காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பண்ணை குட்டை மீன் வளர்ப்பை செய்து அதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாக கூறுகிறார். இவரைப் பற்றியும், இவருடைய பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பு முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக ஒரு கட்டுரை வடிவில் காணலாம்.
Beginning of farm pond fish farming
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் மிகவும் சிறப்பான முறையில் பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பை செய்து அதன் மூலம் சிறந்த லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.
இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம் எனவும் இவருடைய தாத்தா காலத்திலிருந்தும் அதற்கு முன்பும் விவசாயத்தை மட்டுமே இவரது குடும்பம் மிகச் சிறப்பான முறையில் செய்து வந்ததாக கூறுகிறார்.
இவ்வாறு விவசாயம் செய்வதை பார்த்து வளர்ந்த இவருக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு தாமும் நன்றாக விவசாயம் செய்து நல்ல விவசாயி ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றி விவசாயத்தை செய்ய தொடங்கியதாக கூறுகிறார்.
இவ்வாறு விவசாயம் செய்துகொண்டு கொண்டிருந்த நிலையில் மீன் வளர்ப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு இவரிடம் உள்ள பத்து ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நிலத்தில் பண்ணை குட்டை அமைத்து அதில் மீன்களை சிறப்பான முறையில் வளர்க்க தொடங்கி இப்பொழுது சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் இவர் இந்த பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பை கடந்த 20 வருடங்களாக சிறப்பான முறையில் நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.
மீன்களின் வகைகள்
பண்ணைக்குட்டையை மிகச் சிறப்பான முறையில் அமைத்து மீன்களுக்கு தீவனத்தை சரியான முறையில் அளித்து நல்ல பராமரிப்பு முறையுடன் மீன்களை பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
4 ஏக்கர் நிலத்தில் மொத்தமாக இவர் 12 பண்ணை குட்டைகளை அமைப்பு இருப்பதாகவும் ஒவ்வொரு மீன் வகைகளையும் ஒவ்வொரு குட்டைகளில் வைத்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
சிறிய அளவில் இருக்கும் பண்ணை குட்டைகளில் மீன் குஞ்சுகளை வளர்த்து வருவதாகவும் மற்றும் பெரிய அளவில் இருக்கும் பண்ணை குட்டைகளில் பெரிய மீன்களை வளர்த்து வருவதாகவும் கூறுகிறார்.
இவருடைய பண்ணை குட்டையில் மொத்தமாக மூன்று வகை மீன்களை வளர்த்து வருவதாகவும், அந்த மீன் வகைகள் வாவல், ஆந்திரா ஜிலேபி மற்றும் நெய் வாலை முதலிய மீன் வகைகளை இவர் வளர்த்து வருவதாக கூறுகிறார்.
பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பை செய்யும் போது இந்த மூன்று வகை மீன்களை செய்தால் சிறந்த லாபத்தை பெற முடியும் என கூறுகிறார்.
மேலும் இவர் சிறு மீன் குஞ்சுகளாக விற்பனை செய்யும் மீன்கள் ஒரு எட்டிலிருந்து பத்து வகை இருக்கும் எனவும் இந்த மீன் வகைகளை இவர் சிறு குஞ்சுகளாக மட்டுமே விற்பனை செய்து வருவதாகவும் பெரிய மீன்களாக வளர்த்து இதனை விற்பனை செய்வதில்லை எனவும் கூறுகிறார்.
பெரிய மீன்களை வளர்த்து விற்பனை செய்யும் மீன் வகைகள் வாவல், ஆந்திரா ஜிலேபி மற்றும் நெய் வாலை ஆகிய மீன் வகைகளை மட்டுமே இவர் பெரிய மீன்களாக வளர்த்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
Farm pond structure and fish culture
ஒரு ஏக்கர் பரப்பளவில் இருந்து கால் ஏக்கர் வரை இவர் பண்ணை குட்டை அமைத்து அதில் மீன்களை வளர்த்து வருவதாகவும், இதனை இவர் மிக பாதுகாப்பான முறையில் பராமரித்து வளர்த்து வருவதாக கூறுகிறார்.
கால் ஏக்கர் பரப்பளவில் அமைத்துள்ள பண்ணை குட்டையில் 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் மீன்குஞ்சுகள் வரை விட்டு வளர்த்து வருவதாக கூறுகிறார்.
