திரு குமார் சாமி அவர்கள் பெருந்துறை அருகில் உள்ள குள்ளம்பாளையம் கிராமம் காத்தா மடை புதூரில் ஒரு வாழை மர தோப்பை வைத்து அந்த வாழை இலைகளின் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார்.
அவரைப் பற்றியும், அவருடைய வாழைமர தோப்பை பற்றியும், வாழை இலை விற்பனையை பற்றியும் பின்வருமாறு தொகுப்பாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
திரு குமார் சாமி அவர்களின் வாழ்க்கை
திரு குமார் சாமி அவர்கள் பெருந்துறை அருகில் உள்ள குள்ளம்பாளையம் கிராமம் காத்தமடை புதூரில் வசித்து வருகிறார். இவர் இங்கு ஒரு வாழை மர தோப்பை வைத்து சிறப்பாக வளர்த்து வருகிறார். இந்த வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் வாழை இலைகளை வைத்து திரு குமார் சாமி அவர்கள் சிறப்பான வாழை இலை விற்பனையை நடத்திவருகிறார்.
இந்த வாழை இலை விற்பனையில் திரு குமார் சாமி அவர்களுக்கு தினம் தோறும் அதிக அளவில் வருமானம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார். திரு குமார் சாமி அவர்கள் இந்த வாழை மர தோப்பினையும், இந்த வாழை இலை விற்பனையையும் இருபத்து ஐந்து வருடங்களாக செய்து வருவதாக கூறுகிறார்.
மற்றும் திரு குமார் சாமி அவர்கள் இந்த வாழை மர தோப்பினை வாழை இலைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கூறுகிறார்.
வாழைமர தோப்பு
திரு குமார் சாமி அவர்கள் இந்த வாழை மர தோப்பினை மிகவும் சிறப்பான முறையில் வளர்த்து வருகிறார். இவர் இந்த வாழை மர தோப்பினை மிகவும் கவனமான முறையில் கவனித்து கொண்டு வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் திரு குமார் சாமி அவர்கள் இந்த வாழைமர தோப்பினை வைத்து உள்ளதால் இவருக்கு இது மிகுந்த மகிழ்ச்சியும், நல்ல வருமானமும், மனநிறைவும் கிடைப்பதாக கூறுகிறார்.
இவர் இந்த வாழைத் தோப்பில் வாழை மரங்களை வளர்த்து அதில் இலைகளை விற்பனை செய்வதாக கூறுகிறார். இவ்வாறு ஒரு வாழை மரத்தில் இருந்து சிறியதாக வரும் கணுவை வளர்ப்பதாகவும் கூறுகிறார். பெரிய வாழை மரமானது வளர்ந்த பிறகு அதனை வெட்டி விட்டு அதனுடன் சேர்ந்து வளர்ந்த சிறிய வாழை கணுவை பெரிய மரமாக வளர்த்துவதாக கூறுகிறார்.
ஒரு முறை வைக்கும் வாழைமர தோப்பினை ஐந்திலிருந்து ஆறு வருடங்கள் வரை அழியாமல் பாதுகாத்து அதன் இலைகளை விற்பனை செய்து வருவதாக திரு குமார் சாமி அவர்கள் கூறுகிறார்.
மேலும் வருடத்திற்கு ஒரு முறை வாழை மரத் தோப்பினை சுத்தம் செய்வதாகவும் கூறுகிறார். இவ்வாறு சுத்தம் செய்த தோப்பிற்கு சாணி உரம் அல்லது கோழி உரங்களை அளித்து வருவதாகவும் கூறுகிறார். இது போன்ற இயற்கை உரங்களை மட்டுமே தோப்பிற்கு அளித்து வருவதாகவும், மற்ற கெமிக்கல் உரங்களை தோப்பிற்கு அளிப்பது இல்லை எனவும் திரு குமார் சாமி அவர்கள் கூறுகிறார்.
மற்றும் இவருடைய தோப்பில் உள்ள ஒரு மரத்தில் ஒரு முறை மட்டுமே தாரினை அறுப்பதாக கூறுகிறார். இந்த வாழை மரத்திலும் ஒரு முறை மட்டுமே வாழைத்தார் வருவதாக கூறுகிறார். அதன் பிறகு வாழைத்தார் ஆனது வாழை மரத்தில் வருவதில்லை எனவும் கூறுகிறார்.
