கோழிகளின் தீவனப்பயிர் உற்பத்தியில் சிறந்த லாபம்.

திரு இனியன் அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தி செல்லும் வழியில் உள்ள சிட்டேபாளையம் என்னும் ஊரில் கோழிகளுக்குத் தேவையான தீவனப் பயிரை உற்பத்தி செய்து அதன் மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார். இவரைப் பற்றியும் இவருடைய தீவனப்பயிர் உற்பத்தி முறையைப் பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு இனியன் அவர்களின் வாழ்க்கை

மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தி செல்லும் வழியில் உள்ள சிட்டேபாளையம் என்னும் ஊரில் திரு இனியன் அவர்கள்  கோழிகளின் தீவனப்பயிரை உற்பத்தி செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகிறார்.

திரு இனியன் அவர்கள் முதுகலை கணினி அறிவியல் பட்டப் படிப்பினை பயின்று உள்ளதாக கூறுகிறார். மேலும் இவர் கருங்கோழி மற்றும் பெருவிடைக்கோழி பண்ணையை வைத்து நடத்தி வருவதாகவும் கூறுகிறார்.

மேலும் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் 5 வருடங்கள் வேலை செய்து வந்ததாக கூறுகிறார்.விவசாயத்தின் மீது ஆர்வம் வந்ததால் இந்த தனியார் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்து விட்டு விவசாயத்தை செய்து வருவதாக கூறுகிறார்.

மேலும் திரு இனியன் அவர்கள் இந்த கோழிகளின் தீவனப் பயிர் உற்பத்தியில் சிறந்த வருமானத்தை பெற்று வருவதாகவும் கூறுகிறார்.

Commencement of fodder crop production

திரு அருண் அவர்களின் குடும்பம் விவசாயக் குடும்பம் என கூறுகிறார். மேலும் இவரிடம் 3 ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாக கூறுகிறார். மேலும் இவர்கள் எப்பொழுதும் விவசாயம் செய்தாலும் முதல் ஆறு மாதத்திற்கு மட்டும் நீர் இருக்கும் எனவும், மற்ற ஆறு மாதங்களுக்கு நீர் இருக்காது எனவும் கூறுகிறார்.

இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றின் மூலம் விவசாயம் செய்த செடிகளுக்கு நீரை அளித்து வருவதாக திரு இனியன் அவர்கள் கூறுகிறார். மேலும் இவர் IT துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பவிவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியதாக கூறுகிறார்.

இதன் காரணமாகவே இவர் கோழிப்பண்ணை மற்றும் கோழிகளுக்குத் தேவையான தீவன பயிரையும் உற்பத்தி செய்து அதன் மூலம் அதிகளவு லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

மேலும் திரு இனியன் அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே விவசாயம் தொடர்பான வேலைகளின் மீது ஆர்வம் இருந்து வந்ததாக கூறுகிறார். மேலும் இதை முதலில் சிறிய அளவில் இவர் செய்து பார்த்துவிட்டு அதன் மூலம் லாபம் வந்ததை அடிப்படையாகக் கொண்டு பெரிய அளவில் செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் இந்த தீவனப்பயிர் விற்பனையில் அதிக அளவு லாபம் வருவதன் காரணமாகவே இவர் இந்த  தீவனப்பயிர் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

தீவனப்பயிரின் வளர்ப்பு முறை

திரு இனியன் அவர்கள் இந்த தீவனப்பயிர் வகைகளை முதல் இரண்டு அல்லது மூன்று முறை பறித்து விற்பனை செய்துவிட்டால் மறு முறை கீரையைப் பறிக்கும் போது செடிகளின் விதைகள் மூலம் புதிய கீரைகள் முளைத்து நமக்கு நன்மையை தரும் என கூறுகிறார்.

இவ்வாறு கீரைகளை பறிக்கப் பறிக்க நமக்கு அதிக அளவு கீரைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும் என கூறுகிறார். இதனால் நமக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் விற்பனை செய்த கீரைகள் போக மீதமுள்ள கீரைகளை கோழிகளுக்கு தீவனமாக அளிக்கலாம் எனவும் கூறுகிறார். மற்றும் இந்த கீரைகள் வளர்வதற்கு கோழிகள் உடைய கழிவுகளை உரமாக பயன்படுத்தலாம் எனவும் திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இந்த தீவனப் பயிர்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை விதைத்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார். மற்றும் இந்த தீவனப்பயிர்களை மாடுகளுக்கும் தீவனமாக பயன்படுத்தலாம் எனவும் கூறுகிறார்.

