்க முடியும் எனவும் மற்றும் மின்சாரம் இல்லாத நேரத்தில் இந்த இயந்திரத்தை UPS மற்றும் சோலாரில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என கூறுகிறார்.

மேலும் இயந்திரத்தில் இருக்கும் இன்ஜின் மூலம் இதனை இயக்க முடியும் எனவும் மற்றும் இந்த இயந்திரத்தை நாம் வேண்டும் இடத்திற்கு தள்ளி செல்ல முடியும் எனவும் கூறுகிறார்.

இதுபோல் பலவித சிறப்புக்கள் இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தில் இருப்பதாக கூறுகிறார்.

Uses of the machine

பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தில் பலவித பயன்கள் இருப்பதாகவும் இந்த இயந்திரத்தினை சிறு பண்ணையாளர்கள் பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு இதிலிருந்து லாபம் அதிகமாக கிடைக்கும் என கூறுகிறார்.

ஒன்றிலிருந்து இரண்டு மாடுகள் வைத்து வளர்த்து வரும் விவசாயிகள் இந்த பால் கறக்கும் இயந்திரத்தை வாங்கி பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

இயந்திரத்தினை வாங்கிய பிறகு அந்த விவசாயிக்கு முதல் 8 மாதம் மட்டுமே குறைந்த அளவு நஷ்டம் ஏற்படும் எனவும் அதன் பிறகு அவர்களுக்கு வருவதெல்லாம் லாபமாக இருக்கும் எனக் கூறுகிறார்.

மேலும் இதுவே ஒன்றிலிருந்து பத்து மாடுகள் மற்றும் 10 மாடுகளுக்கு மேல் பண்ணை வைத்து நடத்தி வரும் பண்ணையாளர்கள் பால் கறப்பதற்கு வேலையாட்களை பயன்படுத்துவார்கள் என கூறுகிறார்.

இந்த வேலையாட்களுக்கு எல்லாம் ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவு ஆகும் எனவும் ஒரு வருடத்தில் இதனை கணக்குப் பார்த்தால் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு ஏற்படும் என கூறுகிறார்.

ஆனால் இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தை வைத்து நாம் மாடுகளிலிருந்து பால் கறக்கும் போது வேலையாட்களுக்கு கொடுக்கும் பணம் செலவாகாது எனக் கூறுகிறார்.

இதன் மூலம் அந்த பண்ணையாளர் அதிக லாபத்தை பெற முடியும் எனவும், எனவே வேலை ஆட்களை வைத்து பால் கறப்பதை விட இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தை வைத்து பால் கறப்பது மிகவும் நன்மை என கூறுகிறார்.

இயந்திரத்தைப் பயன்படுத்தும் முறை மற்றும் பராமரிப்பு முறை

இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தை பயன்படுத்தும் முறை மிகவும் சுலபமானது எனவும்,மாடுகளின் காம்புகளில் பால் கறக்கும் இயந்திரத்தின் குழாய்களை பொருத்தி விட்டால் போதுமானது எனவும் கூறுகிறார்.

இவ்வாறு இயந்திரத்தின் குழாய்களை மாடுகளின் காம்புகளில் பொருத்திய பிறகு  இயந்திரத்தை இயக்கினால் இயந்திரம் பாலை மிக விரைவில் கறந்து பாத்திரத்தில் நிரப்பி விடும் எனக் கூறுகிறார்.

இவ்வாறு பால் கறந்த பிறகு அதனை எடுத்து செல்லும் முறையும் மிக சுலபமாக இருக்கும் எனவும்,கைகளின் மூலம் சுமந்து செல்லாமல் இயந்திரத்தில் இருந்தபடியே அதனை தள்ளிச் சென்றால் மட்டும் போதுமானது எனக் கூறுகிறார்.

இதுவே வேலையாட்களை வைத்து பால் கறக்கும் போது நேரம் அதிகளவில் வீணாகும் எனவும் மற்றும் பாலினை கறந்த பிறகு அதனை நாம் சுமந்து செல்ல வேண்டும் என கூறுகிறார்.

எனவே இந்த இயந்திரத்தை வாங்கி நாம் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு வேலை சுமை அதிகமாக இருக்காது எனவும் இதிலிருந்து பலவித நன்மை மற்றும் லாபம் கிடைப்பதாக கூறுகிறார்.

இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தை எந்தவித பாதிப்பும் அதிகளவில் ஏற்படாது எனவும், ஆயில் சென்றுவரும் குழாய்களை இவர் மிகவும் சிறப்பான முறையில் அமைத்துள்ளதாகவும் இதனால் அந்த ஆயில் குழாய்கள் எந்தவித பாதிப்பும் அடையாது எனக் கூறுகிறார்.

ஆயில் குழாய்கள் பாதிப்படையாமல் இருந்தாலே இயந்திரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் மற்றும் இயந்திரத்தை தினசரி பயன்படுத்த வேண்டும் எனவும் அதனை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

Sales method and profit

பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தை மிக சிறப்பான முறையில் தயாரித்து அதனை இவரிடம் இயந்திரத்தை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரத்தின் விலை 29 ஆயிரத்து 800 ரூபாய் எனவும், குறைந்த விலையிலேயே இவர் இந்த இயந்திரத்தை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவருடைய இந்த பல்நோக்கு பால் கறக்கும் இயந்திரம் மிகவும் தரமானதாக இருப்பதால் அதிகளவு மக்கள் இவரிடம் வந்து இந்த இயந்திரத்தை வாங்கி செல்வதாகவும் இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும், இவருடைய இயந்திர நிறுவனத்தை சிறப்பான முறையில் நடத்தி வருவதாக கூறுகிறார்.

# மேலும் படிக்க:சிறப்பான பட்டுப்புழு வளர்ப்பு.

Leave a Reply