காக்கட்டான் பூ சாகுபடியில் சிறந்த லாபம்.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் காக்கட்டான் பூ சாகுபடியை செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய காக்கட்டான் பூ சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

காக்கட்டான் பூ சாகுபடியின் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் காக்கட்டான் பூ சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவருடைய சொந்த ஊர் இதுவே ஆகும் எனவும் இவர் சிறு வயதில் இருக்கும் போது இருந்தே இவருடைய தந்தை விவசாயம் செய்து வந்ததாகவும், இதனால் இவரும் விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

இவ்வாறு இவர் விவசாயத்தை தொடங்கி அதிகளவில் பூக்கள் சாகுபடியை செய்து வந்ததாகவும், இப்பொழுது அதிக அளவில் காக்கட்டான் பூ சந்தைகளில் விற்பனை ஆகி வருவதால் காக்கட்டான் பூ சாகுபடி செய்யலாம் என்ற எண்ணத்தில் காக்கட்டான் பூ சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதாகக் கூறுகிறார்.

கடந்த 20 வருடங்களாக இவர் விவசாயம் செய்து வருவதாகவும் இந்த இருபது வருடத்தில் இவர் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்து வந்ததாகவும், இப்பொழுது காக்கட்டான் பூ சாகுபடியின் மூலம் இவர் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

Planting method

காக்கட்டான் பூ சாகுபடியை இவர் கடந்த மூன்று வருடங்களாக செய்து வருவதாகவும், இந்த காக்கட்டான் பூ சாகுபடியை இவர் சிறப்பான முறையில் செய்து அதன்மூலம் நல்ல லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.

காக்கட்டான் பூ செடிகளை நடவு செய்வதற்கு வெளியிலிருந்து நாற்றுகளை வாங்கி வந்து நட்டு வளர்த்து வருவதாகவும், சில செடிகளை இவரே உருவாக்கி அதனை வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் செடியினை மண்ணில் நடுவதற்கு முன்பு மண்ணை நன்றாக இயற்கை உரமான மாட்டுச் சாணத்தைப் போட்டு பதப்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு, செடியினை நட்டு வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் செடி நட்ட பிறகு அதன் மீது இவர் இயற்கை உரங்களை போடுவதாகவும் இவ்வாறு இயற்கை உரங்களை செடியின் வேரில் போடுவதால் செடிகள் நல்ல சிறப்பான முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

இந்த முறையில் செடிகளை நட்டு இயற்கை உரங்களை அளித்து பராமரித்து வந்தால் செடிகள் மிகச் சிறப்பான முறையில் வளர்ந்து அதிக அளவு பூக்களை அளிக்கும் என கூறுகிறார்.

காக்கட்டான் பூ சாகுபடியை இவர் பத்திலிருந்து பதினைந்து சென்ட் பரப்பளவில் சாகுபடி செய்து வருவதாகவும் இப்பொழுது அதிகமாக இன்னொரு சென்ட் பரப்பளவில் காக்கட்டான் பூ சாகுபடியை செய்து வருவதாக கூறுகிறார்.

காக்கட்டான் பூவின் வகைகள்

காக்கட்டான் பூ அதிக அளவில் விற்பனையாகும் பூ எனவும் இந்த பூக்கள் மொத்தம் இரண்டு வகையாக இருப்பதாகவும், அது நாட்டு காக்கட்டான் பூ மற்றும் ஹைபிரிட் வகை காக்கட்டான் பூ என கூறுகிறார்.

இந்த நாட்டு காக்கட்டான் பூ மற்றும் ஹைபிரிட் காக்கட்டான் வகை பூக்களில் இவர் ஹைபிரிட் காக்கட்டான் பூ வகையை சாகுபடி செய்து வருவதாகவும், இந்த வகை காக்கட்டான் பூக்கள் அதிகளவில் பூக்களை அளிக்கும் என கூறுகிறார்.

நாட்டு காக்கட்டான் பூ வகைகளை தினமும் பறிக்க வேண்டும் எனவும் இல்லை எனில் அந்த பூக்கள் மலர்ந்து விடும் எனவும், ஆனா ஹைபிரிட் வகை காக்கட்டான் பூ ஆறிலிருந்து ஏழு நாட்கள் வரை கூட மலராமல் செடியில் மொக்காக இருக்கும் எனக் கூறுகிறார்.

எனவே நாட்டு காக்கட்டான் பூ வகைகளை வளர்த்தால் அதனை தினமும் பறிக்க வேண்டிய வேலை இருக்கும் எனவும் ஆனால் ஹைபிரிட் வகை காக்கட்டான் பூ செடிகளை சாகுபடி செய்தால் அதை ஐந்திலிருந்து ஆறு நாட்களுக்கு பிறகு கூட பறித்து விற்பனை செய்யலாம் என கூறுகிறார்.