மற்றும் இந்த தீவனப் பயிர்களுக்கு இடையில் ஜாதிமல்லி செடியையும் வளர்த்து வருவதாக கூறுகிறார். இதன் மூலமும் இவருக்கு அதிக அளவு லாபம் கிடைக்கும் எனவும் திரு இனியன் அவர்கள் கூறுகிறார். இந்த ஜாதி மல்லி பூவை 2 கிலோ அல்லது 3 கிலோ விற்பனை செய்தால் கூட ஒரு நாளுக்கு 700 ல் இருந்து 800 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

மேலும் திரு இனியன் அவர்கள் ஒரு தொழிலை மட்டும் சார்ந்து இருக்கக் கூடாது என கூறுகிறார். பல தொழில்களை செய்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற வேண்டுமெனவும் திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறு அனைத்து வகை தொழிலையும் செய்வது மிகவும் சிறப்பான ஒரு வழிமுறை என திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

Types of Lettuce

திரு இனியன் அவர்கள் இவருடைய பண்ணையில் மொத்தமாக ஐந்து வகை கீரைகளை உற்பத்தி செய்து வருவதாக கூறுகிறார். அவைகள் சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயம் மற்றும் மல்லி, முளைக்கீரை ஆகிய கீரை வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார்.

மற்றும் இவ்வாறு உற்பத்தி செய்யும் அனைத்து கீரை வகைகளையும் இவருடைய ஊரின் அருகில் உள்ள சந்தையில் விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இந்த கீரைகளை 20 சென்ட் நிலத்தில் உற்பத்தி செய்து உள்ளதாக திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

இதில் சிறுகீரையை ஒரே முறையில் முழுவதுமாக அறுவடை செய்து விடுவதாக கூறுகிறார். மற்றும் அரைக்கீரை வகைகளை அறுத்து விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். இந்த அரைக்கீரை வகைகளை நான்கு அல்லது ஐந்து முறைகள் அறுவடை செய்யலாம் எனவும் திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த அரைக் கீரை வகைகளில் வீணாக உள்ள கீரைகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து விடலாம் எனவும் கூறுகிறார். மற்றும் இந்த கீரை வகைகளை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம் எனவும் திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

கீரைகளின் பராமரிப்பு முறை

இந்த தீவன பயிர் வளர்ப்பில் விற்பனை முறை எவ்வளவு முக்கியமோ அதே போல் பராமரிப்பு முறையும் மிக முக்கியமான ஒன்று என திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

மற்றும் இவருடைய தீவன பயிர்களுக்கு இவருடைய தந்தை காலை நேரங்களில் தண்ணீர் கட்டி விடுவதாக கூறுகிறார். மற்றும் கீரைகளை அறுவடை செய்யும் முறையையும், அவற்றை அறுவடை செய்து கோழிகளுக்கு அளிக்கும் முறையையும் இவருடைய தாயார் செய்து விடுவதாக கூறுகிறார்.

மற்றும் இவர் கோழிகளை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வருவதாகவும் கூறுகிறார். மற்றும் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் ஒன்றாக இணைந்து வேலை செய்தால் வேலைகள் அனைத்தும் மிகவும் விரைவாக முடிந்து விடும் என திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் ஜாதிமல்லி செடியை பராமரித்து கொள்வதற்கு வேலையாட்கள் இருப்பதாகவும் திரு இனியன் அவர்கள் கூறுகிறார். இதனால் இவர் இந்த தீவன பயிர் வளர்ப்பு முறையில் அதிக லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார்.

Profit From the sale Of Lettuce

திரு இனியன் அவர்கள் இந்த கீரை விற்பனை முறையில் மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வரை லாபத்தை பெற்று வருவதாக கூறுகிறார். ஒரு கீரை கட்டு பத்து ரூபாய் என்று விற்பனை செய்தால் கூட ஒரு பாத்திக்கு பத்தாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வடும் என திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் இவற்றை பராமரிப்பதற்கு இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்து விட்டால் கூட மாதத்திற்கு 7,000 ரூபாய் வரை லாபத்தை பெறமுடியும் என கூறுகிறார். மேலும் இந்தக் கீரை உற்பத்தியை விட வேறு ஏதாவது தீவனங்களை உற்பத்தி செய்திருந்தால் கூட இந்த அளவிற்கு லாபம் கிடைக்காது என திரு இனியன் அவர்கள் கூறுகிறார்.

மேலும் கோழிகள் பசும்தீவன வகைகளில் அசோலா மற்றும் மக்காச்சோளம் ஆகிய தீவன வகைகளை உண்ணும் எனவும் கூறுகிறார். மேலும் வண்டுகள் கடித்த கீரைகளை கோழிகளுக்கு தீவனமாக அளித்து விடலாம் எனவும் கூறுகிறார்.

மேலும் இந்த முறையில் தீவனங்களை நாமே உற்பத்தி செய்து கோழிகளுக்கு அளிக்கும் போது தீவனத்தின் செலவு குறையும் எனவும் திரு இனியன் அவர்கள் கூறுகிறார். நன்கு வளர்ந்த கீரைகளை சந்தைகளில் விற்பனை செய்து விடுவதாகவும் கூறுகிறார்.

திரு இனியன் அவர்கள் இந்த கோழிகளுக்கு அளிக்கும் தீவனப்பயிர் உற்பத்தியை மிகவும் சிறப்பான முறையில் செய்து அதன்மூலம் அதிக அளவு லாபத்தை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க:கிராமத்து இளைஞரின் இயந்திர கண்டுபிடிப்புகள்.

Leave a Reply