தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் இந்தியாவில் உள்ள அனைத்து நாட்டு நாய்களையும் வளர்த்து வருகிறார். இவரைப் பற்றியும், இவருடைய நாட்டு நாய்கள் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
நாட்டு நாய்கள் வளர்ப்பின் தொடக்கம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் இந்தியாவில் உள்ள அனைத்து நாட்டு நாய்களையும் வளர்த்து வருவதாகவும், இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
இவர் இவரது பட்டப் படிப்பினை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், அந்த வேலையில் இவருக்கு அதிக அளவில் ஆர்வம் இல்லாத காரணத்தினால் தனியார் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்து விட்டு இவர் சொந்த ஊருக்கு வந்து விட்டதாக கூறுகிறார்.
இவ்வாறு இவர் சொந்த ஊருக்கு வந்த பிறகு சுயமாக ஒரு தொழில் செய்யலாம் என்ற எண்ணத்தில் நாய் பண்ணையை தொடங்கியதாக கூறுகிறார்.
மேலும் இவருடைய சிறு வயதிலிருந்தே இவருக்கு நாய்கள் மிகவும் பிடிக்கும் என்பதாலும் நாய்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததன் காரணமாகவும் இவர் நாய் பண்ணை தொடங்கியதாக கூறுகிறார்.
இப்பொழுது இவர் இவருடைய நாய் பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறினார்.
Types of dogs
இவருடைய நாய் பண்ணையில் இவர் 50க்கும் மேற்பட்ட நாட்டு நாய் வகைகளை வளர்த்து வருவதாகவும், இந்த அனைத்து நாய்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்தியாவில் உள்ள அனைத்து நாட்டு நாய் வகைகளையும் இவர் இவருடைய பண்ணையில் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
இவ்வாறு இவர் இந்தியாவில் உள்ள நாட்டு நாய் வகைகள் மட்டும் வளர்த்து வருவதற்கு காரணம் இன்றுள்ள நிலையில் பல நாட்டு நாய் வகைகள் அழிந்து வரும் நிலையில் இருப்பதாகவும் அதனை தடுப்பதற்கு இவர் நாட்டு நாய் வகைகளை வளர்த்து வருவதாக கூறுகிறார்.
இந்த நாய்களின் மூலம் இன்னும் நிறைய நாய்களை இனப்பெருக்கம் செய்து வளர்ப்பதன் மூலம் இந்த நாய் இனம் அழியாமல் இருக்கும் எனவும் கூறுகிறார்.
இதுபோல் அனைவரும் நாட்டு நாய்களை வளர்த்தால் அந்த நாய் இனம் அழியாமல் இருக்கும் எனவும், இந்த நாய்கள் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
நாய்களின் வளர்ப்பு முறை
நாய் வளர்ப்பு முறையை இவர் மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும், நாய்கள் நல்ல காற்றோட்டமான முறையில் வளர்வதற்கும் சுதந்திரமாக சுற்றி திரிவதற்கும் பெரிய அளவிலான ஒரு கொட்டகை அமைத்து உள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும் நாய்கள் இருக்கும் பண்ணையில் மாமரம் மற்றும் சப்போட்டா பழ மரம் என அதிக மரங்கள் இருப்பதால் நாய்கள் வெயிலின் போது அந்த மரத்தின் நிழலில் உறங்கிக் கொள்ளும் எனவும் கூறுகிறார்.
மேலும் இவ்வாறு மரங்கள் அதிகமாக நாய்கள் வளரும் இடத்தில் இருப்பதால் நாய்கள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் வளரும் எனவும், இது நாய்களுக்கு அதிக அளவில் நோய்களை ஏற்படுத்துவதை தடுக்கும் எனவும் கூறுகிறார்.
மேலும் நாய்களை இவர் மிகவும் திறமையான நாய்களாகவும் அனைத்து வேலைகளையும் நாய்கள் செய்யும் திறமை உடையதாகவும் வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
இந்தியாவில் உள்ள அனைத்து நாய்களையும் இவர் வாங்கி வளர்த்து வருவதாகவும் மற்றும் நாய்களை இனப்பெருக்கம் செய்து இவருடைய பண்ணையில் உள்ள நாய்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் நாய்களை இவர் கட்டி வைத்து வளர்த்து வருவதாகவும், மாலை நேரங்களிலும் மற்றும் மதிய நேரங்களிலும் நாய்களை சுதந்திரமாக சுற்றி திரிவதற்கு விட்டு விடுவதாக கூறுகிறார்.