மேலும் இவர் இந்த வாழை மரங்களை வாழை இலைகளுக்காக மட்டுமே வளர்த்து வருவதால் வாழைக் காய்கள் ஆனது சக்தி இல்லாமல் சிறியதாகவே வளர்வதாகவும் கூறுகிறார். மேலும் இவர்கள் வாழை இலைகளுக்கு மட்டுமே அதிக அளவு முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறுகிறார்.
வாழை இலையின் லாபம்
திரு குமார் சாமி அவர்களின் வாழை தோப்பில் இருந்து விற்பனை ஆகும் வாழை இலைகளில் இருந்து அதிக அளவு லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார். வாழை பழங்களை விட வாழை இலைகள் ஆனது அதிக அளவு லாபத்தை தருவதாக திரு குமார் சாமி அவர்கள் கூறுகிறார்.
இப்பொழுது வாழைத்தார் ஆனது பருவத்தை பொறுத்து விற்பனையாகும் என கூறுகிறார். ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விலையில் விற்பனையாகும் எனவும் கூறுகிறார். அந்த விலைகள் ஆனது 500 மற்றும் 600 மற்றும் 100 மற்றும் 50 ஆகிய விலைகளில் விற்பனை ஆவதாக கூறுகிறார்.
இவ்வாறு குறைந்த அளவில் கூட வாழைத்தார்கள் ஆனது விற்பனை ஆகிறது என கூறுகிறார். இவ்வாறு குறைந்த விலையில் கூட விற்பனை ஆகும் வாழைத் தார்களை விற்பனையாகும் விலைக்கே விற்று விடுவதாகவும் திரு குமார் சாமி அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு இவர் வாழைத்தார்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய காரணம் இவருக்கு இந்த வாழைத்தார்களை விட வாழை இலைகளில் அதிக அளவு வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்.
இவ்வாறு ஒரு மரத்திலிருந்து வாழைத் தார்களை அறுத்த பிறகு அந்த மரத்தில் உள்ள இலைகளை இவர் மிகவும் நல்ல முறையில் வளர்த்து அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
இந்த வாழை இலை விற்பனையில் இருந்து ஒரு மாதத்திற்கு 25 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகிறார். இந்த லாபம் முறையானது ஒரு வருடத்திற்கு தொடர்ந்து கிடைப்பதாகவும் கூறுகிறார். இதனால் திரு குமார் சாமி அவர்கள் அதிக வருமானத்தையும், மன நிறைவையும் பெற்று வருவதாக கூறுகிறார்.
வாழை இலைகளை விற்பனை செய்யும் முறை
திரு குமார் சாமி அவர்கள் இந்த வாழை இலைகளை அனைத்து இடங்களுக்கும் மிகவும் சிறப்பான முறையில் விற்பனை செய்து வருகிறார்.
திரு குமார் சாமி அவர்களுடைய தோப்பில் உள்ள வாழை இலைகளை அறுத்த பிறகு அவைகளை பெருந்துறை சந்தையிலும் ஈரோடு சந்தையிலும் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வண்டியின் மூலம் இலைகளை ஒரு பெட்டியில் வைத்து கட்டி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் வண்டிகள் மூலம் மாவட்டங்களுக்கு அனுப்பும் இலைகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக சென்று விடுவதாகவும் கூறுகிறார். மேலும் இவர் அருகில் உள்ள கடைகளுக்கும், உணவகங்களுக்கும் வாழை இலைகளை விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
வாழை இலைகளை காலையில் நேரம் ஆகவே அறுத்து விடுவதாக கூறுகிறார். இலைகளால் ஆனது விரிவதற்கு முன்பே அறுத்து விடவேண்டும் எனவும் கூறுகிறார். இவ்வாறு இலைகளை குருத்துகளாக அறுத்து விட்டால் அந்த இலைகளால் ஆனது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் எனவும், உணவு உண்பவர்கள் அதிக அளவு உணவினை உண்பார்கள் எனவும் திரு குமார் சாமி அவர்கள் கூறுகிறார்.
இவர் ஒரு கட்டு வாழை இலையை 750 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் ஒரு கட்டு வாழை இலையில் 180 வாழை இலைகள் இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் இவரின் வாழைத்தோப்பில் உள்ள ஒரு இலையை 8 அல்லது 9 நபர்கள் உணவு உண்ணும் அளவிற்கு பிரித்து எடுக்க முடியும் எனவும் கூறுகிறார்.
வாழை இலையின் நன்மை
பொதுவாக வாழை இலைகளில் உணவு உண்பதால் மிகவும் நன்மையே ஆகும். மேலும் வாழை இலைகளில் உணவு உண்பதால் நோய்கள் ஏதும் ஏற்படாது.
