செம்மறி ஆடுகள் வளர்ப்பில் சிறந்த லாபம்.

திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரியில் ஒரு செம்மறி ஆட்டுப் பண்ணையை வைத்து மிக குறுகிய காலத்தில் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய செம்மறி ஆட்டு பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

Sheep Breeding

திரு குமார் அவர்கள் சென்னையில் உள்ள பூனேரியில் ஒரு செம்மறி ஆட்டுப் பண்ணையை வைத்து சிறப்பாக நடத்தி வருகிறார். இந்த செம்மறி ஆடு வளர்ப்பில் இவர் குறுகிய காலத்தில் அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இந்த செம்மறி ஆடுகளை பக்ரீத் பண்டிகை காலங்களில் வளர்ப்பதால் அதிக அளவில் விற்பனையாகி லாபத்தை தரும் என திரு குமார் அவர்கள் கூறுகிறார். மேலும் ஆடுகளை சரியான முறையில் வாங்கி விற்பனை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் இந்த செம்மறி ஆடு களை முதலில் குறைந்த அளவே வளர்த்ததாக கூறுகிறார். ஏனெனில் இவற்றிற்கு அளிக்கும் தீவனங்களில் அடர் தீவனங்கள் அதிகளவில் அளிக்க வேண்டும் என்பதற்காக எனக் கூறுகிறார்.

ஆனால் இப்பொழுது இவர் அதிக அளவில் செம்மறி ஆடுகளை வாங்கி வளர்த்து வருவதாக கூறுகிறார். காரணம் அடர் தீவனங்களை குறைத்துக்கொண்டு பசுந்தீவனங்களை ஆடுகளுக்கு அளித்து வருவதாக கூறுகிறார்.

இதனால் தீவனச்செலவு அதிக அளவில் இல்லாத காரணத்தால் இந்த செம்மறி ஆடு வகைகளை அதிகளவில் வாங்கி வளர்த்து வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

செம்மறி ஆடுகளின் விற்பனை முறை

திரு குமார் அவர்கள் முதலில் குறைந்த அளவில் மட்டுமே செம்மறி ஆடுகளை வளர்த்து வந்ததாக கூறுகிறார். இவ்வாறு இவர் குறைந்த அளவில் செம்மறி ஆடுகளை வளர்த்து கொண்டிருக்கும் போது முஸ்லிம் நண்பர்கள் அதிக அளவில் செம்மறி ஆடுகளை வாங்க வந்ததாக கூறுகிறார்.

இவ்வாறு செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு தேவைப்படுவதால் இவர் அதிக அளவில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார். மேலும் இவருடைய நண்பர்களில் அதிக பேர் இந்த செம்மறி ஆடுகள் வளர்ப்பு முறையை பற்றி கூறியதாகக் கூறுகிறார்.

இந்த முறையில் இவர் செம்மறி ஆடுகளைப் பற்றி அறிந்து கொண்டு இந்த செம்மறி ஆட்டுப் பண்ணையை வைத்து நடத்தி வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார். மற்றும் இந்த செம்மறி ஆடுகள் அதிகமாக முஸ்லிம் பண்டிகைகளில் விற்பனை ஆவதாக கூறுகிறார்.

முஸ்லிம் பண்டிகைகளில் அதிக பேர் வந்து இந்த செம்மறி ஆடுகளை வாங்கி செல்வதாக கூறுகிறார். மேலும் ஆடுகளை வாங்கும் போது சரியான உடல் வளத்துடன் உள்ள ஆடுகளை பார்த்து வாங்கி வருவதாகவும் கூறுகிறார்.

ஏனெனில் இவ்வாறு சரியான முறையில் உள்ள ஆடுகளை மட்டுமே தன் முஸ்லிம் நண்பர்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக கூறுகிறார். மற்றும் இவர் கடந்த வருடம் 20 செம்மறி ஆடுகளை விற்பனை செய்ததாக கூறுகிறார்.

மற்றும் இவருடைய பண்ணையில் எட்டு செம்மறி ஆடுகளையும் இவருடைய நண்பரின் பண்ணைகளில் மீதமுள்ள செம்மறி ஆடுகளையும் விற்பனை செய்ததாக திரு குமார் அவர்கள் கூறுகிறார். இவ்வாறு செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆவதால் இவரும் அதிக அளவில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் பக்ரீத் பண்டிகை காலங்களில் செம்மறி ஆடுகள் முப்பதிலிருந்து நாற்பது கிலோ வரை இருந்தாலும் அந்த செம்மறி ஆடுகளை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

The method By which Muslims use sheep for meat

திரு குமார் அவர்கள் பொதுவாக முஸ்லிம் நண்பர்கள் செம்மறி ஆடுகளை இறைச்சிக்காக வாங்கி செல்லும் போது அதில் சில வழிமுறைகளை பின்பற்றி அந்த வழி முறையில் இருந்தால் மட்டுமே செம்மறி ஆடுகளை வாங்கி செல்வதாக கூறுகிறார்.