மேலும் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையில் 7000 மீன் குஞ்சுகளை விட்டு அதனை பெரிய மீன்களாக வளர்த்து வருவதாகவும், பெரிய மீன்களை வளர்க்கும் பண்ணை குட்டையில் 6 அடி ஆழம் இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
சிறிய மீன் குஞ்சுகளை வளர்க்கும் பண்ணைக் குட்டையை 50 அடி நீளம் மற்றும் 30 அடி அகலம் என்ற அமைப்பில் வைத்து இருப்பதாகவும், இந்தப் பண்ணை குட்டையில் ஆழம் 4அடி இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும் பண்ணைக்குட்டைக்கு தேவையான அனைத்து நீர்களும் இவருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருப்பதாகவும், இதனால் இவருக்கு நீர் பற்றாக்குறை இல்லை எனவும் கூறுகிறார்.
மேலும் பண்ணை குட்டையை ஆரம்பத்தில் தொடங்கும் போது குட்டையில் நீர் நிற்பது சற்று கடினமாக இருக்கும் எனவும் குட்டையில் நீர் நிற்கும் வரை தண்ணீர் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
குட்டையை தோண்டும் போது எட்டு அடி ஆழம் தோண்டி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இவ்வாறு எட்டு அடி ஆழம் தோண்டி வைத்த பிறகு தண்ணீரை விட வேண்டும் எனவும் தண்ணீர் விட்டதும் ஒரு இரண்டு அடி ஆழத்தை மண்ணால் மூடிவிட வேண்டும் எனவும் கூறுகிறார்.
இவ்வாறு மண்ணால் மூடி விட்டால் தண்ணீர் நிற்பது மிக சுலபமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.
மீன்களுக்கு அளிக்கும் தீவனங்கள் மற்றும் பராமரிப்பு முறை
சிறிய மீன் குஞ்சுகளுக்கு நல்ல சத்து நிறைந்த தீவனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பண்ணைக் குட்டையில் இயற்கை உரமான மாட்டு சாணத்தை வெல்லத்துடன் கலந்து குட்டையில் ஊற்றி விடுவதாக கூறுகிறார்.
மேலும் பெரியதாக இருக்கும் மீன்கள் உள்ள பண்ணை குட்டைக்கு இவ்வாறு மாட்டுச்சாண கரைசலை அளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், பெரிய மீன்களுக்கு கம்பெனித் தீவனம் என அழைக்கப்படும் தீவன வகைகளை மட்டும் அளித்தால் போதுமானது என கூறுகிறார்.
மேலும் சிறிய மீன்கள் மாட்டுச்சாண கரைசலையே தீவனமாக எடுத்துக் கொள்ளும் எனவும் இதுபோக மீன் குஞ்சுகளுக்கு கம்பெனி தீவனத்தை அளித்து வருவதாக கூறுகிறார்.
எந்த அளவிற்கு நாம் மீன்களுக்கு நல்ல சிறப்பான தீவனங்களை அதிகளவில் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை பொருத்து மீன்கள் விரைவில் வளரும் எனவும், விரைவாகவே நான்கு மாதத்தில் மீன்கள் நல்ல வளர்ச்சியை பெற்று விடும் எனவும் கூறுகிறார்.
Sales method and profit
சிறிய மீன் குஞ்சுகளையே இவர் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாகவும், சிறிய மீன்குஞ்சுகள் விற்பனையின் மூலமே இவருக்கு சிறந்த லாபம் கிடைத்து வருவதாகவும் கூறுகிறார்.
சிறிய மீன் குஞ்சுகளை தென் தமிழகத்தில் இருந்து அதிகளவு வாடிக்கையாளர்கள் இவரிடம் வாங்கி செல்வதாகவும், மேலும் இவர் பெரிய மீன்களை சந்தைகளில் விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மற்றும் பெரிய மீன்களை இவருடைய பண்ணைக்குட்டைக்கு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மீன்களை முழுதாகவும் மற்றும் வெட்டியும் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.
கம்மாயில் மீன்களை ஏலத்திற்கு எடுப்பவர்கள் அதிக அளவில் இவரிடம் மீன்களை பத்தாயிரம், 50 ஆயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்கி செல்வதாகவும், இதன்மூலம் இவர் நிறைந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் புதியதாக பண்ணைக் குட்டை மீன் வளர்ப்பை தொடங்குபவர்களுக்கு இவர் அறிவுரை கூறி வருவதாகவும் மற்றும் இவர் இந்த பண்ணை குட்டை மீன் வளர்ப்பை மிக சிறப்பான முறையில் செய்து வருவதாகவும் கூறுகிறார்.
மேலும் படிக்க:சிறப்பான குறிஞ்சி மலர் சாகுபடி.