சிறப்பான நெல் விவசாயம்.

திரு ரமேஷ் அவர்கள் பெரியபாளையம் அருகில் உள்ள தண்டி காவலூர் என்னும் கிராமத்தில் 40 ஏக்கர் கொண்ட குத்தகை நிலத்தில் தனி ஒருவராக மிக சிறப்பான முறையில் நெல் விவசாயத்தை செய்து வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய நெல் விவசாயத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு ரமேஷ் அவர்களின் வாழ்க்கை

பெரியபாளையம் அருகில் உள்ள தண்டி காவலூர் என்னும் கிராமத்தில் திரு ரமேஷ் அவர்கள் வசித்து வருவதாக கூறுகிறார். இவர் இங்கு ஒரு 40 ஏக்கர் கொண்ட குத்தகை நிலத்தில் நெல் விவசாயத்தை மிக சிறப்பான முறையில் செய்து வருகிறார்.

திரு ரமேஷ் அவர்கள் இருபதிலிருந்து இருபத்தைந்து வருடங்கள் விவசாயத்தையே செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இவர் அதிக அளவில் படிக்கவில்லை எனவும் கூறுகிறார். இவர் ஆறாம் வகுப்பு வரை பயின்று உள்ளதாக கூறுகிறார்.

இவர் இந்த நெல் விவசாயத்தை சிறிது சிறிதாக செய்து அதன் பின் இந்த விவசாயத்தில் அதிக மகசூல் கிடைத்ததால் இதனை தொடர்ந்து செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இவர் வெளியில் சென்று ஒருவரிடம் வேலை பார்க்க பிடிக்காமல் இந்த நெல் விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு ரமேஷ் அவர்கள் இந்த நெல் விவசாயத்தை சொந்த உழைப்பில் செய்து வருவதாக கூறுகிறார். இதனால் ஒருவரிடம் சென்று கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை என திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த நெல் விவசாயத்தை செய்வதால் இவருக்கு மாதத்திற்கு 30 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார். திரு ரமேஷ் அவர்கள் இந்த நெல் விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

Paddy farming

திரு ரமேஷ் அவர்கள் இந்த நெல் விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். இவர் 40 ஏக்கர் நிலத்தில் முழுவதுமே நெல் பயிர்களையே விதைத்து உள்ளதாக கூறுகிறார்.

இவர் சென்னைக்கு அருகில் உள்ளதால் வாழைத்தோப்பு மற்றும் சென்னையில் அதிக அளவு விற்பனையாகும் பயிர்களை விவசாயம் செய்து இன்னும் வருமானம் அதிக அளவில் ஈட்டி  இருக்கலாம். ஆனால் இவர் நெல் பயிர்களை மட்டும் விவசாயம் செய்ததற்கு காரணம் அதிக அளவில் ஆட்கள் வேலைக்கு இல்லாததே காரணம் எனக் கூறுகிறார்.

இப்பொழுது உள்ள நிலையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் வந்துவிட்டது. அனைவரும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். யாரும் அதிக அளவில் விவசாயத்தை விரும்புவதில்லை எனவே வேலையாட்களின் தேவை அதிக அளவு இருப்பதாக திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார்.

மேலும் நெற்பயிர்களை நாற்று நடுவதற்கு கூட திருவள்ளுர் மாவட்டத்தில் ஆட்கள் இல்லாமல் ஆந்திராவிலிருந்து அழைத்து வந்து நாற்று நட்டதாக திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார். ஆந்திராவில் இருந்து ஆட்கள் வரவில்லை என்றால் இவர் நாற்று நட்டு இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என கூறுகிறார்.

ஒரு பருவத்திற்கு 2000 நபர்கள் வந்து வேலை செய்து முடித்துவிட்டு திரும்பி செல்வதாக திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார். இவர் இவர்கள் வேலையை முடித்து விட்டு கிளம்பி விடுவதால் மீதமுள்ள சிறிய வேலைகளை எல்லாம் செய்வதற்கு இங்கு ஆட்கள் கிடைப்பதில்லை என கூறுகிறார்.

ஒரு ஆண் வேலையாள் வேலைக்கு வந்தால் ஒரு நாளைக்கு 700 ரூபாய் சம்பளமும் இரண்டு வேளை உணவும் அளிக்க வேண்டும் என கூறுகிறார். இதுவே ஒரு பெண் வேலை ஆள் வேலைக்கு வந்தால் 150 ரூபாய் சம்பளம் அளிப்பதாக கூறுகிறார். பெண் வேலை ஆள் காலையில் ஒன்பது மணிக்கு வருகிறார்கள் என்றால் மதியம் பன்னிரண்டரை மணிக்கு கிளம்பி விடுவதாக கூறுகிறார்.

இதனால் வேலைக்கு ஆள் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாக திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார். இதனால் காய்கறி செடிகள் மற்றும் வாழைத் தோப்புகள் போன்றவற்றை விவசாயம் செய்தால் அதிக அளவில் ஆட்கள் தேவைப்படுவார்கள் எனவும் கூறுகிறார். இதனால் தான் இந்த காய்கறி மற்றும் வாழைத்தோப்பு களை விவசாயம் செய்யவில்லை என வருகிறார்.

இதில் முதலீடு குறைந்த அளவில் இருந்தாலும் ஆள் கூலி அதிக அளவில் இருக்கும் இதனால் இந்த விவசாயத்தை செய்யாமல் நெல் விவசாயத்தை செய்து வருவதாக திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார்.

