குதிரை பண்ணையில் சிறந்த லாபம்.

திரு சுரேஷ் அவர்கள் திருப்பூரில் உள்ள கோதபாளையம் என்னும் ஊரில் ஒரு குதிரைப் பண்ணையை வைத்து அதன் மூலம் அதிக லாபத்தை பெற்று வருகிறார். அவரைப் பற்றியும் அவருடைய குதிரை பண்ணையை பற்றியும் பின்வருமாறு விரிவாக காணலாம்.

திரு சுரேஷ் அவர்களின் வாழ்க்கை

திருப்பூரில் உள்ள கோதபாளையம் என்னும் ஊரில் திரு சுரேஷ் அவர்கள் ஒரு குதிரை பண்ணை வைத்து அதன் மூலம் அதிக அளவு வருமானத்தை பெற்று வருகிறார்.

திரு சுரேஷ் அவர்களின் தாத்தா காலத்தில் இருந்தே குதிரைப் பண்ணை வைத்து நடத்தி வந்ததாகவும், இதனால் திரு சுரேஷ் அவர்களுக்கு குதிரை பண்ணையை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்கள் இந்த குதிரை பண்ணையினை 15 வருடங்களாக வைத்துள்ளதாக கூறுகிறார். இந்த குதிரை பண்ணையால் திரு சுரேஷ் அவர்களுக்கு அதிக அளவில் நிறைந்த வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்.

மேலும் இந்த குதிரை பண்ணையை திரு சுரேஷ் அவர்கள் வைத்துள்ளதால் இவருக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படுவதாக கூறுகிறார். மற்றும் குதிரைப் பண்ணை என்றாலே அதனை மிகவும் சிறப்பான முறையில் பராமரித்து வந்தால் நிறைந்த வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

குதிரைப் பண்ணை மற்றும் குதிரையின் வகைகள்

பொதுவாக குதிரைப் பண்ணை என்றாலே பண்ணையில் உள்ள குதிரைகள் ஆனது சில சேட்டைகளை செய்யும். இதனால் இவைகளை சமாளிப்பது என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாகும் எனவும், ஆனால் குதிரைகள் இவ்வாறு சேட்டைகள் செய்தால்தான் பார்ப்பதற்கு நன்றாகவும், இவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

இவ்வாறு ஆண் குதிரைகள் மட்டும் அதிக அளவில் சேட்டைகள் செய்வதற்கு காரணம் அவைகள் இனச்சேர்க்கை செய்வதே காரணம் எனவும் கூறுகிறார். குதிரைகளை சமாளிப்பது மிகவும் கடினமான நிலை ஆனால் திரு சுரேஷ் அவர்கள் இந்தக் குதிரைகளை மிகவும் சுலபமான முறையில் சமாளித்து வருகிறார். இதற்கு காரணம் இவர் சிறுவயதில் இருந்தே குதிரைகளுடன் பழகி வந்ததே காரணம் எனவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்கள் இந்த குதிரைகளை வடக்கில் இருந்து வாங்கி வந்து அதனை இங்கு விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். மேலும் இவரிடம் இனச்சேர்க்கைக்கு என்று மூன்று சிறந்த குதிரைகள் இருப்பதாகவும் கூறுகிறார்.

இவரிடம் குதிரை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் குதிரைக் குட்டிகள் கேட்டாலோ அல்லது குதிரைகளை கேட்டாலோ அவர்கள் கேட்கும் குதிரைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறுகிறார். இம்முறையில் வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்து வருவதாகவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்களின் பண்ணையில் காட்டியவாடி குதிரை வகைகளை மட்டும் வைத்துள்ளதாக கூறுகிறார். சிலர் காட்டிய வாடி குதிரைகளையும், மார்வாடி குதிரைகளையும் ஒரே குதிரைகள் என கூறுகின்றனர். ஆனால் காட்டிய வாடி குதிரைகளும், மார்வாடி குதிரைகளும் வெவ்வேறு வகை குதிரைகள் என திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்கள் காட்டிய வாடி குதிரைகளை மட்டும் வைத்திருப்பதற்கு காரணம் இந்த வகை குதிரைகளே இங்கு அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் காட்டிய வாடி குதிரைகளை மட்டும் வளர்த்து வருவதாக கூறுகிறார்.