அதில் முதல் முறை ஆனது முஸ்லிம் நண்பர்கள் இந்த செம்மறி ஆடுகளை வாங்கும் போது அந்த ஆட்டிற்கு ஒரு வருடம் முடிந்து விட்டதா என பார்த்து தான் வாங்குவார்கள் என கூறுகிறார். மேலும் இவரிடம் ஆடுகளை வாங்க வந்த முஸ்லிம் வாடிக்கையாளர்கள் சிலர் ஆடுகளுக்கு ஒன்றரை வருடம் முழுமையாக முடிந்திருக்க வேண்டும் என கூறியதாகக் கூறுகிறார்.

மேலும் செம்மறி ஆடுகளுக்கு இரண்டு பல்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும், இவ்வாறு  ஆட்டிற்கு இரண்டு பல்கள் இருந்தால் மட்டுமே அவற்றை இறைச்சிக்காக வெட்டுவதாக அவர்கள் கூறியதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர்கள் செம்மறி ஆடுகளுக்கு கொம்புகள் மிகவும் கம்பீரமாக இருக்க வேண்டும் என கூறியதாக கூறுகிறார். நம்முடைய கை விரலை விட சற்று பெரிய அளவில் நிளமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவர் செம்மறி ஆடுகளை வாங்கும் போது குட்டிகளாக வாங்குவதாக கூறுகிறார். இவ்வாறு குட்டிகளாக வாங்கும் போது அவைகளுக்கு கொம்புகள் உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொண்ட பிறகு அந்த செம்மறி குட்டிகளை வாங்கி வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் கொம்புகள் எந்த அளவிற்கு நீளமாக உள்ளதோ அந்த அளவிற்கு அதிக அளவில் ஆடுகள் விலை போகும் என கூறுகிறார். மேலும் இந்த செம்மறி ஆடுகளை கிலோ கணக்கில் பணத்தை கொடுத்து வாங்குவதில்லை என கூறுகிறார்.

ஆடுகள் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக மற்றும் இவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தால் மட்டுமே போதுமானது நாம் எந்த விலையை கூறினாலும் அவர்கள் அந்த விலைக்கே வாங்கி சென்று விடுவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் விலை சற்று அதிகமாக இருந்தால் கூட தரமான செம்மறி ஆடுகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

செம்மறி ஆடுகளின் மதிப்பு

திரு குமார் அவர்கள் செம்மறி ஆடுகளை வாங்கும் போது சிறிதளவு வளர்ந்த ஆடுகளையே வாங்கி வருவதாக கூறுகிறார். மேலும் இந்த செம்மறி ஆடுகளை இறைவனுக்கு படைக்கும் போது ஆண் ஆடுகளையே அனைவரும் பயன்படுத்துவார்கள் என கூறுகிறார்.

பெண் செம்மறி ஆடுகளை அதிக அளவில் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் எனவும் கூறுகிறார்.மற்றும் பெண் செம்மறி ஆடுகளை வளர்த்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறுகிறார். சந்தைகளில் அதிக அளவு பெண் செம்மறி ஆடுகளுக்கு வரவேற்பு இருப்பதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் செம்மறி ஆடுகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முன்பே ஆடுகளை வாங்கும் பணத்தை அளித்து விடுவதாக கூறுகிறார். இதனை வாங்கிக் கொண்டு இவர் நல்ல தரமான ஆடுகளை சென்று வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

Profit from the Sales system of sheep’s

செம்மறி ஆடு வளர்ப்பின் ஆட்டுப் பண்ணையை தொடங்கிய உடன் அதில் உடனடியாக லாபம் கிடைக்காது என திரு குமார் அவர்கள் கூறுகிறார். செம்மறி ஆட்டு பண்ணை மட்டுமில்லாமல் மற்ற அனைத்து பண்ணைகளிலும் தொடங்கியவுடன் லாபம் கிடைப்பது என்பது மிக கடினமான ஒன்று என கூறுகிறார்.

ஆடுகள் மிகவும் தரமான முறையில் நல்ல உடல் வளத்துடன் இருந்தால் அதிக அளவில் விலை போகும் என கூறுகிறார். இவ்வாறு இருந்தால் நல்ல விலையில் விற்பனை செய்யலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இன்றுள்ள நிலையில் ஆடுகள் விற்பனை ஆகாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் கூறுகிறார்.ஏனெனில் இப்பொழுது அதிக அளவில் இறைச்சிகள் விற்பனையாகி வருவதாக திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த செம்மறி ஆடுகள் அனைத்தும் பண்டிகை காலங்களில் மட்டுமே அதிக அளவு லாபத்தில் விற்பனையாகும் என கூறுகிறார். மற்ற நேரங்களில் அனைத்து ஆடுகளும் சாதாரண விலையிலேயே விற்பனையாகும் என திரு குமார் அவர்கள் கூறுகிறார்.

மேலும் ஆடுகளின் காதினை அறுக்காமல் இருந்தால் மட்டுமே நல்ல முறையில் விற்பனையாகும் என கூறுகிறார். ஒவ்வொரு மாவட்டத்தை பொருத்து ஆடுகளின் மதிப்பானது கணக்கிடப்படும் என கூறுகிறார்.

திரு குமார் அவர்கள் இவருடைய செம்மறி ஆட்டுப் பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி குறுகிய காலத்தில் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:மண்ணில்லாமல் மாடித்தோட்டம்.

Leave a Reply