திரு குமார் சாமி அவர்கள் உணவு உண்ணும் போது பிளாஸ்டிக் தட்டு போன்றவைகளில் உணவு உண்பதை விட வாழை இலையில் உணவு உண்பதால் உடலுக்கு மிகவும் நன்மை கிடைக்கும் எனவும் கூறுகிறார்.
இப்பொழுது அதிகமாக விசேஷங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் இறைச்சி போன்ற இறைச்சி வகைகளை சமைக்கின்றனர். இதனை அதிக நபர்கள் வாழை இலை களிலேயே போட்டு உண்கின்றனர். இதனால் இவர்களுக்கு பாத்திரம் கழுவ வேண்டிய நேரம் இல்லை என கூறுகிறார்.
இவ்வாறு இவர்கள் வாழை இலையில் உண்பதால் அதிக அளவு நன்மையை பெறுகின்றனர் என திரு குமார் சாமி அவர்கள் கூறுகிறார். மேலும் இந்த வாழை இலைகளை கோயில்களிலும், மற்ற விசேஷங்களுக்கும், பண்டிகைகளுக்கும் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றன.
இந்த வாழை இலையின் தேவையானது அனைத்து இடங்களிலும் மிகவும் அதிக அளவு பங்கையும், முக்கியத்துவத்தையும் பெற்று வருகிறது.
வாழைத் தோப்பின் பராமரிப்பு முறை
திரு குமார் சாமி அவர்கள் இவருடைய வாழை தோப்பினை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வருகிறார். வாழைத்தார்களுக்கு அளிக்கும் அதே பராமரிப்பு முறையினை வாழை இலை வளர்ப்பிற்கும் அளித்து வருவதாக கூறுகிறார்.
வாழை மரங்களுக்கு இடையில் உள்ள களைச் செடிகளை சுத்தமாக அகற்றி விட வேண்டும் எனவும் கூறுகிறார். இல்லையெனில் அந்த களைச் செடிகளுக்கு இடையில் பாம்பு போன்ற தீங்கு விளைவிக்கும் உயிரினங்கள் வந்து தங்கி விடும் எனவும் திரு குமார் சாமி அவர்கள் கூறுகிறார்.
தோப்பினை தூய்மையாக வைத்திருந்தால் வாழை இலைகளை பறிக்கும் போது சிறிது சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார். எனவே தோப்பினை தூய்மையாக வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று எனவும் கூறுகிறார்.
திரு குமார் சாமி அவர்களின் தோப்பில் உள்ள அனைத்து இலைகளையும் நாள்தோறும் அறுத்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். இவ்வாறு நாள் தோறும் மரங்களில் உள்ள இலைகளை அறுப்பதால் மட்டுமே வாழைமரம் ஆனது சரியான நிலையில் இருக்கும் எனவும் கூறுகிறார்.
இலைகளின் வகைகள்
திரு குமார் சாமி அவர்கள் இலை வகைகளில் செவ்வாழை இலை மிகவும் சிறப்பான இலை வகை என கூறுகிறார். இந்த செவ்வாழை இலை ஆனது இலைகளில் முதல் ரக இலை என கூறுகிறார்.
இரண்டாவதாக பூங்கா வாழை இலையை கூறுகிறார். திரு குமார் சாமி அவர்களின் வாழைத்தோப்பிலும் இந்தப் பூங்கா வாழை இலை ரகத்தையே விளைவித்து உள்ளதாக கூறுகிறார். முந்த வாழை இலைகள் மற்றும் பிற வாழை இலைகள் அதிகளவு மக்கள் விரும்பவில்லை என கூறுகிறார்.
மேலும் செவ்வாழை மரங்களில் உள்ள இலை வகைகளை இரண்டு வருடங்களுக்கு மட்டுமே அறுக்க முடியும் எனவும், பூங்கா வாழை இலை வகைகளை பத்து வருடங்களுக்கு கூட தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.
இந்த வாழை மரங்கள் ஆனது அனைத்து வகை மண்களுக்கும் வளரும் என கூறுகிறார். ஆனால் இந்த வாழை மரங்களுக்கு சரியான உரத்தினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். திரு குமார்சாமி அவர்கள் இந்த வாழை இலை விற்பனையில் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார்.
மேலும் படிக்க:தரமான நாட்டு சர்க்கரை தயாரிப்பு.