மேலும் ஹைப்ரிட் செடிகள் அதிக அளவில் பூக்களை அளிக்கும் எனவும் இவ்வாறு அதிக அளவில் பூக்கள் கிடைத்தால் அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

Harvesting method

காக்கட்டான் பூ செடியினை நன்றாக உரத்தினை போட்டு பராமரித்து வளர்க்க வேண்டும் எனவும், இவ்வாறு நட்ட செடியானது ஒரு வருடத்திற்கு பிறகு பூ பூக்க ஆரம்பம் செய்து விடும் என கூறுகிறார்.

இவ்வாறு பூ பூக்க தொடங்கியதிலிருந்து பூக்களை பறிக்க தொடங்கிவிடலாம் எனவும், வருடம் செல்லச் செல்ல செடியில் அதிக அளவில் பூக்கள் பூக்கும் எனவும், செடியினை மிகுந்த பராமரிப்புடன் பராமரித்து வந்தால் முதல் வருடத்திலேயே அதிக அளவு பூக்கள் பூக்கும் எனவும் கூறுகிறார்.

காக்கட்டான் பூ செடி வளர்ந்து பூ தரும் வரை காக்கட்டான் பூ தோட்டத்தில் ஏதாவது ஒரு ஊடுபயிரினை பயிரிட்டு வளர்க்கலாம் எனவும், இதன் மூலமும் நல்ல லாபம் கிடைக்கும் என கூறுகிறார்.

வெங்காயம் போன்ற ஊடு பயிரினை செடிகளுக்கு இடையில் பயிரிட்டு வளர்க்கலாம் எனவும் இவ்வாறு ஊடு பயிரினை காக்கட்டான்பூ தோட்டத்தில் வளர்ப்பதினால் காக்கட்டான் செடிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் செடிகள் நல்ல முறையில் வளரும் எனவும் கூறுகிறார்.

பராமரிப்பு முறை மற்றும் நீரினை அளிக்கும் முறை

காக்கட்டான் பூ செடி வளர்ந்து ஒரு வருடத்தில் பூ தரும் வரை செடியினை நன்றாக பராமரிக்க வேண்டும் எனவும் உரத்தினை அதிகளவில் செடிகளுக்கு அளிக்க வேண்டும் எனவும், இயற்கை உரத்தினை அளித்து வளர்த்து வந்தால் செடிகள் சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.

மேலும் செடிகளுக்கு நீரினை வாரத்திற்கு ஒரு முறை அளிக்க வேண்டும் எனவும், நீர் அதிகளவில் செடிகளுக்கு கிடைத்தால் மட்டுமே செடிகள் நல்ல முறையில் வளர்ந்து அதிக‌ளவில் பூக்களை அளிக்கும் என கூறுகிறார்.

மேலும் சில சமயங்களில் செடிகளுக்கு இவர் செயற்கை உரங்களை அளித்து வருவதாகவும், செடிகளுக்கு ஏற்படும் நோய் தொற்றினை தடுப்பதற்கு இவர் இயற்கை மருந்துகள் மற்றும் செயற்கை மருந்துகள் ஆகிய இரண்டையும் அளித்து வருவதாக கூறுகிறார்.

செடிகள் வளர்ந்து மலரை கொடுக்கும் வரை செடியினை நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டும் எனவும் பராமரிப்பு இல்லை எனில் செடிகளில் அதிகளவில் பூக்கள் பூக்காது எனவும் கூறுகிறார்.

Sales method and profit

காக்கட்டான் பூக்களை இவர் பறித்து இவருடைய ஊரிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும் மற்றும் வியாபாரிகள் பூக்களை எடுத்து செல்ல வருவார்கள் எனவும் அவரிடமும் இவர் பூக்களை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

ஒரு கிலோ காக்கட்டான் பூ 200 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாகவும் மற்றும் விழாக்காலங்களிலும், சில நிகழ்ச்சிகளின் போதும் பூக்கள் அதிக விலையில் விற்பனையாகும் எனவும் இதன் மூலம் இவர் நல்ல லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் இவர் காக்கட்டான்பூ சாகுபடியை மிகச்சிறப்பான முறையில் மிகுந்த பராமரிப்புடன் செய்து வருவதாகவும், இந்த முறையில் இவர் பராமரித்து வளர்த்து வருவதால் இவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான காப்பி கொட்டை சாகுபடி.

Leave a Reply