நெல் பயிர்களை அறுவடை செய்யும் முறை

திரு ரமேஷ் அவர்கள் நெல் பயிர்களை அறுவடை செய்யும் முறையை மிக சிறப்பாக செய்து வருவதாக கூறுகிறார். நெல் பயிர்களை அறுவடை செய்வதற்கு இவர் இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

இந்த இயந்திரமானது மிகச் சிறப்பான முறையில் செயல்படும் எனவும் கூறுகிறார்.இப்பொழுது நாளை புயல் வருகிறது என்று அறிந்து கொண்டால் இன்றே அனைத்து நெல் பயிர்களையும் சிறப்பாக அறுவடை செய்து விடலாம் என கூறுகிறார்.

இதுவே ஆட்களை வைத்து அறுவடை செய்தால் அனைத்து பயிர்களையும் அறுவடை செய்ய முடியாது என கூறுகிறார். இதனாலே இவர் இயந்திரங்களை பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

Types of rice Crops

திரு ரமேஷ் அவர்கள் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு வகையான நெல் பயிர் வகைகளை விவசாயம் செய்வதாக கூறுகிறார்.மொத்தமாக மூன்று பருவங்கள் இருப்பதாகவும் அந்த மூன்று பருவங்களிலும் ஒவ்வொரு வகையான நெல் பயிர்களை விவசாயம் செய்து வருவதாகவும் கூறுகிறார்.

இதில் முதல் பயிர் வகை ATT 43 எனவும், இரண்டாவது பயிர் வகை BBT ஆந்திரா பொன்னி என அழைக்கப்படும் அரிசி வகையையும், மூன்றாவதாக இற மல்லி அரிசி வகையையும் விளைவிப்பதாக கூறுகிறார்.

இந்த மூன்று அரிசி வகைகளும் உணவு அரிசிகளே என திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார்.மேலும் இந்த மூன்று அரிசி வகைகளும் உண்பதற்கு மிக நன்றாக இருக்கும் என கூறுகிறார். பொதுவாக நெல் பயிர்களை விளைவிக்கும் போது அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் என கூறுகிறார்.

இவரின் ஊரின் அருகில் ஒரு ஆறு உள்ளதால் இவருக்கு அங்கிருந்து தேவையான அளவு தண்ணீர் கிடைப்பதாக கூறுகிறார்.மேலும் மழை பெய்தால் 3 பருவமும் நன்றாக பயிர் செய்யலாம் என திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார்.

நீரானது இல்லை எனில் நெல் பயிர்களை விளைவிப்பது மிகவும் கடினமான ஒன்று என கூறுகிறார்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

திரு ரமேஷ் அவர்கள் இன்றுள்ள காலகட்டத்தில் யாரும் அதிக அளவில் விவசாயத்தை செய்வதில்லை என கூறுகிறார்.

அனைவரும் தொலைக்காட்சி மற்றும் செய்திகள் போன்றவற்றில் வாயில் மட்டும் விவசாயம் செய்யலாம், விவசாயத்தை காப்போம் என கூறுகிறார்கள் ஆனால் அதை யாரும் செய்வதில்லை என கூறுகிறார்.எனவே இது போல் யாரும் இல்லாமல் அனைவரும் விவசாயத்தை செய்ய வேண்டும் என கூறுகிறார்.

இல்லையெனில் வருகின்ற காலத்தில் விவசாயமானது முற்றிலுமாக அழிந்துவிடும் என திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார்.இன்றுள்ள இளைஞர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தான் இந்த விவசாயத்தை காக்க முடியும் என கூறுகிறார்.

இவ்வாறு ஒன்றாக இணைந்து செயல்பட்டால் விவசாயமானது நன்றாக இருக்கும் என திரு ரமேஷ் அவர்கள் கூறுகிறார்.

Income of paddy crop

திரு ரமேஷ் அவர்களுக்கு இந்த நெற்பயிர் விவசாயத்தில் மாதம் 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்.மேலும் இவர் ஒரு குடும்பத்திற்கு 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் ரூபாய் ஒரு மாதத்திற்கு போதுமானது எனக் கூறுகிறார்.

மேலும் இன்று உள்ள இளைஞர்களில் பாதிப்பேர் நல்ல படிப்பை படித்துவிட்டு 15 ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய்க்கு வேலை செய்கிறார்கள் எனக் கூறுகிறார்.அவர்கள் எல்லாம் இந்த விவசாயத்தை செய்தால் அதில் முப்பதாயிரம் வரை வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்.

தொழிலைத் தொடங்கிய உடன் லாபம் வருகிறது என்ற எண்ணத்தில் தொழிலை தொடங்கினால் எந்த தொழிலிலுமே லாபம் வராது எனக் கூறுகிறார். ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே உளைப்பிற்கான வருமானம் கிடைக்கும் என கூறுகிறார்.

அறுவடை செய்த காய்ந்த பயிர்களை மாடுகள் உண்பதற்கு ஒரு ஏக்கர் 500 ரூபாய் என்று விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.மேலும் விவசாயம் செய்வதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்கு இவர் கற்றுத் தருவதாகவும் கூறுகிறார்.

திரு ரமேஷ் அவர்கள் இந்த நெற்பயிர் விவசாயத்தை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:வாத்து வளர்ப்பில் அசத்தும் இளைஞர்.

Leave a Reply