நெய் உற்பத்தியில் சிறந்த லாபம்.

திரு தெய்வசிகாமணி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் கிராமம் என்னும் ஊரில் நெய் உற்பத்தியினை மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய நெய் உற்பத்தி முறை மற்றும் லாபத்தை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு தெய்வசிகாமணி அவர்களின் வாழ்க்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் கிராமம் என்னும் ஊரில் திரு தெய்வசிகாமணி அவர்கள் வசித்து வருவதாக கூறுகிறார்.இவர் இங்கு  வெறும் நான்கு மாடுகளை வைத்து அதன் மூலம் நெய் உற்பத்தி செய்து அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இன்றுள்ள நிலையில் அதிக விவசாயிகள் மற்றும் மாட்டு பண்ணையாளர்கள் மாடுகளின் மூலம் பாலினை கறந்து விற்பனை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த பாலினை வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கும், பால் அங்காடிகளுக்கும் சென்று விற்பனை செய்து வருகின்றன என திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறு இவர்கள் ஒரே நோக்கத்துடன் பாலினை விற்பதால் அதிக லாபத்தை பெற முடியாது எனக் கூறுகிறார். எனவே இவர் பாலில் இருந்து நெய் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை தயாரித்து அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு பாலில் மதிப்புக்கூட்டல் முறையை பயன்படுத்தினால் அதிக லாபத்தை பெறலாம் எனவும் திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார்.

நெய் உற்பத்தியின் தொடக்கம்

திரு தெய்வசிகாமணி அவர்கள் முதலில் அவருடைய மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலினை மட்டுமே விற்பனை செய்து வந்ததாக கூறுகிறார். அதன் பிறகு இவருடைய நண்பர் ஒருவரின் ஆலோசனையின் மூலம் பாலில் இருந்து நெய், வெண்ணை, தயிர் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்து வந்ததாக கூறுகிறார்.

இதில் இவர் அதிக அளவு நெய் விற்பனையையே செய்து வந்ததாக கூறுகிறார். இப்போது பல்வேறு நெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக அளவு வந்துவிட்டது. ஆனால் திரு தெய்வசிகாமணி அவர்கள் தம்முடைய மக்களுக்கு தாமே நெய்யை தூய்மையான முறையில் உற்பத்தி செய்து அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நெய்யை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் முறையை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் திரு தெய்வசிகாமணி அவர்கள் நாட்டு மாட்டு பாலில் உள்ள சத்துக்களை அறிந்து கொண்டு அதன் பிறகு இந்த நெய் உற்பத்தியை தொடங்கியதாக கூறுகிறார்.திரு தெய்வசிகாமணி அவர்கள் இந்த நெய் உற்பத்தியை மிகவும் சுத்தமான முறையில் தரமாக செய்து வருகிறார்.

Profit of ghee sales system

திரு தெய்வசிகாமணி அவர்கள் இந்த நெய் உற்பத்தியில் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். சாதாரணமாக பாலை விற்பதை விட நெய்யாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் இவர் மூன்றிலிருந்து நான்கு மடங்கு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் நாட்டு மாட்டு பாலினை மட்டும் விற்பனை செய்து வரும் போது இவருக்கு அதன் மூலம் அதிக அளவு லாபம் கிடைக்கவில்லை எனக் கூறுகிறார். ஆனால் இப்பொழுது பாலினை மதிப்புக்கூட்டல் செய்து விற்பனை செய்து வருவதால் அதிக அளவு லாபத்தையும், மனநிறைவையும் பெற்று வருவதாக திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார்.

திரு தெய்வசிகாமணி அவர்கள் இந்த நெய் உற்பத்தியில் உழைப்பு அதிக அளவில் இருந்தால் கூட லாபமானது நமக்கு அதைவிட அதிக அளவு கிடைக்கும் என கூறுகிறார். இதனால் திரு தெய்வசிகாமணி அவர்கள் இந்த நெய் உற்பத்தியை அதிக அளவில் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவரிடம் நெய் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் நெய்யை வாங்கி செல்வதாக கூறுகிறார். வாடிக்கையாளர்கள் காத்திருந்து கூட நெய்யை வாங்கி செல்வதாக திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார்.

நாட்டு மாடுகளின் பால்

திரு தெய்வசிகாமணி அவர்கள் நெய் தயாரிப்பதற்கு நாட்டு மாடுகளின் பாலினை மட்டுமே பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். மற்ற ஜெர்சி போன்ற வெளிநாட்டு வகை மாடுகளின் பால் வகைகளை பயன்படுத்துவதில்லை என கூறுகிறார்.

இவர் இவ்வாறு நாட்டு மாடுகளின் பாலை மட்டும் பயன்படுத்துவதற்குக் காரணம் நாட்டு மாடுகளின் பால்களிலேயே அதிக அளவு சத்துக்கள் இருப்பதாகவும், குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிக நன்மை அளிக்கும் என்ற காரணத்திற்காகவும் இவர் நாட்டு மாடுகளின் பாலை மட்டும் பயன்படுத்தி வருவதாக கூறுகிறார்.