நாய்களை கட்டிவைத்து வளர்ப்பதை விட சிறிது நேரம் அதனை சுதந்திரமாக சுற்றித் திரிய விடுவது நாய்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் எனவும் இவ்வாறு நாய்களை வளர்த்தால் நாய்கள் சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.
இந்த முறையில் இவர் நாய்களை வளர்த்து வருவதால் இவருடைய நாய்கள் அனைத்தும் மிகவும் திறமை உடையதாகவும், நல்ல வளர்ச்சியை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் இந்த நாய்கள் வீட்டை மிகவும் சிறப்பான முறையில் காவல் காக்கும் எனவும், வீட்டை கொள்ளையடிக்கும் நபர்களிடமிருந்து வீட்டை மிகவும் சிறப்பான முறையில் இந்த நாய்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் எனவும் கூறுகிறார்.
Food and care system for dogs
நாய்களை சிறப்பான முறையில் இவர் வளர்த்து வருவதாகவும் நாய்களுக்கு இவர் சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகை உணவுகளையும் இவர் அளித்து வருவதாக கூறுகிறார்.
அசைவ உணவுகளில் அனைத்து வகைகளையும் நாய்களுக்கு இவர் உணவாக அளித்து வருவதாகவும் மற்றும் வாரத்திற்கு இரண்டு முறை நாய்களுக்கு இவர் இறைச்சியை உணவாக அளித்து வருவதாக கூறுகிறார்.
நாய்களுக்கு இறைச்சியை அளிக்காமல் வளர்த்தால் நாய்கள் சிறப்பாக வளராது எனவும் நாய்களுக்கு ஏதாவது நோய்கள் ஏற்படும் எனவும், இறைச்சியை நாய்கள் உண்ணால் மட்டுமே நாய்கள் சத்துடன் இருக்கும் எனவும் கூறுகிறார்.
எனவே நாய்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை இறைச்சியை உணவாக அளிக்க வேண்டும் எனவும், இறைச்சி என்றாலே நாய்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு எனவும் கூறுகிறார்.
எனவே நாய்களுக்கு மிகவும் பிடித்தமான இறைச்சியை நாய்களுக்கு கொடுத்து வளர்த்தால் அது மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த உணவை உண்டு சிறப்பாக வளரும் எனவும் கூறுகிறார்.
மேலும் நாய்களுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு முன்பே அதனை தடுப்பதற்கு இவர் மருந்துகளையும் மற்றும் தடுப்பூசிகளையும் அளித்து விடுவதாகவும், நாய்களுக்கும் நோய்கள் வரும் போது தடுப்பதற்கும் நோய்கள் வருவதைத் தடுப்பதற்கும் இவர் ஒரு மருத்துவரை வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
வாரத்திற்கு ஒரு முறை அந்த மருத்துவர் இவருடைய நாய் பண்ணைக்கு வந்து நாய்களை பரிசோதித்துவிட்டு செல்வார் எனவும் கூறுகிறார்.
மேலும் நாய்கள் இருக்கும் கொட்டகை மற்றும் இடத்தினை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் நாய்களுக்கு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகிறார்.
தினமும் பண்ணையைப் சுத்தம் செய்வதால் நாய்களுக்கு ஏற்படும் நோய் தாக்குதல் குறைவாக இருக்கும் எனவும், எனவே நாய் பண்ணை வைத்து வளர்க்கும் பண்ணையாளர்கள் பண்ணையை தினமும் சுத்தம் செய்வது முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.
விற்பனை முறை மற்றும் லாபம்
நாய்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு இவர் நாய்களை விற்பனை செய்து வருவதாகவும், குறைந்த விலைகளிலேயே நாய்களை இவர் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
நாய்களை இவர் திறமை உடைய நாய்களாகவும் மற்றும் நோய்கள் எதுவும் அதிக அளவில் தாக்காமல் வளர்த்து வருவதால் அதிக அளவு வாடிக்கையாளர் இவரிடம் வந்து நாய்களை வாங்கி செல்வதாக கூறுகிறார்.
இதன் மூலம் இவர் சிறந்த லாபத்தை பெற்று வருவதாகவும், இது இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், மேலும் இவர் நாய்களை வளர்ப்பதால் இவருடைய மனநிலை மிகவும் மகிழ்ச்சியான நிலையில் இருப்பதாகவும் கூறுகிறார்.
மற்றும் இவர் இவருடைய நாய் பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான வாசனை சீரக சம்பா நெல் விவசாயம்.