மேலும் மார்வாடி குதிரைகளை இவர் வளர்த்தாதற்கு காரணம் இந்த மார்வாடி குதிரைகள் இங்கு யாரும் விரும்பி வாங்குவது இல்லை என்பதே ஆகும் எனவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்கள், சிலர் இந்த காட்டிய வாடி குதிரைகளை மார்வாடி குதிரைகள் என கூறி விற்பனை செய்வது உண்டு என கூறுகிறார்.ஆனால் மார்வாடி குதிரைகளின் தோற்றமானது காட்டிய வாரி குதிரைகளின் தோற்றத்தில் இருந்து வேறுபட்டு இருக்கும் எனவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்களிடம் ஒரு கருப்பு நிற காட்டிய வாரி ஆண் குதிரை உள்ளது எனவும் இந்த குதிரை கூட மார்வாடி குதிரை என கூறலாம் எனவும் கூறுகிறார். ஆனால் மார்வாடி குதிரை ஆனது இந்த குதிரையிலிருந்து வேறுபட்டிருக்கும் எனவும் கூறுகிறார்.

சிலர் குதிரையின் உடலை பார்த்து அவைகள் மார்வாடி குதிரைகள் என கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு உடலை பார்த்து அவைகள் எந்த வகை குதிரைகள் என கூறுவது மிகவும் தவறான ஒரு செயல் எனவும் கூறுகிறார்.

குதிரைகளை நல்ல முறையில் பராமரித்து, நன்றாக ஓட்டி பழக்கி , சரியான முறையில் வைத்திருந்தால் குதிரைகள் ஆனது 25 வருடங்கள் உயிருடன் இருக்கும் எனவும் கூறுகிறார். இதனுடைய ஆயுட்காலம் 25 வருடங்கள் எனவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

பொதுவாக மக்கள் அனைவரும் நாட்டு குதிரை இனங்களை தேர்ந்தெடுப்பதில்லை. வெளிநாட்டு இன குதிரைகளையும், வடக்கு இன  குதிரைகளையும் மட்டுமே அதிக அளவில் விரும்பி வாங்கி வளர்க்கின்றனர்.

இவ்வாறு மக்கள் அனைவரும் நாட்டு குதிரை இனத்தை விரும்பாததற்கு காரணம் அவைகள் மற்ற குதிரைகளை விட உயரம் குறைவாக இருப்பதே காரணம் என கூறுகிறார். இவ்வாறு உயரம் குறைவாக இருக்கும் குதிரையின் மீது அமர்ந்து சவாரி செய்தால் அது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்காது எனவும், இதன் காரணமாகவே மக்கள் அனைவரும் நாட்டு குதிரை இனத்தை அதிக அளவில் விரும்புவதில்லை என கூறுகிறார்.

ஆனால் இந்த வெளிநாட்டு இன குதிரைகளும், வடக்கு இன குதிரைகளும் உயரம் அதிகமாக இருப்பதால் அவைகளின் மீது அமர்ந்து சவாரி செய்வது மிகவும் சிறப்பாக இருக்கிறது இதன் காரணமாக மக்கள் அனைவரும் இந்த இன குதிரைகளை அதிக அளவில் விரும்புவதாக திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

குதிரைகளுக்கு அளிக்கும் தீவனங்கள்

குதிரை பண்ணைகள் வைத்திருந்தால் அவைகளுக்கு தீவனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சரியான அளவு முறையில் தீவனங்களை குதிரைகளுக்கு அளித்து வரவேண்டும். இவ்வாறு சரியான முறையில் தீவனங்களை குதிரைகளுக்கு அளித்து வந்தால் மட்டுமே அவைகள் நல்ல உடல் வளர்ச்சியுடன் வளரும் எனவும் திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்களின் குதிரை பண்ணையில் உள்ள ஆண் குதிரைகளின் இனசேர்க்கைக்கு மட்டும் ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவு ஆவதாக கூறுகிறார். இதுவே பெண் குதிரைகளுக்கு 150 லிருந்து 200 ரூபாய் மட்டும் செலவு ஆவதாக கூறுகிறார்.

குதிரைகளின் இனச்சேர்க்கை காலங்களில் அவைகளுக்கு கொள்ளு, தவிடு, மக்காச்சோளம், தட்டு, கம்பு மற்றும் ராகி ஆகிய தானிய வகைகளை அளித்து வருவதாக கூறுகிறார்.

இவ்வாறாக குதிரைகளுக்கு சரியான அளவுகளில் தீவனங்களை அளித்து வந்தால் அவைகள் நன்றான உடல் வளர்ச்சி பெறும் எனவும் கூறுகிறார்.

குதிரைகளின் நோய் தடுப்பு முறை

குதிரைகள் வளரும் போது அவைகளுக்கு நோய்கள் வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று என திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

குதிரைகளுக்கு எந்த வேலையும் அளிக்காமல் ஒரே இடத்தில் கட்டிவைத்து உணவினை அளிப்பதன் மூலம் அவைகளுக்கு வயிற்று வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கூறுகிறார்.

