நோனி பழம் சாகுபடியில் சிறந்த லாபம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நோனி பழம் சாகுபடி செய்து அதன் மூலம் சீரம் உற்பத்தி செய்து சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நோனி பழம் சாகுபடி மற்றும் சீரம் தயாரிப்பு முறையை பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.

நோனி பழம் சாகுபடியின் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் பெண்மணி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் நோனி பழம் சாகுபடி செய்து அதன் மூலம் சீரம் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

நோனி பழம் சாகுபடியை இவர் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வருவதாகவும், இவருடைய வீட்டில் ஒரு தோட்டம் அமைத்து அனைத்து செடி வகைகளையும் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு அதிகளவில் இருந்து வந்ததாகவும் கூறுகிறார்.

இதன் காரணமாக இவர் இவருடைய வீட்டில் பெரிய அளவிலான ஒரு தோட்டத்தை அமைத்து அனைத்து வகை செடிகளையும் வளர்த்து வந்ததாகவும் அப்பொழுதுதான் இவருக்கு இந்த நோனி பழம் இருப்பது தெரிந்து அதனை வளர்க்க தொடங்கியதாக கூறுகிறார்.

இவருடைய தோட்டம் எப்பொழுதுமே பச்சைபசேல் என்று இருக்க வேண்டும் என்று இவர் ஆசை கொண்டு இருந்ததாகவும், இந்த நோனி பழத்தின் இலைகள் பச்சை பசேலென்று இருப்பதாலும் பெரிய இலைகளாக இருப்பதாலும் இந்த நோனி பழ செடியை இவர் வளர்க்க தொடங்கியதாக கூறுகிறார்.

இப்பொழுது இவர் இவருடைய தோட்டத்தில் இந்த நோனி பழ செடியை நட்டு சிறப்பான முறையில் நோனி பழங்களை சாகுபடி செய்து அதன் மூலம் சீரம் உற்பத்தி செய்து விற்பனை செய்து நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

Benefits of noni fruit

நோனி பழத்தில் அதிகளவு பயன்கள் இருப்பதாகவும் இதில் அதிக மருத்துவ குணம் இருப்பதாகவும், பல நோய்களுக்கு மருந்து தயாரிக்க இந்த நோனி பழம் பயன்பட்டு வருவதாகவும் இவர் கூறுகிறார்.

இந்த நோனி பழத்தின் சுவையானது இனிப்பாக இருக்காது எனவும் காரத்தன்மை ஆக இருக்கும் எனவும் இதனை நாம் உண்ண முடியாது எனவும், மருந்து தயாரிக்க மட்டுமே இது அதிக அளவில் பயன்படும் எனவும் இவர் கூறுகிறார்.

நோனி பழ மரத்தின் இலைகளை பறித்து அதனை காயவைத்து அதனையும் மருந்து தயாரிக்க பயன்படுத்த முடியும் எனவும் இது போல் அதிக அளவில் மருத்துவ குணம் இந்த நோனி மரத்தில் இருப்பதாக இவர் கூறுகிறார்.

முதலில் இவர் இந்த நோனி பழ மரத்தை வீட்டுத்தோட்டத்தில் பச்சை பசேலென்று இருக்கும் என்பதற்காக வைத்து வளர்த்ததாகவும்,செடி நன்றாக வளர்ந்த பிறகே இந்த நோனி பழம் மரத்தில் அதிகளவு மருத்துவ குணம் இருப்பதை இவர் அறிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

இவ்வாறு அதிக அளவில் மருத்துவ குணம் இந்த நோனி மரத்தில் இருப்பதால், இந்த நோனி பழத்தின் சாகுபடியின் மூலம் இவர் சீரம் தயாரிப்பு விற்பனை செய்து சிறந்த லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.

நோனி மரத்தின் வளர்ப்பு முறை

நோனி பழ மரத்தை வளர்க்கும் முறை மிகவும் சுலபமான முறை எனவும், இந்த நோனி பழ மரத்தை வளர்ப்பதற்கு அதிக அளவு பராமரிப்பு முறை தேவை இல்லை எனவும் கூறுகிறார்.

இவருடைய தோட்டத்தில் இவர் நோனி பழம் சாகுபடி செய்து வருவதாகவும் இந்த நோனி பழ செடியை விதைகள் மூலமும் மற்றும் நாற்றுகள் மூலமும் வளர்க்க முடியும் என கூறுகிறார்.

