இந்தோனேசியாவில் உள்ள பாலி என்னும் நகரில் வாழும் மக்கள் அனைவரும் மலையின் மேல் சிறப்பான நெல் விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகின்றனர். இந்தோனேசிய மக்களைப் பற்றியும், அவர்களுடைய நெல் விவசாய முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.
இந்தோனேசிய பாலி நகர மக்களின் வாழ்க்கை
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி என்னும் நகரில் வாழும் மக்கள் அனைவரும் மிகவும் சிறப்பான முறையில் நெல் உற்பத்தியை மலையின் மேல் செய்து, அந்த நெல் விவசாயத்தின் மூலம் இவர்கள் நல்ல லாபத்தை பெற்று வருகின்றனர்.
இந்த பாலி நகரத்து மக்கள் மிகவும் சிறப்பான முறையில் நெல் விவசாயத்தை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் செய்யும் நெல் விவசாயத்தை விட இவர்கள் மிகவும் சிறப்பான முறையில் மலையின் மேல் செய்து வருகின்றனர்.
மேலும் இங்கு வாழும் மக்கள் இவர்கள் விளைவிக்கக் கூடிய இந்த அரிசியையே உண்டு வாழ்வதாகவும், இதுவே இவர்களுக்கு அதிக அளவு லாபத்தையும் மற்றும் மன நிறைவையும் அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.
Paddy cultivation method
இந்தோனேசியா பாலி நகரத்து மக்கள் அனைவரும் விவசாயம் செய்யும் இந்த நெல் விவசாய முறை ஆனது தமிழ்நாட்டில் நெல் விவசாயம் செய்யும் முறையை விட வேறுபட்டும், மற்றும் தமிழ்நாட்டில் செய்யும் விவசாய முறைகளை விட இவர்கள் புதிய முறைகளை இவர்களுடைய விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இவர்கள் இருப்பது மலையின் மேல் என்பதால் நிலமானது சமமாக இருக்காது எனவும், மற்றும் இவர்கள் அதிக பனி, மழை மற்றும் குளிர் ஆகிய நிலைகளிலும் மிகவும் சிறப்பான முறையில் நெல் விவசாயத்தை செய்து வருவதாக கூறுகின்றனர்.
இவர்கள் இந்த நெல் பயிர்களுக்கு நீரினை அளிக்கும் முறையையும், மற்ற பயிர்களை பராமரிக்கும் முறையையும் அறிவியல் ரீதியாக செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.
நிலத்தினை உழுதும் முறை மற்றும் நிலத்தின் அமைப்பு
இந்தோனேசியா பாலி நகரத்திலுள்ள விவசாய நிலமானது தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலங்களை போல் ஒரே சீரான சமமான நிலமாக இல்லாமல், ஒவ்வொரு வயல்களுக்கு இடையிலும் மூன்று அடி இடைவெளி இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இங்கு உள்ள நிலங்கள் சமமாக இல்லாத காரணத்தால் இந்த நிலங்களை மாடுகளின் மூலமோ அல்லது டிராக்டர்களின் மூலமோ உழுகாமல் ஒரு சிறிய இயந்திரத்தை வைத்து ஒவ்வொரு வயல்களையும் தனித் தனியாக உழுது விடுவதாக கூறுகின்றனர்.
இவர்கள் இந்த சிறிய இயந்திரத்தை நிலத்தினை உழுவ பயன்படுத்துவதற்குக் காரணம் வயல்கள் செங்குத்தாக இருப்பதனால் மற்ற டிராக்டர்கள் மற்றும் மாடுகளை வைத்து நிலத்தினை உழுக முடியாது என்பதனால் எனக் கூறுகின்றனர்.