இவ்வாறு குதிரைகளுக்கு வயிற்றுவலி வந்தால் அவைகளுக்கு எலுமிச்சை ஊறுகாயை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் குதிரைகளுக்கு உடலில் ஏதாவது புண்கள் ஏற்பட்டால் அதற்கு மட்டும் ஊசி போட வேண்டும் என கூறுகிறார்.

மேலும் ஆண் குதிரைகளை ஒரு குதிரையின் அருகில் மற்றொரு குதிரையை கட்டி வைக்க கூடாது என கூறுகிறார். ஏனெனில் இவ்வாறு குதிரைகளை அருகிலேயே கட்டி வைத்தால் அவைகள் சண்டையிட்டு இறப்பதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கும் என கூறுகிறார்.

எனவே குதிரைகளை மிகவும் பாதுகாப்பான முறையில் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று எனவும் கூறுகிறார்.

பெண் குதிரைகள் ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு குட்டியை மட்டும் ஈன்றுவதாக கூறுகிறார். இந்த குதிரைகள் உயிர்வாழும் ஆயுட்காலங்கள் 25 வருடங்களும் 25 குட்டிகளை ஈன்றுவதாக திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

குதிரைகளை வாங்கி அதன் மீது சவாரி செய்யும் எண்ணம் உள்ளவர்கள் பெரிய குதிரைகளை வாங்கி அதன் மீது சவாரி செய்வது சிறப்பான ஒன்று எனவும், சிறிய குட்டிகளை வாங்கி அதன் மீது சவாரி செய்தால் அந்த குதிரை குட்டியின் முதுகு ஆனது வளைந்து விடும் எனவும் கூறுகிறார்.

குதிரை பண்ணையின் வருமானம் மற்றும் பராமரிப்பு

திரு சுரேஷ் அவர்கள் பண்ணையில் ஒரு குதிரை குட்டியை விற்பனை செய்தால் ஒரு லட்சம் வரை லாபம் கிடைப்பதாக கூறுகிறார். வருடத்திற்கு மூன்று லட்சம் வரை வருமானத்தைப் பெற முடியும் எனவும் கூறுகிறார்.

மற்றும் ஆண் குதிரைகளை இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தி வருவதால் அதன் மூலமும் அதிகளவு வருமானம் வருவதாகவும் கூறுகிறார். மேலும் கோயில் பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு குதிரைகளை பயன்படுத்துவதால் அதன் மூலமும் அதிகளவு வருமானம் கிடைத்து வருவதாக திரு சுரேஷ் அவர்கள் கூறுகிறார்.

இதேபோல் குதிரைகளை மிகவும் தூய்மையான முறையில் வைத்திருப்பது அவசியமான ஒன்று எனவும் கூறுகிறார்.குதிரைகளை தினமும் சுத்தமாக கழுவி விட வேண்டும் எனவும் கூறுகிறார்.மேலும் குதிரைகள் இருக்கும் இடத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

குதிரைகளின் கால்களில் லாடங்கள் முக்கியமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மேலும் குதிரைகளுக்கு ஓட்ட பயிற்சியினை அளிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

குட்டிகள் ஆனது மிகவும் அழகான நிலையில் இருந்தால் அவைகள் ஒன்றரை லட்சம் வரை விலைபோகும் எனவும் கூறுகிறார்.மேலும் நல்ல வளர்ந்த முறையில் உள்ள ஆண் குதிரைகள் ஆனது 5 லட்சம் வரை விலைபோகும் எனவும் வருகிறார்.

குதிரைப் பண்ணையை அனைவராலும் மிக சிறப்பாக நடத்த முடியும் எனவும் கூறுகிறார். மற்றும் குதிரை பண்ணையால் அதிகளவு வருமானமும் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

பெண் குதிரைகளை ஆடு மாடுகளை வளர்க்கும் முறையை போன்றே வளர்க்கலாம் எனவும் கூறுகிறார். ஆனால் ஆண் குதிரைகளை வளர்த்துவது மட்டும் சிறிது கடினமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்களின் பண்ணையில் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த வகை குதிரைகள் வேண்டுமானாலும் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

இந்த குதிரை பண்ணையில் குதிரைகளுக்கு அளிக்கும் தீவன செலவானது ஒரு வருடத்திற்கு 10 லிருந்து 15 ஆயிரம் வரை செலவாகும் எனவும் கூறுகிறார். ஆனால் இந்த குதிரை பண்ணையின் மூலம் ஒரு வருடத்திற்கு மூன்று லட்சம் வரை வருமானம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்.

திரு சுரேஷ் அவர்கள் இந்த குதிரை பண்ணையை மிகவும் சிறப்பான முறையில் நடத்திவருகிறார்.

மேலும் படிக்க:மிகக் குறைந்த விலையில் பண்ணைகளுக்கு தேவையான சோலார் மின் வேலிகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply