மா இஞ்சி சாகுபடியில் சிறந்த லாபம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் மா இஞ்சி சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரையும், இவருடைய மா இஞ்சி சாகுபடி முறையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

The beginning of agriculture

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் மா இஞ்சி சாகுபடியை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

இவர் இவரது கல்லூரி படிப்பினை முடித்து விட்டு இரண்டு வருடம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கொண்டிருந்ததாகவும், சிறுவயதிலிருந்தே இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்து வந்ததால் தனியார் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தை தொடங்கியதாக கூறுகிறார்.

மேலும் நம்மை நம்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சிறந்த முறையில் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இவர் விளைவிக்கும் அனைத்து பொருட்களையும் இயற்கையான முறையில் எந்த செயற்கை உரங்களையும் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார்.

கரும்பு, மஞ்சள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இவர் விவசாயம் செய்து வந்து கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு மா இஞ்சி சாகுபடியை செய்யலாம் என்ற எண்ணத்துடன் மாஇஞ்சி சாகுபடியை தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார்.

சிறப்பான மா இஞ்சி

மா இஞ்சி என்பது ஒரு புதிய வகை இஞ்சி எனவும் இது சாதாரண இஞ்சியைப் போன்று இல்லாமல் வேறுபட்டு இருக்கும் எனவும், இந்த இஞ்சியில் மாம்பழ வாசனை வரும் எனவும் இதன் காரணமாகவே இந்த இஞ்சிக்கு மா இஞ்சி என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த மா இஞ்சி பார்ப்பதற்கு மஞ்சள் போன்ற தோற்றத்தில் இருக்கும் எனவும், சிலர் இந்த மா இஞ்சியை பார்த்து மஞ்சள் என்று ஏமாந்து இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த மா இஞ்சி மிகவும் சிறப்பான வகை எனவும், அதிக அளவு மருத்துவ குணம் இந்த மா இஞ்சியில் இருப்பதாகவும் இதனால் அதிக அளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து இந்த மா இஞ்சியை வாங்கி செல்வதாகவும் கூறுகிறார்.

மேலும் இஞ்சியை விட மா இஞ்சியில் காரத்தன்மை குறைவாகவே இருக்கும் எனவும், இதன் காரணமாகவும் இந்த இஞ்சியை மா இஞ்சி என்று அழைப்பார்கள் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த மா இஞ்சி வகை அதிகமாக ஊறுகாய் தயாரிப்பதற்கு பயன்பட்டு வருவதாகவும், இதில் ஊறுகாய் தயாரித்தால் சுவை மிகச் சிறப்பாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

Mango Ginger cultivation method

மா இஞ்சி சாகுபடியை இவர் மிக தரமான முறையில் உற்பத்தி செய்து எந்தவித செயற்கை மருந்துகளையும் பயன்படுத்தாமல் சாகுபடி செய்து அதனை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மா இஞ்சி சாகுபடியை இவர் 10 ஏக்கர் நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வருவதாகவும், இந்த பத்து ஏக்கர் நிலத்தில் உள்ள அனைத்து செடிகளும் மிகச்சிறப்பான முறையில் வளர்ந்து நல்ல விளைச்சலை தருவதாக கூறுகிறார்.

நிலத்தினில் மா இஞ்சியை விதைப்பதற்கு முன்பு நிலத்தினை நன்றாக உழுது வைத்துக் கொள்வதாகவும், அதன் பிறகு நிலத்தில் இயற்கை உரங்கள் மாட்டுச்சாணம் போன்ற உரங்களை போட்டு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொள்வதாக கூறுகிறார்.

இவ்வாறு நிலத்தை நன்றாக பதப்படுத்தி வைத்துக் கொண்ட பிறகு  நிலத்தில் மா இஞ்சியை விதைத்து சிறப்பாக விவசாயம் செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இந்த மா இஞ்சியை கொண்டு ஊறுகாய் தயாரிப்பதால் அந்த ஊறுகாயை நாம் உண்ணும் போது நமக்கு அதிக அளவு உமிழ்நீர் சுரக்கும் எனவும், இதனால் இன்சுலின் பிரச்சனைகள் குணமாகி விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களும், மூலம் மற்றும் அல்சர் ஆகிய நோய்கள் உள்ளவர்கள் இந்த மா இஞ்சியை எடுத்துக் கொண்டால் அனைத்து நோய்களும் குணமாகி விடும் எனவும் கூறுகிறார்.