மேலும் இங்குள்ள நீலம் செங்குத்தாக இருப்பதால் ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்கும் இடையில் உள்ள வயலின் உயரமானது 5 அடி வரை இருப்பதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்கும் இடையில் சிறிய பாத்தி மட்டுமே இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் ஒரு வயலுக்கும் மற்றொரு வயலுக்கும் இடையில் உள்ள அந்த ஐந்தடி உயரத்தில் உள்ள நிலத்தில் இருக்கும் களைச் செடிகளை ஒரு அறுவடை முடிந்ததும் வெட்டி சுத்தம் செய்து விடுவதாகவும், இவ்வாறு வெட்டும் அந்த களைச் செடிகள் அனைத்தும் வயல்களுக்கு உள்ளேயே விழுந்து உரமாகவும் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Irrigation system for fields
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் வயல்களுக்கு நீரினை பாய்ச்சும் போது ஒரு வயலில் நீரானது நிரம்பி விட்டது எனில் மற்றொரு வயலுக்கு நீரினை திருப்பி விடுவர் எனவும், ஆனால் மலையின் மேல் இவர்கள் விவசாயம் செய்வதால் இந்த முறையை அவர்கள் செய்ய முடியாது எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் வயல்களுக்கு நீரினை பாய்ச்சுவதற்கு ஒரு குழாயின் மூலம் நீரினை ஒரு வயலுக்கு அனுப்புவதாகவும், அந்த வயலில் நீரானது நிரம்பிவிட்டது எனில் மற்றொரு வயலுக்கு நீரானது செல்லும் அளவிற்கு நிலத்தினை அமைத்து உள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் இந்த முறையில் நீரினை பாய்ச்சும் போது ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்கு நீரானது சென்றால் கூட தேவையான அளவு நீரானது வயல்களில் நின்று கொண்டே இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் வயல்களுக்கு நீரினை பாய்ச்சுவதற்கு குழாய் களை மட்டும் பயன்படுத்தாமல் மூங்கிலின் மூலமும் நீரினை பாய்ச்சி வருவதாகவும், மேலும் இந்தோனேசியாவில் மூங்கில் விவசாயம் தான் அதிகளவில் இருப்பதாகவும், இவர்களுடைய அனைத்து விவசாய முறைகளுக்கும் இந்த மூங்கில்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் மிகவும் சிறப்பான முறையில் வயல்களில் இருந்து மீதம் வரும் தண்ணீரை வைத்து சிறிய அளவில் மின்சாரத்தையும் உருவாக்கி வருவதாகவும், இது இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வயல்களைப் பாதுகாப்பும் வழிமுறை
வயல்களை காகம், குருவி, மயில் மற்றும் முயல் போன்ற பறவை மற்றும் விலங்குகள் இடமிருந்து பாதுகாப்பதற்கு தமிழ் நாடுகளில் வயல்களில் பெரிய அளவு பொம்மை மற்றும் பட்டாசு ஆகியவைகளை பயன்படுத்துவார்கள் என கூறுகின்றனர்.
ஆனால் இவர்கள் இந்த பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து வயலை பாதுகாப்பதற்கு காற்றாலை போன்ற ஒரு இயந்திரத்தை அமைத்து அதன் மூலம் நிலத்தை பாதுகாத்து வருவதாக கூறுகின்றனர்.
இந்த காற்றாலை போன்ற அமைப்பில் உள்ள இயந்திரத்தை இவர்களே தயாரித்து, நிலத்தின் நடுவில் வைத்து இருப்பதாகவும் அந்த காற்றாலை காற்று வேகமாக வீசும் போது ஒரு பெரிய சத்தத்தை ஏற்படுத்தும் எனவும், இவ்வாறு பெரிய சத்தத்தை ஏற்படுத்தும் போது எந்த பறவைகள் மற்றும் விலங்குகள் வயலுக்குள் வராது எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் இந்த முறையை மிகவும் சுலபமான முறையில் அமைத்து உள்ளதாகவும், இந்த முறையினால் பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருந்து இவர்கள் நெல் பயிர்களைப் பாதுகாப்பது மிக சுலபமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
Types of rice
இந்தோனேசியா பாலி நகரத்தில் வாழும் மக்கள் அனைவரும் அவர்களுடைய நிலத்தின் அருகில் ஒரு சிறிய குடிசையை அமைத்து இருப்பதாகவும், இவ்வாறு இவர்கள் சிறிய குடிசையை அமைத்து இருப்பதற்கு காரணம் வயல்களில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அதிக அளவில் மழை பெய்தால் அந்த குடிசையில் சென்று பாதுகாப்பாக இருந்து கொள்வதற்கே எனக் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் விளைவிக்கும் அரிசியானது, தமிழ்நாட்டில் விளையக் கூடிய பொன்னி மற்றும் பாஸ்மதி போன்ற விதவிதமான அரிசி வகைகளாக இல்லாமல், ஒரே அரிசி வகையாக இட்லி அரிசியை போன்று இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் வயல்களில் வேலை செய்யும் போதும் மற்றும் வேலையை முடிக்கும் போதும் சிறிய பூஜையை கடவுளுக்கு செய்வதாகவும், ஒவ்வொரு வயல்களுக்கு இடையிலும் ஒரு கடவுள் சிலையை அமைத்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மேலும் இவர்கள் இவ்வாறு கடவுளை தொழுது விட்டு வேலை செய்யும் போது இவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதாகவும், வயல்கள் நல்ல முறையில் வளரும் என எண்ணுவதாகவும் கூறுகின்றனர்.
இந்தோனேசியா பாலி நகரத்து மக்கள் மிகவும் சிறப்பான முறையிலும், புதிய வழிமுறைகளிலும் இவர்களுடைய வயல்களில் நெல் விவசாயத்தை செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க:வெள்ளை எலி வளர்ப்பில் சிறந்த லாபத்தை பெறும் பெரியவர்.