இந்த நாட்டு மாடுகள் இயற்கையான முறையில் கர்ப்பம் தரித்து கன்றினை ஈன்ற கூடியது எனக் கூறுகிறார். இவர் இவைகள் இயற்கையான முறையில் குட்டிகளை போடுவதால் இவற்றின் பாலும் மிக நன்மை தரும் என கூறுகிறார்.

ஆனால் ஜெர்சி மற்றும் பிற மாட்டு வகைகள் ஊசிகளின் மூலம் கர்ப்பம் தரித்து கன்றினை ஈன்றுகிறது. இதனால் இந்த மாடுகளின் பாலில் சத்துக்கள் எதுவும் இருப்பதில்லை எனக் கூறுகிறார். இதனால் நாட்டு மாடுகளில் பாலினை பயன்படுத்துவது மிக சிறப்பான ஒன்று என திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார்.

திரு தெய்வசிகாமணி அவர்களிடம் வெறும் நான்கு நாட்டு மாடுகளை இருப்பதாக கூறுகிறார். இந்த நான்கு மாடுகளை வைத்து எதுவும் செய்ய முடியாது எனக் கூறுகிறார். இதனால் இவருக்கு பாலின் தேவை அதிக அளவில் இருப்பதாக கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் ஊரின் அருகில் உள்ள 10 கிராமங்களுக்கு சென்று நாட்டு மாடுகளின் பாலினை வாங்கி வந்து அதன் மூலம் நெய்யை உற்பத்தி செய்து வருவதாக திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார். இவ்வாறு வாங்கி வரும் பாலில் இருந்தே இவர் நெய் மற்றும் தயிர் வகைகளை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

இவர் ஒரு நாளைக்கு 100 லிருந்து 150 லிட்டர் பாலை வாங்கி அதன் மூலம் நெய்யை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார். ஒரு லிட்டர் பாலில் இருந்து 40 மில்லி அளவு மட்டுமே நெய் கிடைக்கும் என கூறுகிறார். மற்றும் ஒரு கிலோ நெய் கிடைப்பதற்கு 25 லிட்டர் பால் தேவைப்படுவதாக திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார்.

Ghee production method

பாலில் இருந்து நெய் தயார் செய்வதற்கு முதலில் நெய் தயார் செய்யும் இயந்திரத்தில் உள்ள பாத்திரத்தில் பாலை ஊற்ற வேண்டும் என கூறுகிறார். அதன்பிறகு இயந்திரத்தை இயக்கினால் ஒரு வழியில் பாலும், மற்றொரு வழியில் வெண்ணையும் வருவதாக கூறுகிறார்.

இவ்வாறு வரும் வெண்ணையை எடுத்து நான்கு நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து அதன் பின் அந்த வெண்ணையை உருக்கினால் நெய் கிடைக்கும் என திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த நெய் தயாரிக்க பயன்படும் பாத்திரத்தில் 30 லிட்டர் பாலை ஊற்றிவதாக கூறுகிறார்.

இந்த இயந்திரத்தில் இருந்து பால் மற்றும் வெண்ணை தனித்தனியாக கிடைப்பதற்கு 30 நிமிடங்கள் தேவைப்படுவதாக கூறுகிறார். வெண்ணெயை உருக்கி உடனே நெய் கிடைக்காது என கூறுகிறார்.வெண்ணெயை உருக்கி நான்கிலிருந்து ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகே நெய் கிடைக்கும் என திரு தெய்வசிகாமணி அவர்கள் கூறுகிறார்.

நெய் தயாரிப்பதற்கு 30 லிட்டர் பாலினை இயந்திரத்தில் ஊற்றினால் ஒன்றரை லிட்டர் வெண்ணை கிடைப்பதாக கூறுகிறார். இவ்வாறு கிடைக்கும் ஒன்றரை லிட்டர் வெண்ணையில் இருந்து 800 ல் இருந்து 900 கிராம் நெய் கிடைப்பதாக கூறுகிறார்.

இதில் கிடைக்கும் பாலினை தயிராக மாற்றி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

நெய்யின் விற்பனை முறை

திரு தெய்வசிகாமணி அவர்கள் இந்த நெய் விற்பனை முறையை தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். வாடிக்கையாளர்கள் கேட்கும் அளவுகளில் நெய்யை பாக்கெட் செய்து அனுப்புவதாக கூறுகிறார்.

மேலும் இவர்கள் பாக்கெட் செய்து அனுப்புவதை மிகவும் பாதுகாப்பான முறையில் செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இயந்திரத்திலிருந்து  பாதி வெண்ணை மற்றும் பாதி பால் கிடைப்பதால் அந்த பாலினை தயிராக செய்து அதனையும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

திரு தெய்வசிகாமணி அவர்கள் இந்த நெய்யினை விற்பனை செய்வதற்கு சான்றிதழ்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.மேலும் இவர் பாலினை 40 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் நெய்யினை ஆறு நூறு ரூபாய்க்கும் அளித்து வருவதாக கூறுகிறார்.

திரு தெய்வசிகாமணி அவர்கள் மிகவும் தூய்மையான முறையில் எந்தவித கலப்படமும் இல்லாத வகையில் இந்த நெய் உற்பத்தியை சிறப்பாக செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:தர்பூசணி வளர்ப்பில் நிறைந்த வருமானம்.

One comment

Leave a Reply