மேலும் மா இஞ்சியின் குணமானது புண்களை அதிகப்படுத்தாது எனவும் அதிகமாக இருக்கும் புண்களை குணப்படுத்தும் வகையிலேயே இந்த மா இஞ்சி இருக்கும் எனவும் கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை

மா இஞ்சி சாகுபடியை இவர் 10 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து வருவதாகவும் அதில் இப்பொழுது 5 ஏக்கர் நிலத்தில் உள்ள மா இஞ்சியை அறுவடை செய்து உள்ளதாக கூறுகிறார்.

மா இஞ்சியையை விதைத்த எட்டாவது மாதத்தில் அறுவடைக்கு வந்து விடும் எனவும், எட்டாவது மாதத்தில் இருந்து இதில் விளைச்சலை நாம் எடுத்துக் கொண்டே இருக்கலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இவர் இப்பொழுதுதான் முதன் முதலாக மா இஞ்சி சாகுபடி செய்து உள்ளதாகவும், முதல் முறையிலேயே நல்ல விளைச்சல் இந்த மா இஞ்சி சாகுபடியின் மூலம் கிடைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

10 சென்ட் நிலத்தில் விளைந்த மா இஞ்சி சாகுபடியில் இருந்து ஆயிரம் கிலோ மா இஞ்சிகள் கிடைத்திருப்பதாகவும், இது மிக சிறந்த விளைச்சல் எனவும், அடுத்த முறை மா இஞ்சி சாகுபடி செய்யும் போது இதை விட அதிக அளவு விளைச்சல் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் இது பார்ப்பதற்கு மஞ்சளின் செடி மற்றும் மஞ்சளைப் போல் இருக்கும் எனவும், மஞ்சள் செடியை விட இரண்டு அடி உயரமாக வளரும் எனவும் கூறுகிறார்.

மா இஞ்சியை விதைத்த ஏழாவது மாதத்தில் செடியின் தலை மடிந்து விடும் எனவும் இவ்வாறு செடியின் தலை மடிந்து இருப்பதை கொண்டு மா இஞ்சியை அறுவடை செய்யத் தொடங்கி விடலாம் என்று அறிந்து கொள்ளலாம் என கூறுகிறார்.

மேலும் இந்த மா இஞ்சியை ஆறாவது மாதத்தில் அறுவடை செய்யலாம் எனவும் ஆனால் ஆறாவது மாதத்தில் அறுவடை செய்தால் குறைந்த அளவே அறுவடை கிடைக்கும் எனவும், எனவே எட்டாவது மாதத்தில் அறுவடையை தொடங்கினால் நல்ல விளைச்சல் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மற்றும் இந்த மா இஞ்சியை மாடித் தோட்டத்திலும் மிகச் சிறப்பான முறையில் செய்ய முடியும் எனவும், மாடியிலும் நல்ல சிறப்பான முறையில் வளர்ந்து நல்ல விளைச்சலை அளிக்கும் எனவும் கூறுகிறார்.

Sales method and profit

மா இஞ்சி சாகுபடியின் மூலம் இவருக்கு நல்ல விளைச்சல் கிடைத்து இருப்பதாகவும், இதனை இவருடைய ஊரில் உள்ள சந்தையில் கொண்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் மா இஞ்சி வேண்டுமென்று இவருடைய தோட்டத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் இவர் நிலத்தில் இருந்து அப்பொழுதே அறுவடை செய்து புதியதாக வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் இவ்வாறு இவர் சிறப்பான முறையில் தரமாக மா இஞ்சி சாகுபடியை விளைச்சல் செய்து அறுவடை செய்து வருவதால் அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வந்து இஞ்சியை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

இதன் மூலம் இவர் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும், மா இஞ்சி சாகுபடியை மிகச் சிறப்பான முறையில் இயற்கையான வழி முறையை பின்பற்றி செய்து வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க:சிறப்பான வெள்ளரிக்காய் சாகுபடி.

Leave a Reply