இரண்டு அடி ஆழத்தில் குழி தோண்டி நோனி பழ நாற்றினை நட்டு வளர்க்க வேண்டும் எனவும், ஒவ்வொரு நாற்றுகளுக்கு இடையிலும் இரண்டிலிருந்து மூன்று அடி இடைவெளி விட்டு நட்டு வளர்க்க வேண்டும் என கூறுகிறார்.

ஏனெனில் இந்த இடைவெளியில் நாற்றுகளை நட்டு வளர்த்தால் தான் பழங்களை பறிப்பதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் எனவும் இல்லை எனில் சற்று கடினமாக இருக்கும் என கூறுகிறார்.

செடி நன்றாக வளர்வதற்கு இவர் இயற்கை உரமான மாட்டுச் சாணம் போன்றவற்றை அளித்து வருவதாகவும் இதனை அளிப்பதால் செடி நன்றாக வளரும் எனவும் கூறுகிறார்.

எனவே இவ்வாறு இயற்கை உரங்களை மட்டுமே செடிகளுக்கு அளித்து வளர்க்க வேண்டும் எனவும் செயற்கை உரங்களை அளித்து வளர்த்தால் செடி நன்றாக வளராது எனவும் நல்ல விளைச்சல் கிடைக்காது எனவும் கூறுகிறார்.

Serum preparation method

நோனி பழத்தை சிறப்பான முறையில் சாகுபடி செய்து அதனை வைத்து சீரம் தயாரிப்பு விற்பனை செய்து வருவதாக இவர் கூறுகிறார்‌.

நோனி பழத்தில் சீரம் தயாரிக்கும் முறை மிகவும் சுலபமான முறை எனவும், இந்த நோனி பழத்தின் மூலம் சீரம் தயாரித்து விற்பனை செய்வதின் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

நோனி பழம் பழுத்த பிறகு அதனைப் பறித்து ஒன்றாக ஒரு ரப்பரால் ஆன தொட்டியில் போட்டு 6 வாரம் வரை மூடி வைக்க வேண்டும் எனவும், இவ்வாறு ஆறு வாரம் மூடி வைத்த பிறகு அதனை எடுத்து பார்த்தால் அதில் சீரம் உற்பத்தி ஆகி இருக்கும் என கூறுகிறார்.

இவ்வாறு உற்பத்தியான சிரத்தை காயில் இருந்து தனியாக வடிகட்டி எடுத்து அதனை விற்பனை செய்து வருவதாகவும், மேலும் நோனி பழத்தில் இலைகளை காயவைத்து அதனை பொடியாக்கி அதில் இருந்தும் இவர் மருந்து தயாரித்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

காலையிலும் மாலையிலும் நாம் தேநீர் அருந்துவது போல நோனி பழத்தில் இருந்து தயாரிக்கும் சிரத்தை குடித்தால் உடலில் இருக்கும் பலவித நோய்கள் குணமாகி விடும் என கூறுகிறார்.

இவ்வாறு நோனி பழத்தில் இருந்து சீரம் தயாரிக்கும் முறை மிகவும் சுலபமானது எனவும் இதனை அனைவராலும் மிக சுலபமான முறையில் தயாரித்து விற்பனை செய்து நிறைந்த லாபத்தை பெற முடியும் என கூறுகிறார்.

அறுவடை செய்யும் முறை மற்றும் நீரினை அளிக்கும் முறை

நோனி பழ நாற்றினை நட்ட ஒன்றரை வருடத்தில் பழம் பழுத்து அறுவடைக்கு வந்துவிடும் எனவும் இவ்வாறு அறுவடைக்கு வந்தவுடன் அதனை அறுவடை செய்து சீரம் தயாரிக்கத் தொடங்கி விடுவதாக இவர் கூறுகிறார்.

இந்தச் செடிக்கு அதிகளவு நீரினை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் செடி வளரும் வரை மட்டும் நீரினை அளிக்கலாம் எனவும் செடி வளர்ந்த பிறகு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அளித்தால் போதுமானது எனக் கூறுகிறார்.

Sales method and profit

நோனி பழத்தில் இருந்து சீரம் தயாரித்து அதனை வெளியில் இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

இந்தச் சீரத்தில் அதிகளவில் மருத்துவ குணம் இருப்பதால் அதிகளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து சீரம் வாங்கிச் செல்வதாகவும் இதன் மூலம் இவர் நிறைந்த லாபத்தை பெற்று வருவதாகக் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த நோனி பழம் சாகுபடியை மிக சிறப்பான முறையில் செய்து தரமாக சீரம் தயாரித்து வருவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க:பாக்கு சாகுபடியில் லட்சங்களில் வருமானம்.

Leave a Reply